text
stringlengths
23
10.7k
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி.அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட.திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! உலகினுக்கு - உலகத்துக்கு, கரு ஆய் - பிறப்பிடமாய், அருவாய் - அருவமாய், அப்புறமாய் - அப்பாற்பட்டதுமாகி, இப்புறத்து - இவ்வுலகத்தில், மரு ஆர் - மணம் நிறைந்த, மலர் - மலரையணிந்த, குழல் - கூந்தலையுடைய, மாதினொடும் - உமையம்மையோடும், மறைபயில் - வேதங்களை ஓதுகின்ற, அந்தணனாய் - வேதியனாய், வந்தருளி - எழுந்தருளி, ஆண்டுகொண்ட - என்னை அடிமை கொண்ட, திரு ஆன தேவர்க்கே - அழகிய தேவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் :
அருவம் - உருவமின்மை. உலகுக்கு அப்பாற் பட்டிருக்கும்போது இறைவனுக்கு உருவம் இன்றாதலின் ‘அருவாய்’ என்றும், ஆனால், உலகம் தோன்றுவதற்குக் காரணமாயிருத்தலின், ‘கருவாய்’ என்றும், தோன்றிய உலகில் அருள் செய்ய வரும்போது மாதொரு கூறனாய் வருகின்றானாதலின், ‘மலர்க்குழல் மாதினொடும்’ என்றும், தம்மை ஆட்கொண்ட வடிவம் அந்தணக் கோலமாதலின், ‘மறைபயில் அந்தணனாய் வந்தருளி’ என்றும் கூறினார்..இதனால், இறைவன் உயிர்கள் ஆட்கொள்ள வரும் முறை கூறப்பட்டது..நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்.தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்.வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்.தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! தாழ்சடையோன் - நீண்ட சடையையுடைய சிவபெருமான், தானும் தன் தையலும் - தானும் தன் தேவியுமாய் எழுந்தருளி, ஆண்டிலனேல் - ஆட்கொள்ளவில்லையாயின், நானும் - யானும், என் சிந்தையும் - எனது உள்ளமும், நாயகனுக்கு - தலைவனாகிய அவனுக்கு, எவ்விடத்தோம் - எந்த இடத்தில் இருப்போம், வானும் - ஆகாயமும், திசைகளும் - திக்குகளும், மாகடலும் - பெரிய கடல்களும், ஆயபிரான் - ஆகிய பெருமானது, தேன் உந்து - தேனைச் சொரிகின்ற, சேவடிக்கே - திருவடிகளிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் : .இறைவனே ஞானத்தை நல்கி ஆட்கொள்ளவில்லை யெனின், ஆன்ம அறிவினால் அறிய முடியாது என்பார், ‘நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்’ என்றார். ‘நானார் என் உள்ளமார் ஞானங்களார்’ என்று முன்னரும் கூறினார். ‘எவ்விடத்தோம்’ என்றது சேய்மையைக் குறித்தது. அண்டத்துக்கு அப்பாற்பட்ட இறைவன் அண்டமாயும் இருக்கிறான் என்பார், ‘வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்’ என்றார். ‘வானானாய் நிலனானாய் கடலானாய்’ என்ற சுந்தரர் வாக்கையுங்காண்க..இதனால், இறைவன் அண்டமாயும் இருக்கிறான் என்பது கூறப்பட்டது..உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை.வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட்.கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! உள்ளப்படாத - மனத்தினால் நினைக்க இயலாத, திருவுருவை - திருவுருவத்தை. உள்ளுதலும் - நினைத்தலும், கள்ளப்படாத - மறைத்தல் இல்லாத, களிவந்த - மகிழ்ச்சி உண்டாக்கத்தக்க, வான் - மேலான, கருணை வெள்ளப் பிரான் - அருள் வெள்ளத்தையுடைய பெருமான், எம்பிரான் - எம் இறைவன், என்னை - அடியேனை, வேறே - தனியாக, ஆட்கொள் - அடிமைகொண்ட, அப்பிரானுக்கு - அந்த இறைவனிடத்திலேயே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் :
இறைவன் கரணம் கடந்த பெருமானாதலின், ‘உள்ளப்படாத திருவுரு’ என்றார். ஆனால், பதி ஞானத்தினாலே நினைக்கலாமாதலின், ‘உள்ளுதலும்’ என்றார். ‘தனியாக ஆட்கொண்டான்’ என்றது, ‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை’ போன்ற தவ விரதங்கள் இல்லாதிருக்கவும் தம்மை ஆட்கொண்டான் என்பதாம்..இதனால், இறைவன் தன்னை நினைப்பவர்க்கு வந்து அருள் செய்வான் என்பது கூறப்பட்டது..பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்.மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட.ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்றன்.செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! பொய்யாய செல்வத்தே - நிலையில்லாப் பொருளின்கண், புக்கு அழுந்தி - போய் அழுந்தி, நாள்தோறும் - தினந்தோறும், மெய்யாக் கருதிக் கிடந்தேனை - உண்மைப் பொருளென்று எண்ணிக் கிடந்த என்னை, ஆட்கொண்ட - அடிமை கொண்ட, ஐயா - தலைவனே, என் ஆர் உயிரே - எனது அருமையான உயிரே, அம்பலவா - அம்பலவாணா, என்ற - என்று என்னால் புகழப் பெற்ற, அவன்தன் - அப்பெருமானது, செய் ஆர் - செம்மை பொருந்திய, மலர் அடிக்கே - தாமரை மலர் போலும் திருவடியினிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் : .பொய்யாய செல்வமாவன மண், பொன் முதலியன. இச்செல்வத்தை உண்மையென எண்ணியவர் மேல்நிலைக்கு வரமாட்டா ராதலின், ‘புக்கு அழுந்தி’ என்றார். இதையே ‘பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும் மருள்’ என்றார் நாயனார்..இதனால், இறைவனது திருவடியே நிலையான செல்வம் என்பது கூறப்பட்டது..தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்.சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்.கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! தோலும் துகிலும் - புலித்தோலும் மெல்லிய ஆடையும், குழையும் சுருள் தோடும் - குண்டலமும் சுருண்ட தோடும், பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் - பால் போன்ற வெண்மையான திருநீறும் புதிய சந்தனத்துடன் பசுமையான கிளியும், சூலமும் தொக்க வளையும் - முத்தலை வேலும் தொகுதியான வளையலும், உடை - உடைய, தொன்மைக் கோலமே - பழமையான வடிவத்தையே, நோக்கி - பார்த்து, குளிர்ந்து ஊதாய் - இனிமையாய் ஊதுவாயாக..விளக்கம் :
தோல், குழை, நீறு, சூலம் என்பவற்றை இறைவனுக்கும், துகில், தோடு, சாந்து, கிளி, வளை என்பவற்றை இறைவிக்கும் அமைத்துக் கொள்க. வளை பலவாதலால் ‘தொக்கவளை’ என்றார். சிவமும் சத்தியுமாய் உள்ள நிலை இறைவனுக்கு அனாதியானதாகலின், ‘தொன்மைக் கோலம்’ என்றார்..இதனால், இறைவனது அர்த்த நாரீசுவர வடிவம் கூறப்பட்டது..கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே.வள்ளல் வரவர வந்தொழிந்தான் என்மனத்தே.உள்ளத் துறுதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்.தௌ¢ளும் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! இவன் - இவன், கள்வன் - கரவு உடையவன், கடியன் - கொடுமையானவன், கலதி - கீழ்மகன், என்னாது - என்று எண்ணி ஒதுக்காமல், வள்ளல் - வரையாது வழங்கும் இறைவன், வரவர - நாளுக்குநாள், என் மனத்தே - என் மனத்தின்கண்ணே, வந்தொழிந்தான் - வந்து தங்கிவிட்டான், உள்ளத்து உறு - மனத்திற்பொருந்திய, துயர் - துயரம், ஒன்றொழியாவண்ணம் - ஒன்றுவிடாத படி, எல்லாம் - எல்லாவற்றையும், தௌ¢ளும் - களைந்து எறியும், கழலுக்கே - திருவடியினிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் : .கலதி - மூதேவி. அது, தாமத குணத்தை உடைமையைக் குறித்தது. தீமை கருதாது வாரி வழங்குகின்றானாதலின், இறைவனை ‘வள்ளல்’ என்றார். இறைவன் மனத்தை இடமாகக்கொண்டு தங்கினமையால் மனத்தைப்பற்றிய துயரம் எல்லாம் விலகும் என்பார், ‘துயரொன்றொழியா வண்ணமெல்லாம் தௌ¢ளும்’ என்றார்..இதனால், இறைவன் திருவடியைப் பெற்றார்க்கு மனக்கவலை தீரும் என்பது கூறப்பட்டது..பூமேல் அயனோடு மாலும் புகலரிதென்
றேமாறி நிற்க அடியேன் இறுமாக்க.நாய்மேல் தவிசிட்டு நன்றாப் பொருட்படுத்த.தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! பூமேல் அயனோடு - தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனோடு, மாலும் - திருமாலும், புகல் அரிது என்று - அடைதல் அருமையானது என்று, ஏமாறி நிற்க - ஏங்கி நிற்கவும், அடியேன் இறுமாக்க - அடியேன் இறுமாப்பு அடையவும், தவிசு - யானை முதலியவற்றின்மேல் இடும் மெத்தையை, நாய் மேல் இட்டு - நாயின்மேல் இட்டது போல, நன்றா - நன்மையடைய, பொருட்படுத்த - என்னை ஒரு பொரளாக நன்கு எண்ணியாண்ட, தீ மேனியானுக்கே - நெருப்புப் போன்ற திருமேனியுடையானிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் :
நாய்மேல் தவிசு இடல் என்பது, தகுதிக்கு மேற்பட்ட சிறப்பினைச் செய்தல் என்பதாம். ‘நாய்மேல் தவிசிட்டு’ என்றதற்கு நாய் போன்ற எனக்கு உயர்ந்த இடமளித்து என்று பொருள் கொள்வாருமுளர்..இதனால், இறைவன் அன்பராயினார்க்கு அளவற்ற கருணையைச் செய்கின்றான் என்பது கூறப்பட்டது..(தில்லையில் அருளியது).சிவலோகத்துக்குச் செல்ல அனைவரையும் அழைத்துக் கூறிய பகுதியாதலின், இது, 'யாத்திரைப்பத்து' எனப்பட்டது..அனுபவ அதீதம் உரைத்தல்.துரியாதீத நிலையாகிய பேரின்ப அனுபவத்தைக் கூறுதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.திருச்சிற்றம்பலம்.பூவார் சென்னி மன்னன்எம்.புயங்கப் பெருமான் சிறியோமை.ஓவா துள்ளங் கலந்துணர்வாய்.உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய்.ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்.போவோம் காலம் வந்ததுகாண்.பொய்விட் டுடையான் கழல்புகவே..பதப்பொருள் : .பூ ஆர் - மலர் நிறைந்த, சென்னி - முடியையுடைய, மன்னன் - அரசனாகிய, எம் புயங்கப் பெருமான் - பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியோமை - சிறியவர்களாகிய நம்மை, ஓவாது - இடையறாமல், உள்ளம் கலந்து - உள்ளத்தில் கலந்து, உணர்வு ஆய் - உணர்வுருவாய், உருக்கும் - உருக்குகின்ற, வெள்ளக்கருணையினால் - பெருகிய கருணையால், ஆவா என்னப்பட்டு - ஐயோ என்று இரங்கியருளப்பட்டு, அன்பு ஆய் - அன்பு உருவாய், ஆட்பட்டீர் - ஆட்பட்டவர்களே, பொய் விட்டு - நிலையில்லாத வாழ்க்கையை விட்டு, உடையான் கழல் புக - நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடைய, காலம் வந்தது - காலம் வந்துவிட்டது, போவோம் - வந்து ஒருப்படுமின் - வந்து முற்படுங்கள்.
