news
stringlengths
434
16.5k
class
int64
0
2
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது . இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 600 ரன்களைகுவித்தது . இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் . பின்னர் , கலமிறங்கிய இலங்கை அணி 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது . இதையடுத்து இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நான்காம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி240 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது . இதையடுத்து இறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது . இன்றைய ஆட்ட நேர முடிவில் 245 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை அணி இழந்தது . இதனால் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது .
2
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உண்மைதான் எனவும் , ஜெயலலிதாவை கொலை செய்த குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் , பி . எச் . பாண்டியன் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார் . இதற்கு பொய் பேச வேண்டாம் என அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார் . இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது : ஜெயலலிதா மரணத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருப்பது மனிதாபிமானத்திற்கு விரோதமானது . அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதாவின் மரணத்தை பி . எச் . பாண்டியனும் மனோஜ் பாண்டியனும் விமர்சிக்கின்றனர் . ஜெயலலிதாவை யாரும் தள்ளிவிடவில்லை . வீணாக பொய் பேச வேண்டாம் . உண்மைக்கு புறம்பாக பேசுவது ஜெயலலிதாவின் புகழுக்கு இழுக்காக்கிவிடும் . ஜெயலலிதாவின் மனவேதனைக்கு காரணமானவர் பி . எச் பாண்டியன் . ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளனர் . மருத்துவர்கள் விளக்கம் தந்த பிறகும் குதர்க்கமாக பேசி வருகின்றனர் . பி . எச் . பாண்டியனின் அனைத்து கேள்விகளுக்கும் அப்போலோ மருத்துவர்கள் விரிவான விளக்கம் அளித்துள்ளனர் . புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது ? திமுக தூண்டுதலால் பி . எச் . பாண்டியனும் மனோஜ் பாண்டியனும் பேசி வருகிறார்கள் . சிசிடிவியை அகற்றியது மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்டது . குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என தெரிவிப்பது விசாரணை செய்வது போல் தெரிகிறது . அந்த விசாரணை முடிவுகளை நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவிக்கட்டும் . சுயநலத்திற்காக ஜெயலலிதா மரணம் குறித்து விமர்சனங்களை பி . எச் . பாண்டியன் அள்ளி வீசக்கூடாது . இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார் .
1
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி , சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார் . ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து கொண்டிருக்கிறார் . ஒருநாள் போட்டிகளில் 38 சதங்கள் விளாசியுள்ள கோலி , 62 சர்வதேச சதங்களுடன் , சச்சின் , பாண்டிங் , சங்ககராவிற்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளார் கோலி . 782 இன்னிங்ஸ்களில் ஆடி 100 சர்வதேச சதங்களை விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார் . ஆனால் கோலி வெறும் 388 இன்னிங்ஸ்களில் 62 சதங்களை விளாசியுள்ளார் . விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் , அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என்று நம்பப்படுகிறது . சாதனைகள் என்றாலே முறியடிக்கப்படுவதுதான் . அந்த வகையில் சமகால சிறந்த வீரரான கோலி , சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துவிடுவார் . ஆனால் இதே ஃபார்மில் , நல்ல உடற்தகுதியுடன் கோலி இருப்பது அவசியம் . சீராக தொடர்ந்து இதேபோன்று ஆடினால் மட்டும்தான் சச்சின் சாதனைகளை முறியடிக்க முடியும் . இல்லையென்றால் கஷ்டம்தான் . இந்நிலையில் , கோலி குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் , கோலி இன்னும் 10 ஆண்டுகள் ஆடுவார் . எனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் பல சாதனைகளை முறியடித்துவிடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் . அண்மையில் விராட் கோலியை பாராட்டி டுவீட் செய்திருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் , கோலி கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை முறியடித்துவிடுவார் ; அதற்கு மேல் எத்தனை சதங்கள் அடிக்கிறார் என்பதுதான் மேட்டர் என்பதுபோல் ஒரு டுவீட் செய்திருந்தார் . அதாவது 120 சதங்களை கோலிக்கு அக்தர் இலக்காக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
2
இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது . இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது . டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது . தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் ஹாசிம் ஆம்லா ஆகியோர் களமிறங்கினர் . தொடக்கத்தில் புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் சிறப்பாக பந்துவீசினர் . இருவரின் வேகத்தையும் எதிர்கொள்ள முடியாமல் ஆம்லாவும் டி காக்கும் திணறினர் . பின்னர் பாண்டியாவின் பந்துகளில் ஒருசில பவுண்டரிகள் அடித்தனர் . ஆனாலும் அவர்களின் ஆட்டம் நீடிக்கவில்லை . புவனேஷ்வர் குமாரின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து முதல் ஆளாக வெளியேறினார் . அவர் அவுட்டாகும்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 39 . தென்னாப்பிரிக்கா , 51 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹலின் சுழலில் டி காக் அவுட்டானார் . அதற்கு அடுத்த ஓவரிலேயே குல்தீப் யாதவின் சுழலில் மார்க்ரம் மற்றும் மில்லர் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர் . 51 ரன்னிலேயே 3 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்தது . அதன்பிறகு ஜாண்டோவும் டுமினியும் சிறிது நேரம் ஆடினர் . ஆனால் அந்த இணையும் நீடிக்கவில்லை . ஜாண்டோ , டுமினி , ரபாடா , மோர்கல் என அனைவரும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையை கட்ட அந்த அணி , 32.2 ஓவர்கள் முடிவில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது . இந்திய அணியின் சார்பில் சாஹல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் . குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர் . 119 என்ற எளிய இலக்குடன் இந்திய அணி ஆடி வருகிறது .
2
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 வீரர்களை விடுவித்துள்ளது . சுனில் நரைன் , ஆண்ட்ரே ரசல் , கிறிஸ் லின் உள்ளிட்ட 13 வீரர்களை கேகேஆர் தக்கவைத்துள்ளது . கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன . 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது . அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்க இருப்பதால் , ஐபிஎல் சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது . அதனால் வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடக்கும் வீரர்கள் ஏலம் இம்முறை டிசம்பர் மாதம் கோவாவில் நடக்க உள்ளது . அதனால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பாத வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது . சென்னை சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியலை பார்த்தோம் . இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணி விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை பார்ப்போம் . ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி விடுவித்துள்ளது . இத்தகவலை முன்னதாகவே மெசேஜ் மூலம் அணி நிர்வாகம் தெரிவித்துவிட்டது . மிட்செல் ஸ்டார்க் தவிர டாம் கரன் , மிட்செல் ஜான்சன் , வினய் குமார் உள்ளிட்ட வீரர்களையும் கொல்கத்தா அணி விடுவித்துள்ளது . அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் , ராபின் உத்தப்பா , கிறிஸ் லின் , கில் , நிதிஷ் ராணா , சுனில் நரைன் , குல்தீப் உள்ளிட்ட வீரர்களை தக்கவைத்துள்ளது . கேகேஆர் அணி விடுவித்த வீரர்கள்ஃ மிட்செல் ஸ்டார்க் , மிட்செல் ஜான்சன் , டாம் கரன் , கேம்ரோன் டெல்போர்ட் , ஜாவோன் சியர்ல்ஸ் , இஷாங்க் ஜக்கி , அபூர்வ் வான்கடே , வினய் குமார் . கேகேஆர் தக்கவைத்த வீரர்கள்ஃ தினேஷ் கார்த்திக் ( கேப்டன் ) , உத்தப்பா , கிறிஸ் லின் , சுனில் நரைன் , நிதிஷ் ராணா , ரிங்கு சிங் , ஷுப்மன் கில் , ஆண்ட்ரே ரசல் , ஷிவம் மாவி , குல்தீப் யாதவ் , பியூஷ் சாவ்லா , நாகர்கோடி , பிரசித் கிருஷ்ணா .
2
இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடிவருகிறது . இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அந்த அணிக்கு உள்ளது . இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இதையடுத்து இரண்டாவது போட்டி மழை காரணமாக ஒருநாள் தாமதமாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது . இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி , இங்கிலாந்து பவுலர்களின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 107 ரன்களுக்கே ஆல் அவுட்டானது . இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி , இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் தொடக்கத்திலிருந்தே ரன்களை குவிக்க தொடங்கியது . சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்களை குவிக்க அந்த அணி தயங்கவில்லை . தொடர்ச்சியாக சீரான வேகத்தில் ரன்களை குவித்தது . 131 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்தபோதிலும் , பேர்ஸ்டோ மற்றும் கிறிஸ் வோக்ஸ் இருவரும் அபாரமாக ஆடினர் . 6 விக்கெட்டுக்கு அவர்கள் 189 ரன்களை சேர்த்தனர் . 93 ரன்களில் அவுட்டான பேர்ஸ்டோ சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார் . ஆனால் கிறிஸ் வோக்ஸ் அபாரமாக ஆடி சதமடித்தார் . வோக்ஸுடன் சாம் கரண் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார் . மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது . வோக்ஸ் 120 ரன்களுடனும் சாம் கரண் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் . இந்திய அணியை விட 250 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி . எனவே இன்னும் கூடுதலாக 100 ரன்கள் சேர்த்தாலே மிகவும் வலுவான நிலையை அடைந்துவிடும் இங்கிலாந்து . எனவே இந்த போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது . எனினும் டிரா செய்வதற்கே இந்திய அணி மிகவும் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது . இல்லையெனில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைய நேரிடும் .
2
சத்தியமூர்த்தி பவனில் சண்டை ! என்று செய்தி வந்தால் , சரி ! மாநிலத்தில் எல்லாம் இயல்பாக இயங்குகிறது என்று பொருள் . அந்தளவுக்கு தினப்படி வழக்கமான விஷயம் அது . வேஷ்டி கிழிதழும் , நாற்காலி பறத்தழும் , கை கலப்பும் அங்கே டீ , காஃபி சாப்பிடுவது போல் . ஆனால் கடந்த சில நாட்களாக சத்தியமூர்த்தி பவனுள் நடக்கும் மோதலானது மிக வித்தியாசமானது . திருநாவுக்கரசர் மற்றும் இளங்கோவனுக்கு இடையில் நடக்கும் கருத்துப் போர் உச்சம் பெற்று நிற்கிறது . இருவரும் இலை மறை காயாக ஒருவரை ஒருவர் கீறிக் கொண்டு கட்சியை காயம் செய்து கொண்டிருக்கிறார்கள் . தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் இருக்கும் நிலையில் , சமீபத்தில் ‘தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றப்படலாம் . ’ என்று உசுப்பிவிட்டா மாஜி தலைவர் இளங்கோவன் . இதற்கு இப்போது பதில் வாள் வீசியிருக்கும் திருநாவுக்கரசர் . . . “கட்சி தலைவராக பொறுப்பேற்றதும் ராகுல் சில மாநிலத் தலைவர்களை மாற்றினார் , ஆனால் என்னை மாற்றவில்லை . ராகுல் துணைத்தலைவராக இருந்த போது கூட மாநில தலைமைக்கு என்னைத்தான் பரிந்துரை செய்தார் . இதுதான் இந்த பேரியக்கத்தில் எனக்கு இருக்கும் மரியாதை . அதேவேளையில் தலைவர் பதவி என்பது நிரந்தரமல்ல என்பதையும் நான் நன்கு உணர்ந்து வைத்துள்ளேன் . இருக்கும் வரையில் சிறப்பாக பணியாற்றுதல் மட்டுமே என் லட்சியம் . ”என்று சொல்லியிருப்பவர் , ”உட்கட்சியில் சக தலைவர்களை அனுசரித்து செல்வதுதான் நல்ல நிர்வாகிக்கு அழகு . ‘மாற்றப்படுவார்’ என்று ஜோசியமெல்லாம் கூறுவது அவரவர் இயல்பை , குணத்தைப் பொறுத்தது . இப்படி பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை . ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் . ராஜிவ்காந்தியின் நண்பராகவே இருந்தவரும் , கேபினெட் அமைச்சராக இருந்தவருமான மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரையே காங்கிரஸ் தலைமை நீக்கியது . அப்படியென்றால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார்கள் . இதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் . ஆனால் இளங்கோவைனை நீக்க வேண்டுமென நான் கேட்டதில்லை . ” என்று தெறிக்கவிட்டிருக்கிறார் திருநாவுக்கரசர் . அரசரின் இந்த வார்த்தைகளை ”மணிசங்கர் அய்யரையே தூக்கி எறிந்த கட்சி தலைமைக்கு இளங்கோவனெல்லாம் ஒரு விஷயமேயில்லை என்பதைத்தான் , ‘இளங்கோவன் மீது ஏன் நடவடிக்கை இல்லை ? ’ எனும் கேள்விக்கு மறைத்துப் பேசி பதில் தந்திருக்கிறார் அரசர் . இளங்கோவனை நீக்க நான் தலைமையிடம் கேட்டதில்லை ! என்று சொல்லியிருப்பதன் மூலம் இளங்கோவன் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் , அதனால் தனக்கு ஒன்றும் ஆவப்போவதில்லை , நான் அவரையெல்லாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை , அதனால்தான் அவரையெல்லாம் நீக்க சொல்லி கேட்கவில்லை ! என்று அரசர் பேசியுள்ளார் . ” என விளக்க உரை தருகின்றனர் சக காங்கிரஸ் நிர்வாகிகள் . அரசர் - இளங்கோவன் இடையிலான இந்த ரத்தமில்லா யுத்த சப்தம் எப்படி முடிவுக்கு வருகிறதென பார்ப்போம் !
