text
stringlengths 23
10.7k
|
---|
திருவாசகம் (Thiruvasagam அல்லது Thiruvasakam) சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது..திருப்பகுதி.சிவபுராணம் .(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்) .நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க .இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க |
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க .ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க .ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 .திருவாசகம் - சிவபுராணம் உரை 1-5.வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க .பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க |
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க .கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க .சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 .உரை 6-10.ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி .தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி |
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி .மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி .சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 .உரை 11-16.ஆராத இன்பம் அருளும் மலை போற்றி .சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் |
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் .சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை .முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 .உரை 17-22.கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி .எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி |
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், .எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் .பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 .உரை 23-25.புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் .பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் |
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் .வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் .செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 .உரை 26-32.எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் .மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் |
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற .மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் .ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35.உரை 33-35 .வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா .பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி |
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே .எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே .அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 .உரை 36-40.ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் .ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் |
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் .நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே .மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 .உரை 41-48.கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் .சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று |
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் .நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த .மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 .உரை 49-61.மறைந்திட மூடிய மாய இருளை .அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி |
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,.மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை .மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 .விலங்கு மனத்தால், விமலா உனக்கு .கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் .நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி |
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,.நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 .தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே .மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே.தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே .பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே |
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 .பேராது நின்ற பெருங்கருணைப் போராறே .ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே .ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே .நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே .இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 |
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் .சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே.ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே .ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே .கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 .நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே |
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே.காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே .ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற .தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 .உரை 61-83.மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் |
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் .ஊற்றான உண்ணார் அமுதே உடையானே .வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப .ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 .போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் .மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே |
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே.நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே .தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 .அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று .சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் .சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் |
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் .பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95.உரை 84-95.தகவல் மூலங்கள்.பாடல் மூலம் . மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருவாசகத் தொகுப்பு-1 (ஒருங்கு குறி வடிவு) |
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருவாசகத் தொகுப்பு-2 (ஒருங்கு குறி வடிவு).உரை மூலம் . முழு திருவாசகத்துக்கும் உரை தரும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலக வலை தளம்.அஃதாவது, சிவபிரான் உயிர்களை உய்வித்தற்பொருட்டு அளவில்லாத காலமாகச் செய்து வருகின்ற திருவருட்செயலின் முறைமை என்பதாம்..நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க.இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க |
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க.ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க.ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க.பதப்பொருள்:.நமச்சிவாய வாழ்க - திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; நாதன் தாள் வாழ்க - திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க -இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க - திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க - ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க - ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க..விளக்கம் : |
