sent_token
stringlengths
1
43.3k
சிறுவயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்துள்ள இவர் 2002 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் அம்மா அக்கா போன்ற வேடங்களில் நடித்துவருகிறார்.
தொழில் சிந்தாமணி என்ற மேடை நாடக நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற போது இவரது நடிப்பைக் கண்ட நடிகர் சலபதி ராவ் அல்லரி என்ற புதிய படத்தைத் தயாரித்து வரும் தனது மகன் ரவிபாபுவை அணுகுமாறு இவரிடம் அறிவுறுத்தினார்.
அதன்படி அந்தப் படத்தில் இவருக்கு அம்மா வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்படத்தில் இவரது நடிப்பு அவருக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகளை தேடி கொடுத்தது.
அதைத்தொடர்ந்து தனது இயற்பெயர் திருமலா என்பதை அல்லரி சுபாஷினி என்று மாற்றி பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கிருஷ்ண வம்சி இயக்கிய ஸ்ரீ ஆஞ்சநேயத்தில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார்.
பாலகிருஷ்ணா என்டிஆர் நாகார்ஜுனா சிரஞ்சீவி ரஜினிகாந்த் போன்ற பிரபல ஆந்திர தமிழ்நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வரும் இவர் தற்காலிகமாக நடிப்பிற்கு இடைவெளி விட்டுள்ளார் திரைப்படவியல் அல்லரி 2002 சென்னகேசவ ரெட்டி 2002 ஈஸ்வர் 2002 ஸ்ரீ ஆஞ்சநேயம் 2004 காஞ்சனமாலா கேபிள் டிவி 2005 கிதகிதலு 2006 சத்யபாமா 2007 உணவக மேலாளராக நச்சாவுலே 2008 பெண்டு அப்பாராவ் ஆர்எம்பி 2009 அமராவதி 2009 பணம் பணம் அதிக பணம் 2011 ஆகாசமே ஹட்டு 2011 சுடிகாடு 2012 சூர்யா சூர்யா 2015 குண்டூர் டாக்கீஸ் 2016 பார்வதிபுரம் 2016 ரங்கநாயகி மேற்கோள்கள் பகுப்புஇந்திய நடிகைகள் பகுப்புதெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புமேற்கு கோதாவரி மாவட்ட நபர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
சரிதா சிங் என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
இவர் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் பிரிவான சத்ர யுவ சங்கர்ஷ் சமிதியின் தற்போதைய தலைவராக உள்ளார்.
சிங் தில்லியின் ஆறாவது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
இவர் தில்லியின் ரோத்தாஸ் சட்டமன்றத் தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தினார்.
சிங் ஒரு சமூக சேவகர்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி சரிதா சிங் அவதேஷ் குமார் சிங்கின் மகள் ஆவார்.
தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை படிப்பினை முடித்த பிறகு சரிதா சிங் சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார்.
பிப்ரவரி 2015ல் இவருக்கு 28 வயது.
இவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ரோத்தாஸ் நகர் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான ராம் நகரில் வசித்துவருகிறார்.
இவர் கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரை உள்ளடக்கிய பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த பூர்வாஞ்சலி ஆவார்.
அரசியல் சரிதா சிங் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் பிரிவான சத்ர யுவ சங்கர்ஷ் சமிதியின் தலைவர் ஆவார்.
பிப்ரவரி 2015ல் நடைபெற்ற தில்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தில்லியின் ஆறாவது சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் சிங்கும் ஒருவராவார்.
இவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள்.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றி பெற்றது.
சிங் ரோத்தாஸ் நகர் சட்டமன்றத் தொகுதியில் 62209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவர் பாரதிய ஜனதா கட்சியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்தர் மகாஜனை ஜிதேந்தர் குமார் 7874 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முகேஷ் ஹூடாவை 14000 வாக்குகள் வித்தியாசத்தில் மகாஜன் தோற்கடித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது வடகிழக்கு தில்லியில் மாலையில் இவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிங்கின் காரை இரும்பு கம்பிகள் மற்றும் மரக் கட்டைகளால் தாக்கி சேதப்படுத்தினர்.
பூர்வாஞ்சலிலிருந்து குடியேறிய பெருமளவிலான மக்களைத் திருப்திப்படுத்த இவர் ஆம் ஆத்மி கட்சியால் களமிறக்கப்பட்டதாக தி இந்து குறிப்பிட்டது.