விளக்கம் : .'இறைவன் உள்ளத்திலே கலந்து உணர்வு மயமாகி உருக்குகின்றான்' என்பார், 'ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும்' என்றார். இறைவன் திருவுளம் இரங்கி அருள் செய்தமையால் ஆட்பட்டார்கள் என்பார், 'ஆவா என்னப்பட்டு ஆட்பட்டீர்' என்று விளித்தார். ஆட்பட்ட பின் அன்பு மிகும் என்பதற்கு 'அன்பாய்' என்றும் கூறினார்..இனி, இறைவனுக்கு ஆட்பட்டவர், அவனை அடைய வேண்டுமாதலின், அதற்குக் காலம் இது என்று, 'ஆட்பட்டீர் வந்தொருப்படுமின் போவோங் காலம் வந்தது' என்று அழைக்கிறார், உலகம் பொய் என்பதும், உடையான் கழல் மெய் என்பதும், 'பொய் விட்டுடையான் கழல் புகவே' என்பதால் உணர்த்தினார்,.இதனால், இறைவன் திருவடி இன்பம் நிலையானது என்பது கூறப்பட்டது..புகவே வேண்டா புலன்களில்நீர்.புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம்.வேண்டா போக விடுமின்கள்.நகவே ஞாலத் துள்புகுந்து.நாயே அனைய நமையாண்ட.தகவே உடையான் தனைச்சாரத்.தளரா திருப்பார் தாந்தாமே.
பதப்பொருள் : .நக - நாட்டார் நகை செய்ய, ஞாலத்துள் புகுந்து - உலகில் எழுந்தருளி, நாயே அனைய - நாயைப் போன்ற, நமை ஆண்ட - நம்மை ஆட்கொண்ட, தகவு உடையான்தனை - பெருமையையுடைய இறைவனை, சார - அடைந்தால், தாம் தாம் - அவரவர், தளராது இருப்பார் - தளர்ச்சி நீங்கி இருப்பார்கள், ஆதலின், அடியவர்களே, நீர் - நீங்கள், புலன்களில் - ஐம்புல விடயங்களில், புகவேண்டா - செல்ல வேண்டா, புயங்கப் பெருமான் - பாம்பணிந்த பெருமானது, பூங்கழல்கள் - தாமரைப் பூவை ஒத்த திருவடிகளை, மிக நினைமின் - மிகுதியாக நினையுங்கள், மிக்க எல்லாம் - எஞ்சியவையெல்லாம், வேண்டா - நமக்கு வேண்டா, போக விடுமின்கள் - அவற்றை நம்மிடத்திலிருந்து நீங்கும்படி விட்டுவிடுங்கள்..விளக்கம் : .இறைவனை அடைந்தவர் இளைப்பு நீங்கி அமைதியாக இருப்பராதலின், 'தகவே உடையான் தனைச்சாரத் தளராதிருப்பார் தாம் தாமே' என்றார். 'ஆதலினால், நீங்களும் உங்களது இளைப்பு ஒழிந்து அமைதியாக இருக்க விரும்பினால், புயங்கப்பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின்' என்றார்..இதனால், இறைவன் திருவடியையடைய விரும்ப வேண்டும் என்பது கூறப்பட்டது..தாமே தமக்குச் சுற்றமுந்
தாமே தமக்கு விதிவகையும்.யாமார் எமதார் பாசமார்.என்ன மாயம் இவைபோகக்.கோமான் பண்டைத் தொண்டரொடும்.அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு.போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே..பதப்பொருள் : .தமக்குச் சுற்றமும் தாமே - ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே, தமக்கு விதி வகையும் தாமே - நடைமுறைகளை வகுத்துக்கொள்பவரும் அவரே; ஆதலால், அடியவர்களே, நீங்கள், யாம் ஆ£¢ - நாம் யார், எமது ஆர் - எம்முடையது என்பது யாது, பாசம் ஆர் - பாசம் என்பது எது, என்ன மாயம் - இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து, இவை போக - இவை நம்மை விட்டு நீங்க, கோமான் - இறைவனுடைய, பண்டைத் தொண்டரொடும் - பழைய அடியாரொடும் சேர்ந்து, அவன்றன் குறிப்பே - அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே, குறிக்கொண்டு - உறுதியாகப் பற்றிக்கொண்டு, பொய் நீக்கி - பொய் வாழ்வை நீத்து, புயங்கன் - பாம்பணிந்தவனும், ஆள்வான் - எமையாள்வோனுமாகிய பெருமானது, பொன் அடிக்கு - பொன் போல ஒளிரும் திருவடிக்கீழ், போம் ஆறு அமைமின் - போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்..விளக்கம் : .ஒவ்வொருவருக்கும் வரும் நன்மை தீமைகளுக்குக் காரணம் அவரவர் செய்யும் செய்கையேயன்றி வேறில்லையாதலின், 'தாமே தமக்குச் சுற்றமும்' என்றும், இவ்வாறு நடத்தல் வேண்டும், இவ்வாறு நடத்தல் கூடாது என்று உறுதி செய்துகொண்டு அவ்வாறு நடப்பவரும் அவரேயாதலின், 'தாமே தமக்கு விதி வகையும்' என்றும் கூறினார்.."தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்.தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்.தானே தனக்குத் தலைவனு மாமே.".என்ற திருமூலர் வாக்கை இங்கு நினைவுகூர்க. இங்ஙனமாகவே, பின் வருவனவற்றைக் கடைப்பிடித்தல் அனைவருக்கும் இன்றியமையாதது என்பதாம். இவ்வுடம்பும் உலகமும் நிலையாமையுடையவை என்று உணர்ந்து அவற்றினின்றும் நீங்க வேண்டும் என்பார், 'யாமார் எமதார் பாசமார் என்ன மாயம்' என்று உணர்த்தினார்..இறைவன் குறிப்பாவது, ஆன்மாக்களெல்லாம் வீடுபேறு எய்த வேண்டும் என்பது, இதனை உணர்ந்து அவனது திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பார், 'அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு பொன்னடிக்கே போமாறு அமைமின்' என்று அறிவுறுத்துகிறார்..இதனால், இறைவனது அடியார் கூட்டம் திருவடிப் பேற்றினை நல்கும் என்பது கூறப்பட்டது.
அடியா ரானீர் எல்லீரும்.அகல விடுமின் விளையாட்டைக்.கடிசே ரடியே வந்தடைந்து.கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்.செடிசேர் உடலைச் செலநீக்கிச்.சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிச்சேர் மேனிப் புயங்கன்தன்.பூவார் கழற்கே புகவிடுமே..பதப்பொருள் : .அடியார் ஆனிர் எல்லீரும் - அடியாராகிய நீங்கள் எல்லீரும், .விளையாட்டை - உலக இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுது போக்குகின்ற நிலையை, .அகல விடுமின் - நீங்கிப் போமாறு விட்டு ஒழியுங்கள்;
கடிசேர் அடியே - மணம் தங்கிய திருவடியையே, .வந்து அடைந்து - வந்து பொருந்தி, .திருக்குறிப்பை - திருவுள்ளக் குறிப்பை, .கடைக்கொண்டு இருமின் - உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள்; .பொடி சேர் மேனி - திருவெண்ணீறு பூசப்பெற்ற திருமேனியையுடைய, .புயங்கன் - பாம்பணிந்த பெருமான்,
செடி சேர் உடலை - குற்றம் பொருந்திய உடம்பை, .செல நீக்கி - போகும்படி நீக்கி, .சிவலோகத்தே - சிவபுரத்தே, .நமைவைப்பான் - நம்மை வைப்பான், .தன் பூ ஆர் கழற்கே - தனது தாமரை மலர் போன்ற திருவடி நிழலிலே, .புகவிடும் - புகும்படி செய்வான்.
