text
stringlengths
23
10.7k
களம் நீள் சதுரம் ஆகும். இது இரண்டு பக்கங்களாக ஐந்து அடி உயரமுள்ள வலையால் பிரிக்கப்பட்டு இருக்கும். பொதுவாக ஒற்றை அல்லது இரட்டை ஆட்டத்துக்கு ஏற்ற மாதிரி களம் படம் 1 இல் காட்டப் பட்ட மாதிரி பச்சைக் கோடுகளால் குறிக்கப்பட்டு இருக்கும்..ஒற்றையர் விளையாட்டு .ஒற்றை விளையாட்டில் அகலம் குறைவானதாகும். அகல எல்லை உள் நீள் கோடு ஆகும்..இரட்டையர் விளையாட்டு .இரட்டை விளையாட்டில் அகலம் நீண்டதாகும். ஆனால் பரிமாறும் (serve) போது உள் எதிர் பெட்டியின் நீள எல்லை சிறிதனாதாகும்..அளவுகள்
களம் ஒரு நீள் சதுரம் ஆகும். களத்தின் முழு அகலம் 6.1 மீட்டர். ஒற்றையர் விளையாட்டின் போது இந்த அகலம் 5.18 மீ ஆக குறைக்கப்படுகிறது. களத்தின் முழு நீளம் 6.1 மீ. இக் களம் 1.55 மீட்டர் உயரமான வலையால் நீள் சதுரம் பிரிக்கப்பட்டு இருக்கும்..இக் களம் ஒவ்வொரு பக்கமும் பரிமாறும் களங்களைக் (Service Courts) குறிக்கும் வண்ணம் பிரிக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பக்கமும் இரு பரிமாறும் களங்கள் நடுவிலே ஒரு கோட்டினால் பிரிக்கப்பட்டு இருக்கும். வலையில் இருந்து 1.98 மீ தூரத்தில் ஒரு கோடு போடப்பட்டு இருக்கும். பரிமாறும் போது இறகு வலையில் இருந்து அக் கோட்டுக்குள் விழுந்தால் அது செல்லுபடியாகாது. பின் எல்லைக் கோட்டி இருந்து 0.78 மீ தூரத்தில் கோடு போடப்பட்டு இருக்கும். இது இரட்டையர் ஆட்டத்தின் போது பரிமாறும் எல்லையாகப் பயன்படுகிறது..பகுப்பு:இறகுப்பந்தாட்டம்.இறகுப்பந்தாட்டம் - badminton. போட்டி - match. புள்ளி - points
சுற்று - game/rounds. இரட்டையர் - doubles. ஒற்றையர் - singles. ஆடவர் ஒற்றையர்/இரட்டையர் - mens singles/doubles. மகளிர் ஒற்றையர்/இரட்டையர் - women singles/doubles. கலப்பு இரட்டையர் - mixed doubles
மட்டை - racket. இறகு - shuttlecock. களம் - court. பரிமாறும் களம் - servicing court. முன் களம் - front court. பின் களம் - back court
அடிக் கோடு - base line. வலை - net. பரிமாறுதல் - serving. பரிமாறல் பெட்டி - service box/court. நொறுக்குதல் - smash. அடிப்படை நிலை - base position
பின்கை - backhand. மேலுயர்ந்த கை - overhand. வீழ் அடி - drop shot. தெளிவடி - clear shot. நொறுக்கடி - smash. சாவடி - kill shot
வலையடி - netshot. தவறு - fault .பகுப்பு:இறகுப்பந்தாட்டம்.இறகுப்பந்தாட்டத்தில் ஆய்த்த நிலை என்பது எதிர் ஆட்டக்காரர் பரிமாறும் போது அல்லது நீங்கள் இறகை அடுத்த பின்பு எடுத்துக்கொள்ளும் நிலை ஆகும். ஆய்த்த நிலையில் இருந்தால் வேகமாக நகர்ந்து திருப்பி அடிக்க முடியும். இது பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு நிலையே. விளையாட்டின் போது சூழ்நிலைகளைப் பொறுத்தும், ஒற்றையர் ஆட்டமா இரட்டையர் ஆட்டமா என்பதைப் பொறுத்தும் நிலைகள் வேறுபடும். .ஒற்றை ஆட்டத்தில் களத்தின் நடுவில் எல்லா மூலைகளில் இருந்தும் சம தூரத்தில் நிற்கவும். உங்கள் முளங்கால்கலைச் சற்று மடித்து உங்கள் எடையை உங்கள் கால் விரல் பந்துகளுக்கு நகர்த்துங்கள் (“on the balls of your toes”). வேகமாக நகர இது முக்கியம். நீங்கள் வலது கை என்றால் உங்கள் வலது கால் சற்று முன்னிற்கு நிற்கலாம். .உங்கள் கைகளை இடைக்கு சற்று உயர்வாக முன்னுக்கு வைத்திருங்கள். உங்கள் மட்டையை உயர்த்தி முன்னுக்கு வைத்திருங்கள். உங்கள் இடது கையை உயர்த்தி உடல் நிலையை சமன்படுத்தி வைத்திருங்கள்.
வெளி இணைப்புக்கள் .பகுப்பு:இறகுப்பந்தாட்டம்.இறகுப்பந்தாட்டத்தில் சூழ்நிலையைப் பொறுத்து வெவ்வேறு வழிகளில் மட்டையைப் பிடிக்க வேண்டும். தவறாக மட்டையைப் பிடித்தால் அடியின் வலுவையும் துல்லியத்தையும் அது குறைக்கும்..அடிப்படைப் பிடி/முன்கைப் பிடி .அடிப்படைப் பிடி(basic grip) அல்லது முன்கைப் பிடி(forehand grip) உங்கள் முன்னுக்குவரும், அல்லது தலைக்குமேல் வரும் இறகுகளை அடிக்கப் பயன்படுகின்றது..மட்டையை விளையாடாத கையால் மட்டையின் முகம் நிலத்தோடு செங்குத்தாகப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் கையை கை குலுக்குவது போல மட்டையின் கைபிடியில் வையுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்கள் பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கு இடையே V வடிவு அமையும். மட்டையின் கைபிடி உங்கள் விரல்களால் தளர்வாகப் பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
பின்கைப் பிடி .பின்கைப் பிடி (Backhand Grip) பின்கை அடிகளைப் பெரிதும் பயன்படுகிறது..முன்கைப் பிடி போன்றே, ஆனால் பெருவிரல் மட்டையின் மூன்றாவது தரங்கு (3rd bavel) மேல் நேராக அமர்ந்திருக்கும்..வெளி இணைப்புக்கள் .பகுப்பு:இறகுப்பந்தாட்டம்.மரவேலைக்கலை பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. பழங்காலத்திலிருந்தே தமிழரது கட்டிடக் கலை மிகவும் சிறப்புற்று இருந்தது, மரவேலை செய்பவர்கள் மரவேலையாளர் அல்லது தச்சர் என அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் வீடுகள் போன்ற கட்டிடங்களைக் கட்டும்போது, தச்சரின் பங்கே முதன்மையாகக் கருதப்பட்டது. இன்றும் கூட தமிழ்நாட்டில் தச்சருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காணமுடியும்.
மரவேலை அன்று முழுவதுமாக கைகளில் செய்யப்பட்டது. இன்று பல நவீன கருவிகள் மூலமும் இயந்திரங்கள் மூலமும் செய்யப்படுகிறது. ஆனால் தற்போதய வேலைப்பாடுகளைக் காட்டிலும் முந்தைய காலத்து மரவேலைப்பாடுகளே மிகவும் சிறந்தவையாக உள்ளன..கதை கதையாம் காரணமாம் !.கதை கதையாம் காரணமாம் .காரணத்தில் ஒரு தோரணமாம்.தோரணத்தில் ஒரு துக்கடாவாம்.துக்கடாவில் கொஞ்சம் வைக்கோலாம்
வைக்கோல எடுத்து மாட்டுக்குப் போட்டா.மாடு பால் கொடுத்ததாம்.பாலைக் கொண்டுபோய் கடையில ஊத்துனா.கடைக்காரன் தேங்காய் கொடுத்தானாம்.தேங்காய் ஒடைக்க கல்லுக்குப் போனா.கல் எல்லாம் பாம்பாம்
பாம்ப அடிக்கத் தடியத் தேடினா.தடி எல்லாம் சேறாம்.சேறு கழுவ ஆத்துக்குப் போனா.ஆறெல்லாம் மீனாம்.மீனப் புடிக்க வலைக்குப் போனா.வலை எல்லாம் ஓட்டையாம்
ஓட்டைய அடைக்க ஊசிக்குப் போனா.ஊசிக்காரன் ஊருக்குப் போயிட்டானாம்.பகுப்பு:குழந்தைப் பாடல்கள்.தூக்கு அடி (Lift Shot) என்பது நடு அல்லது முன் களத்தில் இருந்து பின் களத்துக்கு அடிக்கப்படும் அடி ஆகும். இந்த அடியை கையுக்கு கீழே இருந்து மேலாக அடிப்பர்..எப்பொழுது பயன்படுத்தல் . எதிரி வலை அடி ஒன்றை அடித்து இருந்தால் அவர் நீங்கள் வலையடை ஒன்றைச் செய்வீர்கள் என்று எதிர்பார்த்து வலைக்கு அருகே வருவார். அப்பொழுது நீங்கள் பின் களத்துக்கு தூக்கி அடித்தீர்கள் என்றால் அது அவரை திக்காட வைக்கும். இவ்வாறு செய்யும் போது அவர் திருப்பி அடிக்க முடியாதபடி உயர்த்தி அடிக்கவேண்டும்.
தற்காப்பு அடியாகவும் தூக்கடி பயன்படுகிறது..வெளி இணைப்புகள் . Lift - நிகழ்படம்.பகுப்பு:இறகுப்பந்தாட்டம்.இறகுப்பந்தாட்டத்தில் தெளிவடி (Clear Shot) ஒர் அடிப்படை அடியாகும். இந்த அடி இறகை உயர்த்தி எதிரியின் பின் களத்துத்தில் இடும்..வெளி இணைப்புகள்
பகுப்பு:இறகுப்பந்தாட்டம்.மலர்கள்/சென்பகப் பூ உருவாக்கம்.ஒரு வகுப்பின் நிலை மாறும் போது, தொடர்புடைய பிற வகுப்புக்களுக்கு அறிவித்தல் வழங்க உதவும் வடிவமைப்புத் தோரணமே அவதானி (Observer) ஆகும். இது ஒரு நடத்தைத் தோரணம் ஆகும். ஒன்றில் இருந்து பலவற்றுக்கான சார்புநிலையை (one-to-many dependency) விபரித்து, ஒன்றில் நிலை மாறும் போது சார்புள்ள வகுப்புக்களுக்கு அறிவிக்கப்படுகிறது..வெளி இணைப்புகள் .பகுப்பு:வடிவமைப்புத் தோரணங்கள்./அறிமுகம்/
உறுப்புகள் - xs:element. பண்புகள் - xs:attribute. அடிப்படைத் தரவு வகைகள். தரவு வகைகளை நீட்டுதல். எளிய வகை - xs:complexType. சிக்கல் வகை - xs:simpleContent
பொதிவு. பெயர்வெளி.பகுப்பு:எக்சு.எம்.எல் இசுகீமா.நேரமுகாமைத்துவம்.இன்று எதற்கெடுத்தாலும் தனக்கு நேரமில்லை அல்லது நேரம் போதாது என்கிறான் மனிதன். பணிகள் நேரத்தைக் காட்டிலும் அதிகரித்துள்ளன என இதற்கு ஒரு வகையில் நியாயம் சொல்லப்பட்ட போதிலும் இந்நியாயம் எல்லோருக்கும் பொருந்துமா, எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பொருந்துமா, எல்லா விடயங்களுக்கும் பொருந்துமா என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன. நேரத்தை திட்டமிட்டு ஒழுங்கு செய்து இயங்காததன் விளைவே இது என மற்றொரு புறத்தில் குரலொன்று ஓங்கி ஒலிக்கின்றது..நேரம் உண்மையில் பெறுமதிமிக்கது, விலைமதிக்கமுடியாதது. பத்தரை மாற்று பசும் பொன்கூட மனிதனின் ஆயுளில் ஒரு வினாடிக்கு ஈடாகாது. காலம், நேரம் அவ்வளவு பெறுமதிவாய்ந்தவை, உச்ச பயன் அடையும் வகையில் நன்கு திட்டமிடப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டியவை, வீணடிக்கத்தகாதவை என்பதையெல்லாம் உணர்த்தும் பொருட்டு காலம், இரவு, பகல் விடியற்காலை, காலை, முற்பகல் என்பவற்றின் மீது அல்லாஹ் தஆலா சத்தியமிடுகிறான்.
