text
stringlengths 23
10.7k
|
---|
சி.எசு.எசு. யாவாக்கிறிட்டு. வழங்கி நிரல் மொழிகள். பி.எச்.பி. ரூபி. பைத்தான் |
வலைவழங்கி.பகுப்பு:நிரலாக்கம்.நாசி கொரெங் அல்லது பொரியல் சோறு என்பது ஒர் இந்தனேசிய உணவு ஆகும். இந்தனேசியாவில் தேசிய உணவாகக் கருதப்படும் இவ்வுணவு.சி.என்.என் கருத்துக் கணிப்பின் படி உலகில் அதிகம் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் ஒன்றும் ஆகும். எளிமையாக பல வகைகளில் இவ்வுணவைச் சமைக்கலாம். பின்வரும் செய்முறை 2 பேருக்குப் போதுமான மரக்கறி நாசி கொரெங்..தேவையான பொருட்கள் . நீண்ட அரசிச் சோறு |
கறிக் கூட்டுக்கு . சிறு வெங்காயம் (shallot) - 4. உள்ளி - 10 பற்கள். இஞ்சி - 2 சிறு துண்டுகள். தாய் சிகப்பு மிளகாய் - 5. உப்பு |
மரக்கறிகள் .விருப்பமான மரக்கறிகளைப் பயன்படுத்தலாம். மரக்கறிகளை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். . புரோக்கலி. காளான். சோயா. கேரட் |
அவரை.சுவைகூட்ட/அழகுபடுத்த . வெங்காயத்தாள். சலறி. பார்சிலி. சிறு தக்காளி (துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்) |
முளைகட்டிய அவரை. கறிவேப்பில்லை.சமைக்கும் போது . நல்லெண்ணெய் / ஒலிவ் எண்ணெய். சோயா கூட்டுச்சாறு (soya sause). மஞ்சள் |
மிளகு. பனங்கட்டிச் சீனி - 2 தே.க.செய்முறை . சோறைப் பதமாகக் காச்சி வைத்துக் கொள்ளவும்.. சிகப்பு மிளகாய், உள்ளி, சிறுவெங்காயம், இஞ்சி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சம்பல் போல அரைத்துக் கொள்ளவும்.. சோயா பயன்படுத்துவதாயின், அதை சுடுநீரில் இட்டு பிழிந்து வைத்துக் கொள்ளவும். விரும்பினால் இளகிய சூட்டில் குறைந்த எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கலாம். |
குண்டு வாணலியை அடிப்பில் வைத்து நல்லெண்ணெயை அல்லது ஒலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். எண்ணெய் கொதித்து வரும் போது கறிவேப்பில்லையையும் பின்னர் அரைத்த கூட்டின் பெரும் பகுதியையும் இடவும்.. கூட்டு பொன் நிறம் வரும் போது மரக்கறிகளையும் சோயாவையும் சேர்க்கவும். மரக்கறிகள் அவிந்து வந்த பின்னர் அதை இறக்கி ஒரு கோப்பையில் வைத்தக் கொள்ளவும்.. பின்னர் மீண்டும் சிறு எண்ணெய் விட்டு, மிகுதி கூட்டைச் சேர்த்து பொன் நிறம் வந்த பின்னர் சோற்றைச் சேர்க்கவும். விரும்பின் சோற்றுக்கு மஞ்சளைச் சேர்க்கவும். . சோறு பொரிந்து இள மண் நிறம் வரும்போது எடுத்து வைத்த மரக்கறிகளைச் சேர்க்கவும். பின்னர் சோயாக் கூட்டுச்சாற்றைச் சேர்க்கவும். . சோறும் மரக்கறிகளும் சேர்ந்து பொரிந்து வந்தபின், வெங்காயத்தாள், சலறி, பார்சிலி, முளைகட்டிய அவரை ஆகியவற்றைச் சேர்க்கவும்.. சூட்டுடன் பரிமாறவும். |
பகுப்பு:சமையல் நூல்.தகவலை விரும்பும் மணிதன் .உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் இணையத்தளம் பேஸ்புக் ஆகும், பேஸ்புக் உங்கள் நண்பகர்களை உங்களுடன் இனைக்கிறது, அவர்களின் மற்றும் அவர்களை பற்றிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடண் வழங்குகிறது. மற்றொரு இணையத்தளமான கூகல், உலக வலையிலுள்ள தகவல்களை சேமித்து, நாம் கேட்கும் போது அதை தேடியும் தருகிறது. இவ் இரு இணையத்தளங்களும் மிக பிரபலமாணவை ஆகும்..மணிதனின் வரலாற்றை கண்டால், தகவல் தொடர்புக்கு பயண்படும் சாதணங்கள் மிகவும் பிரபலம் அடைந்து உள்ளண. பண்டைய காலத்தில் கல்வெட்டுகள், எழுதப்பட்ட ஓலைகள், பத்தகங்கள், தொலைப்பேசி, வானொலி, தொலைக்காட்சி, தற்பழுது கணினி போண்றவை மிகப்பிரபலம் அடைந்துள்ளண..பண்டைய கால தொடர்பு முறைகள்.மின்சாரம் கண்டுபிடிப்பு |