பதவிகள் மேலும் பார்க்கவும் மேற்கோள்கள் சர்ச்சை ஆம் ஆத்மி எம்எல்ஏவின் இரண்டு வாக்காளர் அட்டை பகுப்பு1981 பிறப்புகள் பகுப்புசமூக சேவகர்கள் பகுப்புஇந்திய சமூகவியலாளர்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்
சாந்தா வசிஷ்டர் பிறப்பு 1926 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
1950கள் மற்றும் 1960களில் இவர் தில்லி மாநில அரசாங்கத்தில் அமைச்சராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கல்வி வசிஷ்டர் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.
இவரது தந்தை எல்.டி.
வசிஷ்டர் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.
இவர் தனது மாணவ பருவத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் தில்லி கிளையில் தீவிரமாக பணியாற்றினார்.
கிங்ஸ்வே அகதிகள் குழுவில் பணியாற்றினார்.
1950ஆம் ஆண்டில் இவர் கப்பா ஆல்பா தீட்டா சேவையகத்தின் வெளிநாட்டு மாணவர் உதவித்தொகை மூலம் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியைப் படித்தார்.
தில்லி சட்டசபை இந்தியா திரும்பியதும் வசிஷ்டர் 1952 தில்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
கோட்லா பெரோஸ் ஷா தொகுதியில் காங்கிரசு கட்சி வேட்பாளராக வசிஷ்டர் நிறுத்தப்பட்டார்.
இவர் பாரதிய ஜனசங்கத்தின் வி.பி.
ஜோஷியை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மொத்த வாக்குகளில் வசிஷ்டர் 4646 வாக்குகள் தொகுதியில் 56.26 வாக்குகள் பெற்றார்.
1953ஆம் ஆண்டு தில்லியின் முதலமைச்சர் சவுத்ரி பிரம்ம பிரகாஷ் தில்லி மாநில அரசாங்கத்தில் கல்வித் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவரது தேர்வினை தில்லியில் உள்ள காங்கிரசு சட்டமன்றக் கட்சிக்குள் உள்ள சிறுபான்மை பிரிவினர் விமர்சித்தனர்.
இவர்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காமல் முதலமைச்சர் துணை அமைச்சர்களைப் பரிந்துரைக்கக் கூடாது என்று கூறினர்.
1954ல் தில்லி நூலகச் சங்கத்தின் மறுமலர்ச்சியில் வசிஷ்டர் பங்கேற்று சங்கத்தின் மிக நீண்ட தலைவராகப் பணியாற்றினார்.
மக்களவை வசிஷ்டர் 1960ல் மாநிலங்களவை இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜவகர்லால் நேரு லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தியின் அரசாங்கங்களின் கீழ் இவரது பதவிக்காலம் 3 ஏப்ரல் 1960 முதல் 2 ஏப்ரல் 1966 வரை நீடித்தது.
பிந்தைய காலம் 2008ல் வசிஷ்டர் நேரு டு ஈராக் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இதில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தனது அனுபவங்களை விவரித்தார்.
2013ஆம் ஆண்டு வரை வசிஷ்டர் சர்வோதயா சிற்றூரில் வசித்து வந்தார்.
மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் வழக்கறிஞர்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள் பகுப்புதில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்
பிரீத்தி தோமர் பிறப்பு 1970 என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்தவரும் ஆவார்.
இவர் இந்தியத் தலைநகர் தில்லியைச் சேர்ந்தவர்.
தோமர் தில்லி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
இவரது கணவர் ஜிதேந்தர் சிங் தோமர் தில்லி சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
வாழ்க்கை தோமர் 1989ல் இரகுநாத் பெண்கள் முதுகலை கல்லூரியில் முதுகலைப் படிப்பை முடித்தார்.
பின்னர் தோமர் 1994ல் மீரட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றார்.
தோமர் 11 பிப்ரவரி 2020 அன்று திரி நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் முடிவுகள் 2020 மேற்கோள்கள் பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதிகள்
ஆராக்கேரியா என்பது அரௌகாரியாசியே குடும்பத்தைச் சேர்ந்த மாறாப் பசுமையான ஊசியிலை மரங்களில் ஒரு பேரினமாகும் .
நியூ கலிடோனியாவில் தற்போது 20 இனங்கள் உள்ளன இதில் 14 உள்ளூர் இனங்கள் பார்க்க நியூ கலிடோனியன் அரௌகாரியா நோர்போக் தீவு கிழக்கு ஆத்திரேலியா நியூ கினி கிழக்கு அர்கெந்தீனா தெற்கு பிரேசில் சிலி பரகுவை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
தென் பசிபிக் பிராந்தியத்திலும் கிழக்கு ஆஸ்திரேலியாவிலும் இவை பொதுவாக காணப்படுகின்றன.