1
ராகுல் தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணாக்குவதோடு , அணியையும் பின்னோக்கி இழுக்கிறார் . அவர் என்னதான் சொதப்பினாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது . இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் தொடர்ந்து சொதப்பிவருகிறார் . இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக படுமோசமாக சொதப்பினார் ராகுல் . முரளி விஜய் , தவான் ஆகிய வீரர்கள் சோபிக்காதபோது அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர் . ஆனால் ராகுலுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன . இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் கருதி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் , அதற்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா ? கடந்த ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ராகுல் , வெறும் 468 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் . 12 போட்டிகளில் ஆடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார் . அதேநேரத்தில் 4 முறை டக் அவுட்டாகியுள்ளார் . ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பியதால் , மூன்றாவது போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டு மயன்க் அகர்வாலும் ஹனுமா விஹாரியும் தொடக்க வீரர்களாக களமிறக்கப்பட்டனர் . ஹனுமா விஹாரி இறங்கிய 6ம் வரிசையில் ரோஹித் சர்மா இறங்கினார் . ஆனால் ரோஹித் சர்மாவிற்கு குழந்தை பிறந்திருப்பதால் , அவர் நாடு திரும்பிவிட்டதால் 6ம் வரிசையில் ஹனுமா விஹாரி இறங்க வேண்டியிருந்ததால் , ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது . ஆனால் இந்த வாய்ப்பையும் தவறவிட்டார் ராகுல் . வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார் . ராகுல் தொடர்ந்து சொதப்பிவரும் அதேவேளையில் , மயன்க் அகர்வால் அருமையாக ஆடிவருகிறார் . காயத்தால் தொடரிலிருந்து வெளியேறிய இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷாவும் அருமையாக ஆடிவருகிறார் . எனவே இனியும் ராகுலை நம்புவதை விடுத்து மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் எதிர்காலத்தில் தொடக்க வீரர்களாக களமிறக்குவது நல்லது .
2
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானா படேகர் . அதே போல் , பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தாவும் பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார் . தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இவர் ஹார்ன் ஓகே பிளீஸ் என்ற படத்தில் நடித்த போது நானா படேகர் தவறாக தொட முயன்றதாகவும் , அதற்கு ஒப்புக் கொள்ளாததால் கட்சியினரை வைத்து மிரட்டியதாகவும் புகார் கூறி இருந்தார் . இதுதொடர்பாக இரு தரப்பும் மாறி மாறி வழக்கு தொடர்ந்துள்ளன . நோட்டீசும் அனுப்பியுள்ளனர் . இதில் நானாவுக்கு ஆதரவாகவும் , எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன . தனுஸ்ரீ தத்தாவை கடுமையாக விமர்சிக்கும் கருத்துகளுக்கும் பஞ்சமில்லை . அந்த வகையில் நடிகை ராக்கி சாவந்துக்கும் , தனுஸ்ரீ தத்தாவுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வருகிறது . தனுஸ்ரீ லெசிபியன் என்றும் அவர் தன்னையே பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் திடுக்கிடும் புகார் அளித்தார் ராக்கி சாவந்த் . மேலும் தனுஸ்ரீ ஒரு போதைக்கு அடிமையானவள் என்றும் கூறி இருந்தார் . தலையில் முடியை சற்று நீக்கி இருந்ததை வைத்து , தனுஸ்ரீ ஒரு லெஸ்பியன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாக ராக்கி சாவந்த் தெரிவித்து இருந்தார் . இதற்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ள தனுஸ்ரீ தத்தா , ராக்கி சாவந்துடன் தனக்கு எந்த ஒரு நட்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார் . ராக்கி சாவந்த அருவருப்பானவள் என்றும் , வக்கிர புத்தி கொண்டவள் என்றும் பேசியுள்ளார் தனுஸ்ரீ . நண்பர்களை மிகவும் கவனத்துடனேயே தேர்வு செய்ய வேண்டும் என்று தனது பெற்றோர் சொல்லி வளர்த்ததாகவும் அந்த அறிவுரையைத் தான் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வருவதாகவும் கூறியுள்ளார் தனுஸ்ரீ . தனக்கு நல்லவர்கள் இல்லை என்று தோன்றினால் அவர்களை ஒதுக்கி விடுவதே தனது குணம் என்று கூறியுள்ளார் தனுஸ்ரீ . மேலும் ராக்கியின் கருத்துகள் அருவருப்பானவை , வக்கிரம் உடையவை , படிப்பறிவற்றவள் பேசுவதைப் போல் உள்ளதாகவும் குமுறியுள்ளார் தனுஸ்ரீ . தனது தலைமுடியை நீக்கி இருப்பதை ஒருபாலின விரும்பிக்கான அடையாளம் என்று ராக்கி சாவந்த் கூறி இருப்பதற்கு பதில் கொடுத்துள்ள தனுஸ்ரீ இந்து அல்லது புத்த மதத்தில் கடவுளுக்கு தன்னை அர்ப்பணிப்பவர்கள் தலைமுடியை நீக்கிக் கொள்வது வழக்கம் தான் என்று தெரிவித்துள்ளார் . இதையா ஒருபாலின சேர்க்கை என்று கூறுவது என்றும் , அவமானமாக இல்லையா என்று கேட்டுள்ளார் தனுஸ்ரீ .
0
ஐபிஎல் தொடரில் ராணாவும் , பாண்டியாவும் சிறப்பாக ஆடி போட்டியை வெற்றியில் முடிப்பார்கள் என்று நம்பினோம் . எங்களின் நம்பிக்கையை அவர்கள் வீணடிக்கவில்லை வெற்றிப் பெற்ற மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டினார் . மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியும் மோதின . இதில் , 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது மும்பை . இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது . பின்னர் பேட் செய்த மும்பை அணி , வெற்றி பெற கடைசி 4 ஓவர்களில் 60 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது . இந்த நிலையில் நிதிஷ் ராணா , அர்திக் பாண்டியா ஆகியோரின் அசாத்திய ஆட்டத்தால் , மும்பை அணி 19.5 ஓவர்களில் 180 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது . ராணா 29 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார் . பாண்டியா 11 பந்துகளில் 2 சிக்ஸர் , 3 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் . இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா கூறியதுஃ " போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிக முக்கியமானது . இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது . ராணாவும் , பாண்டியாவும் சிறப்பாக ஆடி போட்டியை வெற்றியில் முடிப்பார்கள் என்று நம்பினோம் . எங்களின் நம்பிக்கையை அவர்கள் வீணடிக்கவில்லை . நிதிஷ் ராணா , பாண்டியா போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றி தேடித் தருவது எந்தவொரு அணிக்கும் மிக முக்கியமான விஷயமாகும் . இதேபோன்று அவர்கள் இருவரும் மீண்டும் சிறப்பாக ஆடுவார்கள் என நம்புகிறேன் . அதே வேளையில் எங்கள் அணி இன்னும் நிறைய விஷயங்களில் மேம்பட வேண்டியுள்ளது . இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம் . எனவே அடுத்த போட்டிக்கு முன்னதாக டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்று தவறுகளை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ' என்றார் .
2
புருவ அழகி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் மலையாள நடிகை ப்ரியா வாரியர் தனக்கு பிடித்த நடிகர் சிவ கார்த்திகேயன் என்று தெரிவித்துள்ளார் . பிரேமம் ' படத்தில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவி இளைஞர்களை வசீகரம் செய்தார் . பிறகு , ' ஜிமிக்கி கம்மல் ' ஷெரில் வந்து சாய் பல்லவியை சைடு வாங்கினார் . இவர்கள் அத்தனை பேரையும் பின்னுக்கு தள்ளியிருக்கிறார் ' ஒரு அடார் லவ் ' மலையாளப் பட நாயகியான ப்ரியா வாரியர் . மலையாளத்தில் ` ஹேப்பி வெட்டிங் ' , ` சங்ஃஸ் ' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது ` ஒரு அடார் லவ் ' என்ற படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் , காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ பாடல் ஒன்றை கடந்த மாதம் 9 - ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது . ' மாணிக்ய மலராய பூவி ' என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார் . ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்றனர் . அப்போது , தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி காதல் பார்வை பார்க்கும் ப்ரியா வாரியர் தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானார் . இந்த வீடியோவுக்குப் பிறகு , ப்ரியா வாரியருக்கென தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது . சமூக வலைதளங்கள் மூலம் இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் பிரபலமான பிரியா வாரியர் . அந்த வைரல் சம்பவத்திற்கு பிறகு நிறைய படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது . அண்மையில் கூட அவர் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கிற்குஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது . இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிரியா வாரியரிடம் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை காட்டியபோது தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் இவர்தான் என்று கூறியுள்ளார் .
0
சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறப்பதற்கு மோடி , ஜனதிபதி , ஆளுநர் வராததற்கு காரணம் அவர் குற்றவாளி என்பதால் தான் எனவும் இந்த லட்சணத்தில் பாரளுமன்றத்தில் ஜெ படத்தை திறப்போம் என அமைச்சர் ஜெயக்கூறுவது சரியா என்று விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் . சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார் . இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சபாநாயகருக்கு நினைவு பரிசு வழங்கினர் . ஜெயலலிதாவின் 7 அடி உயரம் , 5 அடி அகலம் கொண்ட முழு உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது . ஜெயலலிதாவின் உருவப்படத்தின் கீழே அமைதி , வளம் , வளர்ச்சி என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன . அதிமுகவினரின் இத்தகைய செயலுக்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பு செய்தனர் . பேரவையில் எதிர்க்கட்சியினர் இருக்கைகளில் அதிமுக எம் . பி . , க்கள் அமர வைக்கப்பட்டனர் . இதனிடையே ஜெயலலிதா புகைப்படத்தை சட்டப்பேரவையில் அல்ல பாராளுமன்றத்திலேயே திறப்போம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார் . இந்நிலையில் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறப்பதற்கு மோடி , ஜனதிபதி , ஆளுநர் வராததற்கு காரணம் அவர் குற்றவாளி என்பதால் தான் எனவும் இந்த லட்சணத்தில் பாரளுமன்றத்தில் ஜெ படத்தை திறப்போம் என அமைச்சர் ஜெயக்கூறுவது சரியா என்று விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் .
1
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தேர்வு குறித்து தேர்வாளர்களை கவாஸ்கர் விமர்சித்துள்ளார் . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி , 2 டெஸ்ட் , 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது . முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது . வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது . ரோஹித் சர்மா , கருண் நாயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது . முன்னாள் கேப்டன் கங்குலி , முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் ரோஹித் சர்மா சேர்க்கப்படாததற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர் . கருண் நாயர் சேர்க்கப்படாததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கொடுக்காத நிலையில் , வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார் . இதுவே கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் , புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரில் ஒருவரை கூட சேர்க்காததை கவாஸ்கர் விமர்சித்துள்ளார் . வரும் நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது . ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறி , சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் . இந்திய அணி தேர்வாளர்களின் இந்த நடவடிக்கையை கவாஸ்கர் விமர்சித்துள்ளார் . டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் , புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது . இருவருக்கும் ஒரே நேரத்தில் ஓய்வு அளிக்க வேண்டிய தேவையில்லை . அப்படியே ஓய்வு அளிப்பதாக இருந்தாலும் ஒருநாள் அல்லது டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கலாமே தவிர டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அளிக்கக்கூடாது . டெஸ்ட் போட்டிகளில் அணியின் சிறந்த வீரர்களுடன் தான் களமிறங்க வேண்டும் என கவாஸ்கர் காட்டமாக தேர்வாளர்களை விமர்சித்துள்ளார் .