விளக்கம் : .முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன. சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்க. பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம்..இதனால், இறைவன் தன் அடியார்க்குப் பரமுத்தியை நல்குவான் என்பது கூறப்பட்டது..விடுமின் வெகுளி வேட்கைநோய்.மிகவோர் காலம் இனியில்லை.உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ
டுடன்போ வதற்கே ஒருப்படுமின்.அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்.அணியார் கதவ தடையாமே.புடைபட் டுருகிப் போற்றுவோம்.புயங்கன் ஆள்வான் புகழ்களையே..பதப்பொருள் :
(அடியார்களே!) மிக - மேன்மைப்படுவதற்கு, இனி ஓர் காலம் இல்லை - இனிமேல் ஒரு காலம் கிடையாது; ஆகையால், அணியார் கதவு அடையாமே - சிவலோகத்தின் அழகிய கதவு நமக்கு அடைக்கப்படாதிருக்கும்படி, வெகுளி - கோபத்தையும், வேட்கை நோய் - காம நோயையும், விடுமின் - விட்டுவிடுங்கள், உடையான் அடிக்கீழ் - நம்மை உடைய பெருமானது திருவடிக்கீழ், பெருஞ்சாத்தோடு - பெரிய கூட்டத்தோடு, உடன் போவதற்கே ஒருப்படுமின் - உடன் செல்வதற்கு மனம் இசையுங்கள், புயங்கன் - பாம்பை அணிந்தவனும், ஆள்வான் - நம்மை ஆள்பவனுமாகிய இறைவனது, புகழ்களை - பெருமைகளை, புடைபட்டு - எங்கும் சூழ்ந்து, உருகிப் போற்றுவோம் - மனமுருகிப் போற்றுவோம்; போற்றினால், சிவபுரத்துள் - சிவலோகத்தில், நாம் போய் அடைவோம் - நாம் போய்ச் சேர்ந்துவிடுவோம்..விளக்கம் : .சினமும் ஆசையும் சிவலோகத்தை அடையத் தடையாதலின், 'கதவதடையாமே விடுமின் வெகுளி வேட்கை நோய்' என்றார். வாய்ப்பு உள்ளபோதே பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாதலின், 'மிக ஓர் காலம் இனியில்லை' என்றார். கதவு அடையாதிருத்தலாவது, திருவருள் பெருகியிருத்தல். தாம் மட்டும் பயன் பெற விரும்பாதவர் ஆதலின், 'பெருஞ்சாத்தோ டுடன்போவதற்கே ஒருப்படுமின்' என்று எல்லோரையும் அழைக்கிறார்..இதனால், இறைவன் திருவடி சேர்வதற்குக் காலம் தாழ்த்தலாகாது என்பது கூறப்பட்டது..புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்.புயங்கன் தாளே புந்திவைத்திட்
டிகழ்மின் எல்லா அல்லலையும்.இனியோர் இடையூ றடையாமே.திகழுஞ் சீரார் சிவபுரத்துச்.சென்று சிவன்தாள் வணங்கிநாம்.நிகழும் அடியார் முன்சென்று.நெஞ்சம் உருகி நிற்போமே.
பதப்பொருள் : .(அடியார்களே!) நாம் - நாம், இனி -இனிமேல், ஒர் இடையூறு அடையாமே - ஒரு துன்பம் வந்து சேராவண்ணம், திகழும் - விளங்குகின்ற, சீர் ஆர் - சிறப்பு அமைந்த, சிவபுரத்துச் சென்று - சிவபுரத்துக்குப் போய், சிவன் தாள் வணங்கி - சிவபெருமானது திருவடியை வணங்கி, நிகழும் - அங்கே வாழும், அடியார் முன் சென்று - அடியார் முன்னே சென்று, நெஞ்சம் உருகி நிற்போம் - மனம் உருகி நிற்போம்; அதற்கு, புயங்கள் தாளே - பாம்பணிந்த பெருமானது திருவடியையே, புகழ்மின் - புகழுங்கள், தொழுமின் - வணங்குங்கள், பூப்புனைமின் - அவற்றுக்கு மலர்சூடுங்கள், புந்தி வைத்திட்டு - அதனையே நினைவில் வைத்துக்கொண்டு, எல்லா அல்லலையும் - பிற எல்லாத் துன்பங்களையும், இகழ்மின் - இகழுங்கள்..விளக்கம் : .இறைவனது பழவடியாரோடு சேர்ந்து இன்புற்றிருப்பதற்கு அவனது திருவடியை இடைவிடாது வணங்கவேண்டும் என்றார், இனி, உலகத்துன்பங்களைக் களைவதற்கும் அவனது திருவடியை உள்ளத்து அமைத்துக்கொள்ள வேண்டும் என்பார்..'புயங்கன் தாளே புந்திவைத்திட்.டிகழ்மின் எல்லா அல்லலையும்'
என்றார்..இதனால், இறைவன் திருவடிப் புகழ்ச்சியே எல்லாத் துன்பங்களையும் போக்கும் என்பது கூறப்பட்டது..நிற்பார் நிற்கநில் லாஉலகில்.நில்லோம் இனிநாம் செல்வோமே.பொற்பால் ஒப்பாந் திருமேனிப்.புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே.நிற்கும் பரிசே ஒருப்படுமின்.பிற்பால் நின்று பேழ்கணித்தால்.பெறுதற் கரியன் பெம்மானே..பதப்பொருள் : .பொற்பால் - அழகினால், ஒப்பு ஆம் - தனக்குத் தானே நிகரான, திருமேனி - திருமேனியையுடைய, புயங்கன் ஆள்வான் - பாம்பணிந்த பெருமானது, பொன்னடிக்கே - பொன் போன்ற திருவடியை அடைவதற்கே, நிற்பீர் - நிற்கின்றவர்களே, நில்லா உலகில் - நிலையில்லாத உலகின்கண், நிற்பார் நிற்க - நிற்க விரும்புவார் நிற்கட்டும், நாம் இனி நில்லோம் - நாம் இங்கு இனி நிற்கமாட்டோம், செல்வோம் - சென்றுவிடுவோம்; செல்லாமல், நின்று - தங்கி நின்று, பிற்பால் பேழ்கணித்தால் - பின்பு மனம் வருந்தினால், பெம்மான் - எம் பெருமான், பெறுதற்கரியன் - பெறுதற்கு அரியவனாவான்; ஆதலால், எல்லாம் தாழாது -எல்லோரும் காலந்தாழ்த்தாது, நிற்கும் பரிசே - நீங்கள் நினைந்து நின்றபடியே, ஒருப்படுமின் - செல்ல மனம் இசையுங்கள்.
விளக்கம் :.இறைவன் திருவடிப்பேற்றில் விருப்பம் இல்லாதவர்கள் அதனையடைய விரையமாட்டார்களாதலின், 'அவர்களை நோக்காதீர்கள்' என்பார், 'நிற்பார் நிற்க' என்றும், நின்றவர்கள் நிலைபெறப் போவதில்லை என்பார், 'நில்லாவுலகில் நிற்க' என்றும், 'நீவிர் அவர்கள் போல இல்லாமல் முந்த வேண்டும்' என்பார். 'எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்' என்றும், திருவடிப் பேற்றுக்கு முந்தாது போய்விட்டோமோ என்று பின்னால் வருந்தினால் பயனில்லை என்பார், 'பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கரியன் பெம்மான்' என்றும் கூறினார். பேழ்கணித்தல் என்னுஞ்சொல், 'பின்பு பெரிதும் இரங்குதல்' என்னும் பொருளது..இதனால், இறைவன் திருவடிப் பேற்றுக்கு முந்த வேண்டும் என்பது கூறப்பட்டது..பெருமான் பேரா னந்தத்துப்.பிரியா திருக்கப் பெற்றீர்காள்.அருமால் உற்றுப் பின்னைநீர்
அம்மா அழுங்கி அரற்றாதே.திருமா மணிசேர் திருக்கதவந்.திறந்த போதே சிவபுரத்துத்.திருமால் அறியாத் திருப்புயங்கன்.திருத்தாள் சென்று சேர்வோமே..பதப்பொருள் :
பெருமான் - இறைவனது, பேரானந்தத்து - பேரின்பத்தில், பிரியாதிருக்கப்பெற்றீர்காள் - பிரியாமல் மூழ்கியிருக்கப் பெற்றவர்களே, நீர் அருமால் உற்று - நீங்கள் அருமையான மயக்கத்தில் பொருந்தி, பின்னை - பின்பு, அம்மா - ஐயோ என்று, அழுங்கி அரற்றாதே - வருந்தி அலறாவண்ணம், திருமா மணிசேர் - அழகிய சிறந்த மணிகள் இழைக்கப்பெற்ற, திருக்கதவம் - திருக்கதவு, திறந்த போதே - திறந்திருக்கும்போதே, சிவபுரத்து - சிவபுரத்திலுள்ள, திருமால் அறியா - திருமாலறியாத, திருபுயங்கன் - அழகிய பாம்பணிந்த பெருமானது, திருத்தாள் - திருவடியை, சென்று சேர்வோம் - சென்றடைவோம் (ஒருப்படுமின்)..விளக்கம் : .திருவருட்பேற்றுக்கு முந்தாது தங்கிவிட்டோமெனில், உலக மயக்கம் சூழ்ந்து வருத்துதலால் வருந்த நேரும்; ஆதலின், திருவருள் வழியே சென்று நிருத்தனைக் கும்பிட வேண்டும் என்பார், 'திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோம்' என்றார். 'புயங்கம்' என்பது 'ஒரு வகைக் கூத்து' என்றும் பொருள் தருமாகலின், 'புயங்கப் பெருமான்' என்பதற்குக் கூத்தப்பெருமான் என்றும் பொருள் கொள்ளலாம்..இதனால், இறைவன் திருவருள் தோய்வினின்றும் பிரியாதிருக்க வேண்டும் என்பது கூறப்பட்டது..சேரக் கருதிச் சிந்தனையைத்.திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள்.பங்கன் புயங்கன் அருளமுதம்.ஆரப் பருகி ஆராத.ஆர்வங் கூர அழுந்துவீர்.போரப் புரிமின் சிவன்கழற்கே.பொய்யிற் கிடந்து புரளாதே.
