text
stringlengths
23
10.7k
அறம் அழித்து தீயவை நெய்வதை விட தீமையானது ஒருவர் இல்லாத நேரம் புறம் பேசி பின் அவர் முன் சிரித்திருப்பது.183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல். அறங்கூற்றும் ஆக்கத் தரும்..புறம் பேசி வாழ்தலை விட, சாதலே அறம் கூறும் ஆக்கமுள்ள செயலாகும்..184. கண்ணின்று கண்ண்றச் சொல்லினும் சொல்லற்க. முன்னின்று பின்நோக்காச் சொல்.
நேரில் பரிவு காட்டாமல் பேசினாலும் ஒருவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி புறம் பேச வேண்டாம்.185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும். புன்மையாற் காணப் படும்..ஒருவன் புறம் கூறும் சிறுமை உடையவன் எனின் அவன் அறம் பேணுபவன் இல்லை எனத் தெரிந்து கொள்ளலாம்.186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்.திறந்தெரிந்து கூறப் படும்.
பிறரைப் பற்றி தவறாகப் பேசுபவன், அப்பழிச் சொற்களில் கீழானவற்றால் பழிக்கப் படுவான்..187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி.நட்பாடல் தேற்றா தவர்..இனிமையாக பேசி நட்பு பாராட்டத் தெரியாதவர்கள், புறம் பேசி உள்ள நட்பையும் இழப்பார்கள்..188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்.என்னைகொல் ஏதிலார் மாட்டு.
நண்பரிடம் குற்றம் கண்டு தூற்றுபவர் அயலாரை என்ன பேச மாட்டார்?.189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்.புன்சொல் உரைப்பான் பொறை..புண்படுத்தும் சொற்களை கூறுபவனையும் சுமப்பது, அற வழியில் செல்வதால் என உலகம் ஆறுதல் படும்.190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின். தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.'''
பிறரை குற்றம் காண்பது போல் தன் குற்றமும் ஆராய்ந்தால் அனைத்து உயிர்களுக்கும் தீமை எவ்வாறு ஏற்படும்?.வெளி இணைப்புகள். மாம்பழச்சாலை.திருக்குறள் > இல்லறவியல்.« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் » இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் ».191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்..பலரும் வெறுக்க பயனின்றி பேசுபவனை அனைவரும் எள்ளுவர்..192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில. நட்டார்கண் செய்தலிற் றீது..பயனில்லாதவற்றை பலர் முன் பேசுதல், நல்லன அல்லாததை நமக்கு உற்றவருக்கு செய்வதை விட தீங்கானது..193. நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை..ஒருவன் பயனின்றி நிறைய பேசினால், அவனால் ஆகும் நன்மை ஏதும் இல்லை.194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப். பண்பில்சொல் பல்லா ரகத்து..பயனில்லாத, பண்பில்லாத சொற்களைப் பேசுவதால் இருக்கும் நன்மையும் நீங்கி விடும்..195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்..சிறப்பு மிக்கவராயினும் பயனில்லாத சொற்களை கூறினால், அச்சிறப்பு அவரிடம் இருந்து நீங்கி விடும்.196. பயனில் சொல் பாரட்டு வானை மகன்எனல். மக்கட் பதடி யெனல்..பயனில்லாது பேசுபவனை மக்களுள் அற்பன் என்பது சரி.197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று..சான்றோர் நன்மை பயக்கக் கூடியதை சொல்லா விட்டாலும், பயன்னற்றதை சொல்ல மாட்டார்கள்.198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார். பெரும்பயன் இல்லாத சொல்..சிறந்தது எது என ஆய்ந்து உணர்ந்த அறிவுடையோர், பயனில்லாததை பேச மாட்டார்கள்.199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்..அப்பழுக்கற்ற அறிவுடையவர் பொருளற்ற, குறை உள்ள சொல் கூற மாட்டார்கள்.200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க.சொல்லிற் பயனிலாச் சொல்..சொல்லில் பயனில்லாததைத் தவிர்த்து, பயனுள்ளதைப் பேச வேண்டும்.வெளி இணைப்புகள்
மாம்பழச்சாலை.திருக்குறள் > இல்லறவியல்.« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் » இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் ».201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர். தீவினை என்னும் செருக்கு..தீயோர் தீய செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். ஆனால் சிறப்பு நிறைந்தவர்கள் அவ்வாறு செய்ய பயப்படுவர்.