2
கருணாநிதி மறைவிற்கு பின் அவரது நினைவாக சென்னையில் பேரணியை அழகிரி நடத்தினார் . இதையடுத்த அவர் மதுரை திரும்பினார் . இந்நிலையில் அழகிரி மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார் . இதன் முதல் கட்டமாக நேற்று தேனி மாவட்ட தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் . அப்போது அவரது ஆதரவார்கன் அழகிரிக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்கினர் . நீங்கள் மாவட்டம் வாரியாக தி . மு . க . , அதிருப்தி நிர்வாகிகள் , தொண்டர்களை சந்திக்க வேண்டம் என வலியுறுத்தினர் . ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் செய்தால் உண்மை நிலை தெரியும் . உங்கள் பின் வருவதற்கு தயாராக உள்ளனர் . கருணாநிதி பெயரில் பெரிய இயக்கம் துவங்கி , கட்சியில் நம்மை மீண்டும் சேர்க்க வைக்கும் அளவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என ஆதரவாளர்கள் வலியுறுத்தினர் . அவர்களது ஆலோசனைகளை அமைதியாக கேட்டுக் கொண்ட அழகிரி , கட்சியில் சேர்க்க அவர்கள் தயாராக இல்லை . கருணாநிதி இருந்தபோது அவரை அடிக்கடி பார்க்க செல்வேன் . 2016 சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து அவரிடம் அதிருப்தி தெரிவித்தேன் . அப்போது , ' இவர்கள் நிர்வாகம் தெரியாதவர்களாக உள்ளனர் . உனக்கான நேரம் வரும் . அப்போது வா . தோல்வியுற்ற பின் அவர்களே உன்னை தேடி வருவார்கள் . அதுவரை காத்திரு ' என தெரிவித்தார் . அப்போதுதான் , ' கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை ' என நான் வெளிப்படையாக தெரிவித்ததாக கூறினார் . கடைசி நேரத்தில் கருணாநிதியின் உடல்நலம் கருதி எவ்வித நிர்பந்தமும் கொடுக்காமல் அமைதி காத்தேன் . கருணாநிதி அழைத்தும் செல்லாமல் இருந்து விட்டேன் . தற்போது மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க உள்ளாதாக அழகிரி தெரிவித்துள்ளார் .
1
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணி இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றது . ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி ஹாங்காங்கில் நடைபெற்றது . இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் மலேசிய அணியைத் தோற்கடித்தது . இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் செந்தில் வேலவன் 12 - 10,11 - 0,11 - 2 என்ற நேர் செட்களில் மலேசியாவின் ஆங் சாய் ஹன்னை தோற்கடித்தார் . \ இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் அபய் சிங் 10 - 12,7 - 11,11 - 5,14 - 12,11 - 6 என்ற செட் கணக்கில் மலேசியாவின் டேரன் ராகுலைத் தோற்கடித்தார் . இதன்மூலம் ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது இந்தியா . முன்னதாக 2011 - இல் இந்தியா , பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது .
2
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமமுகவிலிருந்து திமுக . , வில் இணைந்த , ' மாஜி ' அமைச்சர் செந்தில் பாலாஜி , மாவட்டச் செயலரை , ' கழற்றி ' விட்டு , தனியாக சென்று , தி . மு . க . , நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் . கொங்கு மண்டலத்தில் , வலுவான நிர்வாகிகள் இல்லாமல் , திமுக . , தடுமாறி வந்தது திமுக , அதுவும் , கரூர் மாவட்டத்தில் , திறமையான நிர்வாகிகள் இன்றி தவிப்பதால் , இழுக்கப்பட்டவர் தான் , சுறுசுறுப்பாக வேலை செய்யும் பணபலம் , செல்வாக்கு மிக்க ஒரு இளம் அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி . நேற்று முதல் , கரூர் நகரம் , பேரூராட்சி , ஒன்றிய நிர்வாகிகளை , செந்தில் பாலாஜி சந்தித்து வருகிறார் . ஆனால் , தன்னுடன் , மாவட்டச் செயலர் ராஜேந்திரனை அழைத்து செல்லவில்லை . இது குறித்து , தி . மு . க . , நிர்வாகிகள் கூறியதாவதுஃஎங்கள் கட்சியில் , மாவட்டச் செயலர் பதவி , பலம் வாய்ந்தது . அவர் இல்லாமல் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியாது . நன்னியூர் ராஜேந்திரன் செயல்பாடுகளால் , கட்சி தேயத் தொடங்கியதால் , அவரை மாற்ற வேண்டும் என , தலைமை முடிவு செய்தது . இந்நிலையில் , செந்தில் பாலாஜியின் வருகை , ஸ்டாலினுக்கு பெரிய நம்பிக்கையை தந்தது . தலைமையின் உத்தரவுப்படி , கொங்கு மண்டலம் முழுவதையும் , தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வேலையை , செந்தில் பாலாஜி துவக்கி விட்டார் . அதனால் தான் , கரூர் மாவட்டத்துக்கு அப்பாற்பட்டு , கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட பிற மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் , கவுண்டர் சமூக பிரபலங்களையும் சந்தித்து வருகிறார் . மாற்றுக் கட்சியில் இருந்து முக்கியமானவர்கள் வந்து இணைந்தால் , மாவட்டச் செயலர் தலைமையில் , அறிமுக நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற நடைமுறையை , செந்தில் பாலாஜி மாற்றி உள்ளார் . ராஜேந்திரனை ஓரங்கட்டி , மாவட்டம் முழுவதும் தனித்தே சென்று , கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் இவ்வாறு கூறுகின்றனர் . அதிமுகவில் சரி , தனியாக பிரிந்து வந்து தொடங்கப்பட்ட அமமுகவிலும் தினகரன் பெரிதாய் நம்பிக்கை வைத்தவர்களில் முக்கியமானவர் செந்தில்பாலாஜி . அதுமட்டுமல்ல செந்தில் பாலாஜி என்னுடைய கம்பியூட்டர் என சொல்லும் அளவிற்கு திறமை சாலி , இளைஞர் என்றாலும் கூட மிக தேர்ந்த அரசியல்வாதி அவர் . ஜெயலலிதா இருந்த போது சில மூத்த மந்திரிகளுக்கு சிக்கல் வந்தபோது மிக சாதுர்யமாக அதை தீர்த்து வைத்தது செந்தில்தான் . அதுமட்டுமல்ல , சைலண்ட்டாக வாயே திறக்காமல் வேலையை முடிப்பார் . அப்படிப்பட்ட செந்தில் பாலாஜி இப்போது கொங்கு மண்டலத்தில் தனி சாம்ராஜ்யம் அமைக்க தீயா வேலை பார்த்து வருவது திமுகவின் பழைய கைகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது .
1
தினம் ஒரு கருத்தை சொல்லவேண்டும் என்பதற்காக ஸ்டாலின் திரித்து கருத்து கூறி வருவதாக பா . ஜ . க . மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார் . மத்திய அரசு ஏஜென்சிகளை அனுப்பி மாநில அரசின் நிர்வாகத்தை நிலை குலைய செய்வதாகவும் , ராம மோகன்ராவுக்கு மீண்டும் பதவி வழங்கியது குறித்து பா . ஜ . க கேள்வி எழுப்பாதது ஏன் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார் . இந்நிலையில் , பா . ஜ . க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறியதாவது : தினம் ஒரு கருத்தை சொல்லவேண்டும் என்பதற்காக ஸ்டாலின் திரித்து கருத்து கூறுகிறார் . ஒரு குழந்தை கூட நம்பாது என்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தவே ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார் . பா . ஜ . கவுக்கு எதிராக கருத்து கூற வேண்டும் என்பதற்காக அதிமுகவுக்கு ஆதரவராக கருத்துகளை கூறி வருகிறார் . இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார் .
1
சென்னை ஆளுநர் மாளிகையில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் . அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமானம் செய்து வைத்தார் . நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த அதிமுக அணிகள் இணைப்பு இன்று நிறைவேறியுள்ளது . 6 மாத இடைவெளிக்கு பிறகு தலைமை அலுவலகம் வந்த பன்னீர் எடப்பாடியுடன் சேர்ந்து அணி இணைப்பை உறுதி செய்தார் . இதையடுத்து புதிய அமைச்சரவை பட்டிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது . அதில் , ஓ . பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது . மேலும் நிதித்துறை மற்றும் வீட்டு வசதித்துறை இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளன . ஜெயக்குமார் , உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த நிதி மற்றும் வீட்டு வசதித்துறை பறிக்கப்பட்டுள்ளது . செங்கோட்டையன் , சேவூர் ராமசந்திரனிடம் இருந்த பொறுப்புகள் தற்போது மாஃபா . பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . சிவி . சண்முகத்துக்கு , சுரங்கம் மற்றும் கனிவளத்துறை வழங்கப்பட்டுள்ளது . ராதாகிருண்னுக்கு கால்நடை துறை வழங்கப்பட்டுள்ளது என கூறியிருந்தது . அதன்படி இன்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வராக பதவி பிரமானம் செய்து வைத்தார் . இதனால் தொண்டர்கள் மிக உற்சாகத்தில் திழைத்துள்ளனர் .
1
அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி , . பிரதமர் நாற்காலிக்கு என்ன அவசரம் ? ஜனநாயகத்தில் எந்த அவசரமும் இல்லை என்றும் இந்த நாற்காலிக்கு யார் தகுதியானவர்கள் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றும் பேசினார் . . மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை முதல் நடைபெற்றது . சிவசேனா , பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன . மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி , மோடி மீதும் பாஜக அரசு மீதும் அடுக்கடுக்கான குற்றச்ச்ட்டுகளை சுமத்தினார் . நீண்ட விவாதத்துக்குப் பிறகு இரவு 9.30 மணிக்கு பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார் . அப்போது நாட்டுக்கு வளர்ச்சி வேண்டாம் என எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர் . அதனால் வளர்ச்சிக்கான யுத்தம் நடந்து வருகிறதோ என தனக்கு தோன்றுவதாக தெரிவித்தார் . எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் தோல்வியடைந்து விடுவோம் என தெரிந்தே எனது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் . இன்று நடந்த விவாதம் மூலம் எதிர்க்கட்சிகளின் எண்ணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது . தேசத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஓன்றிணைந்த செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம் என மோடி குறிப்பிட்டார் . . என்னை பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்தது 125 கோடி மக்கள் . ஆனால் அதிகார பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர் என நினைக்கிறேன் . என குறிப்பிட்டார் . இங்குள்ள சிலர் பிரதமராக வரவேண்டும் என ஆசைப்படுகின்றனர் . இது நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு . எதிர்க்கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்கின்றனர் . தான் பிரதமராக வேண்டும் என்பதற்காக ராகுல் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறார் என மோடி தெரிவித்தார் . ராகுல் பிரதமராக ஏன் அவசரப்படுகிறார் . பிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா என கூறிய பிரதமர் ராகுலை கிண்டல் அடித்து நடித்து காண்பித்தார் . தொடர்ந்து மோடி பேசி வருகிறார்
1
இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பாகுபலி 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது . அனைத்து இடங்களிலும் எந்த தடையும் இல்லாமல் ரிலீஸ் செய்யவுள்ள பாகுபலி 2 திரைப்படத்திற்கு . தமிழில் மட்டும் திரையிடக்கூடாது என கார்த்திக் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் . இந்த வழக்கில் , பாகுபலி 2 , திரைப்படத்தின் தமிழ் உரிமையை பெற்ற கே தயாரிப்பு நிறுவனம் , தன்னிடம் வாங்கிய ரூ . 1 . 48 கோடியை வட்டியுடன் திருப்பி செலுத்தினால் மட்டுமே படத்தை திரையிட வேண்டுமென்றும் , மேலும் படத்தின் அனைத்து உரிமையையும் முடக்க வேண்டுமென்றும் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கை விசாரித்த , ஐகோர்ட் நீதிபதி , திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளார் . மேலும் படத்தின் உரிமைப்பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளதாக தீர்ப்பளித்துள்ளார் . இதனால் கண்டிப்பாக நாளை பாகுபலி 2 திரைப்படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது .
0
கர்நாடகாவில் இன்று நடந்திருக்கும் இந்த அரசியல் மாற்றத்தை , ஒட்டு மொத்த இந்தியாவே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது . பா . ஜ . க 104 இடங்களில் ஜெயித்தும் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது . பா . ஜ . க - வின் இந்த தோல்வியை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் . என்பது போல பல்வேறு அரசியல் பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர் . ”மக்கள் நீதி மய்யம்” கட்சியின் நிறுவனரும் நடிகருமான கமலஹாசனும் , அதே போன்றதொரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார் . அதில் ”கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி , தேசமெங்கும் பரவட்டும் . வாழிய பாரத மணித்திருநாடு” என கூறியிருக்கிறார் . மேலும் அவர் ”ஜனநாயாகத்திற்கு உங்களை வரவேற்கிறேன் . கர்நாடகத்தின் முதலமைச்சரை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன் . நான் காத்திருந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்” என கூறியிருக்கிறார் .
1
நீங்கள் 50 வயதைக் கடக்காதவர் என்றால் சற்றும் யோசிக்காமல் இந்த செய்தியைக் கடந்து சென்றுவிடலாம் . தமிழ் சினிமாவின் அற்புதமான காவியங்களுல் ஒன்றான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் 50 வது பொன்விழா ஆண்டு இது . இதை கவுரவிக்கும் பொருட்டு சென்னை வாணி மஹாலில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார் சிவாஜியின் தீவிர ரசிகரான நடிகர் ஒய் . ஜி . மகேந்திரன் . சிக்கல் சண்முகசுந்தரமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் , பரதநாட்டியக்காரி மோகனாவாக நாட்டியப்பேரொளி பத்மினியும் நடிப்புக்கு இலக்கணம் சொல்லித்தந்த படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ . இன்னொரு பக்கம் நாகேஷும் மனோரமாவும் , டி . எஸ் . பாலையாவும் தங்கள் வாழ்நாளின் சிறந்த பாத்திரங்களை ஏற்றிருந்த படமாகவும் ‘தில்லானா மோகனாம்பாள்’ திகழ்ந்தது . 1968ல் வெளியாகி தமிழ்சினிமாவின் மாபெரும் கொண்டாட்டமாக அமைந்த படம் இது . கொத்தமங்கலம் சுப்புவின் நாவலை மிக அற்புதமாக ஏ . பி . நாகராஜன் இயக்கியிருந்தார் . இந்தப்படத்தின் மலிவுப்பதிப்புதான் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த , தமிழ்சினிமாவின் அத்தனை வசூல் ரெகார்டுகளையும் தகர்த்த ‘கரகாட்டக்காரன்’ . கே . வி . மகாதேவனின் இசையமைப்பில் நெஞ்சை அள்ளும் ‘நலம்தானா . . . ’ , ‘மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன . . . ’ உள்ளிட்ட பாடல்களும் இன்றளவும் பிரசித்தம் . இந்த அரிய படத்துக்கு விழா எடுக்கும் பெருபேறை அப்பாஸ் கல்சுரல் அகாடமியுடன் இணைந்து ஒய் . ஜி . மகேந்திரன் தட்டிச்செல்கிறார் . நாளை மாலை வாணி மகாலில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் ‘தில்லாமோகனாம்பாள்’ படத்தில் நடித்த மூத்த கலைஞர்கள் சிலர் கவுரவிக்கப்படுகிறார்கள் . அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் , நாதஸ்வர தவில் கச்சேரிகளும் இசைக்கப்படுகின்றன . நடுவில் படத்தின் முக்கியமான சில காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன . பரபரப்பான ‘சர்கார்’ பட ரிலீஸ் சமயத்தில் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவும் ஆட்கள் இருக்கிறார்களா என்று தெரிந்துகொள்ள நாளை வாணிமகாலுக்கு ஒரு விசிட் அடிக்கவேண்டும் .
0
தமிழில் வெளியாகும் அதே தேதியில் ‘பேட்ட’ தெலுங்கு டப்பிங் படத்தையும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்ததால் தியேட்டர்கள் எதுவும் கிடைக்காமல் தெலுங்குப் பட விநியோகஸ்தர் திணறி வருவதாக தகவல்கள் வருகின்றன . ஆந்திரா , தெலங்கானா மாநிலங்களிலும் ரஜினியின் ‘பேட்ட’ படம் அதே தேதியில் ரிலீஸாகிறது . எஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் கே . சுதாகர் வெளியிடுகிறார் . நமக்கு பொங்கல் எவ்வளவு முக்கியமான பண்டிகையோ அந்த அளவுக்கு ஆந்திர மக்களுக்கு சங்கராந்தி . இந்த சங்கராந்தியை ஒட்டி ஆந்திரா . தெலங்கானாவில் ‘என் . டி . ஆர் கதாநாயகடு’ , ராம் சரணின் ‘விதய விநய ராமா’வருண் தேஜின் ‘எஃப் 2’ ஆகிய முக்கியமான மூன்று படங்கள் ரிலீஸாகின்றன . இந்த மூன்று படங்களுக்கும் தியேட்டர்கள் போட்ட பிறகுதான் ‘பேட்ட’ படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கும் என்கிற நிலையில் ரஜினி படத்தின் விநியோகஸ்தர் எவ்வளவோ முயன்றும் மிகவும் சொற்பமான தியேட்டர்களே கிடைத்துள்ளனவாம் . ஆனால் இதற்கு நேரெதிராக கர்நாடக மாநிலத்தில் ஒரு நேரடிப்படம் ரிலீஸாகிற அளவுக்கு 350க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறதாம் ‘பேட்ட்’ .
0
‘அடிச்சும் கேப்பானுங்க . அப்பவும் எதுவும் சொல்லீராதிங்க’ என்று , குடும்பத்துடன் கோவா செல்லும்போது , அஜீத் சொல்லிவிட்டுப்போனாரோ என்னவோ , இதுவரை ‘விஸ்வாஸம்’ ரிலீஸ் குறித்து மூச் விடாமல் தொடர்ந்து பிடிவாத மவுனம் சாதிக்கிறார் இயக்குநர் சிவா . தன் படங்கள் குறித்து எதுவும் பேசாமல் பன்னெடுங்காலமாகவே மீடியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் ஒதுங்கியிருக்கும் அஜீத் , சமீபகாலமாக அப்படம் சம்பந்தப்பட்ட யாருமே படம் குறித்து வாயைத்திறந்து எதுவும் பேசக்கூடாது என்று எதிர்பார்க்கிறார் . இதன் ரிசல்ட்டே சமீபத்தில் ’தல59’ படம் குறித்து அதன் இயக்குநர் விநோத் போட்ட ட்விட்டுக்கு கிடைத்த ரிவீட்டு என்கிறது தல வட்டாரம் . இந்நிலையில் விஸ்வாஸம் பொங்கலுக்கு ரிலீஸாவது சந்தேகமே என்னும் செய்தியை ஊர்ஜிதம் செய்யும் விதமாக அப்பட பாடலாசிரியர் விவேகா ட்வீட் ஒன்றைப்போட்டுள்ளார் . அதில் ‘விஸ்வாஸம்’ படத்துக்காக 6 வது பாடலாக மெலடி ஒன்றை ரெகார்ட் செய்ய ஆரம்பித்திருக்கிறோம் . பாடல் சூப்பராக வந்திருக்கிறது என்று மட்டுமே போட்டிருக்கிறார் . படம் முடிந்த பிறகு இன்னொரு பாடல் எதற்கு ? ரிலீஸ் இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப்போகுது . அதுவரைக்கும் சும்மா இருக்காம எதையாவது பண்ணிக்கிட்டு இருங்க’ என்று தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதால் இருக்குமோ ?
0
ஆசிய அணிகளுக்கான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மகளிரணி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது . ஆசிய அணிகளுக்கான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பானுக்கு எதிரான மகளிர் ஒற்றையர் சுற்று ஒன்றில் இந்தியாவின் பி . வி . சிந்து 21 - 19,21 - 15 என்ற நேர் செட்களில் உலகின் 2 - ஆம் நிலை வீராங்கனையான அகானே யமாகுசியை வீழ்த்தினார் . உலகின் 4 - ஆம் நிலை வீராங்கனையான சிந்து , இத்துடன் யமாகுசியை 8 முறை சந்தித்துள்ள நிலையில் தனது 5 - வது வெற்றியை பதிவு செய்துள்ளார் . இந்த ஆட்டம் 36 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது . மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் 13 - ஆம் நிலை வீராங்கனையான சயாகா சாடோ 21 - 12,21 - 10 என்ற செட்களில் இந்தியாவின் ஸ்ரீ கிருஷ்ணப் பிரியா குதரவள்ளியை வீழ்த்தினார் . மற்றொரு இந்தியரான அஸ்வினி பொன்னப்பாவை 14 - 21,12 - 21 என்ற செட்களில் உலகின் 16 - ஆம் நிலை வீராங்கனையான அயா ஒஹோரி வீழ்த்தினார் . இரட்டையர் பிரிவில் சன்யோகிதா கோர்படே - பிரஜக்தா சாவந்த் இனை 17 - 21,17 - 21 என்ற செட்களில் ஷிஹோ டனகா - கோஹாரு யோனேமோடோ இணையிடம் வீழ்ந்தது . அதேபோல , அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடியும் 18 - 21,18 - 21 என்ற செட்களில் மிசாகி மட்சுடோமோ - அயாகா டகாஹாஷி இணையிடம் வீழ்ந்தது .
2
இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரும் பத்ம பூஷன் , தாதா சாகேப் விருதுகள் பெற்றவருமான மிருனாள் சென் இன்று காலை 10.30 மணி அளவில் கொல்கட்டாவில் காலமானார் . அவருக்கு வயது 95 . ‘மிருகயா’ படத்தின் மூலம் உலகம் முழுமையும் அறியப்பட்ட மிருனாள் சென் 1955ம் ஆண்டு ‘ராத் போர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் . மலைவாழ் மக்களை முதலாளிகள் எப்படி சுரண்டு கொழுக்கிறார்கள் என்று தத்ரூபமாகக் காட்டப்பட்ட மிருகயா படத்தில் தான் மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது . அழகுணர்ச்சிக்கு முதலிடம் தந்து தத்துவ விசாரணைகளை படமாக்கி வந்த சென் 12க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றவர் . பெங்காலி இந்தி மொழிகளில் அதிகப்படங்கள் இயக்கிய சென் ‘ஒக ஊரி கதா என்ற ஒரே ஒரு தெலுங்குப் படத்தையும் இயக்கியுள்ளார் . இவரது மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி . . . மிருனாள் சென்னின் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன் . அன்னாரது இழப்பு திரையுலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் . அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார் .
0
கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தோனி செய்துள்ளார் . மூன்றுவிதமான ஐசிசி சாம்பியன்சிப்பையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தோனி . சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சாதனைகளை புரிந்துள்ளார் . தற்போது ஐபிஎல் கேப்டனாக தோனி , புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் . இதுவரை நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 10 சீசன்களில் 8 சீசனில் சென்னை அணிக்கும் ஒரு தொடரில் புனே அணிக்கும் கேப்டனாக செயல்பட்டுள்ளார் . சென்னை அணிக்கு 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் . இரண்டு ஆண்டு கால தடைக்கு பிறகு இந்த சீசனில் கலந்துகொண்டு சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது . இந்தமுறையும் தோனி தான் கேப்டன் . தோனியின் கேப்டன்சியில் 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது . சென்னை அணியின் கேப்டன் தோனி , நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டிக்கு கேப்டன்சி செய்ததன் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் . நேற்றைய போட்டிக்கு ஐபிஎல் தொடரில் தோனிக்கு கேப்டனாக 150வது போட்டி . இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 150 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார் .
2
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது . இந்திய அணியில் புஜாரா சதமடிக்க , மயன்க் , கோலி , ரோஹித் ஆகியோர் அரைசதம் அடித்தனர் . ஹனுமா விஹாரியை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே நல்ல பங்களிப்பை அளித்ததால் 443 ரன்களை குவித்தது இந்திய அணி . 7வது விக்கெட்டாக ஜடேஜாவை இழந்ததும் இந்திய அணி டிக்ளேர் செய்தது . இதையடுத்து முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி , 6 ஓவர்கள் பேட்டிங் செய்து விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்தது . இந்திய அணியில் மிகவும் ஃபிட்டான வீரர் என்றால் அது கேப்டன் கோலி தான் . வேகமாக ரன் ஓடுவதில் வல்லவர் . ஃபீல்டர்கள் இல்லாத திசையில் அடித்துவிட்டு 2 ரன்கள் , 3 ரன்கள் என வேகமாக ஓடி சேர்ப்பது கோலியின் வழக்கம் . அதனால் கோலியுடன் மறுமுனையில் ஆடும் வீரருக்கு சிரமம்தான் . ஏனென்றால் தொடர்ச்சியாக 2 ரன்கள் , 3 ரன்கள் என்று ஓடிக்கொண்டேயிருப்பார் . அதனால் எதிர்முனையில் இருக்கும் வீரருக்கு சோர்வாகும் . கோலிக்கு அப்படியே எதிர்மறையானவர் புஜாரா . புஜாரா வேகமாக ஓடமாட்டார் . அடிக்கடி ரன் அவுட் ஆகக்கூடியவர் . ஆனால் இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதாலும் அடுத்தடுத்து களமிறங்குவதாலும் டெஸ்ட் போட்டிகளில் இவர்கள் இருவரும்தான் பெரும்பாலும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து ஆடுவர் . ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியிலும் அப்படித்தான் . இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர் . புஜாரா 106 ரன்களும் கோலி 82 ரன்களும் குவித்தனர் . மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது பாட் கம்மின்ஸ் வீசிய 120வது ஓவரில் கோலி ஒரு ஃப்ளிக் ஷாட் அடித்துவிட்டு ஓடினார் . அப்போது மூன்று ரன்களை ஓடி முடித்துவிட்டு நான்காவது ரன்னுக்கான அழைப்பை விடுத்தார் . ஆனால் கோலி மூன்று ரன்களை முடித்த நிலையில் , அப்போதுதான் மூன்றாவது ரன்னை பாதி பிட்ச்சை தாண்டி ஓடி கொண்டிருந்தார் புஜாரா . அதனால் நான்காவது ரன்னுக்கான கோலியின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் .