பதப்பொருள் : .போரில் பொலியும் வேல் - போரில் விளங்குகின்ற வேல் போன்ற, கண்ணாள் - கண்களையுடைய உமையம்மையின், பங்கன் - பாகனும், புயங்கன் - பாம்பணிந்தவனும் ஆகிய இறைவனது, அருள் அமுதம் - திருவருள் அமுதத்தை, ஆரப் பருகி - நிரம்பப் பருகி, ஆராத ஆர்வம் கூர - தணியாத ஆசை மிக, அழுந்துவீர் - மூழ்கியிருப்பவர்களே, பொய்யில் கிடந்து புரளாதே - பொய்யான வாழ்வில் கிடந்து புரளாமல், சிவன் கழற்கே - சிவபெருமானது திருவடியிலே, போரப் புரிமின் - அடைய விரும்புங்கள், சேரக் கருதி - அதனையடைய எண்ணி, சிந்தனையை - சித்தத்தை, திருந்த வைத்து - தூய்மையாக வைத்துக்கொண்டு, சிந்திமின் - இடைவிடாமல் நினையுங்கள்..விளக்கம் : .போத என்பது போர் என எதுகை நோக்கித் திரிந்தது. சிவன் திருவடியே உண்மையானது ஆதலின், அதனையடைய வேண்டும் என்பார், 'போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே' என்றார். அதற்கு உபாயம் எது என்னில், சித்தத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டு சிவனது திருமேனியைத் தியானிக்க வேண்டும் என்பதாம். 'வேற்கண்ணாள் பங்கன்' என்றதால், அவன் பொய்யை ஒழித்து அருளும் திறமுடையான் என்பதும் குறிப்பிட்டார்..இதனால், இறைவன் திருமேனியைத் தியானித்திருக்க வேண்டும் என்பது கூறப்பட்டது..புரள்வார் தொழுவார் புகழ்வாராய்
இன்றே வந்தாள் ஆகாதீர்.மருள்வீர் பின்னை மதிப்பாரார்.மதியுட் கலங்கி மயங்குவீர்.தெருள்வீ ராகில் இதுசெய்மின்.சிவலோ கக்கோன் திருப்புயங்கள்.அருளார் பெறுவார் அகலிடத்தே
அந்தோ அந்தோ அந்தோவே..பதப்பொருள் : .புரள்வார் - புரள்பவராயும், தொழுவார் - வணங்குபவராயும், புகழ்வார் - துதிப்பவராயும், இன்றே வந்து - இப்பொழுதே வந்து, ஆள் ஆகாதீர் - ஆட்படாதவர்களாய், மருள்வீர் - மயங்குகின்றவர்களே, பின்னை - பின்பு, மதியுள் கலங்கி - அறிவினுட்கலக்கமடைந்து, மயங்குவீர் யாவர்? தெருள்வீர் ஆகில் - தௌ¤வடைய விரும்புவீரானால், இது செய்மின் - எம்பெருமானுக்கு ஆட்படுதலாகிய இதனைச் செய்யுங்கள்; சிவலோகக்கோன் - சிவலோக நாதனாகிய, திருப்புயங்கன் - பாம்பணிந்த பெருமானது, அருள் - திருவருளை, அகல் இடத்து - அகன்ற உலகின்கண், ஆர் பெறுவார் - யார் பெற வல்லார்கள்? அந்தோ அந்தோ அந்தோ - ஐயோ ஐயோ ஐயோ!.விளக்கம் : .புரளுதல் முதலாயின அன்பு வயப்பட்டார் செயல்..'போற்றி என்றும் புகழ்ந்தும் புரண்டும்நின்று
ஆற்றல் மிக்கஅன் பால்அழைக் கின்றிலேன்' என்று முன்பும் அடிகள் கூறியிருத்தல் அறிக..அறிவு வயப்பட்டார் ஆராய்ச்சியில் தலைப்பட்டுப் புரளுதல் முதலியவற்றைச் செய்யக் கூசுவர் ஆதலின், அவர் இறைவனுக்கு ஆளாகமாட்டார் என்றபடி. 'இது செய்மின்' என்றது, புரளுதல் முதலியவற்றைச் செய்து இறைவனுக்கு ஆட்படுக' என்றதாம். இறைவனது திருவருள் எத்தகையோராலும் அடைதற்கு அரியது என்பார், 'திருப்புயங்கன் அருள் ஆர் பெறுவார் அகலிடத்தே' என்றும், அத்ததைகய அரிய அருள் புரளுதள் முதலியவற்றால் எளிதல் பெறுவதாயிருக்க, 'அவற்றைச் செய்யாதிருத்தல் என்ன அறியாமை! ' என்பார், 'அந்தோ அந்தோ அந்தோவே' என்றும் கூறினார்..இதனால், இறைவன் திருவருளைப் பெற முயலாதவர் தாழ்வடைவர் என்பது கூறப்பட்டது..(திருத்தோணி புரத்தில் அருளியது).அடிகள், இறைவனைத் தாம் விடாது பிடித்த செயலைக் கூறும் பத்துப் பாடல்களாதலின், இது 'பிடித்த பத்து' எனப்பட்டது..முத்திக்கலப்புரைத்தல்
முத்தியில் கலந்த அனுபவத்தைக் கூறுதல்..எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.திருச்சிற்றம்பலம் .உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த.யோகமே ஊத்தையேன் தனக்கு.வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே.செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே.செல்வமே சிவபெரு மானே.எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.எங்கெழுந் தருளுவ தினியே..பதப்பொருள் :
உம்பர்கட்கு அரசே - தேவர்களுக்கு அரசனே, ஒழிவு அற நிறைந்த யோகமே - எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்திருப்பவனே, ஊத்தையேன் தனக்கு - அழுக்கு உடம்பை உடையேனாகிய எனக்கு, வம்பு எனப் பழுத்து - புதிய பொருள் போலத் தோன்றி, என் குடி முழுது ஆண்டு - என் குடி முழுவதும் ஆண்டருளி, வாழ்வு அற - உலக வாழ்வு நீங்க, வாழ்வித்த - சிவப்பேறு உண்டாகும்படி வாழ்வித்த, மருந்தே - அமுதமே, செம்பொருள் துணிவே - துணியப்பட்ட செம்பொருளே, சீர் உடைக் கழலே - சிறப்பையுடைய திருவடியை உடையவனே, செல்வமே - அருட்செல்வமாயிருப்பவனே, சிவபெருமானே - சிவபிரானே, எம்பொருட்டு - எங்கள் பொருட்டாக, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்: இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது?.விளக்கம் : .சூரியனது கிரணம் போல, இறைவனது திருவருள் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கியிருத்தலின், 'ஒழிவற நிறைந்த யோகமே' என்றார். 'ஊற்றையேன்' என்பது பாடம் அன்று. இறை உண்மை உணர்ந்த பின்னர்ப் புதிய இன்பம் பிறத்தலின், வம்பெனப் பழுத்து' என்றார். இனி, எல்லா நூல்களும் அவனது புகழையே பேசுதலின், 'செம்பொருட்டுணிவே' என்றார். ஆகுபெயராய்த் திருவடியைக் குறிப்பதாகிய, 'கழல்' என்னும் சொல், இங்கு இருமடி ஆகுபெயராய், அதனையுடைய இறைவனைக் குறித்தது. 'சீருடைக் கடலே' என்பதே பாடம் என்பாரும் உளர். 'சிக்கெனப் பிடித்தேன்' என்றது உறுதி பற்றி என்க..இதனால், இறைவன் துன்பமாகிய உலக வாழ்வை நீக்கி, இன்பமாகிய திருவடிப் பேற்றை அருள்பவன் என்பது கூறப்பட்டது..விடைவிடா துகந்த விண்ணவர் கோவே.வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்.முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து.கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட.கடவுளே கருணைமா கடலே.இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் : .விடை விடாது உகந்த - இடபத்தை விடாமல் விரும்பின, விண்ணவர் கோவே - தேவர் பெருமானே, வினையனேன் உடைய - வினையை உடையேனாகிய எனது, மெய்பொருளே - உண்மையான பொருளே, அடியேன் - அடியேனாகிய யான், முடை விடாது - புலால் நாற்றம் நீங்காது, முழுப் புழுக்குரம்பையில் கிடந்து - முழுவதும் புழு நிறைந்த கூட்டினிற்கிடந்து, அறமூத்து - மிகவும் முதுமை எய்தி, மண்ணாய் - பாழாய், கடைபடா வண்ணம் - கீழ்மையடையா வகை, காத்து என்ன ஆண்ட - தடுத்து என்னை ஆண்டருளின, கடவுளே - எல்லாம் கடந்தவனே! கருணை மாகடலே - கருணையாகிய பெருங்கடலே, இடைவிடாது - இடையறாமல், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - 'உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.விளக்கம் : .விடை, அறத்தின் சின்னம், அறத்தை நடத்துபவன் இறைவனாகலின், 'விடை விடாதுகந்த விண்ணவர் கோவே' என்றார். இவ்வுடம்பு புழுக்கள் நிறைந்த கூடு ஆதலின், 'முழுப் புழுக்குரம்பை' என்றார். இக்கருத்துப் பற்றியே 'முடையார் புழுக்கூடு' என்று திருச்சதகத்தில் கூறியிருத்தலையும் காண்க. 'இறை நினைவிலேயே அழுந்தியிருக்க வேண்டும்' என்பார், 'இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்' என்றார்..இதனால், இறைவன், புலால் துருத்தியாகிய உடம்பைப் பூந்துருத்தியாக்க வல்லவன் என்பது கூறப்பட்டது..அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே.பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்.புழுத்தலைப் புலையனேன் தனக்குச்.செம்மையே ஆய சிவபதம் அளித்த.செல்வமே சிவபெரு மானே.இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..பதப்பொருள் : .அம்மையே - தாயே, அப்பா - தந்தையே, ஒப்பு இலா மணியே - நிகரில்லாத மாணிக்கமே, அன்பினில் விளைந்த - அன்பாகிய கடலில் உண்டாகிய, ஆர் அமுதே - அருமையான அமுதமே, பொய்ம்மையே பெருக்கி - பொய்ம்மையான செயல்களையே அதிகமாகச் செய்து, பொழுதினைச் சுருக்கும் - காலத்தை வீணாகக் கழிக்கின்ற, புழுத்தலைப் புலையனேன் தனக்கு - புழுவையுடைய இடமாகிய உடம்பில் உள்ள கீழ்மையேனுக்கு, செம்மையே ஆய - மிக மேன்மையான, சிவபதம் அளித்த - சிவபதத்தைக் கொடுத்தருளின, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, இம்மையே - இவ்வுலகிலேயே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.விளக்கம் : .பொய்ம்மையே பெருக்குதலாவது, உயிருக்கு உறுதி பயக்கும் நன்மையான செயலைச் செய்யாது தீமையான செயலைச் செய்தலாம். பொழுதினைச் சுருக்கலாவது, வாழும் நாள்களில் பயன்தரும் நாள்கள் மிகச் சிலவாகச் செய்தல். 'பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே' என்று திருநாவுக்கரசர் அருளிச் செய்தல் காண்க. நன்மை செய்து வாழ்ந்தால் இறைவனை இம்மையே பற்றலாம் என்க..இதனால், இறைவன் கீழ்மையான நிலையிலுள்ளார்க்கும் உயர்ந்த நிலையை அளித்து ஆட்கொள்வான் என்பது கூறப்பட்டது.