202. தீயவை தீய பயத்தலால் தீயவை. தீயினும் அஞ்சப் படும்..தீய செயல்களால் தீமையே விளையும் ஆதலால் அவை தீயினும் கொடியதாக அஞ்சுவர்.203. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய. செறுவார்க்கும் செய்யா விடல்..நம்மை வெறுத்தவருக்கும் தீமை செய்யாதிருப்பது நாம் அறிந்திருக்க வேண்டியவற்றுள் முதன்மையானது.
204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின். அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.மறந்தும் பிறருக்கு கேடு நினைக்கக் கூடாது அப்படிச் செய்தால் அறமே அவனுக்கு கேடு விளைவிக்கும்.205. இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து.துணை எதுவும் இல்லாதவன் என்று ஒருவனுக்கு தீயவை செய்தால், தாமே இல்லாதவனாகும் நிலை ஏற்படும்.206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.துன்பம் தன்னை வாட்டக் கூடாது என நினைப்பவன், பிறருக்கு தீங்கு செய்யக் கூடாது.207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென்று அடும்எந்தப் பகையானாலும் மீண்டு விடலாம், தீவினையான பகை உடன் வந்து கேடு விளைவிக்கும்.208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று.தீயவை செய்தவருக்கு நிழல் போன்ற விலகாத கேடு சூழும்.209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்.தன்னை நேசிப்பவன் என்றும் தீவினையை நெருங்குவதில்லை210. அருன்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.'''.மதி மயங்கி தீய செயல் செய்யாதவன் கெடுதல் அரிது..வெளி இணைப்புகள். மாம்பழச்சாலை.திருக்குறள் > இல்லறவியல்
« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் » இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் ».211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு.என் ஆற்றுங் கொல்லோ உலகு..மழையைப் போல் கைம்மாறு கருதாமல் ஒற்றுமையாய் செயல்பட்டால் இந்த உலகில் எதையும் சாதிக்கலாம்..212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு.வேளாண்மை செய்தற் பொருட்டு.
முயன்று திரட்டிய பொருள் எல்லாம் தகுந்தவர்களுக்கு உதவி செய்வதற்காகவே..213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே.ஒப்புரவின் நல்ல பிற..ஒற்றுமையைப் போல் வேறொன்றை கடவுளர் உலகம் சென்றாலும் பெற இயலாது..214. ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்.செத்தாருள் வைக்கப்படும்.
ஒற்றுமை போற்றுவர் தவிர மற்றவர்கள் இறந்தவர்களாகக் கருதப் படுவர்.215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்.பேரறி வாளன் திரு..நீர் நிறைந்த குளம் போல், பரந்த மனம் உடையவனின் செல்வம் அனைவருக்கும் பயன்படும்..216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்.நயனுடை யான்கண் படின்.
நல்லவனின் செல்வம், மரத்தில் பழுத்த கனியைப் போல் எவருக்கும் இனிமையானது..217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்.பெருந்தகை யான்கண் படின்..பெருந்தகையானவரின் செல்வம், மரம் மருந்தானது போல் முழுதும் பயன் வழங்க தவறாது.218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்.கடனறி காட்சி யவர்.
தம் கடமையை அறிந்தவர்கள் துன்பப் படும் காலத்திலும், ஒற்றுமையில் குறையாதவர்களாய் இருப்பர்..219. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர.செய்யாது அமைகலா வாறு..பிறருக்கு உதவ முடியாத நிலையே நல்லவனுக்கு வறுமையாகக் கொள்ளப் படும்..220. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்.விற்றுக்கோள் தக்க துடைத்து.