திருவைந்தெழுத்து என்பது தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என முத்திறப்படும். ‘ந’கரத்தை முதலாக உடையது (நமசிவாய) தூலம். ‘சி’கரத்தை முதலாக உடையது (சிவாயநம) சூக்குமம். அதிசூக்குமம் ‘ந’கர ‘ம’கரங்களின்றிச் சிகரத்தை முதலாகவுடையது (சிவாய). இங்குத் தூலவைந் தெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, உயிர்களுக்கு உலக இன்பத்தைக் கொடுத்துப் பக்குவப்படுத்துவது. இனி, இறைவனது திருமேனியே திருவைந்தெழுத்தாகும். நகரம் திருவடியாகவும், மகரம் உடலாகவும், சிகரம் தோளாகவும், வகரம் முகமாகவும், யகரம் முடியாகவும் சாத்திரம் கூறும்.."ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே.நாடுந் திருவடியி லேநகரம் - கூடும்.மகரம் உதரம் வளர்தோள் சிகரம்.பகருமுகம் வாமுடியப் பார்" (உண்மை விளக்கம்).இத்துணைப் பெருமையுடையது திருவைந்தெழுத்து ஆகையால், அதனை முதற்கண் வாழ்த்தி, பின்னர் அத்திருவைந்தெழுத்தின் வடிவமாயுள்ள முதல்வனை வாழ்த்தினார். |
"நெஞ்சில் நீங்காதான்" என்றமையால், இறைவன் அகத்தே நெஞ்சத்தாமரையில் வீற்றிருக்கும் தன்மையையும், "கோகழியாண்ட குருமணி" என்றமையால், இறைவன் புறத்தே திருப்பெருந்துறையில் தம்மை ஆண்டருளின பெருமையையும் குறிப்பிட்டார்..வேதத்தில் பொதுவாக விளங்குதல் போல அல்லாமல், ஆகமத்தில் சிறப்பாக இறைவன் விளங்குதலால், "ஆகமமாகி நின்றண்ணிப்பான்" என்றார். ஆகமங்கள் காமியம் முதல் வாதுளம் ஈறாக உள்ள இருபத்தெட்டு..இனி, "ஏகன் அநேகன்" என்றமையால், இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாயும் இருக்கிறான் என்ற உண்மையும் கிடைக்கிறது..இவற்றால் வாழ்த்துக் கூறப்பட்டது..வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க.பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க |
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க.கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க.சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க.பதப்பொருள் : .வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க - மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி மேம்படுக; பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க - பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் மேம்படுக; புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க - தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக; கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க - கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் மேம்படுக; சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க - கைகள் தலைமேல் கூம்பப்பெற்றவரை உயரப் பண்ணுகிற சிறப்புடையவனது திருவடி மேம்படுக..விளக்கம் : |
மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும் இறைவனே என்பது, "வேகங் கெடுத்தாண்ட வேந்தன்", "பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்" என்பவற்றால் விளங்கும். பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்; பிறை, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள்..இறைவன் தன்னை நினையாதவரைத் தனக்கு வேறானவராகவே வைத்துச் சிறிதும் விளங்கித் தோன்றாதிருத்தலின், "புறத்தார்க்குச் சேயோன்" என்றார்..இறைவன் விரும்பியிருக்குமிடங்கள் இரண்டு. ஒன்று, நெஞ்சத்தாமரை; மற்றொன்று, துவாதசாந்தப் பெருவெளி; அஃதாவது, தலைக்குப் பன்னிரண்டு அங்குலங்களுக்குமேலுள்ள இடம். இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிப்பிட, "கரங்குவிவார், சிரங்குவிவார்" என்று கூறினார்..இவற்றால் இறைவன் வெற்றி கூறப்பட்டது..ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி.தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி |
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி.மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி.சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி.ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி.பதப்பொருள் : .ஈசன் அடி போற்றி - ஈசனது திருவடிக்கு வணக்கம், எந்தை அடி போற்றி - எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம், தேசன் அடி போற்றி - ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம்; சிவன் சேவடி போற்றி -சிவபிரானது திருவடிக்கு வணக்கம்; நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி - அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்; மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி - நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம்; சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி - சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். ஆராத இன்பம் அருளும் மலை போற்றி - வெறுக்காத இன்பத்தைக் கொடுக்கின்ற மலைபோலும் கருணையையுடைய வனுக்கு வணக்கம். |
விளக்கம் :.ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால் பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன் என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால் முற்றுணர்புடையனாதலும், ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பமுடையனாதலுமாகிய இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார். "எண் குணத்தான்தாள்" என்ற நாயனார் அருள் மொழிக்குப் பரிமேலழகர் உரையில் கூறப்பட்டுள்ள எண்குணங்களைக் காண்க..இவற்றால் வணக்கம் கூறப்பட்டது..ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி.தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி.நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி |
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி.சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி.ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி.பதப்பொருள் : .ஈசன் அடி போற்றி - ஈசனது திருவடிக்கு வணக்கம், எந்தை அடி போற்றி - எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம், தேசன் அடி போற்றி - ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம்; சிவன் சேவடி போற்றி -சிவபிரானது திருவடிக்கு வணக்கம்; நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி - அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்; மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி - நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம்; சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி - சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். ஆராத இன்பம் அருளும் மலை போற்றி - வெறுக்காத இன்பத்தைக் கொடுக்கின்ற மலைபோலும் கருணையையுடைய வனுக்கு வணக்கம்..விளக்கம் : |
ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால் பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன் என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால் முற்றுணர்புடையனாதலும், ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பமுடையனாதலுமாகிய இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார். "எண் குணத்தான்தாள்" என்ற நாயனார் அருள் மொழிக்குப் பரிமேலழகர் உரையில் கூறப்பட்டுள்ள எண்குணங்களைக் காண்க..இவற்றால் வணக்கம் கூறப்பட்டது..சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்.அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்.சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை.20. முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பன்யான் |