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே.பெருந்திறல் அருந்தவர்க் கரசே.பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த.போகமே யோகத்தின் பொலிவே.தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த.செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.எங்கெழுந் தருளுவ தினி¢யே..பதப்பொருள் : .அருள் உடைச் சுடரே - அளியையுடைய சுடரே, அளிந்தது ஓர் கனியே - பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே, பெருந்திறல் - பேராற்றலையுடைய, அருந்தவர்க்கு - அருமையான தவத்தினையுடையோர்க்கு, அரசே - அரசனே, பொருள் உடைக் கலையே - மெய்ப்பொருளை விளக்கும் நூலானவனே, புகழ்ச்சியைக் கடந்த போகமே - நூல்கள் புகழும் புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே, யோகத்தின் பொலிவே - யோகக் காட்சியில் விளங்குகின்றவனே, தெருள் இடத்து - தௌ¤வாகிய இடத்தையுடைய, அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே - அடியார்களது சித்தத்தில் தங்கிய செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, இருள் இடத்து - இருள் நிறைந்த இவ்வுலகில், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.விளக்கம் : .செங்காய் முழுச்சுவை தாராது ஆதலின், இறைவனை 'அளிந்ததோர் கனியே' என்றார். அவனது புகழைச் சொற்களால் அளவிட்டுச் சொல்ல முடியாதாதலின், 'புகழ்ச்சியைக் கடந்த போகமே' என்றும், ஆனால் அனுபவத்தில் விளங்குபவன் ஆதலின், 'யோகத்தின் பொலிவே' என்றும் கூறினார். அக்காட்சி சித்தம் தௌ¤ந்த போது இவ்வுலகிலேயே உண்டாமாதலின், 'இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்றார்.
இதனால், இறைவன் அடியார் மனம் கோயிலாகக் கொண்டு அருளுவான் என்பது கூறப்பட்டது..ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்.உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே.மெய்ப்பதம் அளியா வீறிலி யேற்கு.விழுமிய தளித்ததோ ரன்பே.செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தி
செல்வமே சிவபெரு மானே.எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.எங்கெழுந் தருளுவ தினியே. .பதப்பொருள் : .உனக்கு ஒப்பு இல்லா - உனக்கு ஒருவரும் நிகரில்லாத, ஒருவனே - ஒருத்தனே, அடியேன் உள்ளத்துள் - அடியேனது மனத்தில், ஒளிர்கின்ற ஒளியே - விளங்குகின்ற ஒளியே, மெய்ப்பதம் அறியா - உண்மையான நிலையை அறியாத, வீறு இலியேற்கு - பெருமையில்லாத எனக்கு, விழுமியது - மேன்மையாகிய பதத்தை, அளித்தது - கொடுத்ததாகிய, ஓர் அன்பே - ஒப்பற்ற அன்பானவனே, செப்புதற்கு அரிய - சொல்வதற்கு அருமையான, செழுஞ்சுடர் மூர்த்தி - வளமையான சுடர் வடிவினனே, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, எய்ப்பு இடத்து - இளைத்த இடத்தில், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கு எழுந்தருளிச் செல்வது?.விளக்கம் :
இறைவன் தனக்குவமையில்லாதவனாதலின், 'ஒப்புனக்கில்லா ஒருவனே' என்றார். மெய்ப்பதமாவது, பேரின்ப நிலை. சிறப்பொன்றும் இல்லாத தமக்குச் சிறப்பினை நல்கிய இறைவனது கருணையை, 'அன்பே' என அழைத்தார். எய்ப்பிடமாவது, தமக்கு ஒரு பற்றுக்கோடு இன்றி இளைத்த இடம்..இதனால், இறைவன் சிறப்பென்னும் முத்திச் செல்வத்தை அருள வல்லவன் என்பது கூறப்பட்டது..அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்.டளவிலா ஆனந்தம் அருளிப்.பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட.பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்.செல்வமே சிவபெரு மானே.இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.எங்கெழுந் தருளுவ தினியே..பதப்பொருள் : .அறவையேன் மனமே - ஆதரவு அற்றவனாகிய என்னுடைய மனத்தையே, கோயிலாக் கொண்டு - கோயிலாகக் கொண்டு, ஆண்டு - ஆட்கொண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி - எல்லையற்ற இன்பத்தை அளித்து, பிறவி வேர் அறுத்து - என்னுடைய பிறப்பின் வேரைக் களைந்து, என் குடி முழுது ஆண்ட - என் குடும்பம் முழுவதையும் ஆட்கொண்ட, பிஞ்ஞகா - தலைக்கோலமுடையவனே, பெரிய எம் பொருளே - பெருமையான எமது மெய்ப்பொருளே, திறவிலே கண்ட காட்சியே - திறந்த வெளியிலே காணப்பட்ட காட்சிப் பொருளே, அடியேன் செல்வமே - அடியேனது அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, இறவிலே - இறுதியிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
விளக்கம் : .திக்கற்றவர்க்குத் தெய்வமே துணையாதலால், 'அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு' என்றார். திறவிலே கண்ட காட்சியாவது, திருப்பெருந்துறையிலே யாம் 'யான் இறுதி வந்த காலத்தில் உன்னையன்றிப் பிறிதோர் துணையில்லையென்று பற்றினேன்' என்பார், 'இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்' என்றார்..இதனால். இறைவனே பிறவியைப் போக்கி அருள வல்லவன் என்பது கூறப்பட்டது..பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்.பற்றுமா றடியனேற் கருளிப்.பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே.தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி.செல்வமே சிவபெரு மானே.ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.எங்கெழுந் தருளுவ தினியே..பதப்பொருள் :
பாசவேர் அறுக்கும் - பற்றுகளின் வேரைக் களைகின்ற, பழம்பொருள் தன்னை - பழமையான பொருளை, பற்றும் ஆறு - பற்றிக்கொள்கின்ற வழியை, அடியனேற்கு அருளி - அடியேனாகிய எனக்கு அருள் புரிந்து, பூசனை உகந்து - எனது வழிபாட்டினை விரும்பி, என் சிந்தையுள் புகுந்து - என் சித்தத்துள் புகுந்து, பூங்கழல் காட்டிய பொருளே - தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டிய மெய்ப்பொருளே, தேசு உடை விளக்கே - ஒளியையுடைய விளக்கே, செழுஞ்சுடர் மூர்த்தி - விளக்கினுள் தோன்றும் வளமையான சுடர் போலும் வடிவினனே, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, ஈசனே - இறைவனே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.விளக்கம் : .உலகப் பற்றை நீக்குவதற்கு இறைவனது பற்றைக் கொள்ள வேண்டுமாதலின், அதனை இறைவன் தமக்கு நல்கியருளினான் என்பார், 'பாசவேரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற்கருளி' என்றார். மெய்ப்பற்றினைப் பற்றிக்கொண்ட பின்னர்ச் சித்தத்திலே தௌ¤வு உண்டாயிற்று என்பதை, 'சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே' என்பதால் உணர்த்தினார். தௌ¤வு உண்டாகிய பின்பு விளங்கிய இறைவனது சொரூப நிலையை, 'தேசுடை விளக்கே' என்றும், தடத்த நிலையை, 'செழுஞ்சுடர் மூர்த்தி' என்றும் கூறினார்..இதனால், இறைவன், பற்றினை நீக்கி ஞானத்தினை நல்குவான் என்பது கூறப்பட்டது..அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற.ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த.செல்வமே சிவபெரு மானே.பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்.பிழைத்தவை அல்லையாய் நிற்கும்.எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் : .அத்தனே - தந்தையே, அண்டர் அண்டமாய் நின்ற - தேவராயும் தேவர் உலகமாயும் நின்ற, ஆதியே - முதல்வனே, யாதும் ஈறு இல்லா - சிறிதும் முடிவு இல்லாத, சித்தனே - ஞான வடிவினனே, பத்தர் சிக்கெனப் பிடித்த - அடியார்கள் உறுதியாகப் பற்றின, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, பித்தனே - அன்பர்பால் பேரன்பு கொண்டவனே, எல்லா உயிருமாய்த் தழைத்து - எல்லா உயிர்களுமாய்க் கலந்து விளங்கியும், பிழைத்து - நீங்கி, அவை அல்லையாய் நிற்கும் - அவை அல்லாமல் தன்மையால் வேறாய் இருக்கின்ற, எத்தனே - மாயம் உடையவனே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கெழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.