அனைத்து மொழிகளிலும் ஒருவர் கற்கத் தொடங்கும் போது உலகே வணக்கம் என்ற நிரல் எழுதுவது மரபு. கீழே உள்ள alert ("உலகே வணக்கம்"); என்ற நிரல் துண்டை எச்.ரி.எம்.எல் பக்கத்தில் காட்டியவாறு இட்டு அப் பத்திற்கு உலாவியின் ஊடாகப் போனால், உலகே வணக்கம் என்ற உரை கொண்ட ஒரு உடையாடல் பொட்டி (Dialog Box) காண்பிக்கப்படும். தமிழில் ஒருங்குறியில் எழுதுவதற்கு எச்.ரி.எம்.எல் பக்கத்தில் என்ற மீதரவு சேர்க்கப்பட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..நிரல் .alert ("உலகே வணக்கம்");.எச்.ரி.எம்.எல் பக்கத்தில் இடுதல் .alert ("உலகே வணக்கம்");.பகுப்பு:யாவாக்கிறிட்டு |
இணைய உலாவிகள் ஊடாக எக்சு.எம்.எல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தக் கூடிய ஆற்றல் தொடர்ச்சியாக விரிவாகி வருகிறது. இன்று மைக்ரோசோப்டின் ஐ.ஈ மற்றும் நெருப்புநரி ஆகியவை எக்சு.எம்.எல் இற்கு நல்ல ஆதரவைத் கொண்டுள்ளன. எக்சு.எம்.எல் ஐ யாவாக்கிறிட்டின் ஊடாகப் பயன்படுத்த இவை ஏதுவாக்கின்றன. எக்சு.எம்.எல் ஐ கையாழுவதில் ஒரெ சீர்தரத்தை நோக்கி முயற்சிகள் எடுக்கப்படுனும், ஐ.ஈ க்கும் நெருப்புநரிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. ஆகவே இரண்டு உலாவிகளில் இயங்க வேண்டிய செயலிகள் இந்த வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துப் பயன்படுத்த வேண்டும்..எக்சு.எம்.எல் ஆவணத்தை எச்.ரி.ரி.பி ஊடாகப் பெறுதல் .எக்சு.எம்.எல் நூலில் பயன்படுத்திய தமிழ்நூல்கள்.xml என்ற எக்சு.எம்.எல் ஆவணத்தையே இங்கும் எடுத்துக்காட்டுக்குப் பயன்படுத்தலாம்..எக்சு.எம்.எல் ஆவணத்தை எச்ரிரிபி ஊடாகப் பெறுவதற்கான செயலி .function எக்சுஎம்எல்_கோப்பை_எச்ரிரிபி_ஊடாக_எடு(கோப்பு_உரலி){. if (window.XMLHttpRequest){ // ஐ.ஈ 7+, நெருப்புநரி, குரோம், ஒப்பிரா |
}else {// ஐ.ஈ 5, 6. xmlhttp.open("GET",கோப்பு_உரலி,false);.பெற்று மேலதிய செயலாக்கங்கள் செய்தல் .கீழே உள்ள எடுத்துக்கட்டு ஐ.ஈ யில் வேலை சரியாக வேலை செய்யாது. ஏன் என்றால் ஐ.ஈ யும் மற்ற உலாவிகளும் எக்சு.எம்.எல் ஆவணத்தை ஊடு கடக்கும் (traverse) போது பயன்படுத்தப்படும் செயலிகளிலும், அணுகுமுறைகளிலும் வேறுபாடுகள் உண்டு. எ.கா ஒரு எழுத்துக் கணுவின் உள்ளடக்கத்தைப் பெற ஐ.ஈ கணு.text என்ற செயலியையும் பிற உலாவிகள் கணு.textContent என்ற செயலியையும் பயன்படுத்துகின்றன. ஐ.ஈ வெள்ளை இடங்கள், புதிய வரிகளை ஒரு கணுவாகக் கருதுவதில்லை. ஆனால் பிற உலாவிகள் அவற்றை கணுக்களாகக் கருதும்.. var கோப்பு_உரலி = "தமிழ்நூல்கள்.xml";. var எக்சுஎம்எல்_ஆவணம் = எக்சுஎம்எல்_கோப்பை_எச்ரிரிபி_ஊடாக_எடு(கோப்பு_உரலி); |
for (i=0; i<எக்சுஎம்எல்_ஆவணம்.childNodes[0].childNodes.length; i++){. if (எக்சுஎம்எல்_ஆவணம்.childNodes[0].childNodes[i].nodeName == "நூல்"){. var தலைப்பு = எக்சுஎம்எல்_ஆவணம்.childNodes[0].childNodes[i].childNodes[1].textContent;. alert (தலைப்பு);.எக்சு.எம்.எல் சரத்தை டோம் இல் ஏற்றுதல் . var தமிழ்நூல்கள்_சரம் = '<?xml version="1.0" encoding="UTF-8"?>'; |