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி.எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி.பதப்பொருள் :.கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி - நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து, எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி - நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கிய பின், சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் - சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி, சிந்தை மகிழ - மனம் மகிழும்படியும், முந்தை வினை முழுதும் ஓய - முன்னைய வினை முழுமையும் கெடவும், சிவபுராணந்தன்னை - சிவனது அநாதி முறைமையான பழமையை, யான் உரைப்பன் - யான் சொல்லுவேன்..விளக்கம் :.இறைவன் காட்டிய அருளினாலன்றி அவனது திருவடியைக் காண முடியாது ஆதலால், "தன் கருணைக்கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற்கெட்டா எழிலார் கழலிறைஞ்சி" என்றார். "காண்பார் யார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே?" என்றார் திருநாவுக்கரசரும். |
பிற எல்லாப் பொருள்களையும் இறைவன் திருவருளாலே அறிந்து வரும் உயிர், இறைவனை அறிவதும் அவனருளாலே என்பது, "அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்றதில் நன்கு தௌ¤வாகும்..இறைவனது பொருள் சேர் புகழைப் பாடினால் இருள் சேர் இருவினையும் சேரா என்பது மறைமொழி.."இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்.பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"..இக்கருத்தே, "சிவபுராணந்தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்" என்றதில் அமைந்திருத்தல் அறியத்தக்கது..இவற்றால் வருபொருள் உரைக்கப்பட்டது. |
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்.எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்.25. பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்.பதப்பொருள் :.விண் நிறைந்தும் - வானமாகி நிறைந்தும், மண் நிறைந்தும் - மண்ணாகி நிறைந்தும், மிக்காய் - மேலானவனே, விளங்கு ஒளியாய் - இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி, எண் இறந்து - மனத்தைக் கடந்து, எல்லை இலாதானே - அளவின்றி நிற்பவனே, நின்பெருஞ்சீர் - உன்னுடைய மிக்க சிறப்பை, பொல்லா வினையேன் - கொடிய வினையையுடையவனாகிய யான், புகழும் ஆறு ஒன்று அறியேன் - புகழுகின்ற விதம் சிறிதும் அறிகிலேன்..விளக்கம் : |
இறைவன் ஐம்பெரும்பூதங்களில் கலந்தும் அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கிறான் என்பதை விளக்க, "விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்" என்றார். "உலகெலா மாகி வேறாய் உடனுமா யொளியாய்" என்ற சித்தியார் திருவாக்கும் இதனையே வலியுறுத்துகிறது. இறைவனது பெருமையைக் காட்டித் தன் சிறுமையைக் காட்ட, ‘பொல்லா வினையேன்’ என்றார்..இவற்றால் அவையடக்கம் கூறப்பட்டது..புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்.பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்.கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்.வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் |
30. செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்.எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்.மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்..பதப்பொருள் :.புல் ஆகி - புல்லாகியும், பூடு ஆய் - பூண்டாகியும், புழு ஆய் - புழுவாகியும், மரம் ஆகி - மரமாகியும், பல்விருகமாகி - பல மிருகங்களாகியும், பறவை ஆய் - பறவையாகியும், பாம்பு ஆகி - பாம்பாகியும், கல் ஆய் - கல்லாகியும், மனிதர் ஆய் - மனிதராகியும், பேய் ஆய் - பேயாகியும், கணங்கள் ஆய் - பூத கணங்களாகியும், வல் அசுரர் ஆகி - வலிய அசுரராகியும், முனிவர் ஆய் - முனிவராகியும், தேவர் ஆய் - தேவராகியும், சொல்லாநின்ற - இயங்குகின்ற, இ - இந்த, தாவர சங்கமத்துள் - அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே, எல்லாப் பிறப்பும் பிறந்து - எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, இளைத்தேன் - யான் மெலிவடைந்தேன், எம்பெருமான் - எம்பெருமானே, இன்று - இப்பொழுது, மெய்யே - உண்மையாகவே, உன் பொன் அடிகள் கண்டு - உன் அழகிய திருவடிகளைக் கண்டு, வீடு உற்றேன் - வீடு பெற்றேன்..விளக்கம் : |
எல்லா உயிர்ப்பொருள்களையும் தாவரப் பொருள் (அசையாப்பொருள்), சங்கமப்பொருள் (அசையும் பொருள்) என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். தாவர வகையுள் கல், புல், பூடு, மரம் என்னும் நான்கும், சங்கம வகையுள் புழு, பாம்பு, பறவை, பல்விருகம், மனிதர், அசுரர், முனிவர், பேய், கணங்கள், தேவர் என்னும் பத்தும் அடங்கும். கல்லுக்கும் உயிர் உண்டு என்பதை இக்காலத்தாரும் உடன்படுவர். ‘மிருகம்’ என்பது ‘விருகம்’ என மருவியது. உயிர், தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்பச் சங்கமப் பொருள்களில் தேவர் ஈறாக உயர்ந்து பிறவி எடுக்கிறது..இனி, உயிர்களுக்கு நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் நூல்களிற்கூறப்படும். முட்டையிற்பிறப்பன, வேர்வையிற்பிறப்பன, வித்திற்பிறப்பன, கருவிற்பிறப்பன என்பன நான்கு வகைத் தோற்றமாம்; இவை முறையே அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் எனப்படும். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்பன எழுவகைப் பிறப்பாம். இவற்றை,."தோற்றியிடு மண்டசங்கள் சிவேதசங்கள் பாரிற்.றுதைந்துவரு முற்பீசஞ் சராயுசங்க ணான்கின்.ஊற்றமிகு தாவரங்கள் பத்தொன்ப தென்றும்.ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றோ டுலவா |
மாற்றருநீ ருறைவனநற் பறவைகணாற் காலி.மன்னியிடும் பப்பத்து மானுடரோன் பதுமா.ஏற்றியொரு தொகையதனி லியம்புவர்கள் யோனி.எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.".(சிவப்பிரகாசம்).என்பதனால் அறிக. உயிர்கள் இத்தனை வகைப் பிறப்புகளை எடுத்து உழல்கின்றன என்பதை விளக்க, "பிறந்து இளைத்தேன்," என்றார். |
இவற்றால் உயிர்களின் பிறப்பு வகைகள் கூறப்பட்டன..உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற.மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்.35. ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே.பதப்பொருள் :.உய்ய - நான் உய்யும்படி, என் உள்ளத்துள் - என் மனத்தில், ஓங்காரம் ஆய் நின்ற - பிரணவ உருவாய் நின்ற, மெய்யா - மெய்யனே, விமலா - மாசற்றவனே, விடைப்பாகா - இடபவாகனனே, வேதங்கள் - மறைகள், ஐயா என - ஐயனே என்று துதிக்க, ஓங்கி - உயர்ந்து, ஆழ்ந்து அகன்ற - ஆழ்ந்து பரந்த, நுண்ணியனே - நுண்பொருளானவனே. |
விளக்கம் :.ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்குமாதலின் அவையே உள்ளத்துள் நினைவின் தோற்றம், நிலை, இறுதியைச் செய்வனவாம். அவ்வெழுத்துகளால் உண்டாகும் ஒலியை இறைவனது சத்தியே செலுத்தி நிற்றலால் "உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா," என்றார்..சைவ நூல்கள், இடப ஊர்தியை உயிர் என்று கூறும். ஆகவே, "விடைபாகா" என்றது, உயிருக்கு நாதன் என்றதாம்..இறைவனது பெருமையை வேதங்களாலும் அறிய முடியாது.."அல்ல யீதல்ல யீதென மறைகளு மன்மைச்.சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தரன்" |