“காலத்தின் மீது சத்தியமாக” (103:01) “இரவின் மீது சத்தியமாக அது மூடிக்கொள்ளும் போது. பகலின் மீது சத்தியமாக அது வெளியாகிய போது”. (92: 01- 02), “விடியற்காலையின் மீது சத்தியமாக” (89: 01), “காலையின் மீது சத்தியமாக அது தெளிவாகிய போது” (81:18), “முற்பகல் மீது சத்தியமாக” (93:01) என புனித அல்குர்ஆனில் ஆங்காங்கே காணலாம்..காலத்தை சரிவர முகாமைத்துவம் செய்வது தனிமனிதப் பொறுப்பாகும். அது பற்றிய மறுமையில் விசாரணை உண்டு. இது லேசுமாசான இலகுவில் பதில் சொல்லி தப்பிக்க முடியுமான விடயமன்று. ஆயுட்காலத்தை கழித்த முறை பற்றி அல்லாஹ்விடம் சரியாக கணக்குக் காட்ட வேண்டும். பின்வரும் நாயக வாக்கியம் இதனைத் தெளிவுபடுத்துகின்றது..“நான்கு விடயங்கள் பற்றி அவன் விசாரிக்கப்படும் வரை ஓர் அடியானின் பாதங்கள் மறுமை நாளில் ஆசைய மாட்டா. அவனின் வாழ் நாள் பற்றி அதனை அவன் எதில் கழித்தான், அவனின் வாலிபம் பற்றி அதனை அவன் எதில கழித்தான், அவனின் செல்வம் பற்றி அதனை அவன் எங்கிருந்து சம்பாதித்தான் மேலும் அதனை அவன் எதில் செலவழித்தான், அவனின் அறிவு பற்றி அதிலே அவன் என்ன செய்தான்” (அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல்: அல்- முஃஜம் அல்-கபீர்).மனித ஆயுள் மிக மிக குறைவானது. இக்குறுகிய வாழ்நாளுக்குள்தான் மனிதன் மறுமைக்காக சம்பாதிக்க வேண்டும், சேமிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் இடையில் இவ்வுலகத் தேவைகளையும் நிறைவேற்றுக் கொள்ள வேண்டும். தான் மட்டுமா? பெற்றார், மனைவி, மக்கள், உற்றத்தார், சுற்றத்தார் என பலரும் உளர். இவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கவனித்தாக வேண்டும். தனிப்பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில், பொருளாதார வாழ்வில், தொழில் வாழ்வில் பலதும் பத்தும்..எனவேதான் நேரத்தை நாம் சரியாகத் திட்டமிட்டு நம்மை நாம் இயக்க வேண்டியுள்ளது. காலமும் நேரமும் எம்மனிதருக்காகவும் காத்திருப்பதில்லை’ என்பது ஆங்கில முதுமொழியொன்றின் பொருளாகும். நாம் நேரத்தைப் பயன்படுத்தினோமோ, இல்லையோ கழிகின்ற ஒவ்வொரு நொடிப் பொழுதும் நிச்சயமாக திரும்பி வரப் போவதில்லை, அதனை எவ்விலை கொடுத்தும் பிரதியீடு செய்து கொள்ள முடியாது. ஓர் அரேபிய கவிதையின் தமிழாக்கம் இது:.உமது ஆயுள் எண்ணப்படக்கூடிய சில மூச்சுகள். உம்மிலிருந்து ஒரு மூச்சு சென்ற போதெல்லாம் ஆயுளில் ஒரு பகுதி உமக்கு குறைந்து விட்டது”
விடியற்காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நமது வேலைகளை திட்டமிட்டுக் கொண்டு தொழிற்பட வேண்டும். நேரத்துக்கு ஒரு வேலை, வேலைக்கு ஒரு நேரம் என்ற வகையில் நம்மை நாம் பயிற்றுவிக்க வேண்டும். நாளையை இன்றே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்..அவசியமானது எது, அதி அவசியமானது எது, அவசரமானது எது, அதி அவசரமானது எது, முக்கியமானது எது, அதி முக்கியமானது எது, குடும்பம் சார்ந்தது எது, தொழில் சார்ந்தது எது, சமூகம் சார்ந்தது எது என்றெல்லாம் வகைப்படுத்தி அது அதற்குத் தேவையான அளவு நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்க வேண்டும்..பின்னர் அதற்கேற்ப காரியமாற்ற வேண்டும் இதுவே உண்மையான நேர முகாமைத்துவம்..நேர முகாமைத்துவத்தில் இஸ்லாம் வெகு கண்டிப்பாக உள்ளது. நேர முகாமையத்துவத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை விட வேறொருவர் எமக்கு முன்மாதிரியாகத் தேவையில்லை எனத் துணிந்து கூறும் அளவுக்கு அவர்கள் சொல்லாலும் செயலாலும் நேர முகாமைத்துவம் செய்து காட்டியுள்ளார்கள்..அன்னாரின் இரவு, பகல் இரண்டுமே திட்டமிடப்பட்ட வகையில் கழிந்தன..வெட்டி வேலைகள், விடயங்களுக்கு காலத்தை, நேரத்தை ஒதுக்கலாகாது. இவ்வகை விடயங்கள், வேலைகள், ஒன்றுகூடல்கள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள் சமகாலத்தில் ஏராளமாக, தாராளமாக உள்ளன. தெரிந்தவர்கள், நண்பர்கள், சகபாடிகள், உறவினர்கள் அழைக்கின்றனர் என நியாயம் சொல்லிக் கொண்டு வீணர்களுடன் சேர்ந்து தானும் தனது பொன்னான நேரத்தை மண்ணாக்கலாகாது.
செய்ய வேண்டியவை, ஆற்ற வேண்டியவை நிறைய இருக்கத்தக்க அவற்றையெல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு ஏதேதோ உருப்படியற்ற காரியங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்த பின் இதற்கு நேரமில்லை, இதற்கு நேரமில்லை என முனங்கியவண்ணம், கூக்குரலிட்டவண்ணம் கட்டாயம் செய்ய வேண்டிய பணிகளைத் தள்ளிப்போடுதல், செய்யாது விடல், அரைமனதுடன் செய்தல், செய்நேர்த்தி இல்லாமல் செய்தல் அறிவுபூர்வமானதல்ல..நேரம் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் அளித்துள்ள ஓர் அமானிதம். அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவரவர் கையிலுள்ளது. இதன் மூலமே நேர அமானிதம் பேணப்படுகின்றது. நேர முகாமைத்துவம் செய்யாதவர் மொத்தத்தில் தன்னைத் தானே ஒழுங்குபடுத்தாதவர்..அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் என்பது படைப்பாளிகளின் படைப்பு திரமைகளை ஊக்குவிற்க்கவும் பிரத்தியேக உரிமைகளை அங்கீகரிக்கும் பொருட்டும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும் வகைசெய்யப்பட்ட சட்ட கருத்தாகும்..தொல்காப்பியக் காலத்திற்கு முன்பிருந்த தமிழ் போல இந்தியில் பெயர்ச் சொற்கள் எழு விதங்களாக உருபு ஏற்கின்றன. மேலும் எண்ணிக்கை, பால் அடிப்படையில் சொற்கள் மாறுகின்றன..சாதரண வகை.தமிழின் முதலாம் வேற்றுமைக்கு இணையானது
உதாரணம்:.मैं खेलता हूँ - மைன் கல்தா ஹுங் - நான் எழுதுகிறேன்.आप लिखते हैं - ஆப் லிக்தே ஹைங் - நீ எழுதுகிறாய்.रमेश सुनता है - ரமேஷ் ஸுந்தா ஹைங் - ரமேஷ் கேட்கிறான்.கொள்ளும் வகை.தமிழின் நான்காம் வேற்றுமைக்கு இணையானது
உதாரணம்:.मुझे एक कलम चाहिए - எனக்கு ஒரு பேனா வேண்டும்.उसे एक खत मिला - அவனுக்கு ஒரு கடிதம் கிடைத்தது.इनें पानी दो - இவற்றிக்குத் தண்ணீர் வையுங்கள்.உடைமை நிலை.தமிழின் ஆறாம் வேற்றுமைக்கு இணையானது
உதாரணம்:.ये किताबें मेरी हैं - இந்தப் புத்தகம் என்னுடையது ஆகும்.मेरी किताबें पुरानी हैं - எனது புத்தகங்கள் பழைமை ஆனது.तुम्हारा घर बडा है - உங்களது வீடு பெரியது ஆகும்.उसके पेड हरे हैं - அவனது/அவற்றின் மரம் பசுமை ஆனது.பொருண்மைநிலை
தமிழின் ஐந்தாம் வேற்றுமைக்கு இணையானது.உதாரணம்:.मुझसे गलती हो गई - நான் தவறு செய்துவிட்டேன்.मेरा तुमसे भरोसा उठ गया - நான் உங்களின் மீதுள்ள நம்பிக்கை இழந்துவிட்டேன்..आपसे यही उम्मीद थी - உங்களிடமிருந்து இது எதிர்பார்க்கப்பட்டது.இடநிலை
தமிழின் ஏழாம் வேற்றுமைக்கு இணையானது.உதாரணம்:.मुझपर भरोसा करो - என்மீது நம்பிக்கை வையுங்கள்.ईश्वर तुमपर दया करे - கடவுள் உன்மீது கருணை காட்டுவார்.सारी उम्मीदें उसपर टिकी हैं - அனைத்து நம்பிக்கைகளும் அவன்மீதுள்ளது.உடனிகழ்ச்சிநிலை
தமிழின் மூன்றாம் வேற்றுமைக்கு இணையானது.உதாரணம்:.मैंने सब देख लिया - என்னால் அனைத்தையும் பார்க்க முடிந்தது.क्या तुने काम किया - என்ன உன்னால் வேலை போய்விட்டதா.सीता ने खाना खाया - சீதாவால் உணவை உண்ணப்பட்டது.மேற்கோள்கள்
எதிர்பாராத உள்ளீடு, வளங்கள் கிடைக்காமை (எ.கா தரவுத்தளம், கோப்பு), தவறனா கணிப்பு (எ.கா 0 ஆல் பிரிக்க முனைதல்), தொடரமைப்புப் பிழை (syntax error), ஏரணப் பிழை (logical error) என்று பல காரணிகளால் ஒரு நிரல் எதிர்பார்காத முறையில் செயற்படலாம் அல்லது முற்றிலும் செயலிழந்து போகலாம். நிரலாளர் நிரல் கூற்றில் எழக்கூடிய இத்தகையை பிழைகளைக் இயன்றவரை எதிர்பார்த்து, அதற்கு தக்க முறையில் நிரல் எழுதல் வேண்டும். அதற்கு உதவும் வகையில் பெரும்பாலான மொழிகள் பிழை கையாழும் கூறுகளை(error handling constructs) கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றே விதிவிலக்கை கையாளுதல் (exception handling) ஆகும்..பொதுவாக ஒரு நிரலில் தவறாக நிகழும் எல்லாவற்றையும் விதிவிலக்காகக் கொள்வதில்லை. நிரலில் வழமையான தொழிற்பாட்டில் தவறான ஆனால் எதிர்பார்க்கக் கூடிய நிலைகளை நாம் விதிவிலக்குகள் இல்லாமல் கையாழ வேண்டும். எ.கா ஒருவர் புதுபதிகை செய்யும் போது தவறான பெயரை அல்லது கடவுச்சொல்லைப் பயன்படுத்தினால் அதை நாம் விதிவிலக்காக் கொள்ள முடியாது. இதை நாம் எதிர்பார்த்துக் கையாழ வேண்டும். .விதிவிலக்கு என்பது சாதாரண நிரல் தொழிற்பாட்டில் எதிர்பார்க்காத ஒன்று. வழமையான இயக்கத்தில் இருந்து விதிவிலக்காக நிகழ்வு. விதிவிலைக்கை கையாளுத்தல் என்பது வழமையான இயக்கத்தில் இருந்து ஒரு விதிவிலக்கான நிகழ்வு இடம்பெறும் பொழுது அதை கையாளும் முறை பற்றிய ஒரு நிரலாக்க கட்டு (construct) ஆகும். பெரும்பாலான மொழிகள் try (முயற்சி), catch (பிடி), throw (எறி), finally (இறுதியாக) ஆகிய சிறப்புச் சொற்களை (keywords) விதிவிலக்குக் கையாழுதலுக்குப் பயன்படுத்துகின்றன..ஒரு செயலி இயக்கப்படும்(try) போது அந்தச் செயலியில் விதிவிலக்கு ஒன்று நிகழ்ந்தால் அச் செயலி விதிவிலக்கு பொருள் ஒன்றை உருவாக்கி எறியும்(throw). அந்த விதிவிலக்குப் பொருளை இயங்குநேர ஒருங்கியம்(runtime system) இந்த விதிவிலக்கைக் கையாழக் கூடிய விதிவிலக்கு கையாளு நிரல் (exception handler - catch) ஒன்றைக் கண்டுபிடிக்க முனையும். இவ்வாறு கண்டுபிடிக்க முடியாவிட்டால் இயங்குநேரம் நின்றுவிடும்..விதிவிலக்கை கையாளுதலின் பயன்கள் . ஒவ்வொரு செயலியில் இருந்தும் பிழைத் தகவல்களை திருப்பியனுப்பி, அவற்றைச் சோதித்துப் பார்க்கும் நிரல் கூறுகளைத் தவிர்க்கலாம். இந்த நிரல் கூறுகள், நிரலின் வழமையான செயற்பாட்டை மறைத்து, நிரலை வாசிக்க, பராமரிக்க சிரமமாக்கும்.
விதிவிலக்கு பொருட்கள் ஒரு பிழை தொடர்பாக கூடிய தகவல்களைக் கொண்டிருக்கும்..விதிவிலக்கை எப்பொழுது கையாழ வேண்டும்.விதிவிலக்கை எப்படிக் கையாழ வேண்டும்.எடுத்துக்காட்டுக்கள்.யாவா.தொடரமைப்பு
// வழமையான செயல்படுத்தல் வழி. // விதிவிலக்கு நிகழ்ந்தால், அதைக் கையாழுவதற்கு, அல்லது அதில் இருந்து மீள்வதற்கான நிரல். // try அல்லது catch கட்டங்கள் முடிவுற்றபின் இயக்கப்படும் நிரல் கூறு (எல்லாச் சூழ்நிலைகளில் இது பயன்படுத்தப்படுவதில்லை).எடுத்துக்காட்டு 1 .நீங்கள் மேலே தரப்பட்ட எடுத்துக்காட்டை இயக்கினால் கீழ்வரும் விதிவிலக்கு எறியப்பட்டு நிரல் நின்றுவிடும்..இதையே நீங்கள் விதிவிலக்கு try catch கூறுகளைப் பயன்படுத்தி பின்வருமாறு எழுதலாம். இதனூடாக எறியப்படும் விதிவிலக்கை நிரலை நிறுத்தாமல் கையாழலாம்.
