audio
audioduration (s)
1.02
75.8
text
stringlengths
13
771
gender
class label
2 classes
அதற்குத் தகுந்தபடி, ஏதாவது கொஞ்சம் பேசி, வேஷம் போட்டால் போகிறது.
0female
ஆனால், அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒன்றும், கிட்டவில்லை.
0female
அப்படியும், பல்லக்கு கீழே வைக்கப்படவில்லை ஒரே மூச்சாகப் போய்க்கொண்டிருந்தது.
0female
கோட்டைக்குள் பல்லக்குப் போய்விட்டால், அப்புறம், அவன் எண்ணம், கைகூடப் போவதில்லை.
0female
எடுத்த காரியத்தை முடிக்காமல், உயிரோடு திரும்பிப் போவதில் என்ன லாபம்.
0female
நீ யார் அப்பா, திருவையாற்றிலிருந்து, எங்களை ஏன் தொடர்ந்து வருகிறாய், என்று கேட்டான்.
0female
இந்த சாலை, தஞ்சாவூருக்குத்தான் போகிறது.
0female
ஆனால், இதில் முக்கியமானவர்கள் மட்டுமே போகலாம், மற்றவர்களுக்கு வேறு சாலை இருக்கிறது என்றான் வீரன்.
0female
அப்படியா, ஆனால் நானும் ரொம்ப ரொம்ப முக்கியமான மனுஷன் தான், என்றான் வந்தியத்தேவன்.
0female
அதைக் கேட்ட அவ்வீரன், புன்னகை செய்துவிட்டு, தஞ்சைக்கு எதற்காகப் போகிறாய் என்றான்.
0female
என் சித்தப்பா தஞ்சையில் இருக்கிறார்.
0female
அவருக்கு நோய் என்றறிந்து, பார்க்கப் போகிறேன் என்று கூறினான், வந்தியத்தேவன்.
0female
உன் சித்தப்பா தஞ்சையில் என்ன செய்கிறார், அரண்மனையில் உத்தியோகம் பார்க்கிறாரா.
0female
இல்லை, இல்லை, சத்திரத்தில் மணியக்காரராயிருக்கிறார், ஓகோ, அப்படியா, சரி, எங்களுக்கு முன்னால் நீ போவதுதானே.
0female
ஏன் பின்னாலேயே வந்துகொண்டிருக்கிறாய்.
0female
உடனே, அவன் மூளையை விரட்டிக் கண்டுபிடிக்க முயன்ற உபாயமும், புலப்பட்டுவிட்டது.
0female
குதிரையைக் கால்களால் அமுக்கி, முகக்கயிற்றை இழுத்து, பல்லக்கின் பின், தண்டைத் தூக்கியவர்களின் பேரில், விட்டிடித்தான்.
0female
அவர்கள், பயத்துடன் திரும்பிப் பார்த்தார்கள்.
0female
பல்லக்கை மூடியிருந்த திரை, சலசலத்தது.
0female
என்று சொல்லிக் கொண்டே, அண்ணாந்து பார்த்தான்.
0female
தொண்டையில், திடீரென்று ஈரம் வற்றியது.
0female
என்று, உளறிக் கொட்டினான்.
0female
அவனுடைய கையும், இயல்பாக, உறைவாளிடம் சென்றது.
0female
ஆனால், கண்களை மட்டும் பல்லக்கின் பட்டுத் திரையின் மத்தியில், ஒளிர்ந்த மோஹனாங்கியின் சந்திர பிம்ப, வதனத்தினின்றும் அவனால் அகற்ற முடியவில்லை.
0female
பெண் என்றாலும், எப்படிப்பட்ட பெண்.
0female
நல்ல வேளையாக, அதே நிமிஷத்தில் வந்தியத்தேவனுடைய மூளை நரம்பு ஒன்று, அசைந்தது.
0female
அதை, உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தான்.
0female
அதுகாறும் குவிந்திருந்த தாமரை மொட்டு, சிறிது விரிந்து, உள்ளே பதித்திருந்த வெண்முத்து வரிசையை, இலேசாகப் புலப்படுத்தியது.
0female
அந்தப் புன்முறுவலின் காந்தி, நமது இளம் வீரனைத், திக்குமுக்காடித், திணறச் செய்தது.
0female
இவளுடைய குரலில், அத்தகைய போதை தரும் பொருள், என்ன கலந்திருக்க முடியும்.
0female
ஏன், இக் குரலைக் கேட்டு, நமது தலை, இவ்விதம், கிறுகிறுக்க வேண்டும், சற்று முன்னால், நீ என்ன சொன்னாய்.
0female
காசிப் பட்டின் மென்மையும், கள்ளின் போதையும் காட்டுத் தேனின் இனிப்பும், கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும், ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா.
0female
அவ்விதம் இதோ கலந்திருக்கின்றனவே, பல்லக்கைக் கொண்டு வந்து, அவர்கள், உன் குதிரைமீது மோதினார்கள் என்றா சொன்னாய்.
0female
ஆம், மகாராணி, இவர்கள் அப்படித்தான் செய்தார்கள், என் குதிரை மிரண்டுவிட்டது, என்றான்.