என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில், மறைகளாலும் இறைவனைக் காண முடியாத தன்மையைக் கூறுகிறார். வேதம் அறிவு நூல் ஆகையால், அறிவால் இறைவனைக் காண முடியாது; அருளால்தான் காணமுடியும் என்ற நயமும், "வேதங்கள் ஐயா என ஓங்கி" என்பதனால் கிடைக்கிறது..இறைவன் மிக நுட்பமானவன்; அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். நுண்பொருளுக்குத்தானே எங்கும் நிறைந்திருக்கும் தன்மையுண்டு. அதைக் குறிப்பிட "ஆழ்ந்தகன்ற நுண்ணியனே" என்றார். "அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்" என இறைவனது நுண்மையைப் பரஞ்சோதி முனிவரும் கூறினார்..இவற்றால், இறைவன் உயிர்களிடத்து நிற்கும் நிலை கூறப்பட்டது..வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா.பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி.மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே |
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே.40. அஞ்ஞானத் தன்னை யகல்விக்கும் நல்லறிவே.பதப்பொருள் :.வெய்யாய் - வெம்மையானவனே, தணியாய் - தன்மையானவனே, இயமானன் ஆம் விமலா - ஆன்மாவாய் நின்ற விமலனே, பொய் ஆயின எல்லாம் - நிலையாத பொருள்கள் யாவும், போய் அகல - என்னை விட்டு ஒழிய, வந்தருளி - குருவாய் எழுந்தருளி, மெய்ஞ்ஞானம் ஆகி - மெய்யுணர்வு வடிவமாய், மிளிர்கின்ற - விளங்குகின்ற, மெய்ச்சுடரே - உண்மை ஒளியே, எஞ்ஞானம் இல்லாதேன் - எவ்வகையான அறிவும் இல்லாத எனக்கு, இன்பப் பெருமானே - இன்பத்தைத் தந்த இறைவனே, அஞ்ஞானந்தன்னை - அஞ்ஞானத்தின் வாதனையை, அகல்விக்கும் - நீக்குகின்ற, நல் அறிவே - நல்ல ஞானமயமானவனே..விளக்கம் :.இறைவன் தீயாய் நின்று வெம்மையைக் கொடுத்து, நீராய் நின்று குளிர்ச்சியைக் கொடுத்து, உயிருக்கு உயிராய் நின்று நல்வழியைக் காட்டி அருளைப் புரிகின்றான் என்பது, |
"வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா".என்றதனால் கிடைக்கிறது..ஒளியைக் கண்டதும் இருள் மறைவது போல, மெய்ஞ்ஞானத்தால் அஞ்ஞானம் விலகுகிறது. இறைவன் குருவாகி வந்து அருள்வதனால் மெய்ஞ்ஞானம் கிடைக்கிறது என்பதை, "பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே" என்றார். அஞ்ஞானம் வாதனையாய் நில்லாது நீக்கப்பட்டுப் பற்றற்றுக் கழிதலும் இறைவன் திருவருளாலேயே என்பதற்கு, "அஞ்ஞானம் தன்னை யகல்விக்கும் நல்லறிவே" என்றார்..இவற்றால் இறைவன் குருவாய் வந்து அருளுதல் கூறப்பட்டது..ஆக்க மளவிறுதி யில்லாய் அனைத்துலகும்.ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் |
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்.நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே.45. மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே.கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்.சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று.பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் |
பதப்பொருள் :.ஆக்கம் அளவு இறுதி இல்லாய் - தோற்றம் நிலை முடிவு என்பவை இல்லாதவனே, அனைத்து உலகும் - எல்லா உலகங்களையும், ஆக்குவாய் - படைப்பாய், காப்பாய் - நிலைபெறுத்துவாய், அழிப்பாய் - ஒடுக்குவாய், அருள் தருவாய் - அருள் செய்வாய், என்னை - அடியேனை, போக்குவாய் - பிறவியிற்செலுத்துவாய், நின் தொழும்பில் - உன் தொண்டில், புகுவிப்பாய் - புகப்பண்ணுவாய், நாற்றத்தின் நேரியாய் - பூவின் மணம்போல நுட்பமாய் இருப்பவனே, சேயாய் - தொலைவில் இருப்பவனே, நணியாய் - அண்மையில் இருப்பவனே, மாற்றம் மனம் கழிய நின்ற - சொல்லும் மனமும் கடந்து நின்ற, மறையோனே - வேதப் பொருளாய் உள்ளவனே, சிறந்த அடியார் சிந்தனையுள் - சிறந்த அன்பரது மனத்துள், கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல - கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடினது போல, தேன் ஊறி நின்று -இன்பம் மிகுந்து நின்று, பிறந்த பிறப்பு அறுக்கும் - எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற, எங்கள் பெருமான் - எம்பெருமானே..விளக்கம் :.படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன இறைவனது ஐந்தொழில்களாம். அறியாமையில் கட்டுண்டிருக்கும் உயிருக்கு இறைவன் உடம்பைக் கொடுத்துப் படைக்கிறான்; எடுத்த உடம்பில் இருவினைகளை நுகரும்போது அறியாமையை நீக்கிக் காக்கிறான்; உயிர் அலுக்கா வண்ணம் ஓய்வு கொடுக்க அழிக்கிறான்; இவ்வாறு பிறப்பு இறப்புகளில் உழலும்படி அறிவை மறைக்கிறான்; குற்றம் நீங்கிப் பக்குவம் (மல பரிபாகம்) வந்த காலத்து அருளுகிறான் என்பவற்றை விளக்க, "ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்" என்றார். ஆக்குதல் முதலிய நான்கனைக் கூறவே, மறைத்தலும் கொள்ளப்படும்..ஆக்கமும் கேடும் இல்லாதவன்தானே ஆக்கவும் அழிக்கவும் இயலும்? இதனால், "ஆக்கம் அளவிறுதி யில்லாய்" என்றார்..இறைவன் உயிர்க்ளைப் பக்குவம் வருவதற்கு முன்பு பிறவியில் செலுத்தியும், பக்குவம் வந்த பின்பு தனது திருவடிக்கு ஆளாக்கியும் ஆண்டுகொள்வனாகலின், "போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்" என்றார். |
பூவில் மணம் போல ஆன்மாவில் இறைவன் கலந்திருக்கிறான். மலர் அரும்பாயிருக்கும்போது மணம் வீசாது; அலர்ந்த பின்னரே மணம் வீசும். அதைப் போல, ஆன்மா பக்குவப்பட்டது.பின்னரே சிவ மணம் கமழும் என்பார். "நாற்றத்தின் நேரியாய்" என்றார். "பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது" என்ற திருமூலர் வாக்கும் நினைவு கொள்ளத்தக்கது..அன்பரல்லாதார்க்குத் தொலைவிலும், அன்பருக்கு அண்மையிலும் இருப்பான் இறைவன் என்பார் "சேயாய் நணியானே" என்றும், அவ்வடியவர் இறைவனை எண்ணுந்தோறும் அவர்க்கு இன்பம் உண்டாகும் என்பார், "சிந்தனையுள் தேனூறி நின்று" என்றும் கூறினார். "இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே" என்ற திருமுறை வாக்கும் இதனை வலியுறுத்துகிறது..இவற்றால் இறைவனது ஐந்தொழில்கள் கூறப்பட்டன..நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த.50. மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை |
மறைந்திட மூடிய மாய இருளை.அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்.புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி.மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை.55. மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய.விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் |
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்.நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி.நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி.60. நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்.தாயிற் சிறந்த தயாவான தத்துவனே..பதப்பொருள் : |
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் - ஐந்து நிறங்களை உடையவனே, விண்ணோர்கள் ஏத்த - தேவர்கள் துதிக்க, மறைந்து இருந்தாய் - அவர்களுக்கு ஒளிந்திருந்தவனே, எம்பெருமான் - எம் பெருமானே, வல்வினையேன் தன்னை - வலிய வினையையுடையவனாகிய என்னை, மறைந்திட மூடிய - மறையும்படி மூடியுள்ள, இருள் மாய - அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, அறம் பாவம் என்னும் - புண்ணிய பாவங்கள் என்கின்ற, அருங்கயிற்றால் கட்டி - அறுத்தற்கு அருமையாகிய கயிற்றால் கட்டப்பெற்று, புறம்தோல் போர்த்து - வெளியே தோலால் மூடி, எங்கும் புழு அழுக்கு மூடி - எவ்விடத்தும் புழுக்கள் நௌ¤கின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் சோரும் - மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயில் குடில் - ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை, மலங்க - குலையும்படி, புலன் ஐந்தும் - ஐம்புலன்களும், வஞ்சனையைச் செய்ய - வஞ்சனை பண்ணுதலால், விலங்கும் மனத்தால் - .உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே, உனக்கு - உன்பொருட்டு, கலந்த அன்பு ஆகி - பொருந்தின அன்பை உடையேனாய், உள் கசிந்து உருகும் - மனம் கசிந்து உருகுகின்ற, நலந்தான் இலாத - நன்மையில்லாத, சிறியேற்கு - சிறியேனுக்கு, விமலா - மாசற்றவனே, நல்கி - கருணை புரிந்து, நிலத்தன்மேல் வந்தருளி - பூமியின்மேல் எழுந்தருளி, நீள் கழல்கள் காட்டி - நீண்ட திருவடிகளைக் காட்டி, நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு - நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்கு, தாயின் சிறந்த - தாயினும் மேலாகிய, தயா ஆன - அருள் வடிவான, தத்துவனே - உண்மைப்பொருளே..