எடுத்துகாட்டு 2 .வெளி இணைப்புகள் .பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.சுருங்குறித்தொடர் என்பது எழுத்து அல்லது குறியீட்டுத் தொடர்களில் தேவையான சில தோரணங்களை எளிதாகப் பகுப்பாய்வு செய்ய உதவும் ஒரு நிரலாக்கக் கூறு ஆகும். கருத்தியல் கணிமையிலும் சுருங்குத்தொடர்கள் ஒரு மொழியை விபரிக்க பயன்படுகின்றன. எ.கா [0-9] அனைத்து இலக்கங்களுக்கான சுருங்குறித்தொடர் ஆகும். பெர்ள் நிரலாக்க மொழியில் சுருங்குறித்தொடர்கள் ஒரு முதன்மையான பங்கு வகிக்கிறது..எடுத்துக்காட்டு.பி.எச்.பி
// சுருங்குறித்தொடர் எடுத்துக்காட்டு.$subject = "இது ஒரு எ.கா வசனம், இதில் உள்ள இதுக்கள் எல்லாவற்றையும் ஒப்பி பிரி";.$pattern = '/இது/';. [0] => இது. [1] => இது.பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்
ஒரு மென்பொருளை உருவாக்கும் போது அந்த மென்பொருள் தொடர்பான தரவுகளை ஒழுங்குபடுத்திச் சேமிக்க தரவுத்தளங்கள் பயன்படுகின்றன. நெடுங்காலமாக தொடர்புசால் தரவுத்தளங்களே (Relational Databases) பெருதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எசு.கியூ.எல் (SQL) அல்லது வினவல் மொழியைப் பயன்படுத்தின. இன்று சில குறிப்பிட்டதேவைகளுக்காக நோ.எசு.கியூ.எல் (NoSQL) வகை தரவுத்தளங்களும் பயன்படுத்தப்படுகின்றன..இன்று பல கட்டற்ற மற்றும் வணிக தொடர்புசால் தரவுத்தளங்கள் பயன்பாட்டில் உள்ளன. போசுகிரசு (PostgreSQL), மைசீக்குவல் (MySQL) ஆகியவை நன்கு அறியப்பட்ட கட்டற்ற தரவுத்தளங்கள் ஆகும். இதில் மைசீக்குவலின் கட்டற்ற நிலை சற்று கேள்விக்குட்பட்டது. ஆனால் அதில் இருந்து கவைசெய்யப்பட்ட (fork) பல உறுதியான கட்டற்ற உரிமம் கொண்ட தரவுத்தளங்கள் (எ.கா MariaDB, Drizzle) உள்ளன. ஓராக்கிள் (Oracle), மைக்ரோசாப் எசு.கியூ.எல் (Microsoft SQL), டிபி2 (DB2) ஆகியவை அதிக பயன்பாட்டில் உள்ள வணிக தரவுத்தளங்கள் ஆகும்..இந்த தரவுத்தளங்களை அணுக நிரல் மொழிகள் அவற்றுக்கான செயலி நிரலாக்க இடைமுகங்களைக் (API for database access) கொண்டுள்ளன. எ.கா யாவா மொழியில் யே.டி.பி.சி (JDBC) பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பி.எச்.பி மொழியில் பி.டி.ஓ (PDO) பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இடைமுகங்கள் பல தரவுத்தளங்களுக்கான driver கொண்டுள்ளன. .பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.தேவையான பொருட்கள் . கருப்பட்டி - 500 கிராம்
முட்டை - 6. தேங்காய்ப் பால் - 1 கப் (இறுக்கமான பால்). ஏலப் பொடி - 1 தே.க. பட்டர் - 1 தே.க.செய்முறை . இறுக்கமான தேங்காய்ப் பாலில் கருப்பட்டியைச் சேர்த்துக் கரைத்து வடித்துக் கொள்ளவும்.
முட்டையை நுரைவரக் கூடியதாக நன்கு அடிக்கவும்.. பின்பு கருப்பட்டிக் கரைசலுடன் முட்டைக்கலவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு அடிக்கவும்.. ஏலப் பொடியைச் சேர்த்துக் கொண்ட பின்னர் பட்டர் பூசிய பாத்திரத்தில் ஊற்றி, பாத்திரத்தின் மேற்ப்பகுதியைப் பொலித்தீன் தாளினால் மூடிக்கட்டி 3/4 மணிநேரம் நீராவியில் அவித்தெடுக்கவும்..எண்தளமுறைகள் பற்றிய படிப்பு எண்முறை மின்னணுவியலில் தகவல்களை எவ்வாறு எண்களால் விவரிக்கப்படுகிறது என்பதை அறிவதற்கான அடிப்படையான ஒரு தலைப்பாகும். இது தகவல் எண்களை எப்படி செயலாக்கம் செய்யப்படுகிறது என்பதை அறிவதற்கு முன்பு அவ்வெண்களை விவரித்தல் என்பது அவசியமாக கருதுவதினால் இப்பிரிவு எண்முறை மின்னணுவியலின் முதல் பாடப்பிரிவாக கருதுகின்றனர். இப்பிரிவில் மின்னணுவியலிற்கு தொடர்பில்லாத பாடமாக இருந்தாலும், பதின்ம (decimal) எண்முறையை முதலில் படிக்கத் துவங்குவோம். இது எண்முறைகளில் அடிப்படையான சில தத்துவங்களை பரைசாற்றுகின்றன. பிறகு நாம் இருமம் (binary), எண்மம் (octal) மற்றும் பதினறுமம் (hexadecimal) போன்ற பிற எண்முறை கணிதத்தை காணலாம்..ஒப்புமையும் எண்முறையும்.எண்ணுரு மதிப்புகளின் வடிவாக்கத்தில் பெரும்பாலும் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. அவை ஒப்புமையும், எண்முறையும் ஆகும். ஒப்புமை என்பது இரண்டு உச்ச அளவுகளுக்குள் வடிவாக்கம் செய்யும் தொடர் எண்ணுருமதிப்புகளாகும். இதில் குறிப்பிடத்தக்க கோட்பாடு என்னவென்றால் இதன் எண்ணுரு மதிப்புகளின் மாறுபாடுகள் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு வடிவாக்க வகை என்பதாகும். எண்முறை என்பது சில எண் அளவுகளில் ஏதேனும் ஒரு அளவில் வடிவாக்கல் ஆகும். அதாவது, இது வெவ்வேறு தனித்த மதிப்புகள் கொண்ட நிலைகளினால் வடிவாக்கம் செய்யும் வகையாகும். சுருங்கச் சொன்னால், ஒப்புமை வடிவாக்கம் தொடர் வெளியீடை தரும். எண்முறை வடிவாக்கம் தனித்த வெளியீடை உருவாக்கும். ஒப்புமைக் கட்டகங்கள் ஒப்புமை வடிவத்தில் உள்ள வெவ்வேறு புறநிலை மதிப்புகளை செயலாக்கம் செய்கிற கருவிகள் கொண்டவையாகும். எண்முறை கட்டகங்கள் எண்முறை வடிவத்தில் உள்ள வெவ்வேறு புறநிலை மதிப்புகளை செயலாக்கம் செய்கிற கருவிகள் கொண்டவையாகும்.
எண்முறை தொழினுட்பங்கள் மற்றும் கட்டகங்கள் வடிவமைக்க மிகவும் எளிதானதாக இருக்கின்றன. இது உயர் துல்லியமும், நிரலாக்கத்தன்மையும், இரைச்சல் எதிர்ப்புத்தன்மையும், எளிதான தரவு சேமிப்பும், தொகுப்புச் சுற்று வடிவாக புனைய எளிதாகவும் அமைந்துள்ளன. இது மிகச் சிறிய வடிவில் மிக கடினமான செயல்களை செய்யக்கூடிய கருவிகளை தயாரிக்க வழிவகை செய்கிறது. எப்படியாயினும், இவ்வுலகம் ஒரு ஒப்புமை வடிவமாகும். விசை, இடம், வெப்பநிலை, திறன் போன்ற பெரும்பாலான புறநிலை மதிப்புகள் ஒப்புமையாகவே விளங்குகின்றன. இதனால் நாம் எண்முறை மின்னணுவியலில் உள்ளீடை செலுத்தும் பொழுது ஒப்புமை மாறிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. நமக்கு தேவைப்படும் வெளியீடும் ஒப்புமை மாறியாகவே எதிர்ப்பார்க்கிறோம். ஆகையால், நாம் எண்முறை மின்னணு சுற்றுகளில் உள்ளீடை ஒப்புமை-எண்முறை மாற்றியினால் எண்முறையாக்கம் செய்யவும், வெளியீடை எண்முறை-ஒப்புமை மாற்றியினால் ஒப்புமையாக்கம் செய்யவும் விளைகிறோம். நாம் இந்த நூலின் பிற்பகுதியில் இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி விரிவாக படிக்கலாம். இந்தப் பாடப்பகுதியில் தரவினை வடிவாக்கம் செய்ய பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் எண்தளமுறைகளை காணலாம்..எண்முறைகள்.பல்வேறு எண் முறைகளைப் பற்றி படிக்கும் முன் அவைகளில் பொதுவான அடிப்படைக்கூறுகளை முதலில் காணலாம். இந்த அடிப்படைக்கூறுகளைப் பற்றி அறிதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக மூன்று பண்புக்கூறுகள் உள்ளன. அவை எண்தளம் (எண்முறை எண்கள் ஒன்றினையும் சாராத தனி எண்களின் எண்ணிக்கை), இட பெறுமானங்கள் (ஒரு எண்ணில் உள்ள வெவ்வேறு எழுத்திற்கும் உள்ள இட மதிப்பு) மற்றும் உச்ச எண் (எண்முறை மிக உச்சக்கட்டமாக எழுதக்கூடிய கடைசி எண்). இதில் மிக முக்கியமான பண்புக்கூறு எண்ணின் தளம் அல்லது எண்தளம் (base) ஆகும். பொதுவாக நாம் பயன்படுத்தும் பதின்ம எண் முறையின் எண்தளம் 10 ஆகும். ஏனென்றால் அதிலுள்ள தனி எண்கள் மொத்தம் 10 ஆகும். அவை 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9. இரும எண் முறையில் 2 தளங்கள் உள்ளன. எண்ம மற்றும் பதினறும எண் முறைகளில் 8 மற்றும் 16 தளங்கள் உள்ளன. அடுத்த பண்புக்கூறான இட பெறுமானம் என்பது இவ்வெண்களின் ஒவ்வொரு எண் எழுத்திலும் உள்ள மதிப்பு ஆகும். பதின்ம எண்முறையில் 10 என்ற எண்ணின் இரண்டாவது எண் எழுத்தான 1 ஒன்றின் இடமதிப்பு 10 ஆகும். இதுவே இவ்வெண் இரும எண்முறையாக இருந்தால் அதன் இடமதிப்பு 2 ஆகும். இதனை r1, r2, r3, r4, மற்றும் பல என வடிவமாக்கலாம். இதில் r என்பது எண்முறையின் தளமாகும். எண்முறையான அடுத்த பண்புக்கூறு உச்ச எண். உச்ச எண் என்பது முன்னர் வடிவமாக்கிய எண் வரிசையின் கடைசி எண்ணினைக் குறிக்கும். அதாவது r1, r2, r3, r4, மற்றும் rn என எண்முறையை வடிவமாக்கினால் இதில் rn என்பதே உச்ச எண் ஆகும்..பதின்ம எண்முறை.பதின்ம எண் முறையின் எண்தளம் 10 ஆகும். எனவே இதில் மொத்தம் 10 வெவ்வேறு குறியீட்டு எண்கள் உள்ளன. அவை 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்பன. 9 மேல் எழுதப்படும் அனைத்து எண்களும் இந்த குறியீடுகளைப் பயன்படுத்தியே எழுத வேண்டும். 9 மேல் எண்களை எழுதும் பொழுது, இவ்வெண் வரிசையில் முதல் எண்ணை முதல் எழுத்தாக எழுதி பின் இரண்டாவது எழுத்தாக இவ்வெண்களை ஒவ்வொன்றாக எழுத வேண்டும். இரண்டெண் எழுத்து வரிசை 99 வரை செல்லும். 99 மேல் எழுத முன்பு கடைபிடித்த அதே எழுத்துமுறையை பின்பற்ற வேண்டும். அப்பொழுது 999 வரையிலான அனைத்து எண்கூட்டங்கள் வரிசையாக கணக்கிடப்படும். இவ்வாறு எழுதும் முறை முடிவற்ற தொடராக இருக்கிறது. .பதின்ம எண்முறையின் இட பறுமானங்கள் 101, 102, 103, 104 என வரிசையாக எழுதலாம். பின்ன வரிசைகளை 10-1, 10-2, 10-3, 10-4 எனவும் எழுதலாம்.
இரும எண்முறை.பதின்ம எண் முறையின் எண்தளம் 2 ஆகும்..பகுப்பு:எண்முறை மின்னணுவியல்.இந்நூலினின் எழுதிய ஆசிரியர்களின் பட்டியல் பின் வருமாறு :. பழ.இராஜ்குமார்.இணையத்தில் கல்வி பெருவது எளிது .