ஒற்றுமையால் வரும் கேடு எனின் ஒருவன் தன்னை விற்றும் பெற்றுக் கொள்ளலாம்.வெளி இணைப்புகள். மாம்பழச்சாலை.திருக்குறள் > இல்லறவியல்.« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் » இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் ».221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து..வறுமையில் வாடுவோர்க்கும் தேவை இருப்போர்க்கும் கொடுப்பதே ஈகை மற்றெல்லாம் தனக்கு என்ன பலனளிக்கும் என்று எதிர்பார்த்து செய்வதேயாம்..222. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்.இல்லெனினும் ஈதலே நன்று..சுவர்க்கம் கிடைக்கும் என்றாலம் ஏற்றுக்கொள்ளுதல்(பிச்சை எடுத்தல், இருக்கும் போது ஏற்றுக்கொள்ளல்) தீதானது. சுவர்க்கம் கிடைக்காது எனினும் ஈய வேண்டும்.223. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள..இல்லை என்னும் துன்பதை உரைக்காமல் இருப்பது ஈதல் என்னும் பெரும் பண்பையுள்ள குலத்தில் பிறந்தவனுக்கு மட்டுமே இருக்கும்.224. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்.இன்முகங் காணும் அளவு..இரக்கப்படுதலே பெருமையில்லை. இரந்தவர் இன்முகம் எப்போது அடைகிறாறோ அப்போதே இரத்தல்போல இரக்கப்படுதலும் இனிமையானதாகும்.225. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்..தவம் செய்பவர்களுக்கு பெரும் ஆற்றல் பசி இல்லாமல் போதல் அல்லது பசி பொறுத்தல் ஆனால் அந்த ஆற்றலையும் விட சிறந்தது கொடையினால் மாற்றுவார் ஆற்றலே.226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்.பெற்றான் பொருள்வைப் புழி..வறியவறின் பசி தீர்த்தலே பொருளை பெற்றவன் பொருளை வைக்குமிடம். அதாவது தான் பெற்ற செல்வத்தை வைக்கும் இடம் எவ்விடமென்றால்அடுத்தவர் பசி தீர்க்கும் இடமே.227. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது..பகுத்து உண்ணுதல் என்னும் பழக்கம் உடையவனை பசி என்னும் தீப்பிணி என்றும் தீண்டாது..228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை.வைத்திழக்கும் வன்க ணவர்..ஈந்து உவக்கும் இன்பத்தை அறியாதவர்கள் யாரென்றால் தன் உடைமையை தானே வைத்துக்கொண்டு பின்பு அதை இழந்துவிடும் அருளில்லாதவர்களே.229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்..இரத்தல்(பிச்சை எடுத்தல்) இனிமையானது கிடையாது. அதையும் விட துன்பம் தரக்கூடியது நிச்சாயமாக எதுவென்றால் இது தன் செல்வம் போதாது என்று அடுத்தவர்க்கு கொடுக்காமல் தானே சேர்த்துவைத்து உண்ணுதல்..230. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம். ஈதல் இயையாக் கடை..சாதலே கொடுமையாது ஆனால் அதுவே இனிமை தரக்கூடியது அடுத்தவருக்கு கொடுக்க முடியவில்லை யென்றால்.வெளி இணைப்புகள்
மாம்பழச்சாலை.திருக்குறள் > இல்லறவியல்.« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் » இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் ».231. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது. ஊதியம் இல்லை உயிர்க்கு..ஈகை செய்வது புகழ்மிக்கவராய் வாழ்வது அது இல்லாமல் உயிர்வாழ்ந்து வேறுபயன் இல்லை
232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று. ஈவார்மேல் நிற்கும் புகழ்..இவ்வுலகத்தில் உரைப்பது எல்லாம், இரந்து கேட்கும் மக்களுக்கு அவர் வேண்டிய ஒன்றை கொடுக்கும் ஈகைகுணம் உள்ளவர்க்கு ::*சேரும் புகழாகபோய்ச்சேரும். அதாவது இந்த உலகத்தில் பெருமையாய் பேசும் எல்லாப்புகழும் ஈகைக்குணம் கொண்டோரைப்போய்ச் சேரும்..233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால். பொன்றாது நிற்பதொன் றில்..உலகத்தில் இணையில்லாது ஓங்கிய புகழைத்தவிர அழியாது நிலைத்து நிற்பது வேறொன்றுமில்லை.
234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப். போற்றாது புத்தேள் உலகு..நிலத்தில்(உலகத்தின்) எல்லைவரை அல்லது இவ்வுலகத்தில் வாழ்வதற்குள்ள எல்லைகளுக்குள் புகழத்தக்க செயலை ஆற்றியவனை விட புலவரை(ஞானியரை) போற்றாது தெய்வங்களின் உலகம்..235. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும். வித்தகர்க் கல்லால் அரிது..வித்தகரைத்தவிர வேறுயாருக்கும் கைவரப்பெறாது எதுவென்றால் புகழுடம்புக்கு பெருக்கமும், புற உடம்பிற்கு வறுமையும் சேர்ந்து ::*இறந்தபின் அதிகமாகும் புகழ்.