விளக்கம் :.இறைவன் ஐம்பூதங்களிலும் நிறைந்திருக்கிறான். ஐந்து பூதங்களுக்கும் ஐந்து நிறங்கள் உண்டு. மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும், நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும், வானுக்குப் புகையையும் சாத்திரம் கூறும். "பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிவப்பு வன்கால் கருமைவளர் வான்தூமம்" என்பது உண்மை விளக்கம். இந்த ஐந்து நிறங்களையுடைய ஐந்து பூதங்களிலும் இறைவன் இரண்டறக் கலந்திருத்தலால், "நிறங்கள் ஓர் ஐந்துடையாய்" என்றார். இனி, படைத்தல் முதலாக ஐந்து தொழில்கள் புரிவதற்கு ஐந்து வடிவங்கள் கொண்டிருக்கின்றான் என்றாலும் ஒன்று. ஐந்து வடிவங்களாவன, பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் வடிவங்கள்..ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுள் ஆணவம் நீங்குதற்பொருட்டே மாயையும் கன்மமும் சேர்க்கப்படுதலினால், "வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய இருள் மாய" என்றார். ‘அறம்பாவம்’ என்பன கன்ம மலம் எனவும், 'ஒன்பது வாயிற்குடில்' என்பது மாயா மலம் எனவும் அறிக. ‘இருளை, குடிலை’ என்பவற்றுள் உள்ள ஐகாரம் சாரியைகள்..ஒன்பது வாயிலாவன - செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று. புலன்களால் பெறும் இன்பம் நிலையில்லாதது. முதலில் இன்பமாகத் தோன்றிப் பின் துன்பத்தைத் தருவது. அதனால், "குடில் மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய" என்றும், அவ்வஞ்சனைச் செயல்களால் இறைவனை மறத்தல் உண்டாவதால், 'விலங்கும் மனத்தால் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேன்' என்றும் கூறினார். |
"நாய், தலைவனை அறிவது : நன்றியுடையது. மனிதன் தலைவனையும் அறியமாட்டான்; நன்றியும் இல்லாதவன் ஆகையாலும், தாயன்பே சிறந்ததும், இழிவைக் கருதாததும் ஆகையாலும், "நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே" என்றார்..இவற்றால் தமக்கு இறைவன் திருப்பெருந்துறையில் குருவாய் வந்து அருளின திறத்தை வியந்து போற்றினார்..மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே.தேசனே தேனா ரமுதே சிவபுரனே.பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே.65. நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் |
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே.ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே.ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே.நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே.70. இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே.அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம் |
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே.ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே.ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே.75. கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்.நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே.போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே |
காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே.ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற.80. தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்.மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந்.தேற்றனே தேற்றத் தௌ¤வேஎன் சிந்தையுள்.ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே |
பதப்பொருள் :.மாசு அற்ற சோதி மலர்ந்த - களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, மலர்ச்சுடரே - பூப்போன்றே சுடரே, தேசனே - குரு மூர்த்தியே, தேனே - தேனே, ஆர் அமுதே - அரிய அமுதே, சிவபுரனே - சிவபுரத்தையுடையானே, பாசம் ஆம் பற்று அறுத்து - பாசமாகிய தொடர்பையறுத்து, பாரிக்கும் - காக்கின்ற, ஆரியனே - ஆசிரியனே, நேச அருள் புரிந்து - அன்போடு கூடிய அருளைச்செய்து, நெஞ்சில் வஞ்சம் கெட - என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழிய, பேராது நின்ற - பெயராமல் நின்ற, பெருங்கருணை - பெருங்கருணையாகிய, பேர் ஆறே - பெரிய நதியே, ஆரா அமுதே - தெவிட்டாத அமிர்தமே, அளவு இலாப் பெம்மானே - எல்லையில்லாத பெருமானே, ஓராதார் உள்ளத்து - ஆராயாதார் மனத்தில், ஒளிக்கும் - மறைகின்ற, ஒளியானே -.ஒளியையுடையானே, நீராய் உருக்கி - என் மனத்தை நீர் போல உருகப்பண்ணி, என் ஆர் உயிராய் நின்றானே - என் அரிய உயிராய் நின்றவனே, இன்பமும் துன்பமும் - சுகமும் துக்கமும், இல்லானே - இயற்கையில் இல்லாதவனே, உள்ளானே - அன்பர்பொருட்டு அவற்றை உடையவனே, அன்பருக்கு அன்பனே - அன்பர்களிடத்து அன்புள்ளவனே, யாவையும் ஆய் - கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, அல்லையும ஆம் - தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற, சோதியனே - பேரொளியையுடையவனே, துன் இருளே - நிறைந்த இருளானவனே, தோன்றாப் பெருமையனே - புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே, ஆதியனே - முதல்வனே, அந்தம் நடு ஆகி - முடிவும் நடுவும் ஆகி, அல்லானே - அவையல்லாது இருப்பவனே, என்னை ஈர்த்து ஆட்கொண்ட - என்னை இழுத்து ஆட்கொண்டருளின, எந்தை பெருமானே - எமது தந்தையாகிய சிவபெருமானே, கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் - மிகுந்த உண்மை ஞானத்தால், கொண்டு உணர்வார்தம் கருத்தில் - சிந்தித்து அறிபவர் மனத்தினாலும், நோக்கு அரிய - எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய, நோக்கே - காட்சியே, நுண்உணர்வே - இயற்கையில் நுட்பமாகிய அறிவே, போக்கும் வரவும் நிற்றலும் இல்லாத புண்ணியனே, காக்கும் எம் காவலனே - எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே, காண்பு அரிய பேர் ஒளியே - காண்பதற்கரிய பெரிய ஒளியே, ஆற்று இன்ப வெள்ளமே - மகாநதி போன்ற இன்பப் பெருக்கே, அத்தா - அப்பனே, மிக்காய் - மேலோனே, நின்ற தோற்றச்சுடர் ஒளியாய் - நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும், சொல்லாத நுண் உணர்வு ஆய் - சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகியும், மாற்றம் ஆம் வையகத்தின் - மாறுபடுதலையுடைய உலகத்தில், வெவ்வேறே வந்து - வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து, அறிவு ஆம் - அறிவாய் விளங்கும், தேற்றனே - தௌ¤வானவனே, தேற்றத் தௌ¤வே - தௌ¤வின் தௌ¤வே, என் சிந்தனையுள் ஊற்று ஆன - என் மனத்துள் ஊற்றுப் போன்ற, உண் ஆர் அமுதே - பருகுதற்கு அரிய அமிர்தமே, உடையானே - தலைவனே..விளக்கம் :.சோதி - பேரொளி, அதிலிருந்து தோன்றுவது சுடர். சோதியை முழுதும் காண்பது அரிது. அதன்கண் உண்டாகும் ஒரு சிறு பகுதியாகிய சுடரைக் காண்பது எளிது. ஆகவே, எளிவந்து அருள் புரிந்த இறைவனைச் "சோதி மலர்ந்த சுடரே" என்றார். இச்சுடர், மலர் போலக் குளிர்ச்சியைத் தருவதால், "மலர்ச்சுடர்" என்றார். பாசம் - அறியாமை..அன்பர்கள் மனத்திலுள்ள வஞ்சனை கெட இறைவன் அதனை விட்டு நீங்காது பெருங்கருணை வெள்ளமாயும் அளவில்லாத இன்பப் பொருளாயும் அங்குத் தங்குகின்றான். அப்பொழுது அம்மனம் நீராய் உருகுகிறது. அவ்வாறு உருகிய உயிரை இறைவன் தன்மயமாகச் செய்கின்றான். இக்கருத்துகளை விளக்கவே, "நெஞ்சில் வஞ்சங்கெட ................. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே" என்றான். |