2
உள்ளூர் அரசியல் பகையால் செங்கோட்டையனை எதிர்க்கும் சத்யபாமா எம் . பி ஓபிஎஸ்சுடன் கைகோர்க்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ஈரோடு மாவட்ட அரசியலில் எதிரும் புதிருமானவர்கள் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனும் புதிய வரவான சத்யபாமா எம் . பியும் . சத்யபாமாவும் செங்கோட்டையனும் எதிரிகள் அல்ல . வெங்கடாசலத்துக்கும் கோபிசெட்டிபாளையம் கே . ஏ . செங்கோட்டயனுக்கும் இடையே உள்ள அரசியல் போரில் வெங்கடாசலத்துடன் இணைந்ததால் செங்கோட்டயனுக்கு எதிரியாகிப் போனார் சத்யபாமா . மேலும் சத்யபாமாவின் கணவர் வாசுதேவனை செங்கோட்டையன் தூண்டி விட்டு தனக்கெதிராக பேசவைக்கிறார் என ஆழமாக நம்புகிறார் சத்யபாமா . கோபி தொகுதியில் பழுத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் அப்பகுதி அதிமுக நிர்வாகிகளை தனது கட்டுபாட்டில் வைத்திருக்க நினைத்தார் . ஆனால் அதற்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைத்து விட்டார் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம் கோபி நகர செயலாளர் மற்றும் நகர மன்ற தலைவராக இருந்த செய்யது புடான்சா செங்கோட்டையனுக்கு எதிராக அரசியல் செய்தார் . அவருடன் மிகவும் நெருக்கமானவர்தான் இந்த சத்யபாமா . கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளாகவே சத்யபாமாவும் செய்யது புடான்சாவும் அமைச்சர் தோப்ப வெங்கடாசலத்துடன் சேர்ந்து செங்கோட்டையனுக்கு பெரும் குடைச்சல் கொடுத்து வந்தனர் . இந்த நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையனுக்கு அதிமுக தலைமையிடமிருந்து அடித்தது ஜாக்பாட் . ஒதுக்கி வைக்கபட்டிருந்த செங்கோட்டையன் மீண்டு லைம் லைட்டுக்கு வந்ததால் இனி அரசியல் எதிர்காலம் கிடையாது என்பதை புரிந்து கொண்டார் சத்யபாமா . அதனால் எந்த நேரமும் ஓபிஎஸ்சிடம் சரணடைய அவர் காத்திருக்கிறாராம் . குறிப்பு : சத்யபாமா ஓபிஎஸ்சிடம் வருவதற்கு தற்போது இடைக்கால தடை போட்டிருப்பவர் அவரது அரசியல் குருவான தோப்பு வெங்கடாசலம் . பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அவர் கூறியதால் சற்று தாமதம் செய்கிறாராம் .
1
எஸ் . எஸ் . ராஜமெளலியின் ' பாகுபலி 2 ' என்ற பிரமாண்ட திரைப்படத்தை அடுத்து தமிழில் மீண்டும் மிக பிரமாண்டமாக தயாராகவுள்ள சரித்திர திரைப்படம் ' சங்கமித்ரா ' . இந்த திரைப்படத்தில் , ஜெயம் ரவி , ஆர்யா , ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே இந்த திரைப்படத்தின் இயக்குனர் சுந்தர் சி கூறி இருந்தார் . ஏ . ஆர் . ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று தொடங்கவுள்ள பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழாவில் ' சங்கமித்ரா ' படம் அறிமுகமாகவுள்ளது . இந்த விழாவில் ' சங்கமித்ரா ' குழுவினர்களாகிய இயக்குநர் சுந்தர் . சி , ஜெயம் ரவி , ஆர்யா , ஸ்ருதிஹாசன் , கலை இயக்குநர் சாபுசிரில் , இசையமைப்பாளர் ஏ . ஆர் . ரஹ்மான் , தயாரிப்பாளர் முரளி ராமசாமி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் . இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் திரையுலகினர்களுக்கும் ' சங்கமித்ரா ' படக்குழுவினர் இந்த படத்தைப் பற்றிய அறிமுகம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள் . அதில் ' சங்கமித்ரா ' பற்றி படக்குழுவினர் தெரிவித்திருப்பதாவதுஃ " சங்கமித்ரா 8 - ம் நூற்றாண்டில் நடக்கும் கதை . முதன்மை பாத்திரமான சங்கமித்ரா ஈடற்ற அழகி . அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் சோதனைகளும் , துயரங்களுமே இந்தக் கதை . பல்வேறு ராஜ்ஜியங்கள் , பல்வேறு உறவுகளைப் பற்றிய இந்தக் கதை பிரம்மாண்டமாக சொல்லப்படவுள்ளது . தமிழ் திரைப்பட மகுடத்தில் ஒரு ரத்தினமாக ஜொலிக்க சங்கமித்ரா முயல்கிறது . தமிழ் என்ற தொன்மையான மொழிக்கு எங்கள் சமர்ப்பணம் . இது கற்பனைக் கதையே . இந்திய வரலாற்றில் அறியப்படாத சில அத்தியாயங்கள் சங்கமித்ராவின் மூலம் திரையில் அழகாக விரியும் . சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும் " இவ்வாறு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .
0
ஹர்பஜன் சிங் தன்னை குரங்கு என்று அழைத்ததற்கு பிறகு தான் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவும் தான் குடிகாரனாக ஆனதற்கும் அதுதான் காரணம் என்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் . பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அந்த அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்தவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் . சைமண்ட்ஸ் சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் . இவர் 2008ம் ஆண்டு நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவுகூர்ந்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் . 2007 - 08ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி , கும்ப்ளே தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியது . அந்த தொடரில் நடுவர்களின் தவறான முடிவுகளால் இந்திய அணி தொடரை இழக்க நேரிட்டது . அந்த தொடர் முழுவதும் 14 தீர்ப்புகள் இந்திய அணிக்கு எதிராக நடுவர்களால் வழங்கப்பட்டது . அதில் சுமார் 10 தவறான தீர்ப்புகள் சைமன்ட்ஸுக்கு சாதமாக வழங்கப்பட்டவை . சைமண்ட்ஸுக்கு 10 முறை அவுட் வழங்கப்படவில்லை . இந்நிலையில் , அந்த நேரத்தில் அம்பயரின் தவறான முடிவுகள் குறித்த சர்ச்சை கிளம்ப , அதை அடக்கும் விதமாக வேறு ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள் . அது சைமண்ட்ஸ் செய்த காரியம்தான் . தன்னை ஹர்பஜன் சிங் மங்கி ( குரங்கு ) என்று அழைத்ததாக குற்றம்சாட்டினார் . இந்த சர்ச்சை வெடித்தது . இந்த பிரச்னையை சச்சின் தலையிட்டு சுமூகமாக முடித்துவைத்தார் . இந்த பிரச்னை சுமூகமாக முடியவில்லை என்றால் , தொடரை பாதியில் முடித்துக்கொண்டு இந்திய அணியை நாடு திரும்பச்செய்ய பிசிசிஐ தயாராக இருந்த நிலையில் , அந்த பிரச்னையை முடித்துவிட்டது ஆஸ்திரேலியா . ஆனால் சைமண்ட்ஸை குரங்கு என்று அழைக்கவில்லை என்று ஹர்பஜன் சிங் மறுத்தார் . அந்த பிரச்னை அத்துடன் முடிந்துவிட்டது . அதன்பிறகு குடி மற்றும் ஒழுங்கீன செயல்பாடுகளின் காரணமாக சைமண்ட்ஸ் அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் . அதன்பிறகு ஐபிஎல்லில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஆடியுள்ள சைமண்ட்ஸ் மீண்டும் தற்போது அந்த விவகாரத்தை கிளப்பியுள்ளார் . ஹர்பஜன் சிங் தன்னை அந்த ஒருமுறை மட்டும் குரங்கு என்று கூறியதில்லை . இந்தியாவில் ஆடியபோதும் ஒன்றிரண்டு முறை அதேபோல் என்னை குரங்கு என்று அழைத்துள்ளார் . அவர் என்னை குரங்கு என்று அழைத்ததன் பிறகு எனது கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்தது . அதிகமாக குடிக்க ஆரம்பித்தேன் . அதனால் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்னை வந்தது . நான் அதிகமாக குடித்ததற்கு ஹர்பஜன் சிங் தன்னை குரங்கு என்று அழைத்ததுதான் காரணம் என்பதாக கூறியுள்ளார் . சைமண்ட்ஸ் . 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரச்னையை இன்னும் பேசிவருகிறார் சைமண்ட்ஸ் .
2
பெரும் பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் நேற்று வெள்ளியன்று ரிலீஸான ஆறு படங்களில் சிவகார்த்திகேயனின் ‘கனா’வும் , ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ ஆகிய இரு படங்கள் மட்டுமே வசூல் ரீதியாகவும் , ரிப்போர்ட் ரீதியாகவும் தேறியுள்ளன . இந்த ரேசில் எடுத்த எடுப்பில் பலத்த அதிர்ச்சியோடு படுதோல்வியை சந்தித்த படம் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ . அவரது 25 வது படம் என்று விளம்பரம் செய்யப்பட்ட படத்தில் விஜய்சேதுபதி 25 நிமிடங்கள் வராதது ஒருபுறமிருக்க , அவரது போர்ஷன்கள் படு திராபையாக இருந்தன . அடுத்த அடி வாங்கியவர் திருவாளர் தனுஷ் . நல்ல படங்கள் செய்துகொண்டிருக்கும் போதே நடுவில் அவ்வப்போது ‘மாரி2’ போன்ற குப்பைகள் வழங்குவது தனுஷின் வழக்கம் . ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ பழிவாங்கும் மசாலா என்றாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களைக் கட்டிப்போடும் திரைக்கதையால் ஓரளவு தப்பிப் பிழைத்திருக்கிறது . இதற்கு அடுத்த இடத்தில் சவலைப் பிள்ளை போல் இறங்கியிருக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ சின்ன பட்ஜெட் படம் என்கிற வகையில் பெரிய ஆபத்தில் இல்லை . ஆனால் ‘ராட்சசன்’ படத்தில் வாங்கிய பெயரிலும் சம்பாதித்த பணத்திலும் பாதியைப் பறிகொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால் . நடிகர் விஷாலின் நிறுவனம் வாங்கி வெளியிருக்கும் கன்னட டப்பிங் படமான ‘கே . ஜி . எஃப்’க்கு தரப்பட்ட பில்ட் அப் படத்தில் இல்லை . இத்தனை நேரடி ரிலீஸ்களோடு மோதும் தகுதிகள் இல்லாத படம் என்பதால் அதுவும் தேறுவது கஷ்டம் . ஆக இந்த ரேசில் தரத்திலும் வசூலில் தனித்த கொடி நாட்டியிருப்பதென்னவோ சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’தான் .