முதலுதவி என்பது நோய்வாய்பட்ட அல்லது காயம்பட்ட ஒருவருக்குக் கொடுக்கப்படும் ஆரம்பநிலை உடனடிச் சிகிச்சையாகும். நோயாளியையோ அல்லது காயமடைந்தவரையோ முக்கிய மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தும் முன் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நபரால் கொடுக்கப்படும் சிகிச்சையே முதலுதவி ஆகும். இந்நபர் மருத்துவத்துறையைச்சார்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. தானாக சரியாகக்கூடிய சில நோய்களும் சிறு காயங்களும் முதலுதவியிலேயே குணமாகிவிடும். இவற்றிற்கு மேற்கொண்டு முக்கிய மருத்துவ சிகிச்சை தேவைப்படாது. இந்த முதலுதவியை மிகக் குறைந்த கருவிகளைக்கொண்டு எந்த ஒரு தனிநபரும் உயிரைக்காக்க அடிப்படைச்சிகிச்சைமுறையைக் கற்றுக்கொள்ளமுடியும்..முதலுதவி எல்லா மிருகங்களுக்கும் செய்யப்பட்டாலும், பொதுவாக இது மனிதர்களுடன் மட்டுமே தொடர்புபடுத்தி கூறப்படுகிறது..எந்த ஒரு மொழியும் வாக்கியங்களாகப் பேசப்படுகின்றன அல்லது எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வாக்கியமும் வார்த்தைகளால் ஆனது. ஒவ்வொரு வார்த்தையும் எழுத்துக்களால் ஆனது. இவை அனைத்தும் ஒழுங்காக அடுக்கப்படுவதினால் அவற்றிற்கான முழுமையைப்பெறுகின்றன. ஒரு மொழியைப்பிழையின்றி மோழவும் எழுதவும் இலக்கணம் தேவைப்படுகிறது. .தாயை அம்மா என்றழைக்கிறோம். தந்தையை அப்பா என்றழைக்கிறோம். தாயை அப்பா என்றும் தந்தையை அம்மா என்றும் யாராவது அழைக்கிறோமா? ஆகவே ஆரம்பத்திலிருந்தே உறவு முறைகளையும், பொருட்களின் பெயர்களையும், பண்டங்களின் பெயர்களையும் எவ்வளவு எளிதாக மனதில் இருத்திக்கொள்கிறோம். அதுபோலவே, ஆங்கில இலக்கணத்தையும் ஆர்வமுடன் கற்றால் பிழையின்றி ஆங்கில மொழியைப் பேசவும் எழுதவும் செய்யலாம். .ஆங்கில இலக்கணத்தின் அடிப்படை வாக்கியங்களாகும்; அதாவது சென்டன்சஸ் sentences. .இந்த வாக்கியங்கள் அடிப்படையாக நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
1. அறிக்கை வாக்கியம் statements -(ஸ்டேட்மென்ட்ஸ்).2. கேள்வி வாக்கியம் Interrogative sentence -(இன்டெராகேட்டிவ் சென்டன்ஸ்).3. வியப்பு வாக்கியம் Exclamatory sentence -(எக்ஸ்க்ளமெட்டரி சென்டன்ஸ்).4. கட்டளை வாக்கியம் Imperative sentence -(இம்பரேட்டிவ் சென்டன்ஸ்).== '''''வானவில் நாவலின் போர்ச்சூழல் (எம்ஃபில் - ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு)''''''''.ஆய்வாளர்
ஜா. மதீனா, பெரியார்பல்கலைக்கழகம்,சேலம்..நெறியாளர் .முனைவர். ஜ. பிரேமலதா,தமிழ் இணைப் பேராசிரியர்,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி).சேலம் - 636 007.1.0.முன்னுரை .முத்தமிழ் என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம் பல்வேறு வடிவம் கொண்டுள்ளது. செய்யுள், உரைநடை என்னும் தமிழின் இரு பெரும் பிரிவுகளுள் உரைநடையானது சிறுகதை, புதினம், நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று பலவிதமாக வடிவெடுத்துள்ளது. இவற்றுள் புதினம், உலகனைத்தும் ஏற்று, போற்றும் இலக்கிய வடிவம் இன்றைய தமிழகத்தில் புதின இலக்கியம் நன்கு வளர்ந்து வருகிறது. இலக்கியங்களில் கற்பனை மிகுந்த, வேகமான வளர்ச்சியைக் காட்டுவது புதினம். மாறிவரும் இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்ப மக்களின் மனதோடு ஒன்றிவரும் இலக்கியம் புதினமாகும். இப்புதினம் சமூக நிலையை அவலங்களை வெளிப்படுத்துவதுடன் மனித மனங்களின் நிலைகளையும் எடுத்து இயம்புகின்றன.மனித மனங்களை, வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இந்தப் புதினங்கள் வெளிவருகின்றன. இன்றிய புதினங்கள், நடப்பியல் நிகழ்ச்சிகளைக் கதைக் கருவாகக் கொண்டு அமைவதால், சமுதாயத்தில் நீங்காத இடம் பெறுகின்றன. மனிதனின் உணர்வுகளையும், செயல்பாடுகளையும் புதினங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. மனித மனங்களை கவரும் மனித நிகழ்வு கவர்ந்த நிகழ்வுகள் இப்புதினங்களில் இடம் பெறுகின்றன. சமூக மக்களின் வாழ்க்கைமுறையை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இந்தப் புதினங்கள் வெளிவருகின்றன. இன்றையப் புதினங்கள், நடப்பியல் நிகழ்ச்சிகளைக் கதைக் கருவாகக் கொண்டு அமைவதால், சமுதாயத்தில் நீங்காத இடம் பெறுகின்றன. மனிதனின் உணர்வுகளையும், செயல்பாடுகளையும் புதினங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. இக்காலச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக புதினங்கள் அமைகின்றன.
1.2.ஆய்வின் தலைப்பு . வானவில் நாவலின் போர்ச்சூழல் என்பதே இந்த ஆய்வின் தலைப்பாகும்..1.3.ஆய்வின் நோக்கம் . உலக இலக்கிய வரலாற்றில் இரஷ்ய இலக்கியங்களுக்கு என தனி இடமுண்டு. அதற்கு முக்கிய காரணம் இரஷ்ய இலக்கியங்கள் அவர்கள் நாட்டு மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாக அமைந்திருப்பதே காரணமாகும். அவ்வகையில் """"வானவில்"" என்னும் இந்நாவலில், மக்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அப்படியே உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்தின் நிலையை எடுத்துக் கூறுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்..1.4.ஆய்வின் எல்லை . வானவில் என்னும் புதினம் மட்டுமே ஆய்வு எல்லையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
1.5.ஆய்வின் கருதுகோள் . போர் தேவையா தேவையில்லையா என்பது பற்றிய கருத்தியலை வானவில் நாவலின் வழி ஆராய்வதே கருதுகோள் ஆகும்..== '1.6.ஆய்வு அணுகுமுறை'' ==. புதினத்தில் இடம்பெற்றுள்ள செய்திகளை வகைப்படுத்திக் காட்டுவதற்காகப் பகுப்புமுறை ஆய்வும், நிகழ்ச்சிகளை விளக்குவதற்காக விளக்க முறை ஆய்வும் சமுதாய நிகழ்வுகளை உணர்த்துவதற்காகச் சமூகம் பற்றி சமூகவியல் ஆய்வும் பயன்படுத்தப்பட்டுள்ளன.. 1.7.ஆய்வு மூலங்கள் . இந்த ஆய்விற்கு முதன்மைச் சான்றாதாரமாக விளங்குவது ‘வானவில்’ என்ற புதினம். மேலும், புதினம் பற்றிய பிற நூல்கள், இலக்கிய நுhல்கள், புதினம் பற்றிய ஆய்வேடுகள் ஆகியவை துணை ஆதாரங்களாக அமைகின்றன.
1.7.1.முதன்மை ஆதாரம் . வாண்டா வாஸிலெவ்ஸ்கா அவர்கள் எழுதியுள்ள ‘வானவில்’ புதினம் மட்டுமே இந்த ஆய்விற்கு முதன்மை ஆதாரமாக அமைந்துள்ளது.. 1.7.2.துணைமை ஆதாரம் . நாவல் பற்றிய திறனாய்வு நுhல்கள், இலக்கியத் திறனாய்வு நுhல்கள், ஆய்வேடுகள், ஆய்விற்குத் துணைபுரிந்த ஏனைய நுhல்கள் துணைமை ஆதாரமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.. 1.8.ஆய்வேட்டின் அமைப்பு . இவ்வாய்வேடு ஆறு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
இயல் - 1 முன்னுரை ==. இயல் - 2 வானவில் நாவலின் கதையமைப்பு. இயல் - 3 பாத்திரப் படைப்பு. இயல் - 4 வானவில் சித்தரிக்கும் போர்ச்சூழல். இயல் - 5 வானவில் நாவலின் கட்டமைப்பு. இயல் - 6 முடிவுரை
1.9.இயல் பகுப்பு . முதலாம்இயல் .முதலாம் இயலில் முன்னுரையில் ஆய்வின் நோக்கம், ஆய்வின் எல்லை, ஆய்வு அணுகுமுறை, ஆய்வு மூலங்கள் முதலியன கூறப்பட்டுள்ளன.. இரண்டாம் இயல் .வானவில் நாவலின் கதையமைப்பு கூறப்பட்டுள்ளன. வானவில் என்னும் புதினம் இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தாக்குதலை இரஷ்யா எதிர்கொண்ட விதம் பற்றிக் கூறுவது வானவில் புதினம் ஆகும். உலக இலக்கிய வரலாற்றில், இரஷ்ய நாட்டு இலக்கியத்திற்கு என ஒரு தனி இடம் உண்டு. அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே எடுத்துக்காட்டும் கருவியாக அவ்விலக்கியம் செயல்படுவதுதான் அதன் சிறப்பு. யுத்த காலத்திலே உலகத்திலேயே வெளி வந்த நுhல்களில் தலைசிறந்தது வானவில் என்னும் புதினம். இப்புதினம் ஸ்டாலின் விருதினைப் பெற்றுள்ளது. ."வாண்டா வாஸிலெவ்ஸ்கா" எனும் ருஷ்ய போலீஸ் பெண் எழுத்தாளரே வானவில் எனும் தலைப்பில் அமைந்த இந்த நாவலைப் படைத்தவர் ஆவார். ஊடலில் ஓடுகின்ற இரத்தத்தை உறையச் செய்யும் குளிரில் நடந்த இருதயத்தை நடுங்கச் செய்யும் போர் நிகழ்வுகளைத் தத்ரூபமாக மிடுக்கான தமிழ் நடையில் ஓடவிட்டு வாசகர்களை இழுத்துப் பிடித்துப் பறக்க வைக்கும் அளவுக்கு இந்நாவலை மொழிப்பெயர்த்தவர்கள் ருஷ்ய மொழிப்பெயர்ப்புகளில் தேர்ந்த அந்நாளைய மொழிப்பெயர்ப்பாளர்களான ஆர். ராமநாதன், ஆர். எச். நாதன் ஆகிய இருவருமே ஆவர். தமிழில் இந்நாவலை பெரும்பாலானோர் விரும்பிப் படிக்கக் காரணம் அவர்களுடைய சரளமான மொழிப்பெயர்ப்பே காரணம் ஆகும்.‘வானவில்’ என்னும் கதையானது கிராம சோவியத் என்னும் இரஷ்ய நாட்டின் கிராம மக்கள் ஜெர்மானியரின் தாக்குதல்களை எதிர்கொள்வதை மையமாகக் கொள்கிறது. ஓலினா என்னும் பெண்ணை அவர்கள் சித்திரவதைச் செய்கின்றனர்.
தங்களை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஜெர்மானியர்கள் கொல்லுகின்றனர். அவர்களை எவராலும் தடுக்க முடியவில்லை. கிராம மக்கள் அனைவரும் ஜெர்மானியர்களைச் சபிக்கின்றனர். பின்பு ஒரு கட்டத்தில் செம்படையினர் வந்து ஜெர்மானியர்களை வென்று கிராமத்தை மீட்பதாகக் கதை முடிகிறது.. மூன்றாம் இயல் .மூன்றாம் இயல் பாத்திரப் படைப்பு ஆகும். இதில் முதன்மைப் பாத்திரப்படைப்பு, துணைப் பாத்திரப் படைப்பு, எதிர்நிலை பாத்திரப்படைப்பு பற்றி இவ்வியலில் ஆராயப்படுகிறது. வாண்டாவாஸிலெவ்ஸ்காவின் வானவில் புதினத்தின் பாத்திரங்களை முதன்மைப் பாத்திரங்கள்-துணைப் பாத்திரங்கள்-எதிர்நிலைப் பாத்திரங்கள்- பிற மாந்தர்கள் என பகுக்கப்பட்டுள்ளனர்.முதன்மைப் பாத்திரங்கள் .1. பெடோஸ்யா கிராவ்சக்.2. ஒலினா கோஸ்ட்யுக்.3. மல்யுச்சிக்கா
4. மாலாஷாதுணைமைப் பாத்திரங்கள்1. வாஸ்யா.2. ஓல்கா பலான்சக்.3. எவ்டோக்கிம்.4. குரோக்காஷ்.5. செக்கோரிக்காஎதிர்நிலைப் பாத்திரங்கள் .1. ஜெர்மன் தளபதி குர்ட் வெர்னர்
2. புஸ்ஸி. பிற மாந்தர்கள்''' .1. மிஷ்கா.2. ஸாஷா.3. ஸினா.4. லிவான்யுச்சிக்கா
5. குரோக் காஷ் மனைவி.6. உபாத்தியாயினி.7. ஸெர்யோஷா.8. காப்ளிக் கிராம அதிகாரி.9. நொண்டி அலெக்சாண்டர்.10. டெர்பிலிக்கா
11. ப்ரோஸ்யா.12. கோர்பினா.13. பன்யுச்சிக்கா.14. பெல்சாரிக்கா.15. மிட்யா.16. இளம் மருத்துவன்
17. ஜெர்மன் சார்ஜண்ட்.18. ஜெர்மன் சிப்பாய்கள்.19. செம்படை வீரர்கள்.20. ஐவான்.நான்காம் இயல் . நான்காம் இயலான வானவில் சித்தரிக்கும் போர்ச்சூழல், இதில் போரில் மக்கள் அடைந்த அவல நிலையையும், அவர்கள் எதிர்கொண்ட விதத்தையும் குறித்து ஆராயப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் கி.பி.1939-1945ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. உலகில் இருந்த பெரிய வல்லரசுகள், நேச நாடுகள், மற்றும் அச்சு நாடுகள் என இரு எதிரெதிர் அணிகளாகப் பிரிந்து போரில் ஈடுபட்டன. முதல் உலகப் போருக்கு ஜெர்மனிதான் காரணம் என்பதை உலக நாடுகள் உணர்ந்து, ஜெர்மனியை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டன. 1941ஆம் ஆண்டு ஜீன் 22ஆம் நாள் இரஷ்யாவுடன் செய்து கொண்ட போர்த் தொடுக்காத ஒப்பந்தத்தை மீறி உ ஹி ட்லர் இரஷ்யா மீது படையெடுத்தார். ஹிட்லர் ரஷ்யா மீது போர்த் தொடுக்கும்போது அங்கு குளிர்காலம். இதனால் ஹிட்லரின் படை வீரர்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், இரஷ்யர்கள் பின்பற்றிய போர்க்கொள்கை அழித்துப் பின்வாங்குதல் ஆகும். இதனால் அவர்கள் முக்கிய பாலங்களை அழித்துப் பின்வாங்கினர். இது ஹிட்லருக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. ஹிட்லர் சோவியத் யூனியனை கைப்பற்ற செய்த நடவடிக்கைகளும், கொடுமைகளும் வானவில் புதினம் எடுத்துக் கூறுகிறது.