0female
குறுநகையின் நிலவு கோபக் கனலாயிற்று.
0female
வேடிக்கை அப்புறம் இருக்கட்டும், உண்மையைச் சொல், எதற்காகப், பல்லக்கின் மேல், குதிரையைக் கொண்டு வந்து, மோதி நிறுத்தினாய்.
0female
இதற்குத் தக்க மறுமொழி, சொல்லித்தான் ஆகவேண்டும்.
0female
சொல்லா விட்டால், நல்லவேளையாக, ஏற்கனவே, அந்த மறுமொழி, வந்தியத்தேவன் உள்ளத்தில் உதயமாயிருந்தது.
0female
அவன் தான், திருமலையப்பன்.
0female
கண்களில் வியப்பும், ஐயமும் தோன்றின.
0female
நினைத்த காரியம், வெற்றி பெற்றுவிடும்போல் காண்கிறது, ஆனால் முக்கால் கிணறு தாண்டி பயனில்லை.
0female
தேவி, தேவி, கோட்டைக்குள் என்னை விடமாட்டார்களே, அரண்மனைக்குள்ளும் விடமாட்டார்களே, என்ன செய்வது, என்று பரபரப்புடன் சொன்னான்.
0female
வேடிக்கை பார்ப்பதெல்லாம், பிற்பாடு வைத்துக்கொள்ள வேண்டும்.
0female
இந்த தீர்மானத்துடன் வந்தியத்தேவன், தஞ்சை நகரின் பிரதான வாசலை அணுகினான்.
0female
கோட்டை வாசலில், பிரம்மாண்டமான கதவுகள், அச்சமயம், சாத்தியிருந்தன.
0female
வாசலண்டை காவலர்கள் மட்டும் நின்றார்கள்.
0female
விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ள, வந்தியத்தேவன் ஆவல் கொண்டான்.
0female
வீண் சண்டைகளில் இறங்க இது தருணமல்ல.
0female
தம்பி, எல்லாரும் எதற்காக வீதி ஓரம், ஒதுங்கி நிற்கிறார்கள், ஏதாவது, ஊர்வலம் கீர்வலம் வரப் போகிறதா, என்று கேட்டான்.
0female
தாங்கள் இந்தப் பக்கத்து மனிதர் இல்லையா, ஐயா, இல்லை, நான் தொண்டை நாட்டைச் சேர்ந்தவன், அதனால்தான் கேட்கிறீர்கள்.
0female
வேடிக்கை பார்க்கத்தானே, ஆமாம்.
0female
நான் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு பார்த்தால் என்ன, பார்க்கலாம், ஆனால், வேளக்காரப் படை வீரர்கள், உங்களைப் பார்த்துவிட்டால் ஆபத்து.
0female
குதிரையையும் ஆளையும் கொண்டு போனால், சும்மா விட்டு விடுவார்களா, விடாமல் என்ன செய்வது, வேளக்காரப் படையார், வைத்ததே, இந்த நகரில் சட்டம்.
0female
அவர்களைக் கேள்வி கேட்பார் கிடையாது.
0female
கோட்டை வாசலின் கதவுகள் இரண்டும், படார் படார் என்று திறந்துகொண்டன.
0female
செந்நிறமான அக் கொடியின் மேலே, புலியும், புலிக்கு அடியில், கிரீடமும், சித்தரிக்கப்பட்டிருந்தன.
0female
இரண்டு ஆட்கள் நின்று பேரிகைகளை முழங்கினார்கள்.
0female
ரிஷபத்துக்குப் பின்னால், சுமார் ஐம்பது வீரர்கள், சிறுபறை, பெரும்பறை, தம்பட்டம், ஆகியவற்றை முழங்கிக் கொண்டு வந்தார்கள்.
0female
வீரப் புலிக்கொடி பாரெல்லாம் பரந்து வெல்க, வெல்க, வெல்க, வெற்றிவேல், வீரவேல்.
0female
எதிரில் வந்த ஒரு மாட்டுவண்டியை இன்னொரு வீரன் நிறுத்தி, மாட்டை வண்டியிலிருந்து, பூட்டு அவிழ்த்து விரட்டி அடித்தான்.
0female
இவர்களுடைய விளையாட்டு மற்றவர்களுக்கு வினையாக இருக்கிறது.
0female
நல்ல வேளை, இவர்களுடைய பார்வை, நம்மீது விழாமல் ஒதுங்கி நின்றோம்.
0female
ஆனான், ஒரே ஒரு வித்தியாசமும் அவனுக்குப் புலனாயிற்று.
0female
கூட்டத்திலும், கோலாகலத்திலும், அந்த வாலிபன் எங்கேயோ போய்விட்டான்.
0female
வேளக்காரப்படை, மாலையில், கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு, மற்ற யாரையும் உள்ளே விடுவதில்லையென்று வந்தியத்தேவன் அறிந்து கொண்டான்.
0female
சீக்கிரத்தில் அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டியதுதான்.
0female
வீதிகளெல்லாம், ஜே ஜே என்று ஒரே ஜனக்கூட்டம்.