0
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் , ரைசா வில்சன் இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ' பியார் பிரேமா காதல் ' . இந்த படத்தை அறிமுக இயக்குனர் இளன் இயக்கி இருக்கிறார் . இந்த வாரம் வெளியான இந்த படத்தின் கதை மிகவும் , வித்தியாசமாக இருப்பதாகவும் பிக்பாஸ் ரைசா ஓவர் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த படத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சுசீந்திரன் . . . இந்த படத்தில் சில நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்கள் இருப்பதால் இது கலாச்சாரா சீரழிவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது என கூறியுள்ளார் . இருப்பினும் முதல் தயாரிப்பிலேயே யுவன் வெற்றி பெற்றுள்ளார் . இயக்குனர் தன் வசனங்கள் மூலம் காட்சியை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் . படத்தின் மிகபெரிய பலமே யுவனின் இசை . இரண்டாவது ஹரிஷ் கல்யாணின் எதார்த்தமான நடிப்பு என்றும் இயக்குனர் இளன் கடைசி 20 நிமிடங்களில் உணர்வு பூர்வமாக இயக்கியுள்ளார் என பாராட்டியுள்ளார் . மேலும் இந்தப்படத்தை கலாச்சாரச் சீரழிவு என்றும் கூறலாம் . இப்படியொரு கலாச்சாரா காதல் நடைமுறையில் இருக்கிறது என்றும் வாதம் செய்யலாம் . ஆனால் ஒட்டுமொத்தத்தில் அனைவரும் சேர்ந்து ஒரு வெற்றிப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர் என கூறியுள்ளார் சுசீந்தரன் .
0
சர்கார் விவகாரத்தில் கோர்ட்டில் உண்மையை ஒப்புக்கொண்ட பிறகு ரொம்ப ஓவராகத்தான் ஏ . ஆர் . முருகதாஸை வம்பிழுக்கிறார்கள் . மிச்சப் பஞ்சாயத்தை விமர்சனம் எழுதுறப்ப வச்சுக்கலாம் என்கிற பெருந்தன்மை கூட இல்லாமல் , அடிச்சா ஏன்னு கேட்க ஆளில்லாத கைப்புள்ளய அடிப்பதுபோலவே , சகட்டுமேனிக்கு அடிக்கிறார்கள் . எனவே அவர் மீது தொடர்ந்து திருட்டுப்பட்டம் சுமத்துபவர்களுக்கு , கதையை திருடவே திருடாமல் அவர் இயக்கிய படம் ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது என்பதை இந்த உலகத்துக்கு சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் . அதற்கு முன்பாகவே நேற்று முதல் நடமாடி வரும் அவர் திருட்டுப்பட்டம் சுமந்து வரும் , படங்களின் விபரங்களைப் பார்த்துவிடுவதும் நல்லது . இவ்வளவு காலமும் இல்லாமல் ‘தீனா’வும் இந்தப்பட்டியலில் இடம்பெற்ற கொடுமையை என்னவென்று சொல்வதம்மா ? ( 1 ) தீனா இந்த கதை R . நித்தியகுமார் என்ற இயக்குநரின் கதை . . இவர் K . சுபாஷ் , SJ . சூர்யா , இவர்களிடம் இனை இயக்குநராகவும் . . பிறகு நடிகர் அருன்விஜய் நடித்த , வேதா’திரைப்படத்தை இயக்கியவர் . ( 2 ) ரமணா இந்த கதை நந்தகுமார் என்ற இயக்குநரின் கதை . . இவர் மறைந்த இயக்குநர் ராஜசேகர் , மற்றும் P . வாசு அவர்களிடம் இனை இயக்குநராகவும் பிறகு விஜயகாந்த் நடித்த தென்னவன் ‘திரைப்படத்தை இயக்கியவர்… இவர் KT . குஞ்சுமோன் ( திரைப்பட தயாரிப்பாளர் ) இவரின் மகனை வைத்து கோட்டீஸ்வரன் என்ற படத்தை இயக்கும் போது . . AR . முருகதாஸ்… . நந்தகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் , ( 3 ) கஜினி இந்த படத்தின் கதை … மெமொன்டோ என்ற ஒரு ஆங்கில படத்திலிருந்து ஒரு பட்டப்பகலில் திருடப்பட்டது . ( 4 ) துப்பாக்கி இந்த கதை வாசு என்ற உதவி இயக்குநரிடம் , பாதி கதை பிரேம்குமார் என்ற உதவி இயக்குநரிடமிருந்து திருடப்பட்டது . . வாசு… இவர் அஜீத் நடித்த நிறைய படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் . ( 5 ) கத்தி இந்த கதை… கோபி நயினார் என்ற இயக்குநரின் கதை . இவர் நயன்தாரா நடித்த ‘ அறம் ‘ படத்தை இயக்கியவர் . . ( 6 ) ஸ்பைடர் மேன் இந்த கதை இவரிடம் தெலுங்கு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாம்சன் சைத்தானியா என்ற உதவி இயக்குநரிடமிருந்து திருடப்பட்டது… ( 7 ) சர்க்கார் ‘ இந்த கதை… வருண் ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து திருடப்பட்டது… இவர் SA . சந்திரசேகர் . . மற்றும் பல இயக்குநர்களிம்…இனை இயக்குநராக பணியாற்றினார் . இப்படங்கள் இவ்வாறான பஞ்சாயத்துகளுடன் இருக்க , ஏ . ஆர் . முருகதாஸ் பெயருக்கு எவ்வித களங்கமும் ஏற்படாத ஒரிஜினல் கதாசிரியருக்கு தரவேண்டிய உரிய மரியாதையை டைட்டில் கார்டில் கொடுத்து அவர் இயக்கிய ஒரு படமும் இருக்கத்தான் செய்கிறது . அது சோனாக்ஷி ஷின்ஹா நடிப்பில் இவர் இயக்கிய ‘அகிரா’ என்ற இந்திப்படம் . தமிழில் சாந்தகுமார் இயக்கிய ‘மவுன குரு’ படத்தின் இந்தி ரீமேக்கான இதில் டைட்டில் கார்டில் சாந்தகுமாரின் பெயரை தகுந்த இடத்தில் போட்டிருந்தார் . இனி இப்படி ஏ . ஆர் . முருகதாஸின் பாசிடிவ் பக்கங்களை தேடிப்பிடிக்க துவங்குவோமே . . . ?
0
முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்து விட்டது . இந்த ஒரு மாதத்தில் அப்போலோ மருத்துவமனை வளாகம் மினி வாசஸ்தலமாக மாறிவருகிறது . முதல்வர் நலமடைய வேண்டி தொண்டர்கள் குவிந்து கிடக்கின்றனர் . அப்போலோ மருத்துவமனை வாசல் சர்வமத பூஜை மடமாக மாறி உள்ளது . போரூர் சாமியார் அன்பரசு பூசணி , தேங்காய் சாமந்திப்பூ வைத்து பூஜை செய்தார் . அதன் பின்னர் சேலம் அழகாபுரம் ஜெயந்தி சாமியார் சூலாயுதத்துடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் . பின்னர் அலேலுயா சபை சார்பிலும் , இஸ்லாமியர்கள் சார்பிலும் பூஜைகள் , பாத்தியாக்கள் , பிரார்த்தனைகள் செய்யும் கூடமாக அப்போலோ நுழைவு வாயில் மாறிப்போனது . பிரியாணி சோறு சாப்பிட்ட தொண்டர்களும் அங்கு நேர்த்திக்கடன் செய்தனர் . நேற்று காசி விஸ்வநாதர் கோவில் பிரதான பூசாரி ஓம் ஆச்சாரி பிரசாதத்துடன் வந்து முதல்வரை பார்த்தார் . முன்னாள் பேராயர் சின்னப்பா உள்ளிட்டோர் வந்தனர் . தினம் தினம் கட்சிக்காரர்கள் அப்போலோ வாயிலில் பூஜை செய்வதும் தேங்காய் உடைப்பதுமாக அப்போலோ தெய்வீக ஸ்தலமாக மாறிப்போனது . இந்நிலையில் இன்று அப்போலோ வந்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது . அதுதான் அப்போலோவில் பிரதிஸ்டை செய்யப்பட்ட அம்மனின் அலங்கார சிலை . தென்சென்னை மாவட்ட மகளிர் அணி தலைவி சரோஜினி சீனிவாசன் தலைமையில் 3 அடி உயர துர்கை அம்மனை அப்போலோ வாசலில் பிரதிஸ்டை செய்து பூஜை செய்தனர் . இதை அந்த வழியாக வந்த பொதுமக்கள் , கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் பார்த்து பரவசமாகி வணங்கினர் . தற்காலிகமாக அம்மன் சிலை நிறுவ பட்டாலும் முதல்வர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை இருக்கும் என தெரிகிறது .
1
தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது , ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்தது . இந்நிலையில் , மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி ( ஆந்திர ஆளுங்கட்சி ) , சிறப்பு அந்தஸ்து கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திவந்தது . ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை . இதையடுத்து மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் அசோக் கஜபதி ராஜூ , ஒய் . எஸ் . சௌத்ரி ஆகிய 2 அமைச்சர்களும் பதவிவிலகினர் . அதற்குப்பிறகும் மத்திய அரசு செவிமடுக்காததால் , பாஜகவுடனான கூட்டணியை சந்திரபாபு நாயுடு முறித்துக்கொண்டார் . மக்களவையில் , மத்திய பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவந்தார் . மக்களவை தொடர்ந்து முடக்கப்படுவதால் , நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது . இந்நிலையில் , சந்திரபாபு நாயுடுவை சமாதானப்படுத்தும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது . ஆனால் பாஜகவின் சமாதான முயற்சிக்கு , முடியாது என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு . மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஜனா சௌத்ரியிடம் இவ்விவகாரம் தொடர்பாக தொலைபேசி மூலம் பேசியுள்ளார் . அப்போது , மாநிலப் பிரிவினை மசோதாவில் கூறியபடி , விசாகப்பட்டினம் தனி ரயில்வே அமைப்பு , கடப்பாவில் இரும்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்குவதாக சுஜனா சவுத்ரியிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் . இதையடுத்து இந்தத் தகவலை , முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சுஜனா சௌத்ரி நேற்று காலை கூறினார் . அப்போது அவருக்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு , மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பின்னர் , எதுவாக இருந்தாலும் அவர்கள் நாடாளுமன்றத்தில்தான் விவாதிக்க வேண்டும் . இப்போது , இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் , நம் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிடுவார்கள் . ஆதலால் , இந்த யோசனையை , நான் நிராகரித்ததாக ராஜ்நாத் சிங்கிடம் கூறிவிடுங்கள் என சந்திரபாபு நாயுடு தெளிவாக தெரிவித்துவிட்டாராம் .
1
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றும் , அது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் . இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான தகுதி தேர்வை நடத்தி , அதில் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு கூறியது . இந்த நிலையில் , மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் வகையில் ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது . மீதமிருக்கும் 15 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது . தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் . இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , கடந்த 14 ஆம் தேதி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார் . உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு , சென்னை , உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது . இந்த மனு மீதான விசாரணையின்போது , நீதிபதி ரவிச்சந்திர பாபு வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்தும் , தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது . மேலும் , அரசாணை ரத்து செய்யப்பட்டது சரியே என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது . இது தொடர்பாக நேற்று சுகாதார துறை அமைச்சர் , செயலாளர் , மக்களவை துணை சபாநாயகர் ஆகியோர் , மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்தித்து நீட் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர் . இந்த நிலையில் , நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட சிக்கல்களை களைவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார் . 85 சதவீத ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றும் , இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .
1
“ஊரெல்லாம் காலா ஃபீவராக இருக்கு . நான் சொல்லப்போவதும் காலா சமாச்சாரம்தான் ! தமிழ்நாடு முழுக்க இன்று காலா படம் ரிலீஸ் ஆகிவிட்டது . ஆனால் , இன்று காலை வரை முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் “காலா” ரிலீஸுக்கு எந்த அறிகுறியும் இல்லை . எடப்பாடியில் நான்கு தியேட்டர்கள் தான் இருக்கின்றன . புதிய படங்கள் தொடர்ந்து இங்கே ரிலீஸ் செய்யப்பட்டாலும் , “காலா” ரிலீஸ் பற்றி எடப்பாடியில் எங்கேயும் போஸ்டர்கள் இல்லை . ரசிகர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை . தியேட்டர்காரர்களோ , ‘ரேட் கட்டுப்படியாகாது . அதனால் படத்தை எடுக்கலை . . . ’ என்று சொல்லி வந்தனர் . ஆனா , மேட்டரோ அதுவல்ல , ‘காலா படம் தமிழக அரசை விமர்சனம் செய்வது போல இருக்கிறது . அதை நம்ம ஊரில் ஓடவிட்டால் நமக்குதான் அசிங்கம் , அது நம்ம ஊரிலிருந்து முதவராக இருக்கும் உங்களுக்குத்தான் என சிலர் முதல்வர் பழனிசாமியிடம் சொல்லியிருக்கிறார்கள் . அத்துடன் இல்லாமல் , எடப்பாடியில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலரோ , “காலா” படத்தை இங்கே எவனும் ரிலீஸ் செய்யக் கூடாது . மீறி செஞ்சீங்கன்னா அண்ணன் ( முதல்வர் ) கோபத்துக்கு ஆளாயிடுவீங்க . . . ’ என்று தியேட்டர் உரிமையாளர்களைச் மிரட்டியிருக்கிறார்கள் . அதன் பிறகு தியேட்டர் ஓனர்கள் யாரும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையாம் . தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான ஊர்களில் எடப்பாடியில் மட்டும்தான் இன்று ரிலீஸ் இல்லை என்பது படத்தின் தயாரிப்பாளரான மருமகனிடம் சொல்லப்பட்டு இருக்கிறது . அவர் தியேட்டர்காரர்களுடன் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் . அவர்கள் ஆளுங்கட்சியினரின் அழுத்தத்தை சொல்ல . . . மருமகன் உடனடியாக இந்த விஷயத்தை மாமனாரின் கவனத்துக்கு கொண்டு போனாராம் . ‘நான் பேசுறேன் . . . ’ என்று சொன்ன மாமனார் , உடனடியாக அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் . ‘படத்தை பார்க்காமலேயே எதிர்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ? படத்துல ஆளுங்கட்சியை , குறிப்பாக அதிமுகவை எந்த இடத்திலும் நாங்க எதையும் பேசல . நீங்க யாரு வேண்டுமானாலும் தாராளமாக படம் பாருங்க . ரிலீஸுக்கு முன்பே முதல் மந்திரி பாக்கனும்னாலும் ஷோவுக்கு ஏற்பாடு பண்ண சொல்றேன் . அதைவிட்டுட்டு , படம் பார்க்காமலேயே நீங்க தடுக்கிறது எப்படி சரியாகும் . . ’ என கோபமாக கேட்டாராம் கரிகாலன் . அதற்கு அந்த மந்திரியோ , அய்யய்யோ ’நாங்க எங்கேயும் தடுக்கவில்லையே . . . ’ என பதரியடிசிகிட்டு சொன்னாராம் . . . . ‘CM . மோட சொந்த ஊர் எடப்பாடியில தடுத்திருக்காங்க . இன்னும் அங்கே படம் போடலை . . . ’ என கரிகாலன் சொல்ல . ’நான் இதை என்னன்னு உடனே விசாரிக்கிறேன் . . ’ என்று சொன்ன மந்திரி , இந்த விஷயத்தை முதல் மந்திரியிடம் கொண்டு போயிருக்கிறார் . ‘நான் யாரையும் படத்தை போட வேண்டாம்னு சொல்லவே இல்லையே . . . யாரு மிரட்டினாங்கன்னு நான் உடனே கேட்கிறேன் . . ’ என்று சொன்னாராம் முதல் மந்திரி . அத்துடன் உடனே எடப்பாடியில் உள்ள அதிமுக நகர செயலாளரை போனில் பிடித்து செமையா டோஸ் விட்டாராம் . ‘என்னை கேட்காம நீங்க எப்படி இப்படி செய்யலாம் ? இருக்கிற பிரச்னை போதாதுன்னு எனக்கு ஆளாளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா ? நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது . எடப்பாடியில் “காலா” படம் எல்லா ஊரைப் போலவே ரிலீஸ் ஆகனும் . . ’ என கோபத்துடன் கத்தினாராம் முதல் மந்திரி . அதன் பிறகு எடப்பாடி நகர செயலாளர் எடப்பாடியில் உள்ள தியேட்டர் ஒனர்களை தனித்தனியாக வீட்டிற்க்கே சென்று , ‘நீங்க படத்தை ரிலீஸ் பண்ணிக்கோங்க . . . ’ என சொல்ல . . . தியேட்டர்காரர்களோ , ‘இதுக்கு மேல எங்கே போய் ரிலீஸ் பண்றது . . . நாங்க பண்ணவே இல்ல . ஓடுற படமே ஓடட்டும் . . ’ என சொல்லி பின் வாங்கியிருக்கிறார்கள் . ஆனால் அதிமுகவினரோ , ‘எப்படியாவது காலையில் படத்தை ரிலீஸ் பண்ணுங்க . இல்லைன்னா எங்களுக்கு பெரிய சிக்கல் ஆகிடும் . . என்ன உதவியானாலும் செய்ய ரயாராக இருக்கோம் . . ’ என்று கெஞ்சி பட ரிலீஸுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் . அதிமுகவினரின் இந்த செயலால் அவசர அவரசமாக நேற்று அதிகாலையிலேயே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு படம் ரிலீஸ் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனதாம் .
1
ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் விலைபோகாத பிரண்டன் மெக்கல்லம் , மறைமுகமாக ஒரு செய்தியை சொல்லியுள்ளார் . அந்த செய்தி , ஏற்கனவே அவரை ஏலத்தில் எடுக்காததால் அதிர்ச்சியில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது . ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் கடந்த 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்தது . அந்த ஏலத்தில் சில பெரிய வீரர்கள் விலைபோகவில்லை . முதல் சுற்று ஏலத்தில் அடிப்படை விலைக்குக்கூட ஏலம் போகாத யுவராஜ் சிங்கை இரண்டாவது சுற்றில் மும்பை அணி அடிப்படை விலைக்கு எடுத்தது . ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான பிரண்டன் மெக்கல்லம் அடிப்படை விலையான ரூ . 2 கோடிக்குக்கூட ஏலம் போகவில்லை . அவரை எடுக்க எந்த அணியுமே ஆர்வம் காட்டவில்லை . இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலானோருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது . ஐபிஎல் வரலாற்றில் முதல் போட்டியிலேயே சதமடித்தவர் மெக்கல்லம் . அவர் அடித்த 158 ரன்கள் என்பது தான் 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது . அதை 2013 ஐபிஎல்லில்தான் கெய்ல் முறியடித்தார் . கெய்லுக்கு அடுத்து மெக்கல்லமின் அந்த ஸ்கோர் தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் . ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட மெக்கல்லமிற்கு வயதும் அதிகமாகிவிட்டதால் , அவர் முன்புபோல் அதிரடியாக ஆடுவதில்லை . கடந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புடன் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்தது . ஆனால் கடந்த சீசனில் மெக்கல்லம் சரியாக ஆடவில்லை . 6 போட்டிகளில் ஆடி வெறும் 127 ரன்களை மட்டுமே எடுத்தார் . இதையடுத்து அவரை கழட்டிவிட்டது பெங்களூரு அணி . கடந்த சீசனில் அவர் சரியாக ஆடாத நிலையில் இந்த சீசனில் அவரை அனைத்து அணிகளும் புறக்கணித்தன . இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரண்டன் மெக்கல்லம் , எல்லா நல்ல விஷயங்களும் இப்படித்தான் முடிவுக்கு வரும் . நான் ஏலத்தில் எடுக்கப்படாதது குறித்து பெரிதாக வருத்தப்படவில்லை . ஏனென்றால் இதுதான் எதார்த்தம் . சில நியூசிலாந்து வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று மெக்கல்லம் தெரிவித்துள்ளார் . கடந்த 2016ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மெக்கல்லம் , டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார் . 11 ஐபிஎல் சீசன்களிலும் ஆடியுள்ள மெக்கல்லம் , சில நல்ல விஷயங்கள் இப்படித்தான் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளதன் மூலம் ஐபிஎல்லிலிருந்து அவர் ஒதுங்குகிறாரா என்ற ஐயத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது . அதனால் அவரது அதிரடி பேட்டிங்கிற்கு அடிமையாகப்போன ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .
2
நடிகர் ரஜினிகாந்த் , கடந்த 5 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது . முதல் நாள் தொடக்க விழாவில் பேசிய ரஜினி , தன்னை அரசியல் ஆதாயத்துக்காக பல கட்சிகள் இழுப்பதாக தெரிவித்தார் . மேலும் , “நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது” என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் . இதனால் , தமிழக அரசியலில் பெரும் சர்ச்சை கிளம்பியது . மேலும் , திமுக செயல் தலைவர் மு . க . ஸ்டாலின் , பாமக அன்புமணி ஆகியோர் சிறந்த நிர்வாகிகள் என கூறினார் . இதனால் , பாஜகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர் . இதையடுத்து பாஜக தலைவர்கள் ரஜினி குறித்து பல்வேறு கருத்துகளை பத்திரிகைகளில் வெளியிட்டு வருகிறார்கள் . குறிப்பாக பேஸ்புக் , வாட்ஸ்அப் என சமூக வளைதளங்களில் பல்வேறு பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன . இந்நிலையில் , நான் ரஜினி ரசிகன் . . . அவர் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என மயிலாப்பூர் அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் , செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டியளித்துள்ளார் . இதுகுறித்து எம்எல்ஏ நட்ராஜ் , செய்தியாளர்களிடம் கூறியதாவதுஃ - நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை . மக்கள் விரும்பினால் , அவர் தாராளமான வரட்டும் . இது ஜனநாயக நாடு . எல்லோருக்கும் உரிமை உள்ளது . அவர் அரசியலுக்கு வருவதில் , மக்களின் விருப்பமே முக்கியம் . நானும் , ரஜினியின் ரசிகன் என்பதில் எனக்கு சந்தோஷம்தான் . . . டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது என பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன . இதனை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் . ஆனால் , போலீசார் அத்துமீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது தடியடி நடத்துவது தவறான செயல் . குறிப்பாக பெண்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது . இவ்வாறு அவர் கூறினார் .
1
குடும்ப உறுப்பினர்கள் கை விட்டதால் முதியவர் ஒருவரின் சடலத்தை அனாதை பிணமாக குப்பை வண்டியில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்த ராஜாராம் கூலி தொழிலாளி வயதாகிவிட்டதால் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்டு சோளிங்கர் பகுதியிலேயே பிச்சை எடுத்து வயிற்றை கழுவி வந்தார் . இந்நிலையில் கடந்த 27ம் தேதி மரணமடைந்ததை அடுத்து . யாரும் அவரது உடலை வாங்க வராததால் அனாதை பிணமாக வழக்கு எடுத்துக்கொண்ட சோளிங்கர் காவல் துறையினர் . அந்த முதியோர் குறித்து அறிவிப்பு வெளியிட்டனர் . அதனையடுத்து முதியோரை தேடி சோளிங்கர் காவல் நிலையத்திற்கு வந்த குடும்ப உறுப்பினர்கள் ராஜாராம் உடலை அடக்கம் செய்ய வசதி இல்லையென்று ஆகையால் அனாதை பிணமாக கருதி அடக்கம் செய்யும் படி தெரிவித்ததாக கூறப்படுகிறது . இதனையடுத்து சோளிங்கர் பேரூராட்சி ஊழியர்களின் ஒத்துழைப்போடு குப்பை அள்ளும் வண்டியில் திறந்த நிலையில் அந்த முதியோரின் சடலத்தை வெள்ளை துணியால் கட்டி சோளிங்கர் அரசு மருத்துவமனையில் இருந்து சுடுகாடு வரை கொண்டு சென்றதை கண்ட மக்கள் கண்ணீரோடு பார்த்து மனமுடைந்துள்ளனர் . மேலும் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதால் இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது .
1
சமீபகாலமாக பிரபலங்களை எல்லாம் விட இணையத்தில் பிரபலமாகி இருப்பது மியூசிக்கலி , டிக்டொக் , பெர்ஃபாம்ர்கள் தான் . இது போன்ற டப் ஸ்மேஷ்களால் தங்களின் திறமையை வெளிப்படுத்துகிறேன் என்ற பெயரில் சிலர் அத்துமீறுவது முகம் சுழிக்க வைத்தாலும் , பாராட்டும்படியான திறமையாளர்களும் இதே செயலிகள் மூலம் வெளிப்படதான் செய்கிறார்கள் . இப்போது திரையில் வரும் சீரியல்களை விட இது போன்ற வீடியோக்களே மிகச்சிறந்த பொழுதுபோக்காக மாறி இருக்கிறது பலருக்கு . இது போன்று இணையங்களில் வைரல் ஆகும் வீடியோக்களால் பிரபலமானவர்கள் பலர் . அதிலும் சின்ன சின்ன க்யூட்டான செயல்களால் எக்கச்சக்கமான ரசிகர்களின் உள்ளத்தைஅந்த வகையில் சமீபத்தின் இணையத்தில் வைரலாகி இருக்கிறது இந்த குட்டிப்பெண்ணின் க்யூட் வீடியோ . பிரபல பாடல்களுக்கு க்யூட்டாகவும் மாஸாகவும் இந்த அழகு குட்டி பெண் கொடுக்கும் எக்ஸ்ப்ரெஷன்களுக்கு முன்னால் , பெரிய பெரிய நடிகர்கள் கூட தோற்றுப்போவார்கள் , அந்த அளவிற்கு முகபாவத்தால் அசத்தி இருக்கிறார் இந்த குழந்தை . பாடல்களாகட்டும் , டப் ஸ்மேஷாகட்டும் இவரின் எக்ஸ்பிரஷனில் எல்லாமே ஆஸம் தான் . அதிலும் தெறி படத்தில் வரும் காட்சிகளை இவர் டப்ஸ்மேஷ் செய்திருப்பதை பார்க்கும் போது அப்பட்டியே நைனிகாவை தான் நியாபகபப்டுத்துகிறார் இந்த குட்டி தேவதை .