ஐந்தாம் இயல் .ஐந்தாம் இயலான வானவில் நாவலின் கட்டமைப்பு என்பதில் கதைப் போக்கு, கதைக்கரு, காலப்பின்னணி, கதைப்பின்னல், உத்திகள் ஆகியன ஆராயப்படுகின்றன. வானவில் நாவலில் கதைப்பின்னலானது தொடக்கம் முதல் இறுதிவரை ஒரே சீராக அமைகிறது. கிராம சோவியத் என்னும் கிராமத்தின் நிகழ்வுகள் தான் கதைப்பின்னலாய் அமைந்து உள்ளது. அந்த கிராம மக்கள் ஜெர்மனியருக்கு எதிராக செயல்பட்டு பெற்ற வெற்றி கதையின் முடிவாய் அமைக்கப்பட்டுள்ளது. வானவில் நாவலல் நடைபெறும் காலம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் இரஷ்யா மிகுந்த பனிப் பொழிவினை உடைய நாடு ஆகும். ஹிட்லர் ரஷ்யா மீது போர் தொடுத்த காலம் அங்கு பனிக்காலம் ஆகும். ஜெர்மனியருக்கு பழக்கமில்லாத காலம் ஆகும். நாவல் முழுவதும் பனிக்காலமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் காட்டப்பட்டுள்ளன..ஆறாம் இயல் . ஆறாம் இயலான முடிவுரையில் ஐந்து இயல்களிலும் பெறப்பட்ட செய்திகள் வழி ஆய்வு முடிவுகள் கூறப்பட்டு உள்ளன. அதனைத் தொடர்ந்து, ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள நூல்கள் துணை நூற்பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன..துணைநூற்பட்டியல் ==.வாண்டா வாஸிவெல்ஸ்கா, வானவில், நிய செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை.
ஸ்க்ரும் கையெடு.ஒரு வரையறுக்கப்பட்ட வழிகாட்டி.முக்கிய வழிமுறைகள்.தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இசுக்கிர அல்லது ஸ்க்ரும் கட்டமைப்பு/ முறையியல் கென் சுவாபர் (Ken Schwaber) மற்றும் ஜெஃப் சதர்லேண்டு (Jeff Sutherland) ஆகியோரால் 1993 ஆம் ஆண்டு முறைப்படுத்தப்பட்டது..ஸ்க்ரும் கையேட்டின் நோக்கம்.ஸ்க்ரும் என்பது சிக்கலான தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் மேலும் தக்கவைப்பதற்கான கட்டமைப்பாகும். இந்த வழிகாட்டி ஸ்க்ருமின் பாத்திரங்கள், ஆர்ட்டிபாட்டுகள் அல்லது களஞ்சிய பொருட்கள் மற்றும் அதற்க்கான விதிகளை ஒன்றாக கொண்டுள்ளது.
கென் சுவாபர் மற்றும் ஜெஃப் சதர்லேண்ட் சேர்ந்து ஸ்க்ரம் உருவாக்கினார்கள். இந்த ஸ்க்ரம் கையேடு அவர்கள் மூலம் வழங்கப்படுகிறது. அவர்கள் தான் ஸ்க்ரம் கையேட்டின் பின்னால் இருக்கும் மூல காரணிகள்..ஸ்க்ருமின் வரையறை.மக்களின் சிக்கலான தகவமைப்பு பிரச்சனைகளை தீர்க்க வல்ல கட்டமைப்பு ஸ்க்ரும் ஆகும். இது மேலும் நல்ல திறனுடனும், படைப்பாற்றலும் கொண்ட ஒரு தரமான தயாரிப்புகளை செய்ய உதவுகிறது. .ஸ்க்ரும்:.1. மிக எளிமையானது.2. எளிதாக புரிந்துகொள்ளக்கூடியது
3. அதனை மாஸ்டர் செய்வது என்பது கடினம்.ஸ்க்ரம் செயல்முறை கட்டமைப்பு 1990 களின் ஆரம்பத்தில் இருந்து சிக்கலான தயாரிப்பு மேம்பாட்டு மேலாண்மை செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்க்ரம்என்பது ஒரு செயல்முறையோ அல்லது உத்த்யோ அல்ல மாறாகவெவ்வேறு செயல்முறைகளையும் உத்திகளையும் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். ஸ்க்ரும் உங்களின் தயாரிப்பு மேலன்மையையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து அதன் பலாபலன்களை தருகிறது..ஸ்க்ரும் கட்டமைப்பனாது ஸ்க்ரும் குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய பாத்திரங்கள் அல்லது ரோலஸ், கோப்புகள் மற்றும் விதிகளை கொண்டது. ஸ்க்ருமின் ஒவ்வொரு பகுதியும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திர்க்காக் உருவாக்கப்பட்டது அது ஸ்க்ரும் பயன்பாட்டிற்கும் வெற்றிக்கும் உதவுகிறது..இந்த புத்தகம் எவ்வாறு ஸ்க்ரும் விதிகள், ஸ்க்ரும் பாத்திரங்களின் வேலைகள் அதற்க்கான கோப்புகள் போன்றவை பயன்படுத்தப்பட வேண்டும் என விளக்குகிறது. இது பயன்பாடு வெவ்வேறு இடங்களில் மாறுபடலாம்..ஸ்க்ருமின் தத்துவம்.ஸ்க்ரும் ஒரு அனுபவாதம் சார்ந்த செயல்முறை கட்டுப்பாட்டு கோட்பாட்டின் மூலம் உருவாகியது. அறிவு என்பது நாம் அறிந்திருக்கும் அனுபவம் மற்றும் செய்யும் முடிவுகளில் இருந்து வரும் அனுபவங்களினால் எட்டப்படுகிறது என்பதை அனுபவாதம் உறுதிசெய்கிறது.
ஸ்க்ரும் பல் செயலாற்று (இடரேடிவ்), கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் போன்ற முறைகளை பயன்படுத்தி முன்கூட்டியே கணிக்கவும் இடர்களை கட்டுபடுத்தவும் உதவுகிறது..அனுபவம் சார்ந்த நிகழ்முறை கட்டுப்பாட்டினை மூன்று முக்கிய தூண்கள் நிர்வகிக்கின்றனாவ அவையாவையெனில்:.1. வெளிப்படைத்தன்மை(transparency).2. பார்வையிடுதல் (இன்ஸ்பெக்க்ஷன்).3. தழுவல் (அடேப்ஷன்).வெளிப்படைத்தன்மை
பணியின் முக்கிய அம்சங்கள் விளைவுக்கு பொறுப்பானவர்கள் காணும்படி வெளிப்படையாக இருத்தல் வேண்டும். அந்த முக்கிய அம்சங்களும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஏதேனும் ஒரு தரநிலைய கொண்டிருத்தல் அவசியம். இது அனவரும் ஒரே விதத்தில் புரிந்து கொள்ள உதவும்..எடுத்துக்காட்டு:.1. ஒரு செயல்முறையில் உள்ள வார்த்தைகள்அனைவரிடமும் பகிரப்பட்டு அது ஒரே அர்த்தத்தைகொடுக்க வேண்டும்..2. "செய்துமுடிக்கபட்டது" என்பதற்கான விளக்கம் வேலை செய்பவர்க்களுக்கும் அதனை அமோதிப்பவர்களும் ஒத்துக்கொள்ள கூடிய வகையில் இருக்கவேண்டும்..பார்வையிடுதல் (இன்ஸ்பெக்க்ஷன்).ஒரு ஸ்பரின்ட் குறிக்கோளை அடைவதில் உள்ள தேவையற்ற தடைகளை கலையவேண்டும் என்றால் ஸ்க்ரும் பயனாளிகள் அடிக்கடி ஸ்க்ரும் தரவுகளையும், ஆர்டிபாக்ட்டுகளைரும் மற்றும் முன்னேற்றத்தை பார்வையிடுதல் அவசியம். அவர்களின் பார்வையிடுதல் அவர்களின் வேலையை தடை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பார்வையிடுதல் பணி அனுபவம்மிக்க கண்காணிப்பாள்ர்களால் செய்யும் வேலை நேரத்தில் பொழுது சிறந்த பலன்களை தருகிறது.
தழுவல் (அடேப்ஷன்).ஒரு கண்காணிப்பாளர் ஒன்றோ அதற்க்கு மேற்ப்பட்ட செயல்கள் ஏற்கத்தக்க வரம்பில் இருந்து விலகிச் செல்வததாக இருந்தால் தயாரிக்கும் பொருளானது ஏற்றுக்கொள்ளப்படாத. ஆகையால் நாம் இந்த செயல்களையோ அல்லது தயாரிப்பையோ நாம் சரி செயாவேண்டும். நாம் எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்தல் மேலும் பல செயல்கள் விலகிச் செல்வதை தடுக்க முடியும்..ஸ்க்ரும் நான்கு நிகழ்வுகளில் கண்காணிப்பு மற்றும் தழுவல் பணிகளை செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகிறது, அவையாவையெனில்:.1. ஸ்பரின்ட் திட்டமிடுதல் போது.2. தினமும் நடக்கும் ஸ்க்ரும் சந்திப்பின்போது.3. ஸ்பரின்டை மறுபரிசீலனை செய்யும்போது
4. பின்னோக்கிய ஸ்பரின்ட்.ஸ்க்ரும் குழு.ஸ்க்ரும் குழுவானது ஒரு தயாரிப்பு உரிமையாளர், தயாரிக்கும் குழு மற்றும் ஒரு ஸ்க்ரும் மாஸ்டரை/தலைவரை கொண்டிருக்கும். ஸ்க்ரும் குழுவானது சுய ஒழுங்குடனும் பன்முக செயல்திறனும் கொண்டிருக்கும். சுய ஒழுங்குடன் செயல்படும் குழுவானது சிறந்த முறையில் எப்படி வேலையினை முடிப்பது என்பதிலேயே தீவிரமாக இருக்கும். அது போன்ற குழுக்களுக்கு வெளியிலிருந்து யாரும் வழி காட்ட வேண்டிய அவசியமில்லை. பல்துறை குழுவினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை மற்றவரை எதிர்பார்க்காமல் தாங்களே முடிக்க கூடிய திறன் பெற்றிருக்கிறார்கள். .ஸ்க்ரும் பொறுத்தவரையில் உருவாக்கப்படும் குழுவானது இணக்கத்தையும், படைப்பாற்றளையும், உற்பத்திதிறனையும் சாதகமாக்கும் வகையிலும் அதிகப்படுத்தும் வகையிலும் இருக்கும்..ஸ்க்ரும் குழு தனது தயாரிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாகவும், மறுசெய்கை முறையிலும் தந்து அதன் செயல்பாடு குறித்த கருத்துக்களை பெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக தயாரிக்கப்பட்ட முழுமையன் தயாரிப்புகள் எப்பொழுதுமே ஒரு உபயோகப்படும் பொருளாகத்தான் இருக்க முடியும்..தயாரிப்பின் உரிமையாளர் (Product Owner)
ஒரு பொருளையும் அதனை தயாரிக்கும் குழுவின் மதிப்பையும அதிகப்படுத்தும் பொறுப்பு தயாரிப்பு உரிமையாளரை சேர்ந்ததாகும்.இதனை செயல்படுத்தும் முறை நிறுவனங்களிடையே வேறுபட வாய்ப்பிருக்கிறது..ஒரு தயாரிப்பின் எஞ்சிய வேலைகளின் (product backlog) முழு பொறுப்பும் தயாரிப்பு உரிமையலாரையே சாரும். ஒரு தயாரிப்பின் எஞ்சிய வேலைககளை மேலாண்மை செய்வதில் பின்வரும் செயல்களும் அடங்கும்:.• தயாரிப்பின் எஞ்சிய வேலைகளை தெளிவாக வரையறுத்தல்.• தயாரிப்பின் நோக்கம் மற்றும் இலக்குக்களை அடைய எஞ்சிய வேலைகளை வரிசைப்படுத்துதல.• டேவலப்மன்ட்குழவின் வேலைகளை மேம்படுத்துதல்.• தயாரிப்பின் எஞ்சிய வேலைகளை அனைவருக்கும் தெரியுமபடி செய்தல், மேலும் ஸ்க்ரும் குழு அடுத்து என்ன செய்ய இருக்கிறார்கள் என்று அனைவரும் அறியும்படி செய்தல்.
• டேவலப்மன்ட்குழு தயாரிப்பின் எஞ்சிய வேலைகளை அனைவருக்கும் புரியும்படி செய்தல்..இந்த மேற்ச்சொன்ன வேலைகளை தயாரிப்பின் உரிமையலரோ அல்லது டெவலப்மன்ட் குழுவோ செய்யலாம், ஆனால் தயாரிப்பின் உரிமையலரே பொறுப்பானவர்..தயாரிப்பின் உரிமையாளர் ஒரே ஒரு நபராகத்தான் இருக்க முடியும். தயாரிப்பின் உரிமையாளர் ஒரு குழுவின் விருப்பங்களை தயாரிப்பின் உரிமையாளர் பிரதிபலிக்கலாம. ஆனால் தயாரிப்பின் எஞ்சிய வேலைகளின் முன்னுரிமைகளை மாற்றும் உரிமை தயாரிப்பின் உரிமையாளருக்கு மட்டுமே உண்டு..ஒரு தயாரிப்பு உரிமையாளர் வெற்றி பெறுவதற்கு ஒட்டுமொத்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களும் அவருடைய முடிவகளை மதிக்க வேண்டும். டேவலப்மன்ட்குழு முழுக்க முழுக்க தயாரிப்பு உரிமையாளரின் முன்னுரிமைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்..டேவலப்மன்ட்குழு.ஒரு ஸ்பிரிண்டில் ஒரு "முழுமையான" வேலை செய்யக்கூடிய ஒரு தயாரிப்பை உருவாக்கும் திறன்மிக்க நிபுணர்கள் ஒரு டேவலப்மன்ட்குழுவில் இருப்பார்கள். அடுத்தடுத்த தயாரிப்புக்களை உருவாக்கும் பொறுப்பு டேவலப்மன்ட்குழுவை சார்ந்ததாகும்.