சங்கு போல தன் நிலை குன்றினாலும் பெருமை மிகுந்து, இறந்தபின்னும் புகழுடயவராய் வாழ்தலும் வித்தகர்கள் தவிர வேறு யாருக்கும் அரிது..236. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்.தோன்றலின் தோன்றாமை நன்று..தோன்றினால் (புகழோடு) புகழ்பெறத்தக்க குணமுடையவனாய் தோன்றவேண்டும் அப்படி இல்லாதவர் தோன்றாமல் போவதே நல்லது..237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை.இகழ்வாரை நோவது எவன்?
புகழ் உண்டாக வாழமுடியாதவர் தன்னை இகழ்வாரை நோவது ஏன். தன்னைத்தானே அல்லவோ நோகவேண்டும்?.238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்.எச்சம் பெறாஅ விடின்..புகழுடைய வாழ்க்கை வாழ்ந்திராவிட்டால் இவ்வுலகத்தார் வசையாக வாழ்ந்ததாகவே கருதுவர்.239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா.யாக்கை பொறுத்த நிலம்.
புகழில்லாத மனிதரை தாங்கிய நிலமானது (பழியில்லாத) வளம் குன்றும்..240. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய.வாழ்வாரே வாழா தவர்..வாழுபவர் என்று யாரைகூறலாமென்றால் வசைபெறாமல் வாழ்பவரே. புகழிழந்து வாழ்வோரெல்லாம் வாழாதவர்.வெளி இணைப்புகள். மாம்பழச்சாலை
திருக்குறள் > துறவறவியல்.« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் » இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் ».241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம். பூரியார் கண்ணும் உள..பொருட்செல்வம் இழிந்தவர்களிடத்தும் உள்ளது, அதனாலே அருட்செல்வமே செல்வங்களுக்குள் எல்லாம் சிறந்த செல்வம்..242. நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை..நல்ல வழியிலே தேடி அந்த அருளுடனே இருக்க, பல வழிகளை கற்று தேர்ந்தாலும் அதுவே துணை இங்கே ஆற்றாள் என்பது மார்க்கம், இறைவழி என்றும் கொள்ளப்படுவதுண்டு..243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த. இன்னா உலகம் புகல்..அருள் கொண்ட நெஞ்சினார்கு இருள்சேர்ந்த துன்பமான உலகம் இல்லை..244. மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை..உலகத்திலுள்ள உயிரகளை காத்து அருள்புரிபவர்க்கு இல்லை தன்னுயிரை காத்துக்கொள்ள வேண்டுமே என்னும் பயம்.245. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும். மல்லன்மா ஞாலங் கரி..இந்த வளமான உலகமே சாட்சியாகும் துன்பமானது அருள்கொண்ட மனிதருக்கு இல்லை என்பதற்கு.246. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்..பொருள்நீங்கி (தான் துன்படுவதை) மறந்து வாழ்பவர் என்று கூறுப்படுபவர் யாரென்றால் அல்லாதவைகளை செய்து அருள் இல்லாமல் வாழ்பவர்களே.247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு. இவ்வுலகம் இல்லாகி யாங்கு.. அருளில்லார்க்கு மேலுலகமும் பொருளில்லாதவர்க்கு இந்த உலகமும் இன்பமானதாய் இருக்காது.248. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.. பொருளல்லாதவர்கள் கூட சிலநேரங்களில் செல்வம் கொழிப்பர் அருளில்லாதவர் அழிந்தவர்ளாகாமல் மீள்வது அரிது.249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின். அருளாதான் செய்யும் அறம்..அருளில்லாதவன் செய்யும் அறமானது ஞானமில்லாதவன் மெய்ப்பொருளை கண்டது போலாகும்.250. வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.. நம்மை விட வலிமையானவர் முன்பு நாம் எப்படி பலவிணமாக உணர்கின்றோமோ; அதை போன்றே நம்மை விட மெலியவரை நாம் வருத்த நினைக்கும் போது, அவர் நம்மை விட மெலியவர் அவரை வருத்த கூடாது என்பதையும் உணரவேன்டும்..ஒரு வலியவன் முன் தன் நிலைமையை எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவேண்டும் எப்போதாகிலும் ஒரு மெலிவன் தன்னிடம் வரும்போது..வெளி இணைப்புகள். மாம்பழச்சாலை.திருக்குறள் > துறவறவியல்
251. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான். எங்ஙனம் ஆளும் அருள்?. தன்னுடலை பெருக்கி கொள்ள பிற உயிரிகளை உண்பவரிடம் எப்படி அருள்(கருணை) நிலைத்திருக்கும்?.252. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி. ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.. பொருளை பேனி பாதுகாக்கதவரை பொருளுடையோர் என்பதில்லை, அருளும் நிலைப்பதில்லை பிற உயிரிகளை உண்பவரிடம்.
253. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன். உடல்சுவை உண்டார் மனம்.. பிற உயிரிகளை கொல்ல நினைப்பவரது நெஞ்சம்போல் நல்லவற்றை நினைக்காது பிற உயிரியின் உடல் உண்டோர் மனம்..254. அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல். பொருளல்லது அவ்வூன் தினல்.. அருள் என்பது எவ்வுயிரையும் கொல்லாதிருப்பது, அருளற்றவை என்பது உயிரிகளை கொன்று உண்பது.
255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண. அண்ணாத்தல் செய்யாது அளறு.. ஊன் உண்ணாதவர்களால் தான் உலகில் உயிரிகள் நிலைத்துள்ளன..256. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும். விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.. உண்பதற்காக உயிரிகளை யாரும் கொல்லாவிட்டால், உலகில் உண்பதற்காக யாரும் உயிரிகளை கொன்று விற்க மாட்டார்கள்.
257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன். புண்ணது உணர்வார்ப் பெறின்.. உண்ணாதிருக்க வேன்டும் பிற உயிரிகளை, அவ்வாறின்றி உண்பவர்கள் தங்கள் உண்பது பிறிதோர் உயிரின் உயிரற்ற உடலென்பதை உணர வேன்டும்..258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார். உயிரின் தலைப்பிரிந்த ஊன்.. ஞானமுடைய உயர்ந்தவர்கள் பிறிதோர் உயிரின் உயிர் பிறிந்த உடலை உணவாக உண்ணமாட்டார்கள்.
259. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன். உயிர்செகுத் துண்ணாமை நன்று.. பல உயர்ந்த பொருட்களை தீயிலிட்டு வேண்டுவதை விட மிக நல்லது பிற உயிரிகளை கொன்று உண்ணாமலிருப்பது..260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி. எல்லா உயிருந் தொழும்.. எல்லா உயிரிகளாலும் வணங்க தக்க சிறப்படையோர் உயிரிகளை கொல்லாதவர் மேலும் உணவாக ஊண் உண்ணாதவர்
திருக்குறள் > துறவறவியல்.261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை. அற்றே தவத்திற் குரு.. தனக்கு எத்தகைய துன்பம் நேரிடினும் பிற உயிரிகளுக்கு தீங்கு செய்யாமலிருப்பதே தவத்தின் பொருளாகும்..262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை. அஃதிலார் மேற்கொள் வது.
தவம் மிகுந்த மனவுறுதி உடையவர்க்கே வாய்க்கும்.அத்தகைய உறுதியற்றவர்கள் தவத்திற்க்கு முயலுவது வீணாகவே முடியும்..263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல். மற்றை யவர்கள் தவம்.. தவத்தில் சிறந்த துறவிகளுக்காக கூட நம் சேய்யவேன்டிய தவத்தை மறக்க கூடாது..264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும். எண்ணின் தவத்தான் வரும்.
265. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம். ஈண்டு முயலப் படும்..266. தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார். அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு..267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ். சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
268. தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய. மன்னுயி ரெல்லாந் தொழும்..269. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின். ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்..270. இலர்பல ராகிய காரணம் நோற்பார். சிலர்பலர் நோலா தவர்.
திருக்குறள் > துறவறவியல்.271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள். ஐந்தும் அகத்தே நகும்..272. வானுயிர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம். தான்அறி குற்றப் படின்..273. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று..274. தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து. வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று..275. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று. ஏதம் பலவுந் தரும்..276. நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்..277. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி. முக்கிற் கரியார் உடைத்து..278. மனத்தது மாசாக மாண்டார் நீராடி. மறைந்தொழுகு மாந்தர் பலர்..279. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்..280. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம். பழித்தது ஒழித்து விடின்..திருக்குறள் > துறவறவியல்.281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும். கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
282. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக். கள்ளத்தால் கள்வேம் எனல்..283. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து. ஆவது போலக் கெடும்..284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண். வீயா விழுமம் தரும்.