0
கேப்டன்ஷிப்பில் கோலிக்கு அனுபவம் குறைவுதான் என்று தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் காலிஸ் கூறியுள்ளார் . தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் - ரவுண்டரும் , ஐ . பி . எல் . கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஜாக் காலிஸ் நேற்று பேட்டி அளித்தார் . அதில் , " ‘லெக் - பிரேக்’ வகை பந்து வீச்சாளர்களை கணித்து விளையாடுவதற்கு சிறிது நேரம் பிடிக்கும் . எங்கள் நாட்டில் போதுமான உலகத்தரம் வாய்ந்த லெக் - ஸ்பின்னர்கள் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும் . உள்நாட்டில் இத்தகைய பந்துவீச்சை போதுமான அளவில் விளையாடாததே தோல்விக்கு முக்கிய காரணமாகும் . எனவே , அணியில் இளம் வீரர்கள் கற்றுக்கொள்வதற்குரிய காலக்கட்டம் இதுவாகும் . கிரிக்கெட்டில் அனுபவம் மிகவும் முக்கியமானது . ‘லெக் - பிரேக்’ பந்து வீச்சை இரண்டு வகையில் மட்டுமே கணிக்க முடியும் . ஒன்று , பவுலர்களின் கையை விட்டு பந்து வரும்போதே கணிக்க வேண்டும் . 2 - வது , பந்து பிட்ச் ஆனதும் அது எப்படி திரும்பும் என்பதை பார்த்து , அதற்கு ஏற்ப ஆட வேண்டும் . ஒருவர் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றால்தான் , இது போன்ற பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ள முடியும் . மூத்த வீரர்கள் ( டிவில்லியர்ஸ் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் ) காயம் அடையும் போது அணியின் நிலைமை என்ன ஆகும் என்பதை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இப்போதாவது உணர வேண்டும் . பெரும்பாலான வீரர்களுக்கு சுழற்பந்து வீச்சை சமாளிப்பதில் ஆழ்ந்த திறமை இல்லை . அதனால் இளம் வீரர்களை சர்வதேச கிரிக்கெட்டுக்கு கொண்டு வரும்போது , தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும் . இந்திய கேப்டன் விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறார் . ஒரு கேப்டனாக எல்லா நேரத்திலும் ஆக்ரோஷமாக இருக்கக் கூடாது . இந்த விஷயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும் . கேப்டன்ஷிப்பில் அவருக்கு அனுபவம் குறைவு தான் . போக போக , அவர் தனது ஆக்ரோஷத்தை நிச்சயம் குறைத்துக் கொள்வார் என்று நம்புகிறேன் . ஆனால் கிரிக்கெட் மீது அவர் காட்டும் ஆர்வத்தை பார்க்க அருமையாக இருக்கிறது . ஐ . பி . எல் . கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா அணியில் வீரர்கள் சரியான கலவையில் இடம் பெற்றுள்ளனர் . கௌதம் கம்பீர் வேறு அணிக்கு மாறிய நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்று கேட்கிறீர்கள் . அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை . ஆனால் கேப்டன் வாய்ப்பில் கிறிஸ் லின்னும் இருக்கிறார் . எங்கள் அணியின் கேப்டன் யார் ? என்பது ஓரிரு வாரங்களில் தெரிய வரும் " என்று காலிஸ் தெரிவித்தார் .
2
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி , இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ . 82 , 45 , 000 சம்பாதிப்பதாக , வியப்பான தகவல் வெளியாகியுள்ளது . ஃபேஸ்புக் , ட்விட்டர் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் . டிவி பார்ப்பதுபோல இந்த பழக்கமும் , மக்களின் தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது . குறிப்பாக , நடிகர்கள் , அரசியல்வாதிகள் , விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்கு , இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பு உள்ளது . அந்த பிரபலங்கள் பதிவிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றுக்கும் , பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ் , கமென்ட் போடுகின்றனர் . அப்படி பிரபலங்கள் போடும் புகைப்படங்களை , விளம்பர நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை பிரபலபடுத்தவும் பயன்படுத்துகின்றன . பிரபலங்களின் ரசிகர்கள் பலம் மற்றும் லைக்ஸ் , ஷேர் செய்வதை பொறுத்து , அவர்கள் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் தருகின்றன . இதன்படி , இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஹாப்பர்ஹெச்க்யு என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது . அதில் , ஹாலிவுட் பிரபலம் கைலி ஜென்னர் முதலிடத்தில் உள்ளார் . அவர் ஒரு ஸ்பான்சர் பதிவு வெளியிட 10 லட்சம் அமெரிக்க டாலர்களை வாங்குகிறார் . 2வது இடத்தில் உள்ள செலினா கோமஸ் 8 லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறார் . இதற்கடுத்த இடங்களில் , கிம் கார்டாஷியன் , பியான்ஸ் நோவல்ஸ் , ட்வெய்ன் ஜான்சன் , ஜஸ்டின் பீபர் , நெய்மர் , லியோனல் மெஸ்ஸி , கென்டால் ஜென்னர் உள்ளிட்டோர் உள்ளனர் . இந்த பட்டியலில் , இந்தியா சார்பாக , நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி , 17வது இடம்பிடித்துள்ளார் . அவர் வெளியிடும் ஒரு ஸ்பான்சர் பதிவுக்கு , ஒரு லட்சத்து 20 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் , 82,45,000 சம்பாதிக்கிறார் . இந்திய இளைஞர்களிடையே விராட் கோலிக்கு பெரும் செல்வாக்கு உள்ளது . இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் தங்களது பொருட்களை விளம்பரம் செய்ய முன்வருவதால் , அவருக்கு இந்த வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது . தற்போதைய நிலையில் , விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் வருமானம் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக , ஆய்வு நடத்திய ஹாப்பர்ஹெச்க்யூ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது .
2
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி என இரண்டு அரசியல் தலைவர்களும் சமூக வலைதளத்தில் சறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள் . சமூக வலைதளத்தில் டிவிட்டரில் ராகுல் , மோடி இருவரும் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் . ஆனால் பிரதமர் மோடிக்குத்தான் அதிக பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் . மோடிக்கு 4.47 கோடி பின்தொடர்பாளர்கள் உள்ளனர் . ராகுலுக்கு 80 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர் . ஆனால் குறைவான டிவிட் செய்தும் , குறைவான பின்தொடர்பாளர்களை கொண்டும் கூட ராகுல் காந்திதான் டிவிட்டரில் வைரலாக இருந்துள்ளார் . ராகுல் காந்தியின் டிவிட்டுகள்தான் அதிகமாக ரீ டிவிட் செய்யப்பட்டுள்ளது . ராகுல் காந்தியின் டிவிட்டுகள் சராசரியாக 8000 தடவை ரீ டிவிட் செய்யப்பட்டுள்ளது . மோடியின் டிவிட்டுகள் சராசரியாக 3000 தடவை மட்டுமே ரீ டிவிட் செய்யப்பட்டுள்ளது . அதேபோல் ராகுலின் டிவிட்டிற்கு சராசரியாக 3000 பதில்கள் வருகிறது . மோடியின் டிவிட்டுகளுக்கு சராசரியாக 600 பதில்களே வருகிறது . அதேபோல் ராகுலின் டிவிட்டிற்கு சராசரியாக 25000 பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள் . மோடியின் டிவிட்டுகளுக்கு சராசரியாக 15000 பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள் . இந்த மூன்றிலும் ராகுல்தான் முன்னிலை வகிக்கிறார் . ஆனால் 2017 வருடத்தில் மோடி அனைத்திலும் ராகுலை விட முன்னிலையில் இருந்தார் . ஒரே வருடத்தில் ராகுல் அவரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறார் . முக்கியமாக காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற ஒரே வருடத்தில் இவ்வளவு பெரிய மாற்றமும் நிகழ்ந்து உள்ளது . ராகுல் காந்தி அதிகமாக விவசாயம் , வேலை வாய்ப்பு , மோடி குறித்து பேசியுள்ளார் . ராகுல் காந்தி 46 டிவிட்டில் 1 டிவிட் வேலைவாய்ப்பு குறித்தும் , 17 டிவிட்டில் 1 டிவிட் விவசாயம் குறித்தும் , 13 டிவிட்டில் 1 டிவிட் மோடி குறித்தும் பேசியுள்ளார் . மாறாக மோடி 462 டிவிட்டில் 1 டிவிட் மட்டுமே வேலைவாய்ப்பு குறித்து எழுதுகிறார் . 33 டிவிட்டில் 1 டிவிட் மட்டுமே விவசாயம் குறித்து எழுதுகிறார் . ஆனால் 33 டிவிட்டில் 1 டிவிட்டில் தன்னை பற்றி எழுதுகிறார் . இந்த ஆண்மு முழுக்க ராகுல் காந்திதான் டிவிட்டரில் வைரலாக இருந்துள்ளார் . அதேபோல் மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்ட கோ பேக் மோடி போன்ற ஹேஷ்டேக்குகள் அவருக்கு எதிராக பெரிய வைரலாகி உள்ளது . 2017 மோடி வகித்த இடத்தை 2018 - ல் ராகுல் பிடித்து இருக்கிறார் . அதேபோல் 2017 - ஐ வைத்து பார்க்கும் போது 2018 - ல் தான் மோடி அதிகமாக டிவிட் செய்துள்ளார் . 2018 - ல் மோடி , மாதம் 300 - 400 டிவிட்டுகள் செய்துள்ளார் . ஆனால் ராகுல் , மாதம் 60 - 100 டிவிட்டுகள் வரை மட்டுமே செய்துள்ளார் .
1
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இடியாய் இடித்து 93 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் எடுத்துள்ளது . ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் , டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது . அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அலாஸ்டர் குக் , ஹசீப் ஹமீது ஆகியோர் களமிறங்கினர் . இதில் , 47 பந்துகளை சந்தித்த அலாஸ்டர் குக் 2 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் . அவர் , ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் அவுட் ஆனார் . இதையடுத்து ஜோ ரூட் களம் புகுந்தார் . மறுமுனையில் ஹமீது , 82 பந்துகளுக்கு 6 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் எடுத்தார் . அணியின் ஸ்கோர் 76 - ஆக இருந்தபோது , அவரை எல்பிடபிள்யு முறையில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் அஸ்வின் . தொடர்ந்து வந்த பென் டக்கெட் , 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 13 ஓட்டங்கள் எடுத்து வந்த வேகத்திலேயே திரும்பினார் . மறுமுனையில் ஜோ ரூட் 72 பந்துகளில் அரைசதம் கடந்தார் . டக்கெட்டை தொடர்ந்து களத்துக்கு வந்த மொயீன் அலி , ஜோ ரூட்டுடன் இணை சேர்ந்தார் . விக்கெட் சரிவை தடுத்த இந்த பார்ட்னர்ஷிப் , 4 - ஆவது விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் சேர்த்தது . மொயீன் அலி 99 பந்துகளில் அரைசதம் கடக்க , ஜோ ரூட் 154 பந்துகளில் சதமடித்தார் . இது , டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டின் 11 - ஆவது சதமாகும் . அணியின் ஸ்கோர் 281 - ஆக இருந்தபோது , இந்த இணை பிரிந்தது . ஜோ ரூட் 180 பந்துகளுக்கு 11 பவுண்டரிகள் , ஒரு சிக்ஸருடன் 124 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது , உமேஷ் யாதவின் பந்துவீச்சை அவரிடமே கேட்ச் கொடுத்தார் . அவரைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் களத்துக்கு வந்தார் . முதல்நாளான புதன்கிழமை ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 93 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் எடுத்தது . மொயீன் அலி 99 , பென் ஸ்டோக்ஸ் 19 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர் . இந்தியத் தரப்பில் , அஸ்வின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளும் , உமேஷ் யாதவ் , ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர் .
2
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
46
Edit dataset card