விளக்கம் இடது விதைக் கூம்புகளுடன் கூடிய அரௌகாரியா அரௌசனா ஆராக்கேரியா முக்கியமாக பெரிய மரங்களாகும்.
இவற்றின் அடிமரம் பெரியதாக நிமிர்ந்து தண்டுபோன்று உயர்ந்து இருக்கும்.
இவை உயரம் வரை எட்டும்.
அடுக்கடுக்காகக் கிளைகளை வட்டவொழுங்கில் கிடைமட்டமாகச் சமமாக எல்லாத் திக்குகளிலும் விட்டுக்கொண்டு கோபுரம் போலவும் தேர்போலவும் இம்மரங்கள் கம்பீரமாக உயர்ந்து அழகாக நிற்கும்.
மேலும் இவை தோல் அல்லது ஊசி போன்ற இலைகளாலைக் கொண்டதாக இருக்கும்.
சில இனங்களில் இலைகள் குறுகலானவை தமரூசி வடிவ மற்றும் ஈட்டி வடிவிலானவை அரிதாகவே ஒன்றுடன் ஒன்று இணைகின்றன மற்றவற்றில் இவை பரந்தவையாகும் தட்டையானவையாகவும் இருக்கின்றன.
சிலி நாட்டு ஆராக்கா மாவட்டத்தில் முதன்முதல் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.
சிலி நாட்டுக்குரிய குரங்குச் சிக்கல் என்னும் ஆராக்கேரியா இம்பிரிக் கேட்டாவின் விதைகள் உண்ணதக்கது.
இவை பிரேசில் பைன் தென் பிரேசில் நாட்டில் ஏராளமாக இருக்கிறது.
இந்த விதைகளை தென்மத்திய சிலி மற்றும் தென்மேற்கு அர்கெந்தீனாவில் வாழும் பழங்குடியினரான மாப்புச்சிகள் முதன்மையாக பயன்படுத்துகின்றனர்.
மாப்புச்சே மக்கள் இதை என்று அழைக்கிறார்கள்.
மேலும் இதை புனிதமாக கருதுகின்றனர்.
ஆண்டிசில் வசிக்கும் சில மாபூச்சேகள் தங்கள் பாரம்பரிய உணவுக்காக இதன் விதைகளை அதிக அளவில் அறுவடை செய்வதால் தங்களை பெஹுயென்சே "பெஹுயென் மக்கள்" என்று அழைத்துக் கொள்கின்றனர்.
பரவல் அர்ஜென்டினா பிரேசில் நியூ கலிடோனியா நோர்போக் தீவு ஆஸ்திரேலியா நியூ கினியா சிலி மற்றும் பப்புவா இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரௌகாரியாவின் உறுப்பினர்கள் காணப்படுகின்றன.
குறிப்புகள் பகுப்புதாவரப் பேரினங்கள்
வடக்கு அலபாமா பல்கலைக்கழகத்தின் ஊதா மற்றும் தங்க நிறத்திலான நிறங்களைக் காட்டுகிறது பள்ளி நிறம் அல்லது நிறங்கள் பல்கலைக்கழக வண்ணங்கள் அல்லது கல்லூரி வண்ணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது ஒரு பள்ளியின் வகைக்குறி அடையாளத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறங்கள் ஆகும்.
இவை கட்டிட அடையாளங்கள் வலைப்பக்கங்கள் சீருடைகள் மற்றும் விளையாட்டு அணிகளின் சீருடைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
இதன்மூலம் பள்ளியினை விளம்பரப்படுத்தவும் மற்ற பள்ளிகளில் இருந்து வேறுபடுத்திக் காண்பிக்கவும் உதவலாம்.
பின்னணி வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் பள்ளி நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை பள்ளி நிறங்களின் பாரம்பரியம் 1830 களில் இங்கிலாந்தில் தொடங்கியது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1836 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திற்கு எதிரான படகுப் போட்டிக்கு கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் நீல வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தது 1837 இல் ஈடன் பள்ளிக்கு எதிரான படகுப் போட்டியில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி இளஞ்சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தியது பல அமெரிக்கக் கல்லூரிகள் 1890 மற்றும் 1910 க்கு இடையில் பள்ளி வண்ணங்களை ஏற்றுக்கொண்டன.
இவை பொதுவாகத் தனித்தன்மை வாய்ந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன பல நிறங்கள் மற்றும் வண்ணக் கலவைகள் பள்ளி நிறங்களாகத் தேர்வு செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
இருப்பினும் பல பொது ஆட்சிமுறைத் திருச்சபையின் உறுப்பினர் கல்லூரிகள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களைப் பின்பற்றத் தொடங்கின.