இறைவன் தனக்கென ஓர் இன்பமும் துன்பமும் இல்லான்; அடியார்க்கு வரும் இன்பதுன்பங்களைத் தான் ஏற்றுக்கொள்வதனால் இன்பமும் துன்பமும் உள்ளான். அதனால், "இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே," என்றார்..இறைவன், எல்லாப் பொருளிலும் கலந்திருத்தலால் "யாவையுமாய்," தன்மையால் வேறாதலால் "அல்லனுமாய்" இருக்கிறான். ஒளியும் இருளும் அவனன்றி இன்மையால், "சோதியனே, துன்னிருளே" என்றார். உலகத்திற்கு ஆதியும் நடுவும் முடிவுமாய் நிற்கின்ற இறைவன், தனக்கு அவற்றை உடையனல்லன் ஆதலின், "ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே" என்றார்..இறைவனது உருவத்தைக் கண்ணால் காண முடியாது, அறிவினாலும் அறிய முடியாது என்பார், "நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே" என்றார். அனுபவத்தினால் காணக்கூடியவன் இறைவன் என்பதை உணர்த்த, "சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே" என்றார்..உயிர்களின் மனப்பக்குவத்திற்கேற்ப இறைவன் அருளுவதை விளக்க, "மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே" என்றார்..இவற்றால் இறைவன் பண்புகள் விளக்கப்பட்டன..வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப |
85. ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று.போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்.மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே.கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே.நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே.90. தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே |
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று.சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்.சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்.செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்.95. பல்லோரும் ஏத்தப் பணிந்து..பதப்பொருள் : |
வேற்று விகார - வெவ்வேறு விகாரங்களையுடைய, விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் - ஊனாலாகிய உடம்பினுள்ளே தங்கிக் கிடக்கப் பொறேன், எம் ஐயா - எம் ஐயனே, அரனே - சிவனே, ஓ என்று என்று - ஓ என்று முறையிட்டு, போற்றி - வணங்கி, புகழ்ந்து இருந்து - திருப்புகழை ஓதியிருந்து, பொய் கெட்டு - அறியாமை நீங்கி, மெய் ஆனார் - அறிவுருவானவர்கள், மீட்டு இங்கு வந்து - மறுபடியும் இவ்வுலகில் வந்து, வினைப்பிறவி சாராமே - வினைப் பிறவியையடையாமல், கள்ளப்புலம் குரம்பைக் கட்டு - வஞ்சகத்தையுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை, அழிக்க வல்லானே - அறுக்க வல்லவனே, நள் இருளில் - நடு இரவில், பயின்று - மிகுந்து, நட்டம் ஆடும் - நடனம் செய்கின்ற, நாதனே - இறைவனே, தில்லையுள் கூத்தனே - திருத்தில்லையில் நடிப்பவனே, தென்பாண்டி நாட்டானே - தென்பாண்டி நாட்டையுடையவனே, அல்லல் பிறவி அறுப்பானே - துன்பப் பிறப்பை அறுப்பவனே, ஓ என்று - ஓவென்று முறையிட்டு, சொல்லற்கு அரியானைச் சொல்லி - துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, திருவடிக் கீழ் சொல்லிய பாட்டின் - அவனது திருவடியின்மீது பாடிய பாட்டின், பொருள் உணர்ந்து சொல்லுவார் - பொருளையறிந்து துதிப்பவர், பல்லோரும் ஏத்த - எல்லாரும் துதிக்க, பணிந்து - வணங்கி, சிவபுரத்தினுள்ளார் - சிவநகரத்திலுள்ளவராய், சிவன் அடிக்கீழ் செல்வர் - சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலை பெறுவர்..விளக்கம் :.வேறு வேறு விகாரமாவன, நரை திரை மூப்பு பிணி சாக்காடு என்பன. பிறவியை அறுக்க விரும்புவார்க்கு இவ்வுடம்பும் சுமையாகும். ஆதலின், "விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்" என்றார். நாயனாரும், "பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை," என்று கூறினார்..பொய்ப்பொருளைக் காண்பது அறியாமை; மெய்ப்பொருளைக் காண்பது அறிவு. மெய்ப்பொருளைக் கண்டவர், "மற்றீண்டு வாரா நெறி தலைப்படுவர்." ஆதலின், சுவாமிகள் பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வாராராகக் கூறினார்..நள்ளிருள் - சர்வ சங்கார காலம். இறைவன் விரும்பி ஆடும் இடம் தில்லை. சோமசுந்தரப் பெருமானாய் வீற்றிருந்து திருவிளையாடல் புரிந்த இடம் மதுரை. இரண்டையும் குறிப்பிட, "தில்லையுட்கூத்தனே, தென்பாண்டி நாட்டானே" என்றார். தில்லை என்பது சிதம்பரம். பாண்டி நாட்டின் தலைநகரம் மதுரை..இவற்றால் இறைவனே இடைவிடாது துதிப்பவர் சிவபுரத்துச் செல்வர் என்பதும், இச்சிவபுராணத்தை ஓதுவார்க்கு வரும் பயனும் கூறப்பட்டன. |
திருப்பொற் சுண்ணம் .ஆனந்த மனோலயம்.(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்) .முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி .முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் .சக்தியும் சோமியும் பார்மகளும் |
நாமகளோடுபல்லாண்டிசைமின் .சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் .கங்கையும் வந்து கவரிகொண்மின் .அத்தன் ஐயாறன்அம்மானைபாடி .ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 8 .திருப்பொற் சுண்ணம்/உரை 1-8 |
பூவியல் வார்சடை எம்பிராற்குப் .பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் .மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் .வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் .கூவுமின் தொண்டர் புறநிலாமே .குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் |
தேவியுந் தானும்வந்தெம்மையாளச் .செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 16 .திருப்பொற் சுண்ணம்/உரை 9-16.சுந்தர நீறணந் தும்மெழுகித் .தூயபொன்சிந்தி நிதிநிரப்பி .இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும் |
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் .அந்தார் கோன்அயன் தன்பெருமான் .ஆழியான் நாதன்நல் வேலன்தாதை .எந்தரம் ஆளுமை யாள்கொழுநற் .கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 24 .திருப்பொற் சுண்ணம்/உரை 17-24 |
காசணி மின்கள் உலக்கையெல்லாம் .காம்பணி மின்கள் கறையுரலை .நேசமுடைய அடியவர்கள் .நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் .தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித் .திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் |
பாசவினையைப் பறிந்துநின்று .பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 32 .திருப்பொற் சுண்ணம்/உரை 25-32.அறுகெடுப்பார் அயனும்அரியும் .அன்றிமற்றிந்திர னோடமரர் .நறுமுது தேவர்கணங்கெளெல்லாம் |
நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோ ம் .செறிவுடை மும்மதில் எய்தவில்லி .திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி .முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் .காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 40 .திருப்பொற் சுண்ணம்/உரை 33-40 |
உலக்கை பலஒச்சு வார்பெரியர் .உலகமெலாம்உரல் போதாதென்றே .கலக்க அடியவர் வந்துநின்றார் .காண உலகங்கள் போதாதென்றே .நலக்க அடியோமை ஆண்டுகொண்டு .நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த |
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து .பொற்சுண்ணம் இடிந்தும்நாமே. 48 .திருப்பொற் சுண்ணம்/உரை 41-48.சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத் .தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப .நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப |
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் .பாடக மெல்லடி யார்க்கு மங்கை .பங்கினன் எங்கள் பராபரனுக்கு .ஆடக மாமலை அன்னகோவுக் .காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 56 .திருப்பொற் சுண்ணம்/உரை 49-56 |
வாள்தடங்கண்மட மங்கைநல்லீர் .வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் .தோள்திரு முண்டந் துதைந்திலங்கச் .சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி .நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி .நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை |
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி .ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 64 .திருப்பொற் சுண்ணம்/உரை 57-64.வையகம் எல்லாம் உரலதாக .மாமேரு என்னும் உலக்கை நாட்டி .மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி |
மேதரு தென்னன் பெருந்துறையான் .செய்ய திருவடி பாடிப்பாடிச் .செம்பொன் உலக்கை வலக்கைபற்றி .ஐயன் அணிதில்லை வாணனுக்கே .ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 72 .திருப்பொற் சுண்ணம்/உரை 65-72 |
முத்தணி கொங்கைகள் ஆடஆட .மொய்குழல் வண்டினம் ஆடஆடச் .சித்தஞ் சிவனொடும் ஆடஆடச் .செங்கயற் கண்பனி ஆடஆடப் .பித்தெம் பிரானொடும் ஆடஆடப் .பிறவி பிறரொடும் ஆடஆட |
அத்தன் கருணையொ டாடஆட .ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 80 .திருப்பொற் சுண்ணம்/உரை 73-80.மாடு நகைவாள் நிலாவெறிப்ப .வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் .பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும் |
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் .தேடுமின் எம்பெருமானைத்தேடி .சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி .ஆடுமின் அம்பலத் தாடினானுக் .காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 88 .திருப்பொற் சுண்ணம்/உரை 81-88 |
மையமர் கண்டனை வானநாடர் .மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை .ஐயனை ஐயர்பிரானைநம்மை .அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் .பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் .போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள் |
பையர வல்குல் மடந்தைநல்லீர் .பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 96 .திருப்பொற் சுண்ணம்/உரை 89-96.மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண் .வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் .என்னுடை ஆரமுதெங்களப்பன் |
எம்பெருமான் இம வான்மகட்குத் .தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் .தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப் .பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர் .பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 104.திருப்பொற் சுண்ணம்/உரை 97-104 |
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத் .தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் .செங்கனி வாயிதழுந்துடிப்பச் .சேயிழை யீர் சிவலோகம் பாடிக் .கங்கை இரைப்ப அராஇரைக்குங் .கற்றைச் சடைமுடி யான்கழற்கே |
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் .பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 112 .திருப்பொற் சுண்ணம்/உரை 105-112.ஞானக் கரும்பின் தெளியைப் பாகை .நாடற் கரிய நலத்தை நந்தாத் .தேனைப் பழச்சுவை ஆயினானைச் |
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல .கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட .கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் .பானல் தடங்கண் மடந்தைநல்லீர் .பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 120 .திருப்பொற் சுண்ணம்/உரை 113-120 |
ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ .டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல் .தேவர் கனாவிலுங் கண்டறியாச் .செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் .சேவகம் ஏந்திய வெல்கொடியான் .சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச் |
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச் .செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 128 .திருப்பொற் சுண்ணம்/உரை 121-128.தேனக மாமலர்க் கொன்றைபாடிச் .சிவபுரம் பாடித் திருச்சடைமேன் .வானக மாமதிப் பிள்ளைபாடி |
மால்விடை பாடி வலக்கையேந்தும் .ஊனக மாமழுச் சூலம்பாடி .உம்பரும் இம்பரும் உய்யஅன்று .போனக மாகநஞ் சுண்டல்பாடிப் .பொற்றிச்சுண்ணம் இடித்தும்நாமே. 136 .திருப்பொற் சுண்ணம்/உரை 129-136 |
அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி .அருக்கன் எயிறு பறித்தல்பாடி .கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக் .காலனைக்காலால் உதைத்தல்பாடி .இயைந்தன முப்புரம் எய்தல் பாடி .ஏழை அடியோமை ஆண்டுகொண்ட |
நயந்தனைப் பாடிநின் றாடியாடி .நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 144 .திருப்பொற் சுண்ணம்/உரை 137-144.வட்டமலர்க்கொன்றை மாலைபாடி .மத்தமும்பாடி மதியம்பாடிச் .சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் |
சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் .கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக் .கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் .இட்டுநின் றாடும் அரவம்பாடி .ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 152.திருப்பொற் சுண்ணம்/உரை 145-152 |
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு .மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் .சோதிய மாய் இருள் ஆயினார்க்குத் .துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப் .பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப் .பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு |
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு .ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 160.திருப்பொற் சுண்ணம்/உரை 153-160.தில்லையில் அருளிச்செய்தது.செல்வர் பூசும் வாசனைப்பொடியே பொற்சுண்ணம் எனப்படுவது. அப்பொடியை உரலில் இடிக்கும்போது, மகளிரால் பாடும் பாட்டாகச் செய்யப்பட்டமையால், இப்பகுதி பொற்சுண்ணம் எனப்பட்டது. அம்மானை ஆடுதல் போல இதுவும் மகளிர் செயலாம்..ஆனந்த மனோலயம் |
சிவானந்தத்தில் ஆன்மாவின் உணர்வு ஒன்றியிருத்தல், ஆனந்த மனோலயமாம்..அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.திருச்சிற்றம்பலம்.முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி.முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்.சத்தியுஞ் சோமியும் பார்மகளும் |
நாமக ளோடுபல் லாண்டிசைமின்.சித்தியுங் கௌரியும் பார்ப்பதியுங்.கங்கையும் வந்து கவரிகொண்மின்.அத்தன்ஐ யாறன்அம் மானைப்பாடி.ஆடற்பொற் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் : |
முத்து நல் தாமம் - (தோழியர்களே) முத்துகளாலாகிய நல்ல மாலையையும், பூமாலை - பூமாலையையும், தூக்கி - தொங்கவிட்டு, முறைக்குடம் - முளைப்பாலிகையையும், தூபம் - குங்குலியத் தூபத்தையும், நல்தீபம் - நல்ல விளக்கையும், வைம்மின் - வையுங்கள், சத்தியும் - உருத்திராணியும், சோமியும் - திருமகளும், பார் மகளும் - நிலமகளும், நாமகளோடு - கலைமகளோடு கூடி, பல்லாண்டு இசைமின் - திருப் பல்லாண்டு பாடுங்கள், சித்தியும் - கணபதியின் சத்தியும், கௌரியும் - கௌமாரியும், பார்ப்பதியும் - மகேசுவரியும், கங்கையும் - கங்கா தேவியும், வந்து - முன் வந்து, கவரி கொண்மின் - வெண்சாமரை வீசுங்கள், அத்தன் - எமது தந்தையும், ஐயாறன் - திருவையாற்றை உடையவனுமாகிய, அம்மானை - எம் தலைவனை, பாடி - பாடி, ஆட - அவன் நிரம்ப அணிதற்பொருட்டு, பொற்சுண்ணம் பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் :.நவதானியங்களை நீர் விட்டு முளையாக்கி வைக்கப்பட்ட மட்கலம் முளைப்பாலிகை எனப்படும். முத்து மாலை பூமாலை தொங்க விடுதல், முளைக்குடம் தூபம் தீபம் வைத்தல் ஆகிய இவை இறைவன் வருவதற்கு முன் செய்து வைத்தல். இனிப் பல்லாண்டு இசைத்தல் கவரி கொள்ளல் இல்லத்துக்கு வந்த பின்னர் முறையாக நிகழும். சத்தி முதலியவர் தேவியின் பேதங்கள், பல்லாண்டு இசைத்தலாவது ‘பல்லாண்டு வாழ்க’ எனப் பாடுதல்..இதனால், இங்கு இறைவனுக்குரிய உபசாரம் கூறப்பட்டது..பூவியல் வார்சடை எம்பிராற்குப்.பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் |