விளக்கம் : .அறிவே வடிவமாய் உள்ளவனாதலின், முதலும் முடிவும் இன்றி விளங்குகின்றான் என்பார், 'யாதும் ஈறில்லாச் சித்தனே' என்றும், உயிர்களிடத்து விருப்பமுடையவனாதலின், 'பித்தனே' என்றும், உயிரோடு கலந்திருந்தும் அவற்றில் தொடக்குறாது நிற்றலின், 'எத்தனே' என்றும் விளித்தார்..இதனால், இறைவனது இயல்பு கூறப்பட்டது..பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய.ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி.உலப்பிலா ஆனந்த மாய.தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த.செல்வமே சிவபெரு மானே.யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..பதப்பொருள் : .பால் - பாலை, நினைந்து ஊட்டும் - காலமறிந்து கொடுக்கின்ற, தாயினும் - தாயைக்காட்டிலும், சாலப்பரிந்து - மிகவும் அன்பு கொண்டு, நீ பாவியேனுடைய - நீ பாவியாகிய என்னுடைய, ஊனினை உருக்கி - உடம்பை உருக்கி, உள்ளொளி பெருக்கி - உள்ளத்தில் ஞானத்தைப் பெருக்கி, உலப்பிலா - அழியாத, ஆனந்தம் ஆய - இன்பமாகிய, தேனினைச் சொரிந்து - தேனைப் பொழிந்து, புறப் புறம் திரிந்த - நான்கு புறங்களிலும் உடன் திரிந்த, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, யான் உனைத் தொடர்ந்து - நான் உன்னைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன் - உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.விளக்கம் : .தாய் இனம், கடை, இடை, தலை என முப்பிரிவினது, குழந்தை அழுதாலும் பால் கொடுக்காதவள் கடையாய தாய்; அழும்போது கொடுப்பவள் இடையாய தாய்; காலம் அறிந்து கொடுப்பவள் தலையாய தாய். இறைவனோ, காலமறிந்து கொடுக்கும் தாயினும் மிக்க அன்புடையவன் என்பார், 'பால்நினைந்தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து' என்றார். உடலை வளர்க்கும் தாயைக்காட்டிலும் உயிரை வளர்க்கும் தாயாய் இருப்பவனாதலின், இறைவன் 'ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி அருளினான்' என்பதும் இது பற்றியேயாம். இனி, உள்ளத்திலே இன்பத்தினை நல்கிப் புறத்தேயும் காக்கின்றான் ஆதலின், 'தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே' என்றார். 'யானும் உள்ளும் புறமும் தொடர்ந்து பற்றினேன்' என்பார், 'யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்' என்றார்..இதனால், இறைவன் உயிர்கள்மாட்டுப் பேரருளுடையவன் என்பது கூறப்பட்டது.
புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்.பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்.என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட.ஈசனே மாசிலா மணியே.துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்.தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்.எங்கெழுந் தருளுவ தினியே..பதப்பொருள் : .புன்புலால் யாக்கை - அற்பமாகிய புலால் உடம்பு, புரைபுரை கனிய - மயிர்க்கால்தொறும் நெகிழ்ச்சியடைய, அது, பொன் நெடுங்கோயிலா - பொன்னாலாகிய பெரிய கோயிலாகும்படி, புகுந்து - அதனுள் எழுந்தருளியிருந்து, என் என்பு எலாம் உருக்கி - என்னுடைய எலும்புகளையெல்லாம் உருகும்படி செய்து, எளியை ஆய் - எளியவனாகிய, ஆண்ட - ஆட்கொண்டருளின, ஈசனே - ஆண்டவனே, மாசு இலா மணியே - குற்றமற்ற மாணிக்கமே, துன்பமே - துன்பமும், பிறப்பே - பிறப்பும், இறப்பொடு - இறப்பினோடு, மயக்கும் ஆம் - மயக்கமும் ஆகிய, தொடக்கு எலாம் அறுத்த - பற்றுகளெல்லாம் அறுத்தருளின, நல் சோதீ - மேலான சோதியே, இன்பமே - ஆனந்தமே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.விளக்கம் : .இறை நினைவால் உடம்பில் மயிர்க்கூச்செறிய இன்பம் சுரத்தலால், புலால் உடம்பு பொன்னுடம்பாக மாறும் என்பார், 'புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலா' என்றார். எலும்பு உருகுவது இறைவன் கருணையை எண்ணுவதாலாம். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், பிறப்பு இறப்பாகிய கட்டுகள் நீங்குமாதலின், 'பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்த நற்சோதீ என்றார்.
இதனால், இறைவன் பிறப்பு இறப்புகளால் வரும் துன்பத்தைப் போக்கியருள வல்லவன் என்பது கூறப்பட்டது..(தில்லையில் அருளியது).இறைவனது திருவருள் நெறிக்குப் புறம்பானவற்றைக் கண்டு அஞ்சிப் பாடியது ஆதலால், அச்சப் பத்து எனப்பட்டது. 'தீயவை தீய பயத்தலால' அச்சம் உண்டாயிற்று என்க..ஆனந்தமுறுதல் .இஃது இன்பம் பெறுதல் என்னும் பொருளதாம். இறைவனது திருவருள் இறவா இன்பம் நல்கும் என்க..அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம் .புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும்அஞ்சேன்.கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி.மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்.கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே..பதப்பொருள் :
புற்றில் - புற்றிலேயுள்ள, வாள் அரவும் - கொடிய பாம்புக்கும், அஞ்சேன் - அஞ்சமாட்டேன்; பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் - பொய்யர்களது மெய் போன்ற சொற்களுக்கும் அஞ்சமாட்டேன்; கற்றை வார்சடை - திரட்சியான நீண்ட சடையையுடைய, எம் அண்ணல் - எம் பெரியோனாகிய, கண்ணுதல் - நெற்றிக்கண்ணையுடைய இறைவனது, பாதம் நண்ணி - திருவடியை அடைந்தும், மற்றும் ஓர் தெய்வம் தன்னை - வேறொரு தெய்வத்தை, உண்டு என நினைந்து - இருப்பதாக எண்ணி, எம் பெம்மான் கற்றிலாதவரை - எம்பெருமானைப் போற்றாதாரை, கண்டால் - காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்கின்ற வகை சொல்லும் அளவன்று..விளக்கம் : .பொய்யர்தம் மெய் என்பது வஞ்சனையாம். அரவத்தையே அணியாகப் பூண்டு, ஞானத்தையே கண்ணாகக் கொண்டு உள்ள இறைவன் அடியார், புற்றில்வாழ் அரவத்தையும் பொய்யர்தம் மெய்யையும் கண்டு அஞ்ச வேண்டுவதில்லை. ஆனால், இறைவனது திருவடியை அடைந்தும் பிற தெய்வங்களை வழிபடுவாரைக் கண்டு அஞ்ச வேண்டும் என்கின்றார். பெம்மானைக் கற்றலாவது, பெருமானது நல்ல புகழைப் போற்றுதலாம். 'எம் பெம்மாற்கு அற்றிலாதவரை' எனப் பிரித்து, எம் இறைவன்பொருட்டுப் பிற பற்றுகள் நீங்காதவரை என்றும் பொருள் கூறலாம்..இதனால், சிவபெருமானுக்கு அடியவராயினார் பிற தெய்வங்களை வணங்குதல் பொருந்துவது அன்று என்பது கூறப்பட்டது..வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்.இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பி ரானாந்
திருவுரு அன்றி மற்றோர் தேவர்எத் தேவர் என்ன.அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே..பதப்பொருள் : .வேட்கை வந்தால் வெருவரேன் - ஆசை மிகுந்து வந்தாலும் அஞ்ச மாட்டேன், வினைக்கடல் கொளினும் அஞ்சேன் - வினையாகிற கடல் என்னைச் சூழ்ந்துகொண்டாலும் அஞ்சமாட்டேன், இருவரால் மாறு காணா - பிரம விட்டுணுகளாகிய இருவராலும் மாறுபட்டுக் காண முடியாத, எம்பிரான் - எம் தலைவனாகிய, தம்பிரான் ஆம் - இறைவனது, திருவுரு அன்றி - திருவடிவத்தையே கண்டு களிப்பதன்றி, மற்றோர் தேவர் - மற்றைய தேவர்களை, எத்தேவர் என்ன - என்ன தேவரென்று, அருவராதவரைக் கண்டால் - அருவருப்பும் கொள்ளாதவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று..விளக்கம் : .பறறற்றான் பற்றினைப் பற்றும் அடியார்க்கு உலகப் பற்று அறும் ஆதலின், 'வேட்கை வந்தால் வெருவரேன்' என்றார். அவர்களுக்கு வினையாகிய கடலைக் கடத்தற்கு இறைவனாகிய தோணி உதவுமாதலின், 'வினைக்கடல் கொளினும் அஞ்சேன்' என்றார். அவ்வாறு உதவுகின்றவனாகிய சிவபெருமானைத் தவிர மற்றொரு தேவரைக் கண்டால் வெறுப்பு அடையாதவரைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்பார், 'தம்பிரானாந் திருவுரு அன்றி மற்றோர் தேவர் எத்தேவர் என்ன அருவரா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.