சில அமெரிக்கப் பள்ளிகள் தேசபக்தியின் வெளிப்பாடாக "சிவப்பு வெள்ளை அல்லது நீலம்" என்ற தேசிய நிறங்களை ஏற்றுக்கொண்டன.
விளையாட்டு நிப்பான் ஸ்போர்ட் சயின்ஸ் யுனிவர்சிட்டி ரக்பி கால்பந்து சங்க வீரர்கள் வெளிர் மற்றும் அடர் நீல நிற சீருடைகளை அணிந்துள்ளனர் பல்கலைக்கழக விளையாட்டு அணிகளை அடையாளம் காண வண்ணங்களின் பயன்பாடு 1836 ஆம் ஆண்டு ஆக்ஸசுபோர்டு மற்றும் கேம்பிரிட்ச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த இரண்டாவது படகு பந்தயத்தில் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகிறது.
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தங்கள் விளையாட்டு மற்றும் பிற பல்கலைக்கழக முத்திரைகளுக்கு ஒரே மாதிரியான வண்ணங்களைப் பயன்படுத்தினாலும் கேம்பிரிட்ஜ் நீலம் என்பது பல்கலைக்கழகத்திற்கான துணை நிறத்தில் உள்ள பன்னிரண்டு வண்ணங்களில் ஒன்றாகும்ஆனால் அவை அவற்றின் ஆறு முக்கிய நிறங்களில் ஒன்றல்ல.
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் அதன் விளையாட்டு அணிகளுக்கு பச்சை மற்றும் தங்க வண்ணங்களைப் பயன்படுத்துகிறது ஆனால் மீதமுள்ள பல்கலைக்கழகங்கள் நீலத்தைப் பயன்படுத்துகின்றன.
கல்வியாளர்கள் எட்ஜ் ஹில் பல்கலைக்கழகத்திற்கான நிறங்கள் ஊதா தங்கம் மற்றும் பச்சை ஆகியன கௌரவ பட்டதாரி சூ ஸ்மித்தின் பட்டையில் காணப்படுகின்றன பல நிறுவனங்களின் சீருடைகளிலும் பள்ளி நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1835 மற்றும் 1838 க்கு இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் இள ஊதா நிறம் பயன்படுத்தியதே பளிக்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல் நிறமாகக் கருதப்படுகிறது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் நிறங்கள் கேம்பிரிட்ஜ் நீலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கரோலினா நீலம் வட கரோலினா பல்கலைக்கழகம் கொலம்பியா நீலம் கொலம்பியா பல்கலைக்கழகம் டியூக் நீலம் டியூக் பல்கலைக்கழகம் ஈடன் நீலம் ஈடன் பள்ளி ஆக்ஸ்போர்டு நீலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இள ஊதா நிறம் டர்ஹாம் பல்கலைக்கழகம் யேல் நீலம் யேல் பல்கலைக்கழகம் சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புபள்ளி சொல்லியல்
குஞ்சன் சக்சேனா பிறப்பு 1975 இந்திய விமானப்படை அதிகாரியம் முன்னாள் உலங்கு வானூர்தி விமானியுமாவார்.
1996 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்ந்த இவர்1999 ஆம் ஆண்டில் நடைபெற்றகார்கில் போரில் கலந்துகொண்ட விமானப்படை வீரருமாவார்.
போர் நடைபெறும் போது கார்கில் போரினால் காயமடைந்தவர்களை வெளியேற்றுவது போர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து பொருட்கள் மற்றும் கண்காணிப்புக்கு உதவுவது போன்ற காரணங்களுக்காக உலங்கு வானூர்தியில் பறந்த முதல் பெண்களில் இவரும் ஒருவராவார்.
மேலும் கார்கில் போரினால் காயமடைந்த மற்றும் இறந்த 900 க்கும் மேற்பட்ட துருப்புக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக போர் முனைக்கு சென்றுள்ளார்.
2004 ஆம் ஆண்டில் எட்டு ஆண்டுகள் விமானியாகப் பணியாற்றிய பிறகு உலங்கு வானூர்தி விமானியாக அவரது தொழில் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படமான குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள் இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.
கிரண் நிர்வான் என்ற எழுத்தாளருடன் இணைந்து குஞ்சன் அவரது சுயசரிதையான கார்கில் பெண் என்பதை எழுதியுள்ளார்.
இப்புத்தகம் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரம்ப கால வாழ்க்கை குஞ்சன் பாரம்பரியமாக இராணுவ குடும்பத்தில் புரிந்தவர்.