285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப். பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்..286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண். கன்றிய காத லவர்..287. களவென்னும் காரறி வாண்மை அளவென்னும். ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும். களவறிந்தார் நெஞ்சில் கரவு..289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல. மற்றைய தேற்றா தவர்..290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத். தள்ளாது புத்தே ளுலகு.
திருக்குறள் > துறவறவியல்.291. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும். தீமை இலாத சொலல்..292. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த. நன்மை பயக்கும் எனின்..293. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்..294. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார். உள்ளத்து ளெல்லாம் உளன்..295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு. தானஞ்செய் வாரின் தலை..296. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்..297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற. செய்யாமை செய்யாமை நன்று..298. புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை. வாய்மையால் காணப் படும்..299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு..300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும். வாய்மையின் நல்ல பிற..திருக்குறள் > துறவறவியல்.301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துச். காக்கின்என் காவாக்கால் என்?
302. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும். இல்அதனின் தீய பிற..303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய. பிறத்தல் அதனான் வரும்..304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின். பகையும் உளவோ பிற.
305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால். தன்னையே கொல்லுஞ் சினம்..306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும். ஏமப் புணையைச் சுடும்..307. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு. நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
308. இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும். புணரின் வெகுளாமை நன்று..309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால். உள்ளான் வெகுளி எனின்..310. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத். துறந்தார் துறந்தார் துணை.
திருக்குறள் > துறவறவியல்.311. சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா. செய்யாமை மாசற்றார் கோள்..312. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா. செய்யாமை மாசற்றார் கோள்..313. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்..314. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண. நன்னயஞ் செய்து விடல்..315. அறிவினான் அகுவ துண்டோ பிறிதின்நோய். தந்நோய்போல் போற்றாக் கடை..316. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்..317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம். மாணாசெய் யாமை தலை..318. தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான் என்கொலோ. மன்னுயிர்க்கு இன்னா செயல்..319. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்..320. நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார். நோயின்மை வேண்டு பவர்..திருக்குறள் > துறவறவியல்.321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல். பிறிவினை எல்லாந் தரும்.
322. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர். தொகுத்தவற்றுள் எல்லாந் தலை..323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன். பின்சாரப் பொய்யாமை நன்று..324. நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும். கொல்லாமை சூழும் நெறி.
325. நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக். கொல்லாமை சூழ்வான் தலை..326. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல். செல்லாது உயிருண்ணுங் கூற்று..327. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது. இன்னுயிர் நீக்கும் வினை.
328. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக். கொன்றாகும் ஆக்கங் கடை..329. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர். புன்மை தெரிவா ரகத்து..330. உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின். செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
திருக்குறள் > துறவறவியல்.331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும். புல்லறி வாண்மை கடை..332. கூத்தாட்டு அவைக் குழாத்தற்றே பெருஞ்செல்வம். போக்கும் அதுவிளிந் தற்று..333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்..334. நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும். வாளது உணர்வார்ப் பெறின்..335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை. மேற்சென்று செய்யப் படும்..336. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு..337. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப. கோடியும் அல்ல பல..338. குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே. உடம்பொடு உயிரிடை நட்பு..339. உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு..340. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள். துச்சில் இருந்த உயிர்க்கு..திருக்குறள் > துறவறவியல்.341. யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல். அதனின் அதனின் இலன்.
342. வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின். ஈண்டியற் பால பல..343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும். வேண்டிய வெல்லாம் ஒருங்கு..344. இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை. மயலாகும் மற்றும் பெயர்த்து.
345. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல். உற்றார்க்கு உடம்பும் மிகை..346. யானெனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு. உயர்ந்த உலகம் புகும்..347. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப். பற்றி விடாஅ தவர்க்கு.
348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி. வலைப்பட்டார் மற்றை யவர்..349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று. நிலையாமை காணப் படும்..350. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப். பற்றுக பற்று விடற்கு.