இதனால், சிவபெருமானையன்றி மற்றத் தேவரை வணங்குவதால் பிறவித்துன்பம் நீங்காது என்பது கூறப்பட்டது..வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்.என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்ற.என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா.அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே..பதப்பொருள் :
வன்புலால் வேலும் அஞ்சேன் - வலிமையான மாமிசம் பொருந்திய வேற்படைக்கும் அஞ்ச மாட்டேன்; வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் - வளையலை அணிந்த பெண்களுடைய கடைக்கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன், என்பு எலாம் உருக நோக்கி - எலும்புகளெல்லாம் உருகும்படியாகப் பார்த்து, அம்பலத்து ஆடுகின்ற - பொன்னம்பலத்தில் நடிக்கின்ற, என் பொலாமணியை ஏத்தி - எனது துளையிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து, அருள் இனிது பருகமாட்டா - அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பு இலாதவரைக் கண்டால் - அன்பற்றவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று..விளக்கம் : .'காலனைக் கடிந்து காமனை எரித்த பெருமானது அடியார்க்குக் கொடிய வேலும் மாதரது கூரிய பார்வையும் துன்பம் தரமாட்டா' என்பார், 'வன்புலால் வேலும் அஞ்சேன், வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்' என்றார். 'ஆனால், அம்பலத்தாடும் பெருமானது இனிமையான பார்வையையும் அழகிய நடனத்தையும் கண்டு அன்புறாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும்' என்பார், 'அம்பலத்தாடுகின்ற என் பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்..இதனால், இறைவனது அருள் நடனத்தைக் கண்டு இன்புறுவதே மனிதப்பிறவியின் பயன் என்பது கூறப்பட்டது..கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்.வெளியநீ றாடும் மேனி வேதியின் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்.களியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே..பதப்பொருள் : .கிளி அனார் - மொழியால் கிளி போன்ற மாதரது, கிளவி அஞ்சேன் - இனிய சொற்களுக்கு அஞ்ச மாட்டேன்; அவர் - அவரது, கிறி முறுவல் அஞ்சேன் - வஞ்சனையுடைய புன்சிரிப்புக்கும் அஞ்ச மாட்டேன்; வெளிய நீறு ஆடும் - வெண்மையான திருநீற்றல் மூழ்கிய, மேனி - திரு மேனியையுடைய, வேதியின் பாதம் நண்ணி - அந்தணனது திருவடியை அடைந்து, துளி உலாம் கண்ணர் ஆகி - நீர்த்துளிகள் சிந்துகின்ற கண்களையுடையவராய், தொழுது அழுது - வணங்கி அழுது, உள்ளம் நெக்கு - உள்ளம் நெகிழ்ந்து, இங்கு - இவ்விடத்தில், அளி இலாதவரைக் கண்டால் - கனிதல் இல்லாதவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று..விளக்கம் : .ஒரு வார்த்தையால் ஆட்கொள்ளும் சொல்லையும் குமிழ் சிரிப்பையும் உடையவனாகிய பெருமானைக் காணப் பெற்றவர், மாதரது அழகிய சொல்லுக்கும் வஞ்சனைச் சிரிப்புக்கும் அஞ்ச வேண்டுவது இல்லை. ஆனால், பெருமானது அருட் கோலத்தைக் கண்டு உருகாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்கின்றார். அருட்கோலமே கண்ணுக்கும் செவிக்கும் இன்பம் தருமாதலின், அதனைப் பருகி உள்ளம் உருக வேண்டும் என்பதாம்.
இதனால், சிவபெருமானது அருட்கோலத்தைக் கண்டு உள்ளம் உருக வேண்டும் என்பது கூறப்பட்டது..பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்.துணிநிலா அணியி னான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால்.திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீ.றணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே..பதப்பொருள் :
பிணி எலாம் - எல்லா வகையான நோய்களும், வரினும் - வந்தாலும், அஞ்சேன் - அஞ்ச மாட்டேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் - பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்ச மாட்டேன்; துணிநிலா அணியினான்றன் - துண்டப் பிறையை அணிகலனாகவுடைய சிவபெருமானது, தொழும்பரோடு அழுந்தி - தொண்டரோடு பொருந்தி, அம்மால் - அத்திருமால், திணி நலம் பிளந்தும் காணா - வலிமையான நிலத்தை அகழ்ந்தும் காணமாட்டாத, சேவடி பரவி - சிவந்த திருவடியைத் துதித்து, வெண்ணீறு அணிகிலாதவரை - திரு வெண்ணீறு அணியாதவரை, கண்டால் - காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று..விளக்கம் : .தீராத நோயைத் தீர்த்து அருள வல்ல பெருமானது அடியாரோடு கலந்து இருப்பார்க்கு, நோய் துன்பம் தாராது ஆதலின், 'பிணியெலாம் வரினும் அஞ்சேன்' என்றார். பிறப்பு இறப்பு இல்லாத இறைவனது திருவடியை அடைந்தார்க்குப் பிறப்பு இறப்பு இல்லையாதலின், 'பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்' என்றார். ஆனால், பிறவிப் பிணிக்கு மருந்தாகிய பெருமானுக்கேயுரிய திருவெண்ணீற்றினையணிந்து மகிழாதவரைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்றார்..'கங்காளன் பூசங் கவசத் திருநீற்றை.மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகில்.தங்கா வினைகளுஞ் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வாரே'.என்றார் திருமூலரும்..இதனால், திருவருள் நெறியில் நிற்பவர்களுக்கும் திருவெண்ணீறு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது..வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரன் டிடினும் அஞ்சேன்.தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்பதம் கடந்த அப்பன்.தாளதா மரைகள் ஏத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே..பதப்பொருள் : .வாள் உலாம் - ஒளி வீசுகின்ற, எரியும் அஞ்சேன் - நெருப்புக்கும் அஞ்ச மாட்டேன்; வரை - மலை, புரண்டிடினும் அஞ்சேன் - தலைகீழாகப் பிறழ்ந்திட்டாலும் அஞ்சமாட்டேன்; தோள் உலாம் நீற்றன் - தோல்களில் விளங்குகின்ற திரு வெண்ணீற்றையுடையவனும், ஏற்றன் - காளையை ஊர்தியாக உடையவனும், சொல் பதம் கடந்த அப்பன் - சொல் அளவையைக் கடந்த அப்பனுமாகிய இறைவனது, தாள் தாமரைகள் - திருவடித் தாமரைகளை, ஏத்தி - துதித்து, தடமலர் புனைந்து - பெருமை பொருந்திய மலர்களைச் சாத்தி, நையும் - மனம் உருகுகின்ற, ஆள் அலாதவரைக் கண்டால் - அடிமைகள் அல்லாதவர்களைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று..விளக்கம் : .கையில் அனலேந்தி எரியாடுபவனும் என்றும் அழிவில்லாதவனுமாகிய பெருமானுக்கு ஆட்பட்ட அடியார்கள் நெருப்பிற்கும் உலகத்தின் அழிவிற்கும் அஞ்ச வேண்டுவதில்லை என்பதாம். அத்தகைய இறைவனை மலர்தூவி வழிபடாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்பார், 'தடமலர் புனைந்து நையும் ஆளலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்..இதனால், சிவபெருமானை மலர் தூவி வழிபட வேண்டும் என்பது கூறப்பட்டது.
தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்.புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்தஅம் பலத்துள் ஆடும்.முகைநகைக் கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி.அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே..பதப்பொருள் : .தகைவு இலா - தவிர்க்க முடியாத, பழியும் அஞ்சேன் - பழிக்கும் அஞ்ச மாட்டேன்; சாதலை முன்னம் அஞ்சேன் - இறத்தலை முதலாவதாக அஞ்ச மாட்டேன்; புகைமுகந்த எரி - புகையைக் கொண்ட நெருப்பை, கை வீசி - கையிலே ஏந்தி வீசிக்கொண்டு, பொலிந்த - விளங்குகின்ற, அம்பலத்துள் ஆடும் - பொன்னம்பலத்தில் ஆடுகின்ற, முகை - அரும்பு, நகை - மலர்கின்ற, கொன்றை மாலை - கொன்றை மாலையை அணிந்த, முன்னவன் - முதல்வனது, பாதம் ஏத்தி - திருவடியைத் துதித்து, அகம் நெகாதவரைக் கண்டால் - மனம் நெகிழாதவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
விளக்கம் : .தம்மேல் பழி சொல்வோர், உண்மையை உணராதவராதலின், பொருட்படுத்த வேண்டுவதில்லை என்பார், 'தகைவிலாப் பழியும் அஞ்சேன்' என்றார். சாதல் என்பது உடம்பினின்றும் உயிர் பிரிதலாம். உடம்பினின்றும் உயிரைத் தனித்துக் காணும் தன்மையுடையோர் சாதலுக்கு அஞ்ச வேண்டுவதில்லையாதலின், 'சாதலை அஞ்சேன்' என்றார். எல்லா வகையான அச்சங்களிலும் முதன்மையான அச்சம் சாவிற்கு அஞ்சும் அச்சமேயாதலால், அவ்வச்சந்தான் முதலில் எனக்கு நீங்கியது என்பார், 'முன்னம் அஞ்சேன்' என்றார்..'தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய.மன்னுயிர் எல்லாம் தொழும்'.என்ற நாயனார் வாக்கையும் காண்க. ஆனால், பழியைப் போக்கி இறவா நிலையையளித்து உதவுகின்ற பெருமானைத் தொழுது உள்ளம் உருகாதவரைக் காணின் நடுங்க வேண்டும் என்பார், 'முன்னவர் பாதம் ஏத்தி அகம் நெகாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்..இதனால், இறைவன் செய்த உதவியினை எண்ணி உருக வேண்டும் என்பது கூறப்பட்டது.