மாவின் வடுவகி ரன்னகண்ணீர்.வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்.கூவுமின் தொண்டர் புறம்நிலாமே.குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்.தேவியும் தானும்வந் தெம்மையாளச்.செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே. |
பதப்பொருள் :.பூ இயல் வார்சடை - அழகு பொருந்திய நீண்ட சடையையுடைய, எம் பிராற்கு - எம் பெருமானுக்கு, திருப்பொன் சுண்ணம் இடிக்க வேண்டும், அழகிய பொற் சுண்ணத்தை இடிக்க வேண்டும், மாவின் வடு வகிர் அன்ன - மாம்பிஞ்சின் பிறவை ஒத்த, கண்ணீர் - கண்களையுடைய பெண்களே, வம்மின்கள் - வாருங்கள், வந்து உடன் பாடுமின்கள் - வந்து விரைவிற்பாடுங்கள், தொண்டர் புறம் நிலாமே - அடியார்கள் வெளியே நில்லாதபடி, கூவுமின் - அவர்களை அழையுங்கள், குனிமின் - ஆடுங்கள், தொழுமின் - வணங்குங்கள், எங்கோன் - எமது இறைவனாகிய, எம் கூத்தன் - எம் கூத்தப்பிரான், தேவியும் தானும் வந்து - இறைவியும் தானுமாய் எழுந்தருளி வந்து, எம்மை ஆள - எம் வழிபாட்டை ஏற்று எம்மை அடிமை கொள்ளும்பொருட்டு, செம்பொன் செய் சுண்ணம் - செம்பொன்போல ஒளி விடும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் :.இறைவன் பூசுதற்குரிய பொடியை இடித்தற்கு எல்லோரையும் அழைத்து உடன் பாட வேண்டுவாள், ‘வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்’ என்றாள். அதற்குரிய பயன் இறைவன் அருளேயாதலால், ‘தேவியும் தானும் வந்தெம்மையாள’ என்றாள்..இதனால், இறைவனுக்குரிய வழிபாடு கூறப்பட்டது..சுந்தர நீறணிந் தும்மெழுகித் |
தூயபொன் சிந்தி நிதிபரப்பி.இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்.எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்.அந்தரர் கோனயன் றன்பெருமான்.ஆழியான் நாதன்நல் வேலன்தாதை.எந்தரம் ஆளுமை யாள்கொழுநற் |
கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் :.சுந்தர நீறு அணிந்து - அழகிய திருநீற்றை அணிந்து கொண்டு, மெழுகி - தரையை மெழுகுதல் செய்து, தூய பொன் சிந்தி - மாற்றுயர்ந்த பொற்பொடிகளைச் சிதறி, நிதி பரப்பி - நவமணிகளைப் பரப்பி, இந்திரன் கற்பகம் நாட்டி - இந்திரன் உலகிலுள்ள கற்பக மரத்தின் தோகைகளை நட்டு, எங்கும் - எவ்விடத்தும், எழில் சுடர் வைத்து - அழகிய தீபங்கள் வைத்து, கொடி எடுமின் - கொடிகளை ஏற்றுங்கள், அந்தரர் கோன் - விண்ணவர்க்குத் தலைவனும், அயன்தன் பெருமான் - பிரமனுக்கு முதல்வனும், ஆழியான் நாதன் - சக்கரத்தையுடைய திருமாலுக்கு நாயகனும், நல்வேலன் தாதை - அழகிய முருகனுக்குத் தந்தையும், எந்தரம் ஆள் - எம் நிலையில் உள்ளாரையும் ஆட்கொள்ளுகின்ற, உமையாள் கொழுநற்கு - உமாதேவியின் கணவனுமாகிய இறைவனுக்கு, ஏய்ந்த - பொருந்திய, பொற் சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் :.அழகைத் தருவது நீறு ஆதலால், ‘சுந்தர நீறு’ என்றார். ‘சுந்தரமாவது நீறு’ என்ற ஞானசம்பந்தர் தேவாரத்தையும் காண்க. மெழுகுதல் முதலியன இடத்தைத் தூய்மை செய்து அலங்கரிக்கும் செயல்களாம்..பல் வகையான தேவர்களிடத்திலும் நின்று பல்வகையான செயலைச் செய்விப்பதும், பிரமனிடத்தில் நின்று படைத்தலைச் செய்விப்பதும், திருமாலிடத்தில் நின்று காத்தலைச் செய்விப்பதும் சிவபெருமானது சத்தியேயாதலின், அப்பெருமானை, ‘அந்தரர் கோன்’ என்றும், ‘அயனறன் பெருமான்’ என்றும், ‘ஆழியான் நாதன்’ என்றும் கூறினார். |
இதனால், இறைவனது பெருமை கூறப்பட்டது..காசணி மின்கள் உலக்கையெல்லாம்.காம்பணி மின்கள் கறையுரலை.நேச முடைய அடியவர்கள்.நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்.தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித் |
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப்.பாச வினையைப் பறித்துநின்று.பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் :.உலக்கை எல்லாம் - உலக்கைகளுக் கெல்லாம், காசு அணிமின்கள் - மணிவடங்களைக் கட்டுங்கள், கறை உரலை - கருமை நிறமுள்ள உரல்களுக்கு, காம்பு அணிமின்கள் - பட்டுத்துணியைச் சுற்றுங்கள், நேசம் உடைய அடியவர்கள் - இறைவனிடத்து அன்புடைய அடியவர்கள், நின்று நிலாவுக என்று - நிலைபெற்று விளங்குக என்று, வாழ்த்தி - வாழ்த்தி, தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் - உலகமெல்லாம் புகழ்ந்து கொண்டாடுகின்ற, கச்சித்திருவேகம்பன் - காஞ்சி மாநகரிலுள்ள திருவேகம் பனது, செம்பொன் கோயில் பாடி - செம்பொன்னால் செய்யப்பட்ட திருக்கோயிலைப் பாடி, பாச வினையை - தளையாகிய இரு வினைகளை, பறித்து நின்று - நீக்கி நின்று, பாடி - திருவருளைப் பாடி, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் : |
காம்பு - பட்டின் வகை. ‘காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்’ என்ற சுந்தரர் வாக்கைக் காண்க. ‘கருங்கல்லாற் செய்யப்பட்ட உரல்’ என்பார், ‘கறையுரல்’ என்றார். அடியார்களிடத்திலும், ஆலயத்திலுமே இறைவன் விளக்கமுற்றிருக்கின்றானாதலின், உயிர்கள் உய்தற்பொருட்டு அவை வாழ வேண்டும் என்பார், ‘நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி’ என்றும், ‘திருவேகம்பன் செம்பொற் கோயில்பாடி’ என்றும் கூறினார். ‘மாலற நேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே’ என்ற சிவஞான போதச் சூத்திரத்தையும் ஒப்பு நோக்குக..இதனால், அடியாரையும், ஆலயத்தையும் வாழ்த்த வேண்டும் என்பது கூறப்பட்டது..அறுகெடுப் பார்அய னும்அரியும்.அன்றிமற் றிந்திர னோடமரர்.நறுமுறு தேவர் கணங்களெல்லாம்.நம்மிற்பின் பல்ல தெடுக்கவொட்டோம் |
செறிவுடை மும்மதில் எய்தவில்லி.திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி.முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்.காடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் :.அயனும் அரியும் - பிரமனும் திருமாலும், அறுகு எடுப்பார் - அறுகெடுத்தலாகிய பணியைச் செய்வார், அன்றி - அவர்களைத் தவிர, மற்று - ஏனையோராகிய, இந்திரனோடு அமரர் - இந்திரன் முதலிய வானுலகத்தவர்களும், நறுமுறு தேவர் கணங்களெல்லாம் - முணுமுணுக்கின்ற தேவ கணங்களும், நம்மின் பின்பு அல்லது - நமக்குப் பின் அல்லாமல், எடுக்க ஒட்டோம் - அவ்வறுகினை எடுக்க விட மாட்டோம், செறிவு உடை - நெருங்கிய, மும்மதில் - முப்புரத்தை, எய்த வில்லி - எய்து அழித்து வில்லையுடையவனாகிய, திருவேகம்பன் - திருவேகம்பனது, செம்பொற் கோயில் பாடி - செம்பொன்னாலாகிய கோயிலைப் பாடி, முறுவல் செவ்வாயினீர் - நகையோடு கூடிய சிவந்தை வாயினையுடையீர், முக்கண் அப்பற்கு ஆட - மூன்று கண்களையுடைய எம் தந்தைக்குப் பூசிக் கொள்ளும் பொருட்டு, பொற்சுண்ணம் - பொன்போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். |
விளக்கம் :.அறுகெடுத்தலாவது, அறுகம்புல்லை எடுத்துப் பசுவின் நெய்யில் தோய்த்துத் தலை முதலிய இடங்களில் தௌ¤த்தல். இதனை நெய்யேற்றுதல் என்றும் கூறுவர். தேவகணமாவது, சித்தர் முதலிய பதினெண் கணத்தை. இவர்கள், அயனும் மாலும் தம் அதிகாரத்தால் முதலிற்சென்று அறுகெடுத்தலைக் கண்டு மனம் புழுங்கி ஒன்றும் செய்யமாட்டாதவராய் இருப்பார் என்பார், ‘நறுமுறு தேவர் கணங்கள்’ என்றார். அத்தகைய தேவர்களுக்கும் முன்னே நாம் சென்று அறுகெடுப்போம் என்பார், ‘நம்மிற்பின்பல்லது எடுக்கவொட்டோம்’ என்றார். இறைபணியில் ஈடுபட்டோர் ஆனந்தத்தில் மூழ்கியிருப்பராதலின், ‘முறுவற்செவ்வாயினீர்’ என அழைக்கப்பட்டனர்..இதனால், இறை பணியிலுள்ள வேட்கை கூறப்பட்டது..உலக்கை பலஓச்சு வார்பெரியர்.உலகமெ லாமஉரல் போதாதென்றே.கலக்க அடியார் வந்துநின்றார் |
காண உலகங்கள் போதாதென்றே.நலக்க அடியோமை ஆண்டுகொண்டு.நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த.மலைக்கு மருகனைப் பாடிப்பாடி.மகிழ்ந்துபொற் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் : |
End of preview. Expand
in Dataset Viewer.
- Downloads last month
- 64