ஒரு நிறுவனமானது டேவலப்மன்ட் குழு தங்களது வேலைகளை ஒழுங்குபடுத்துவதர்க்கும் மேலாண்மை செய்வதற்கும் தேவையான அதிகாரத்தை வழங்குகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் சினெர்ஜி டேவலப்மன்ட் குழுவை மிகுந்த செயல்திறனுடன் செயல்பட வைக்கிறது..டேவலப்மன்ட் குழு பின்வரும் இயல்புகளை கொண்டிருக்கும்:.• அவர்கள் தங்களுக்குள்ளே ஒழுங்கமைத்துக்கொள்வார்கள். குழுவில் உள்ள எந்த ஒரு நபரும் எவ்வாறு தயாரிப்பு எஞ்சிய வேலைகளை ஒரு வேலை செய்யும் தயாரிப்பது என்று கூறுவதில்லை.• டெவலப்மன்ட் குழு பல்வேறு வேலைகளை செய்யும் திறன் படைத்தவர்கள், இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு முழுமையான தயாரிப்பினை முடிக்கும் திறன்களை கொண்டிருப்பார்கள்..• ஸ்க்ரும் டேவலப்மன்ட் குழுவில் உள்ள அனைவரையும் "டெவலப்பர்" என்றே குறிப்பிடுகிறது. அவர்கள் வெவ்வேறு வேலைகளை செய்தாலும் இந்த விதி பொருந்தும்..• ஸ்க்ரும் டெவலப்மன்ட் குழுக்களில் துணை குழுக்களை அனுமதிப்பதில்லை.
• குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு தனித்திறமை மற்றும் தனிப்பட்ட நோக்கம் இருந்தாலும் பொறுப்பு டேவலப்மன்ட் குழுவையே சாரும்..டெவலப்மன்ட் குழுவின் அளவு.ஒரு ஸ்ப்ரின்டில் முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை சுறுசுறுப்பான வகையில் முடிக்கும் அளவில் நபர்கள் இருக்கும் அளவு குழுவின் அளவு இருந்தால் போதும். மூன்று பேருக்கும் குறைவான அளவு நபர்கள் இருந்தால் நபர்களுக்களுக்கிடையேயான தொடர்புகளை குறைத்து உற்பத்தித்திறனை குறைத்துவிடும். சில நேரங்களில் சிறிய டெவலப்மன்ட் குழுக்கள் ஸ்ப்ரின்டின் பொழுது திறன் குறைபாடுகளின் காரணமாக ஒரு முழுமையானதொரு தயாரிப்பினை வழங்கமுடிவதில்லை. ஒன்பது பேருக்கு மேல் இருக்கும் குழுவில் ஒத்திசைவாக வேலை செய்வதில் வெவ்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.தயரிப்பின் உரிமையாளர் மற்றும் ஸ்க்ரும் மாஸ்டர் இந்த குழுவின் என்ன்க்கையில் சேர்க்கப்படுவதில்லை..ஸ்க்ரும் மாஸ்டர்:.ஸ்க்ரும் சரியாக புரிந்துகொள்ளப்பட்டு மேற்கொள்ள படுவதை உறுதி செய்பவர் ஸ்க்ரும் மாஸ்டர். ஸ்க்ருமின் கோட்பாடுகள், நடைமுறைகள் மற்றும் விதிகள் சரியாக பின்பிற்றப்படுகிறதா என்பதை ஸ்க்ரும் மாஸ்டர் உறுதி செய்கிறார்..ஒரு ஸ்க்ரும் குழுவில் ஸ்க்ரும் மாஸ்டர் தலைவராகவும், தொண்டராகவும் பணியாற்றுகிறார். ஸ்க்ரும் மாஸ்டர் ஸ்க்ரும் குழுவில் உள்ள தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். ஸ்க்ரும் குழுவினால் ஏற்படும் நன்மைகளை ஸ்க்ரும் மாஸ்டர் அதிகப்படுத்தும் நோக்கில் வேலை செய்கிறார்.
தயாரிப்பு உரிமையாளருக்கு ஸ்க்ரும் மாஸ்டரின் சேவைகள்.தயாரிப்பின் எஞ்சிய வேலைகளை சிறப்பாக மேலாண்மை செய்வது..தயாரிப்பின் எஞ்சிய வேலைகளை ஸ்க்ரும் குழு தெளிவாகவும் முழுமையாகவும் புரிந்து கொள்ள உதவுதல்.தயாரிப்பை திட்டமிடுதல்.தயாரிப்பு உரிமையாளர் எஞ்சிய வேலைகளை வரிசைப்படுத்துதலை அறிந்துள்ளதை உறுதிப்படுத்துதல்.தயாரிப்பில் துரித்த்தன்மை அல்லது அஜிலிட்டி இருப்பதை உறுதி செய்தல்
ஸ்க்ரும்க்கு தேவையான ஈவ்ண்டுகளை நிர்வகித்தல்.டெவலப்மன்ட் குழுவிற்கு ஸ்க்ரும் மாஸ்டரின் சேவைகள்.டெவலப்மன்ட் குழுவிற்கு சுய ஒழுக்கமும் மற்றும் பல் திறன் செயலபடுகளையும் கற்றுத் தருவது..உயர் தரமான பொருட்களை தயார் செய்ய உதவுவது.டெவலப்மன்ட் குழுவிற்கு ஏற்ப்படும் சிக்கலை தீர்த்து முன்னேருவதர்ககான வழிகளை அமைத்தல்.ஸ்க்ரும் இவன்ட்களை ஒருங்கிணைத்து செயல்படுதல்
ஸ்க்ரும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் நிலையில் டெவலப்மன்ட் குழுவிற்கு தேவையான உதவிகளை செய்தல்..பகுப்பு:மென்பொருள் மேம்பாட்டு செயல்பாட்டு முறைகள்.ஒரு எக்சு.எம்.எல் ஆவணத்தை உருவாக்கிய பின் அந்த ஆவணம் ஒரு வரையறைச் சரியாகப் பின்பற்றி செல்லுபடியாக்கிறதா (Validates) என்று பார்ப்பது அவசியமாகிறது. செல்லுபடியாகும் எக்சு.எம்.எல் ஆவணம் என்பது அதன் உறுப்புகள், பண்புகள், பிற கூறுகள் வரையறைக்கு ஏற்ற மாதிரி உள்ளதா என்பதை உறுதிசெய்தல் ஆகும். .எக்சு.எம்.எல் பரிந்துரைகள் எக்சு.எம்.எல் ஆவணங்களை செல்லத்தக்கதாகப் பார்க்கும் பாகுபடுத்திகளை இரண்டு வகையாகப் பிரிக்கிறது. . செல்லுபடியாக்கா பாகுபாடுத்திகள் (non-validating). செல்லுபடியாக்க பாகுபடுத்திகள் (validating)
முதலாவது வகை ஒர் ஆவணம் எக்சு.எம்.எல் விதிகளுக்கு ஏற்ப நல்லமைவு (well-formed) கொண்டுள்ளதாக என்று மட்டும் சரிபார்க்கும். இரண்டாவது வகை ஓர் ஆவணம் டி.ரி.டி (DTD - Document Type Definition) அல்லது எக்சு.எம்.எல் இசுகீமாவில் (XML Schema) வரையறை செய்யப்பட்ட விதிகளுக்கு ஏற்ப செல்லுபடியாகிறதா என்று சரிபார்க்கும். இது எக்சு.எம்.எல் விதிகளுக்கு ஏற்பவும் ஆவணம் அமைந்துள்ளதா என்றும் பார்க்கும்..டி.ரி.டி அல்லது எக்சு.எம்.எல் இசுகீமா ஆகியவை குறிப்பிட்ட தேவைகளுக்காக எக்சு.எம்.எல் ஆவணக்களின் கட்டமைப்பை வரையறை செய்யப் பயன்படும் குறியிட்டு முறைகள் ஆகும். இந்த வரையறைகள் எக்சு.எம்.எல் ஆவணம் எவ்வாறு அமையும் என்பதை தெளிவாக பல்தரப்பட்ட பங்குத்தாரகளுக்கு உறுதி செய்கிறது. மேலும் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி ஒர் ஆவணம் இந்த வரையறைக்கு செல்லுபடியாகும் என்பதைப் பார்க்கவும் உதவுகிறது..மாங்கோடிபி(MongoDB) என்பது குறுக்கு தள ஆவணம் சார்ந்த தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத (schema-less) வினவு மொழியாகும்(nosql). மாங்கோடிபியானது ஜேசன் (JSON) போன்றவற்றிற்கான ஆதரவிற்காக தொடர்புசால் தரவுதளத்தை முற்றிலுமாக தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறமூல மற்றும் கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்..இதன் பெயர் காரணம், MongoDB, "humongous" (பெரிதான) எனற ஆங்கில சொல்லின் விரிவமைப்பானது..பொருளடக்கம் . /மாங்கோடிபி என்றால் என்ன?/
/மாங்கோடிபியை நிறுவுதல்/. /மாங்கோடிபியைச் செயல்படுத்துதல்/. /மாங்கோடிபியைப் பயன்படுத்த தொடங்குதல்/. /மாங்கோடிபிக் கட்டளைகள்/. /மாங்கோடிபிக் க்ருட்(CRUD) செயல்பாடுகள் /.பகுப்பு:மாங்கோடிபி
மாங்கோடிபி என்பது ஒரு திறமூல தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத வினவு மொழி வகையை சார்ந்தது. இது உயர் செயல்திறன்(High Performance), தடைகளின்றி கிடைத்தல்(High Availability) மற்றும் தானியங்கி முறையில்(Automatic Scalability) விரித்து இயங்கும் தன்மைகளை கொண்டது..கட்டமைப்புள்ள வினவு மொழிக்கும் மாங்கோடிபிக்கும் உள்ள சொல்லியல் தொடர்புகள்.ஆவணத் தரவுத்தளம்.இது ஒரு ஆவணத் தரவுத்தளம் ஆகும். இதன் தரவுக் கட்டமைப்பு புலம் மற்றும் அதன் மதிப்பையும் கொண்ட இணைகளாக இருக்கும். மாங்கோடிபி ஆவணங்கள் ஜசோன்(JSON) பொருட்களை ஒத்து இருக்கும். புலத்தில் இருக்கும் மதிப்புகள் ஒரு ஆவணமாகவோ, அல்லது வரிசைகலாகவோ அல்லது ஆவனங்களின் வரிசையாகவோ இருக்கலாம்..ஆவணத் தரவுத்தளம் எடுத்துக்காட்டு.name:"சிவா",
பகுப்பு:மாங்கோடிபி.விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவுதல். முதலில் மாங்கோடிபி பதிவிறக்க பக்கத்திலிருந்து தேவையான இயங்குதளத்திற்கான, (Windows, Linux or MAC), மென்பொருளை பதிவிறக்கம் செய்யுங்கள்.. எந்த பதிப்பை பதிவைரக்கவேண்டும் என்பதை அறிய கிழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை கொடுக்க வேண்டும்: . பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பினை பிரித்தெடுத்து ( Windows-இல் ) "c:\mongodb" என்ற அடைவுக்கு மாற்றவும் . நீங்கள் உங்கள் மாங்கோடிபி மென்பொருளை செயல்படுத்துவதற்கு தயாராகிவிட்டீர்கள்
பகுப்பு:மாங்கோடிபி.மாங்கோடிபிற்க்கான தரவு அடைவை அமைத்தல்.மாங்கோடிபி அதன் கோப்புகளை சேமிக்க ஒரு தரவு கோப்புறை அல்லது அடைவு தேவைப்படுகிறது.மாங்கோடிபியின் இயல்பிருப்பு அடைவு c:\data\db ஆகும். இதனை உருவாக்க பின் c:\ அடைவிற்கு சென்று பின்வரும் வழிகளை பின்பற்றவும்:.Mongod.exe -dbpath விருப்பத்தை பயன்படுத்தி தரவு கோப்புகளை வேறொரு மாற்று பாதையில் இருக்குமாறு குறிப்பிட முடியும். எடுத்துக்காட்டாக:.மாங்கோடிபியை தொடங்குதல்.align=right|thumb|alt=மாங்கோடிபி தொடங்குதல்|மாங்கோடிபி தொடங்குதல்
மாங்கோடிபியை தொடங்குவதற்கு கட்டளை துண்டியிலிருந்து பின்வரும் கட்டளையை செயல்படுத்தவும்:.இது முக்கிய மாங்கோடிபி தரவுத்தள செயல்முறையை ஆரம்பிக்கும். "waiting for connections" என்ற பணியக வெளியீடு(console output) mongod.exe செயல்முறை வெற்றிகரமாக இயங்குகிறது என்பதை குறிக்கிறது..பகுப்பு:மாங்கோடிபி.மாங்கோடிபியுடன் இணைக்க.align=right|thumb|alt=மாங்கோடிபி ஷெல்|மாங்கோடிபி ஷெல்.மாங்கோடிபியுடன் இணைக்க mongo.exe என்ற கட்டளையை பயன்படுத்த வேண்டும். மாங்கோடிபியை இணைப்பதற்கு தொடங்குவதற்கு கட்டளை துண்டியிலிருந்து பின்வரும் கட்டளையை செயல்படுத்தவும்:
இதனை செயல்படுத்தும் பொழுது இயல்பாக நுழைவாயில் என் 27017ல் mongod.exe யுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்துவிடும். அது பின்வரும் படத்தில் உள்ளது போல ஒரு ஷெல்லை காண்பிக்கும்..தரவுத்தளத்தை தேர்வு செய்தல்.மாங்கோ ஷெல் தொடங்கியவுடன் டெஸ்ட் தரவுத்தளம் தேர்வு செய்யப்பட்டு விடும். தற்போது தெரிவு செய்யப்பட்ட தரவுத்தளத்தை பார்க்க பின்வரும் கட்டளையை இடவும்:.தொகுப்பு உருவாக்குதல் மற்றும் ஆவணத்தை உள்ளிடுதல்.இந்த பகுதியில் ஆவணங்களை தொகுப்பில் எப்படி உள்ளிடுவது என்று பார்ப்போம். இதற்காக mydb என்ற தரவுத்தளத்தையும் உருவாக்க உள்ளோம்..பொதுவாக மாங்கோடிபியானது ஒரு தொகுப்பினை முதல் முறை பயன்படுத்தும்போதே உருவாகிவிடும். ஒரு தொகுப்பில் ஆவணங்களை உள்ளிடுதளுக்கு முன் தொகுப்பு உருவாக்கபட்டிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. தற்போது தேர்வு செய்ப்பட்டுள்ள தரவுத்தளம் mydb இல்லையெனில் use mydb மூலம் mydb என்ற தரவுத்தளத்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும்.