0female
வெளியூர்களிலிருந்து, பல அலுவல்களின் நிமித்தமாக வந்தவர்கள், அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள்.
0female
பெரிய கோவிலா அது, இல்லை, சிறிய கோவில்தான்.
0female
ஆனால், என்று அந்த வாலிபன் தயங்கி நிறுத்தினான், ஆனால் என்ன.
0female
போனால் போகட்டும், தம்பி, இரவு எங்கேயாவது நான் நிம்மதியாக தூங்க வேண்டும்.
0female
அயல் நாடுகளிலிருந்து, வருகிறவர்களுக்கென்று ஏற்பட்ட ராஜாங்க விடுதிகளும் இருக்கின்றன.
0female
ஆனால், உங்களுக்கு இஷ்டமாயிருந்தால்.
0female
ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது, என்னிடம் மந்திர வித்தை இருக்கிறது.
0female
அதனால் தெரிந்து கொண்டேன்.
0female
உன் வீடு எங்கே இருக்கிறது, நகர எல்லையைத் தாண்டி, கூப்பிடு தூரத்தில் எங்கள் பூந்தோட்டம் இருக்கிறது.
0female
தோட்டத்துக்குள்ளே எங்கள் வீடும் இருக்கிறது என்றான், அமுதன், ஆஹா, அப்படியானால் உன் வீட்டுக்கு நான் வந்தே தீருவேன்.
0female
பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள்.
0female
அரை நாழிகை நேரம் நடந்து, அவர்கள், நகர்ப்புறத்துக்கு அப்பாலிருந்த பூந்தோட்டத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
0female
ஆனால், அந்த மாதரசியின் முகத்தில், கருணையும் அன்பும் நிறைந்து ததும்பியதை வந்தியத்தேவன் கண்டான்.
0female
கூரிய அறிவின் ஒளியும், அம்முகத்திலிருந்து வீசியது.
0female
சற்று நேரத்துக்கெல்லாம், இலை போட்டு, அந்த அம்மாள், உணவு பரிமாறினாள்.
0female
முதலில், இடியாப்பமும், இனிப்பான தேங்காய்ப்பாலும் வந்தன.
0female
பத்துப் பன்னிரண்டு இடியாப்பமும், அரைப்படி தேங்காய்ப் பாலும் சாப்பிட்டான்.
0female
பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், இவர்களின், மாளிகைகளும், பரிவாரங்களும் அங்கு இருந்தன.
0female
கோட்டை வாசலில் நானே பார்த்தேன்.
0female
ஒரு வேளை, வழியில் எங்கேனும் தங்கி விட்டு நாளை வரக்கூடும்.
0female
ஷிவ பக்தியில் ஈடுபட்டுப், பெரும்பாலும் யோகத்திலும், தியானத்திலும், பூஜையிலும், காலம்கழிப்பதாகக் கேள்வி.
0female
ஆனாலும், இத்தனை நாளைக்குப் பிறகு, கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே, ஆமாம், அது கொஞ்சம் வியப்பான காரியம்தான்.
0female
நமக்கென்ன அதைப்பற்றி, பெரிய இடத்துப் பேச்சு, பேசாமலிருப்பதே நல்லது.
0female
தஞ்சையில் தங்க, இம்மாதிரி ஒரு வீடு அகப்பட்டதும், தன்னுடைய அதிர்ஷ்டந்தான்.
0female
அதையெல்லாம் கெடுத்துக் கொள்வானேன், மேலும், நீண்ட பிரயாணக் களைப்புடன் முதல்நாள் இரவு, கண் விழித்ததும் சேர்ந்துகொண்டது.
0female
பாம்பும் ஆடிக் கொண்டேயிருந்தது, பாம்பு ஆடிய போது, அதற்கிணங்க, இவன் உடம்பும் ஆடியது, இதன் முடிவு என்ன ஆயிருக்குமோ தெரியாது.
0female
இவர்களையெல்லாம் அடக்கி, நியாயத்தையும், தர்மத்தையும், நிலைநாட்ட அரசாங்கம் வேண்டும்.
0female
ஆம், இன்று சுந்தரசோழ சக்கரவர்த்தியைப் பார்த்தே தீரவேண்டும்.
0female
இதற்காகத்தான் அலங்கரித்துக் கொண்டானா, அல்லது, பழவூர் இளையராணியை, அன்று மீண்டும் பார்க்கப் போகிறோம், என்கிற எண்ணமும் அவன் மனதிற்குள் இருந்ததா, என்று நாம் சொல்ல முடியாது.
0female
புதல்வி, என்று நிறுத்தினான், புதல்விக்கு என்ன, ஒன்றுமில்லை.
0female
உன்னைக் காட்டிலும் நன்றாய்ப் பாடுவானா, அழகாயிருக்கிறது உங்கள் கேள்வி.
0female
ஆடு மாடுகளும், காட்டு மிருகங்களும், மெய்மறந்து நிற்கும்.
0female
இறைவன் என் முன்னால் தோன்றி, நீ சுந்தரமூர்த்தியைப் போல், இந்த உடம்போடு கைலாஸத்துக்கு வருகிறாயா.
0female
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
6
Edit dataset card