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்.வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்.செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்க மாட்டா.அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே..பதப்பொருள் : .தறிசெறி - கட்டுத்தறியிலே பொருந்தியிருக்கும், களிறும் அஞ்சேன் - ஆண் யானைக்கும் அஞ்ச மாட்டேன்; தழல் விழி - நெருப்புப் போன்ற கண்களையுடைய, உழுவை அஞ்சேன் - புலிக்கும் அஞ்சமாட்டேன்; வெறி கமழ் - மணம் வீசுகின்ற, சடையன் - சடையையுடையவனும், அப்பன் - தந்தையுமாகிய இறைவனது, விண்ணவர் நண்ணமாட்டா - தேவர்களாலும் அடைய முடியாத, செறிதரு - நெருங்கிய, கழல்கள் ஏத்தி - கழலணிந்த திருவடிகளைத் துதித்து, சிறந்து - சிறப்புற்று, இனிது இருக்க மாட்டா - இன்பமாக இருக்க மாட்டாத, அறிவிலாதவரைக் கண்டால் - அறிவிலிகளைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
விளக்கம் :.மலையே வந்து வீழினும் நிலையினின்று கலங்காத உள்ளம் உடைய அடியவர்களைக் கொலை யானை முதலிய கொடிய விலங்குகள் வணங்கிச் செல்லுமாதலின், 'தறி செறு களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்' என்றார். அமணர்களால் ஏவப்பட்ட மதயானை திருநாவுக்கரசரை வலம் வந்து வணங்கிச் சென்றதைக் காண்க. ஆனால், அஞ்சத் தக்கவர் யார் எனின், அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்கி இன்புறும் தன்மை இல்லாத அறிவிலிகளேயாவர் என்க..இதனால், சிவபெருமானை ஏத்தி வழிபடுவதே அறிவுடைமையாகும் என்பது கூறப்பட்டது..மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்.நஞ்சமே அமுதம் ஆக்கும் நம்பிரான் எம்பி ரானாய்ச்.செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டா
தஞ்சுவார் அவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே..பதப்பொருள் : .மஞ்சு உலாம் - மேகத்தில் உலாவுகின்ற, உருமும் அஞ்சேன் - இடிக்கும் அஞ்ச மாட்டேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன் - அரசரது நட்புக்கும் அஞ்ச மாட்டேன்; நஞ்சமே - விடத்தையே, அமுதம் ஆக்கும் - ஆமுதமாக ஏற்றுக்கொண்ட, நம்பிரான் - இறைவனானவன், எம்பிரான் ஆய் - எம் தலைவனாகி, செஞ்செவே ஆண்டுக்கொண்டான்; செம்மையாகவே எம்மை ஆட்கொண்டான்; அவனது, திரு - செல்வமாகிய திருவெண்ணீற்றை, முண்டம் தீட்டமாட்டாது - தமது நெற்றியில் பூச மாட்டாமல், அஞ்சுவார் அவரைக் கண்டால் - அஞ்சுவோராகிய அவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சம் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று..விளக்கம் : .ஓசை ஒலியெல்லாம் ஆகிய இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியாரை இடியோசை என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாதாதலின், 'மஞ்சுலாம் உருகும் அஞ்சேன்' என்றார். அவ்வடியார்களுக்கு மன்னனது தொடர்பினால் வரும் துன்பமும் ஒன்றும் இல்லையாதலின், 'மன்னரோடுறவும் அஞ்சேன்' என்றார். பல்லவ மன்னனோடு கொண்டிருந்த உறவை நீக்கிக்கொண்டபின், அவன் செய்த பல கொடுமைகளும் திருநாவுக்கரசரை ஒன்றும் செய்ய முடியாமை அறிக. ஆனால், இத்துணை உதவியும் பெற்று, அவனுக்குரிய திருநீற்றை அணியக் கூசுவாரைக் காணின் அஞ்ச வேண்டும் என்றார். இவர்கள் செய்ந்நன்றி கொன்றோராதலின் என்க..இதனால், திருநீற்றை வெறுப்பவர்களுடன் இணங்கலாகாது என்பது கூறப்பட்டது.
கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்.நீணிலா அணியி னானை நினைந்துநைந் துருகி நெக்கு.வாணிலாம் கண்கள் சோரா வாழ்த்திநின் றேத்த மாட்டா.ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே..பதப்பொருள் : .கோள் நிலா - கொலைத் தன்மை தங்கிய, வாளி அஞ்சேன் - அம்புக்கு அஞ்ச மாட்டேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் - இயமானது கோபத்துக்கும் அஞ்ச மாட்டேன்; நீள்நிலா - நீண்ட பிறையாகிய, அணியினானை - அணிகலத்தையுடைய சிவபெருமானை, நினைந்து - எண்ணி, நைந்து உருகி - கசிந்து உருகி, நெக்கு - நெகிழ்ந்து, வாள் நிலாம் - ஒளி பொருந்திய, கண்கள் - விழிகளில், சோர - ஆனந்தக் கண்ணீர் பெருக, வாழ்த்தி நின்று - துதித்து நின்று, ஏத்த மாட்டா - புகழ மாட்டாத, ஆண் அலாதவரைக் கண்டால் - ஆண்மையுடையரல்லாரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
விளக்கம் : .இறைவனே உடலிடங்கொண்டிருத்தலின், கொடுமையான வாள் அதனுள் ஊடுருவிச் செல்ல முடியாது என்பார், 'கோணிலா வாளி அஞ்சேன்' என்றார். நோற்றலில் தலைப்பட்டார்க்குக் கூற்றம் குதித்தலும் கை கூடுமாதலின், 'கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்' என்றார். ஆனால், இறைவனது திருவடிவத்தை நினைந்து பேரின்பத்தில் திளைத்திராதவரைக் காணின் அஞ்ச வேண்டும் என்றார்..இதனால், இறைவனைத் தியானம் செய்து ஆனந்தத்தில் அழுந்தியிருத்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது..ஆசிரியர்: திருவள்ளுவர்.மூலப்பதிப்பு: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்.விக்கி கட்டுரை: திருக்குறள்
பாயிரம். 1. கடவுள் வாழ்த்து. 2. வான் சிறப்பு . 3. நீத்தார் பெருமை. 4. அறன் வலியுறுத்தல். இல்லறவியல்
5. இல்வாழ்க்கை . 6. வாழ்க்கைத் துணைநலம் . 7. மக்கட்பேறு. 8. அன்புடைமை . 9. விருந்தோம்பல் . 10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல் . 12. நடுவுநிலைமை . 13. அடக்கம் உடைமை. 14. ஒழுக்கம் உடைமை . 15. பிறன் இல் விழையாமை . 16. பொறை உடைமை
17. அழுக்காறாமை . 18. வெஃகாமை . 19. புறங்கூறாமை. 20. பயனில சொல்லாமை . 21. தீவினை அச்சம் . 22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை . 24. புகழ். துறவறவியல். 25. அருள் உடைமை . 26. புலால் மறுத்தல் . 27. தவம்
28. கூடா ஒழுக்கம் . 29. கள்ளாமை :. 30. வாய்மை . 31. வெகுளாமை . 32. இன்னா செய்யாமை . 33. கொல்லாமை
34. நிலையாமை . 35. துறவு . 36. மெய் உணர்தல். 37. அவா அறுத்தல். ஊழியல். 38. ஊழ்
உரை wma இல் மொழி இணையத்திலிருந்து. கோவை பருமன் 10MB (எம்பிகள்) . அரசியல். 39. இறைமாட்சி. 40. கல்வி. 41. கல்லாமை. 42. கேள்வி
43. அறிவுடைமை. 44. குற்றம் கடிதல். 45. பெரியாரைத் துணைக்கோடல். 46. சிற்றினம் சேராமை. 47. தெரிந்து செயல்வகை. 48. வலி அறிதல்
49. காலம் அறிதல். 50. இடன் அறிதல். 51. தெரிந்து தெளிதல். 52. தெரிந்து வினையாடல். 53. சுற்றம் தழால். 54. பொச்சாவாமை
55. செங்கோன்மை. 56. கொடுங்கோன்மை. 57. வெருவந்த செய்யாமை. 58. கண்ணோட்டம். 59. ஒற்றாடல். 60. ஊக்கம் உடைமை
61. மடி இன்மை. 62. ஆள்வினை உடைமை. 63. இடுக்கண் அழியாமை. அமைச்சியல். 64. அமைச்சு. 65. சொல்வன்மை
66. வினைத்தூய்மை. 67. வினைத்திட்பம். 68. வினை செயல்வகை. 69. தூது. 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல். 71. குறிப்பு அறிதல்
72. அவை அறிதல். 73. அவை அஞ்சாமை. அரணியல். 74. நாடு. 75. அரண். கூழியல்
76. பொருள் செயல்வகை. படையியல். 77. படைமாட்சி. 78. படைச்செருக்கு. நட்பியல். 79. நட்பு
80. நட்பு ஆராய்தல். 81. பழைமை. 82. தீ நட்பு. 83. கூடா நட்பு. 84. பேதைமை. 85. புல்லறிவாண்மை
86. இகல். 87. பகை மாட்சி. 88. பகைத்திறம் தெரிதல். 89. உட்பகை. 90. பெரியாரைப் பிழையாமை. 91. பெண்வழிச் சேறல்
92. வரைவில் மகளிர். 93. கள் உண்ணாமை. 94. சூது. 95. மருந்து. குடியியல். 96. குடிமை
97. மானம். 98. பெருமை. 99. சான்றாண்மை. 100. பண்புடைமை. 101. நன்றியில் செல்வம். 102. நாண் உடைமை
103. குடி செயல்வகை. 104. உழவு. 105. நல்குரவு. 106. இரவு. 107. இரவச்சம். 108. கயமை
உரை wma இல் மொழி இணையத்திலிருந்து. கோவை பருமன் 15MB (எம்பிகள்). களவியல். 109. தகையணங்குறுத்தல் . 110. குறிப்பறிதல் . 111. புணர்ச்சி மகிழ்தல். 112. நலம் புனைந்து உரைத்தல்
113. காதற் சிறப்பு உரைத்தல். 114. நாணுத் துறவு உரைத்தல் . 115. அலர் அறிவுறுத்தல். கற்பியல். 116. பிரிவாற்றாமை . 117. படர் மெலிந்து இரங்கல்