இப்போது நாம் இந்த mydb தரவுத்தளத்தில் i மற்றும் j என்ற இரண்டு ஆவணங்களை உள்ளீடு செய்ய உள்ளோம், அதற்க்கான கட்டளை:.இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது mydb என்ற தரவுத்தளமும், testData என்ற தொகுப்பும் உருவாக்கப்பட்டு பின்பு அதில் இந்த ஆவணங்களும் உள்ளீடாகும்..பகுப்பு:மாங்கோடிபி.align=right|thumb|alt=மாங்கோடிபி கட்டளைகள்|மாங்கோடிபி கட்டளைகள்.தற்போது எந்த தரவுத்தளம் பயன்பாட்டில் உள்ளது என்பதை பார்வையிட.என்னென்ன தரவுத்தளங்கள் உள்ளன என்பதை பார்வையிட
நமக்கு தேவையான தரவுத்தளங்களுக்கு மாற.தேரிவு செய்யப்பட்ட தரவுத்தளத்தில் உள்ள திரட்டுக்களை அறிய.உங்களது மாங்கோடிபியின் பதிப்பு என்ன அது 32-பிட் அல்லது 64-பிட் என்பதனை அறிய/மாங்கோடிபியின் கட்டமைப்பு தகவல்கள் பெற.align=right|thumb|alt= மாங்கோடிபியின் கட்டமைப்பு தகவல்கள்|மாங்கோடிபியின் கட்டமைப்பு தகவல்கள்.உங்களது மாங்கோடிபியில் உள்ள ஒரு தரவுத்தளத்தின் புள்ளிவிவரங்களை பெற.உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் புள்ளிவிவரங்களை பெற
"ns" : "tawiki.page", // பெயர்வெளி(namespace). "count" : 122692, // ஆவணங்களின் எண்ணிக்கை(number of documents). "size" : 544218752, // திரட்டியின் அளவு எண்ணுன்மிகளில் (collection size in bytes). "avgObjSize" : 4435.6498, // சராசரி பொருளின் அளவு எண்ணுன்மிகளில் (average object size in bytes ).உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் அகவரிசைகளைப் பெற.கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் page என்பது திரட்டியாகும். மேலும் இந்த எடுத்துக்காட்டில் page என்ற திரட்டியில் ஒரே ஓரு அகவரிசையே உள்ளது.
உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் ஒட்டுமொத்த அகவரிசைகளின் அளவினை பெற.பகுப்பு:மாங்கோடிபி.முகம்மது நபி(சல்).முகம்மது நபி(சல்) கி.பி. 570இல் சவூதி அரேபியாவைச் சார்ந்த மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து பாட்டனார் அப்துல் முத்தலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திகாட்டினார்கள். சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம். .முகம்மது(சல்).இவ்வுலகின் இறுதி இறைத்தூதர்
பிறப்பு : .முகம்மது இப்னு அப்துல்லா.மக்கா.(இன்றைய சவூதி அரேபியாவில்).இறப்பு சூன் 8 632 (அகவை 62).மதீனா, அரேபியா (இன்றைய மதீனா, எஜாசு, சவூதி அரேபியா)
நினைவிடம் அல்-மஸ்ஜித் அந்-நபவி, மதீனா, சவூதி அரேபியா.மற்ற பெயர்கள் அபு அல்-காசிம் (குன்யா).இனம் அரபு.சமயம் இசுலாம்.பெற்றோர் தந்தை: அப்து அல்லா இப்னு அப்து அல்-முத்தாலிப்.தாய்: அமீனா பிந்த் வாகுப்
வாழ்க்கைத் துணை .மனைவிகள்: .கதீஜா (595–619).சவுதா பிந்த் சமா (619–632).ஆயிஷா பிந்த் அபி பக்ர் (619–632).அப்சா ப்ந்த் உமர் (624–632)
சாய்னாப் பிந்த் குசைமா (625–627).இந்த் பிந்த் அபி உமைய்யா (629–632).சானாப் பிந்த் ஜாஷ் (627–632).ஜுவாரியா பிந்த் அல்-ஹரித் (628–632).ரமியா பிந்த் அபி சுஃபியான் (628–632).ரைஹானா பிந்த் சாய்த் (629–631)
சஃபியா பிந்த் ஹுயாய் (629–632).மைமுனா பிந்த் அல்-ஹரித் (630–632).மரியா அல்-கிப்தியா (630–632).பிள்ளைகள் .மகன்(கள்): அல்-காசிம், அப்துல்லா, இப்ராகிம்.மகள்கள்: சைனப், ருக்கய்யா, உம் குல்த்தூம், பாத்திமா சஹ்ரா
ஒருவரை சமூக தலைவராக, ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள் அவரது கொள்கை கோட்பாடுகள் மற்றும் அங்க அசைவுகளை முழுமையாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பதை காணக் கிடைக்காது..ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்ட சமூகம் அவரது போதனைகள் கொள்கைள் மட்டுமல்லாமல் அவரது குணநலன்கள், அங்க அவையங்கள், நெளிவு சுளிவுகள், பேச்சு மூச்சுக்கள் என்று பலவற்றையும் கூர்மையாக கவனித்து துல்லியமாக அடுத்த தலைமுறைக்கு அறிவித்தது. உலக வரலாற்றில் இது போன்று எந்த ஒரு தலைவரின் வாழ்க்கை குறிப்பும் பதிவு செய்யப்பட்டிருக்காது..நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் இரண்டறக்கலந்து சமூக வாழ்விலும் பொது வாழ்விலும் பங்கேற்று வாழ்ந்தவரகள். தனிமையை விட்டும் ஒதுங்கியவர்கள். அவரது வாழ்வு ஒரு திறந்த புத்தகமாகவே இருந்தது. ஒளிவு மறைவில்லாத அவரது வாழ்க்கையின் நிலையை பற்றி அவரது தோழர்களே விவரிக்கின்றனர்..இதோ நபித்தோழர்கள் நேர்முக வர்ணனையை தருகிறார்கள்,.நபி (ஸல்) அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும் பிறரால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் அதிக நெட்டையானவர்களாகவோ அதிக குட்டையானவர்களாகவோ இல்லாமல் நடுத்தர உயரமானவர்களாகவும் அழகிய உடலமைப் பையுடையவர்களாகவும் சிகப்பு கலந்த வெண்மை நிறமுடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் முகம் பவுர்ணமி இரவின் சந்திரனைப்போல் பிரகாசிக்கும், மேனி ஒளி வீசிக்கொண்டிருக்கும்..தலைமுடி முற்றிலும் சுருண்டவையாகவோ முற்றிலும் நீண்டவையாகவோ இருக்கவில்லை. தலையில் தற்செயலாக வகிடு படிந்து விடுமாயின் அதை அப்படியே விட்டு விடுவார்கள். தலைமுடி தோள் புஜத்தை தொட்டுக் கொண்டிருக்கும். இரு புஜங்களுக்கும் இடைப்பட்ட தொலைவு அதிகமாகும். இரு புஜங்களுக்கு மத்தியில் நபித்துவ முத்திரை இருந்தது.
படர்ந்த நெற்றி, அடர்ந்த புருவம், இரு புருவங்களுக்கும் மத்தியில் ஒரு நரம்பு இருக்கும் கோபம் ஏற்படும் போது அது எம்பிக் கொள்ளும். முதன் முதலில் அவர்களை காண்போர் மூக்கு நீண்டதாக காண்பார். கவனித்துப் பார்த்தால் அதில் ஒளி வீசிக்கொண்டிருக்கும்..தாடி அடர்ந்திருக்கும் கன்னங்கள் மிருதுவாக இருக்கும், வாய் அகன்றதாகவும், பற்கள் இடைவெளி விட்டவையாகவும் இருக்கும். கழுத்து சுத்தமான வெள்ளியால் செதுக்கப்பட்ட உருவத்தைப் போல் அழகாயிருக்கும். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை முடியிருக்கும். அது கோடுகள் போன்று நீண்டதாயிருக்கும். நெஞ்சு (மார்பு) அகன்றிருக்கும். மார்பகத்திலும் வயிற்றிலும் முடியிருக்கும்..வயிறும் நெஞ்சும் சமமானதாக இருக்கும். முழங்கைகள், தோள் புஜங்கள், நெஞ்சின் மேற்பகுதி ஆகியவற்றில் முடியிருக்கும்..அவையவங்கள் அனைத்தும் நடுத்தரமானதாகவும் சதை பிடிப்புள்ளதாகவும் இருக்கும். இரு உள்ளங்கைகளின் மூட்டுக்களும் நீளமாக இருக்கும். உள்ளங்கை விரிந்திருக்கும். உள்ளங்கைகளும் பாதங்களும் சதை பிடிப்புள்ளதாக இருக்கும்..கை, கால், விரல்கள் பொருத்தமான அளவிருக்கும். பாதங்கால் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் சமமாய் இருக்கும். அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லை..நடக்கும் போது முன்புறம் சாய்ந்து நடப்பார்கள், பாதத்தைப் பலமாக எடுத்து, மெதுவாக வைப்பார்கள். அகலமாக அடி எடுத்து வேகமாக நடப்பார்கள். நடக்கும் போது மேடான பகுதியிலிருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் நடை இருக்கும்.
யாராவது அழைத்தால் திரும்பும்போது முகத்தை மட்டும் திரும்பாமல் முழுமையாகத் திரும்புவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கியே (பூமியை பார்த்தே) இருக்கும். வானத்தைப் பார்ப்பதை விட பூமியைப் பார்ப்பதில் அவர்களது பார்வை அதிகமாக இருந்தது..தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு பின்னால் வருவார்கள். சந்திப்பவர்களை ஸலாம் கூறி பேச ஆரம்பிப்பார்கள்..உளூச்செய்யும் போதும், தலைவாரும் போதும், செருப்பணியும் போதும் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பதை விரும்புவார்கள்..அவர்களது தலைமுடியிலும் தாடியிலும் சில முடிகள் நரைத்திருந்தன. சுமார் இருபது முடிகளே நரைத்திருந்தன..இஸ்மித் என்ற சுர்மாக்கூடு ஒன்று இருந்தது. ஒவ்வொரு இரவிலும் இரு கண்களிலும் மூன்று தடவைகள் சுர்மா இட்டுக் கொள்வார்கள்..இஸ்மித் சுர்மா இடுங்கள் அது பார்வையைக் கூர்மையாக்கும் இமைகளின் முடியை வளரச்செய்யும் எனவும் கூறுவார்கள்.
போர்வையும், சட்டையும் அவர்களது ஆடைகள். சட்டையை அதிகமாக விரும்புவார்கள்.அவர்கள் அணியும் காலணி (செருப்பு)களுக்கு இரு வார்ப்பட்டைகள் இருந்தன. வெள்ளியிலான மோதிரம் செய்து வலது கரத்தில் அணிந்திருந்தார்கள். அதில் முஹம்மது என்று ஒரு வரியும், ரஸூல் என்ற ஒரு வரியும், அல்லாஹ் என்ற ஒரு வரியும் செதுக்கப்பட்டிருந்தது. கடிதங்கள் எழுதும் போது இதனை முத்திரை யாக பயன்படுத்துவார்கள்..பெரும்பாலான சிரிப்பு புன்னகையாக இருக்கும், பேசும் போது அடுத்தவர்கள் மனனம் செய்யும் வண்ணம் இடைவெளியிட்டு தெளிவாக பேசுவார்கள், அவசியமில்லாமல் பேசமாட்டார்கள். அன்போடு பேசுவார்கள் அடுத்தவர்களை வெருண்டோட செய்யமாட்டார்கள். அறையிலிருக்கும் கன்னியரை விட அதிகமாக வெட்கப்படுவார்கள்..கடுகடுத்த முகத்துடன், அடுத்தவர்களை இழிவாக மதிக்கும் குணத்துடன் இருந்ததில்லை. தமக்கு கிடைக்கும் பொருள் அற்பமானதாக இருந்தாலும் பெரிதாக மதிப்பார்கள்..அன்பளிப்புக்களை ஏற்றுக் கொள்வார்கள். நறுமணத்தை மறுக்கமாட்டார்கள். தர்மமாக வழங்கும் பொருட்களை தனக்கும் தனதுகுடும்பத்திற்கும் தடுத்து கொண்டார்கள். தமக்காக அடுத்தவர்களை பழிவாங்கியதில்லை. கோபப்பட்டதுமில்லை, அல்லாஹ்வின் வரம்புகளை மீறும்போதே நடவடிக்கை எடுப்பார்கள. அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியாராக இருப்பதற்கு இரவிலும் (தஹஜ்ஜுத்) நின்று வணங்குவார்கள்..இஸ்லாத்திறகு முரண்படாத கவிதையை ரசித்தார்கள். இஸ்லாத்திறகு முரண்பட்டவர்கள் கவிதையால் சாடும் போது கவியால் பதிலடி கொடுப்பதற்காக ஒருவரை நியமித்தார்கள்.
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன். நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ (குஃப்ரை) அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஞர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..புஹாரி : 3532 ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி)..குர்ஆன் ஓதும் போது அழுவார்கள். அப்போது வயிற்றில் ஒரு சட்டி கொதிப்பது போன்று சப்தம் கேட்கும். உண்ண உணவில்லாமல் பல இரவுகள் குடும்பத்தோடு பட்டினியுடன் இருப்பார்கள். பெரும்பாலும் வாற்கோதுமையும் ரொட்டியும் உணவாக இருக்கும்..வாற்கோதுமையை இடித்து பிறகு அதனை எடுத்து ஊதுவார்கள். அதிலுள்ள உமிகள் நீங்கிய பிறகு அதில் தண்ணீரை ஊற்றி குழைத்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள் ஒரு நாளில் இரு தடவைகள் ரொட்டியும் இறைச்சியும் வயிறாற உண்டதில்லை. சாப்பிட்ட பின் விரல்களை சூப்புவார்கள்..சாய்ந்து கொண்டு சாப்பிடுவதையும் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதையும் தடுத்தார்கள். உணவு இல்லாத சந்தர்ப்பத்தில் நோன்பு நோற்பார்கள்..வீட்டுக்குள் நுழைந்தால் மனைவியுடன் வீட்டு வேலைகளில் ஈடுபடுவார்கள். தனது வேலைகளை தாங்களாகவே செய்து கொள்வார்கள். பாங்கு சொல்லி விட்டால் தொழுகைக்காக புறப்படுவார்கள்.