திருக்குறள் > துறவறவியல்.351. பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும். மருளானாம் மாணாப் பிறப்பு..352. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி. மாசறு காட்சி யவர்க்கு..353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து..354. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே. மெய்யுணர்வு இல்லா தவர்க்கு..355. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள். மெய்ப்பொருள் காண்பது அறிவு..356. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி..357. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப். பேர்த்துள்ள வேண்டா பிறப்பு..358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும். செம்பொருள் காண்பது அறிவு..359. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்..360. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன். நாமம் கெடக்கெடும் நோய்..திருக்குறள் > துறவறவியல்.361. அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும். தவாஅப் பிறப்பீனும் வித்து.
362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது. வேண்டாமை வேண்ட வரும்..363. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை. ஆண்டும் அஃதொப்பது இல்..364. தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது. வாஅய்மை வேண்ட வரும்.
365. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார். அற்றாக அற்றது இலர்..366. அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை. வஞ்சிப்ப தோரும் அவா..367. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை. தான்வேண்டு மாற்றான் வரும்.
368. அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல். தவாஅது மேன்மேல் வரும்..369. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும். துன்பத்துள் துன்பங் கெடின்..370. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே. பேரா இயற்கை தரும்.
திருக்குறள் > ஊழியல்.371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள். போகூழால் தோன்றும் மடி..372. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும். ஆகலூழ் உற்றக் கடை..373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்..374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு. தெள்ளிய ராதலும் வேறு..375. நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும். நல்லவாம் செல்வம் செயற்கு..376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம..377. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி. தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது..378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால. ஊட்டா கழியு மெனின்..379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்?.திருக்குறள் > அரசியல்.381. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும். உடையான் அரசருள் ஏறு..382. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும். எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
383. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும். நீங்கா நிலனான் பவர்க்கு..384. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா . மானம் உடைய தரசு..385. இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த. வகுத்தலும் வல்ல தரசு.
386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் . மீக்கூறும் மன்னன் நிலம். .387. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால். தான்கண் டனைத்திவ் வுலகு..388. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு. இறையென்று வைக்கப் படும்.
389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன். கவிகைக்கீழ்த் தங்கும் உலகு..390. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும். உடையானாம் வேந்தர்க் கொளி..திருக்குறள் > அரசியல்.391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக..392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும். கண்ணென்ப வாழும் உயிர்க்கு..393. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு. புண்ணுடையர் கல்லா தவர்..394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்..395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார். கடையரே கல்லா தவர்..396. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக். கற்றனைத் தூறும் அறிவு..397. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு..398. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு. எழுமையும் ஏமாப் புடைத்து..399. தாமின் புறுவது உலகின் புறக் கண்டு. காமுறுவர் கற்றறிந் தார்..400. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை..திருக்குறள் > அரசியல்.401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய. நூலின்றிக் கோட்டி கொளல்..402. கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும். இல்லாதாள் பெண்காமுற் றற்று.
403. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன். சொல்லா திருக்கப் பெறின்..404. கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும். கொள்ளார் அறிவுடை யார்..405. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து. சொல்லாடச் சோர்வு படும்.
406. உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக். களரனையர் கல்லா தவர்..407. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம். மண்மாண் புனைபாவை யற்று..408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே. கல்லார்கண் பட்ட திரு.
409. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும். கற்றார் அனைத்திலர் பாடு..410. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல். கற்றாரோடு ஏனை யவர்..திருக்குறள் > அரசியல்.411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை..412. செவிக்குண வில்லாத போழ்து சிறிது. வயிற்றுக்கும் ஈயப் படும்..413. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின். ஆன்றாரோ டொப்பர் நிலத்து..414. கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை..415. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே. ஒழுக்க முடையார்வாய்ச் சொல்..416. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும். ஆன்ற பெருமை தரும்..417. பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்..418. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால். தோட்கப் படாத செவி..419. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய. வாயின ராதல் அரிது..420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?.திருக்குறள் > அரசியல்.421 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும். உள்ளழிக்க லாகா அரண்..422. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ. நன்றின்பால் உய்ப்ப தறிவு.
423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள். மெய்ப்பொருள் காண்ப தறிவு..424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய். நுண்பொருள் காண்ப தறிவு..425. உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும். கூம்பலும் இல்ல தறிவு.
426. எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு. அவ்வ துறைவ தறிவு..427. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார். அஃதறி கல்லா தவர்..428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது. அஞ்சல் அறிவார் தொழில்.