தூங்கும் போது வலது உள்ளங்கையை வலது கன்னத்தின் கீழ் வைத்து இறைவனை துதித்து (துஆ ஓதி) விட்டு தூங்குவார்கள். பேரீத்த மரத்தின் நார்களால் நிரப்பப்பட்ட தோல்பை அவரது தலையணையாக இருந்தது. மிருதுவான படுக்கையை விரும்பியதில்லை..தன்னை அல்லாஹ்வின அடிமை, அவனது தூதர் என்று போற்றுவதையே விரும்பினார்கள். தனது மரணத்திற்கு பின் தனக்கு சமாதி வழிபாடு செய்வதையும் எச்சரித்தார்கள்..ஒட்டுப்போட்ட ஒரு போர்வையும், கடினமான ஒரு வேட்டியும் அணிந்திருந்த வேளையில் திங்கட்கிழமை மரணித்தார்கள். மூன்று வெள்ளை துணிகளால் கபன் செய்யப்பட்டார்கள். செவ்வாய் கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்படடார்கள்..தனது குடும்பத்திற்காக சில போர் கருவிகள் ஒரு கோவேறு கழுதை தர்மம் செய்து விட்டு போன நிலம் இவற்றை தவிர வேறு எதையும் விட்டுச்செல்லவில்லை..ஜாவாவின் முக்கியத்துவம் பற்றி காண்போம்..1. பயன்பாடு: அதிகளவிலான மென்பொருள்கள் ஜாவாவிலேயே செய்யப்படுகின்றன. இணையத்திலும் ஜாவாவின் ஆதிக்கம் உண்டு. ஏற்கனவே, பல ஆயிரம் கருவிகளில் ஜாவா இயங்குகிறது.
2. பண்புகள்: ஜாவாவின் பண்புகள் பலம் வாய்ந்தவை. இவற்றினால் இது அழியா வரம் பெற்றதுபோல் உள்ளது..3. பிற மொழிகளுடன் இணைந்து செயல்படும் தன்மை (பைத்தான், சி ஆகியவற்றில் எழுதிய நிரல்களுடனும் இணைந்தும் செயல்படும்.).4. பிற கருவிகளுடன் இணைந்து பணியாற்றும் தன்மை (வலையமைப்பு, தரவுத்தளம் உள்ளிட்ட பல்வேறு வகையான தளங்களிலும் இயங்கும்.).5. இதனை மற்ற மென்பொருட்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்..6. தரவுத்தளத்துடன் தொடர்புகொள்ளவும் முடியும்..7. இத்துடன் இணைந்து செயல்படுத்த பல கட்டமைப்புகள் உள்ளன.
8. ஜாவாவில் எழுதப்பட்ட நிரல்கள் பிற மொழியில் எழுதப்பட்டவற்றை விடவும் வேகமாக இயங்கக் கூடியது..9. பொதிகளை இணைப்பதன் மூலம் வெவேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். பிடியெப் கோப்பு உருவாக்குவது முதல் வலைப்பக்கம் வடிவமைப்பு வரை பலவற்றிற்கு பொதிகள் உள்ளன..10. இது இலவசமாகக் கிடைக்கக் கூடியது. கட்டற்ற வகையைச் சேர்ந்தது..11. இதைச் சார்ந்து பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இதனுடன் இணைந்து இயங்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டவையும் உண்டு..ஜாவாவின் பண்புகளை கீழே காணுங்கள்..1. சார்பின்மை: எந்த ஒரு இயங்குதளத்தில் ஜாவா நிரல்கள் இயங்கக்கூடியன. இயங்குதளத்திற்கான ஜாவா கருவி இருந்தால் போதும்.
2. எளிமை.3. நிலையானது.ஜாவா படிப்பதற்கு அடிப்படை நிரலாக்கம் தெரிந்திருப்பது நல்லது. ஏற்கனவே, சி போன்ற எளிய மொழிகளைப் படித்திருந்தால் எளிதில் புரிந்துகொள்ளலாம். ஜாவாவின் இலக்கணத்தில் பெரிதளவில் சி நிரல் மொழியின் தாக்கம் இருக்கும். எனவே, சி தெரிந்தவர்களுக்கு ஜாவா எளிதாய் இருக்கும். I.கருத்துரை.நிரல்களின் இடையே கருத்துகளை இடுவதற்கு கருத்துரை பயன்படும். இவை கட்டாயம் இடம்பெறுபவை அல்ல. ஆனால், பயனர்களின் புரிதலுக்கு தேவைப்படலாம்..ஒரு வரி கருத்துரைக்கு,
//கருத்து.எனத் தரலாம்..தொடர்ச்சியாக பல வரிகளில் கருத்துகளை இட, .கருத்து.கருத்து.கருத்து
என இட வேண்டும்..கருத்துகளால் நிரலில் பாதிப்பு எதுவும் இருக்காது. என்ன செய்திருக்கிறோம் என்பதை தெரிவிக்க கருத்துகளைப் பயன்படுத்தலாம். கருத்துகள் தமிழ் உட்பட எந்த மொழியிலும் எழுதப்படலாம். வேறு ஒருவர் எழுதிய நிரலை மற்றொரு நிரலர் புரிந்துகொள்ள கருத்துகள் பெரியளவில் உதவும்..தரவினங்கள்.ஜாவாவில் தரவு இனங்கள் (data types) உண்டு. ”சி”யில் உள்ள பெரும்பாலான தரவு இனங்களை இதிலும் காணலாம். அடிப்படையானவற்றைக் காணலாம்..உள்ளிட்ட தரவு இனங்கள் உண்டு..இது தவிர, பொருளை அடிப்படையாகக் கொண்ட வகைகளும் உண்டு. நீங்கள் விரும்பும் எந்த ஒரு பொருளையும் ஜாவாவில் வர்ணித்து, அதன் செயல்பாடுகளையும், பண்புகளையும் குறிப்பிடலாம். அதுவும் ஒரு தரவு இனமாக செயல்படும். எடுத்துக்காட்டாக, மனிதன் என்பதை பொருளாக எடுத்துக்கொண்டால், அவனில் செய்கைகளை (functions) செயல்களாகவும், அவனைப் பற்றிய தகவல்களை தரவாகவும் (data) சேமிக்கலாம். இனி, எத்தனை மனிதர்களையும் இந்த பொருளைக் கொண்டு உருவாக்கலாம். அத்தனைக்கும் இந்த செயல்பாடுகளும், தகவல்களும் பொருந்தும்.
நிரல் குறியீடுகள். ”;” - என்ற குறியீடு வரியின் முடிவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும்..சூரியன் என்றால் என்ன?.இது பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் ஆகும்.இது பிளாஸ்மா நிலையில் உள்ள மிகவும் வெப்பமான வாயுக்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கோளமாகவும் காணப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜனும் பலூனில் அடைக்கப்பட்டிருக்கும் ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும். சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500°C க்கும் அதிகமாகும்,அது மட்டுமின்றி இதன் மத்திய பகுதியின் வெப்பநிலை 15 மில்லியன்°C க்கும் அதிகமாகும். இது அதிகளவில் ஹைட்ரஜன் (70%) மற்றும் ஹீலியத்தால் (28%) ஆக்கப்பட்டுள்ளது..சூரியனில் இருந்து பெறப்படும் ஒளிச்சக்தி தாவரங்களின் வளர்ச்சியில் பங்களிக்கிறது. நாம் தாவரங்களில் இருந்து உணவை பெற்றுக் கொள்கிறோம். நாம் தாவரங்களின் மற்றைய பாகங்களை சமையலில் எரிப்பதற்குப் பயன்படுத்துகிறோம். ஆகவே எமது அன்றாட வாழ்க்கைக்கு சூரியன் மிக அவசியமாகும்..சூரியன் எவ்வளவு பெரியது?
சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது..சூரியனின் மேற்பரப்பு எவ்வாறு இருக்கும்?.சூரியன் ஒளியையும் வெப்பத்தையும் எவ்வாறு உருவாக்குகிறது?.சூரியப்புள்ளிகள் என்றால் என்ன?.சூரியனின் எல்லா பகுதிகளும் ஒரே வெப்பநிலையில் இல்லாமல் சில பகுதிகள் சற்றுகுளிர்ச்சியாக உள்ளதால் அப்பகுதிகள் இருளாக காட்சி அளிக்கின்றன. இதனால் சூரியனில் புள்ளிகள் போன்ற தோற்றம் உருவாகிறது இதை நாம் "சூரிய புள்ளிகள்" என அழைக்கிறோம்..சூரியனின் நிறம் என்ன?
பகுப்பு:சிறுவர் நூல்கள்.பகுப்பு:சூரியக்குடும்பம்.பகுப்பு:வானியல்.சூரியனிலிருந்து பல நிறங்கள் வெளிப்பட்டாலும் அது இளஞ்சிவப்பு சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் புலப்பட்டாலும்அது உண்மையில் வெள்ளை நிறம் கொண்டது..புதன் என்றால் என்ன?.புதன் (ஆங்கிலத்தில் Mercury) சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள கோளாகும். இது ஒரு உட்கோளாகும், அதாவது இது பூமியைப் போலவே பாறைகளினாலான மேற்பரப்பைக் கொண்டுள்ளது. இது வாயுக்களை கொண்டிருக்கும் வளிமண்டலத்தைக் கொண்டிருக்கவில்லை, ஆகவே இங்கே காலநிலை மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. நீண்டகாலத்த்க்கு முன், மரீனர் 10 எனும் விண்கலமே புதனுக்குச் சென்றுள்ளது. அதன் பின் 2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் மெசஞ்சர் எனும் விண்கலம் இருமுறை சென்றுள்ளது. இது புதன் 2011 இலேயே சுற்ற ஆரம்பித்துள்ளது.
பகுப்பு:சிறுவர் நூல்கள்.பகுப்பு:வானியல்.மாங்கோடிபிக் க்ருட்(CRUD) செயல்பாடுகள் முன்னுரை.மாங்கோடிபி தரவுகளை கையாள்வதற்கு வளமான குறிகளைக் கொண்டுள்ளது.க்ருட்(CRUD) என்பது பின்வரும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது:. உருவாக்க (Create). படிக்க (Read)
புதுப்பித்தல் (Update). அழிக்கவும் (Delete).மாங்கோடிபி தரவுகளை ஆவணங்களாக சேமிக்கிறது. இங்கு குறிப்பிடப்படும் ஆவணமானது நிரல் மொழிகளில் தரவுக் கட்டமைப்பை ஒத்து இருக்கிறது. .மாங்கோடிபி அனைத்து ஆவணங்களையும் திரட்டுக்களாக(Collections) சேமிக்கிறது. இது தொடர்புசார் தரவுத்தளங்களில் நிரல் அல்லது அட்டவணை எனப்படுகிறது..தரவுத்தள செயல்பாடுகள்.வினவல்
மாங்கோடிபியில் ஒரு வினவல் ஒரு ஆவணங்களின் தொகுப்பினைத் தருகிறது. வினவலானது ஒரு ஆவணத்தை கட்டளை விதிகளையும், படிநிலைகளையும் பொறுத்து அதனை வினவுபபவர்களுக்கு அனுப்புகிறது. ஒரு வினவலானது திருப்பி அனுப்பப்படும் ஆவணத்தின் புலன்களைக் கொண்ட ஒரு எரியமாக இருக்கும். நாம் வேண்டுமென்றால் மாற்றியமைப்பி பயன்படுத்தி ஒரு வினவலில் ஒரு சில தடைகள், சிலவற்றை தவிர்த்தும், வரிசைப்படுத்தியும் விடலாம்..தரவு மாற்றியமைத்தல்.தரவு மாற்றியமைத்தல் என்பது உருவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் அழித்தல் போன்ற செயல்களாகும். இந்த செயல்கள் அனைத்தும் ஒரு திரட்டியில் செய்யப்படுவதாகும்..450px|center| திரட்டியில் செய்யப்படும் செயல்கள்.படிக்கும் செயல்பாடுகள்.படிக்கும் செயல்பாடுகள் வினவல்கள் மூலம் தரவுத்தளத்தில் உள்ள ஓரு திரட்டியிலிருந்து ஆவனங்களை பெற உதவுகிறது.
வினவல்கள் மாங்கோடிபி வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் ஆவணங்களை கட்டளை விதிகள், கட்டுப்பாடுகளை பொறுத்து அளிக்கிறது..வினவல் இடைமுகப்பு.வினவல் செயல்பாடுகளுக்கு மாங்கோடிபி db.collection.find() என்ற வழிமுறையை பயன்படுத்துகிறது..போசுகிரசுகியூவெல் (PostgreSQL) எனப்படுவது ஒரு கட்டற்ற தரவுத்தள மேலாண்மை அமைப்பு ஆகும்..பொருளடக்கம் . /அறிமுகம்/
/நிறுவுதல்/. /முதலாவது தரவுத்தளத்தை உருவாக்கல்/.பகுப்பு:போசுகிரசுகியூவெல்.ஆஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள பிஜி என்ற தீவு நாட்டில் விட்டி மொழி பேசுகின்றனர். பிஜி நாட்டில் இரண்டு பெரிய தீவுகள் உண்டு. பெரிய தீவான விட்டிலெவு என்பதன் நினைவாக, நாட்டின் பெயரும் விட்டி எனச் சூட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் தவறுதலாக பிஜி என்று பெயரிட்டனர். எனவே, விட்டி மொழியை பிஜியன் என்றும் பிஜிய மொழி என்றும் அழைக்கத் தொடங்கினர். இந்த மொழியைப் பற்றி பார்ப்போம்..அறிமுகம்.விட்டி மொழியை எழுத லத்தீன் எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.