தமிழ்நூல்கள்_சரம் = தமிழ்நூல்கள்_சரம் + '<நூல்கள்><நூல்><தலைப்பு>தமிழ் இலக்கிய வரலாறு</தலைப்பு></நூல்></நூல்கள்>';. var தமிழ்நூல்கள்_டோம் = எக்சுஎம்எல்_சரத்தை_டோமில்_ஏற்று(தமிழ்நூல்கள்_சரம்);. var முதல்_கணு = தமிழ்நூல்கள்_டோம்.firstChild.nodeName; . alert (முதல்_கணு); .function எக்சுஎம்எல்_சரத்தை_டோமில்_ஏற்று(தமிழ்நூல்கள்_சரம்){. var எக்சுஎம்எல்_டோம் = false; |
var கூற்றாக்கி = new DOMParser();. எக்சுஎம்எல்_டோம் = கூற்றாக்கி.parseFromString(தமிழ்நூல்கள்_சரம்,"text/xml");. எக்சுஎம்எல்_டோம் = new ActiveXObject("Microsoft.XMLDOM");. எக்சுஎம்எல்_டோம்.async=false;. எக்சுஎம்எல்_டோம்.loadXML(தமிழ்நூல்கள்_சரம்);. return எக்சுஎம்எல்_டோம்; |
பகுப்பு:யாவாக்கிறிட்டு.பகுப்பு:எக்சு.எம்.எல்.யாவாக்கிறிட்டில் பொருட்களை உருவாக்கும் போது பொருள் கட்டுநருக்குள் (constructor) செயலிகளை வரையறை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவது ஒவ்வொரு பொருள் உருவாக்கப்படும் போது அச் செயலி உருவாக்கப்படுகிறது. இது நினைவு மேலாண்மைக்கு உகந்து அல்ல. கட்டுநருக்குள் உள்ளே உள்ள செயலிகளை இலகுவாக override செய்ய முடியாது. இது போன்ற சிகல்களைத் தீர்க்க யாவாக்கிறிட்டில் முன்மாதிரி (prototype) பயன்படுகிறது..யாவாக்கிறிட்டில் ஒரு பொருள் உருவாக்கப்படும் பொழுது அதற்கு தானாக முன்வடிவம் அல்லது புரோட்ரோரைப் (prototype) என்ற ஒரு பண்பு (property) இருக்கும். தொடக்கத்தில் இந்த முன்வடிவம் ஒரு வெற்றுப் பொருள். இதற்கு உறுப்பினர்களை (பண்புகள், செயலிகள்) நாம் சேர்க்க முடியும். இவை அந்த பொருளின் எல்லா instances பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்..எடுத்துக்காட்டு .var நபர் = function (பெயர், வயது, தொழில்){ |
this.பெயர் = பெயர்;. this.வயது = வயது;. this.தொழில் = தொழில்;. this.பேசு = function (){. alert ("எனது பெயர் " + this.பெயர்);.நபர்.prototype.படி = function(){ |
alert (this.பெயர் + " படிக்கிறார்..");.var கண்ணன் = new நபர்('கண்ணன்', '25', 'மருத்துவர்');.கண்ணன்.படி();.வெளி இணைப்புகள் .பகுப்பு:யாவாக்கிறிட்டு.var தமிழின்_பண்புகள் = { |
தமிழ்1: "தொன்மை",. தமிழ்2: "முன்மை",. தமிழ்3: "எளிமை",. தமிழ்4: "ஒண்மை",. தமிழ்5: "இளமை".for (var சாவி in தமிழின்_பண்புகள்) { |
var பெறுமதி = தமிழின்_பண்புகள்[key];. alert(பெறுமதி);.var தமிழின்_பண்புகள்_அணி = new Array("வளமை", "தாய்மை", "தூய்மை", "செம்மை", "மும்மை");.for (i=0; i<தமிழின்_பண்புகள்_அணி.length; i++){. alert (தமிழின்_பண்புகள்_அணி[i]);.var தமிழின்_பண்புகள்_அணி = new Array("வளமை", "தாய்மை", "தூய்மை", "செம்மை", "மும்மை"); |
while (i < தமிழின்_பண்புகள்_அணி.length) {. alert(தமிழின்_பண்புகள்_அணி[i]);.ஒரு சுற்றில் இருந்து அல்லது switch இருந்து வெளியேறுவதற்கு break; என்ற கூற்றைப் பயன்படுத்த முடியும். வெளியேறிய பின்னர் நிரல் அதற்குப் பின்னர் தொடர்ந்து செயல்படுத்தப்படும்..ஒரு குறிப்பிட்ட நிலமை ஏற்பட்டால் continue கூற்று அந்தச் சுற்றின் மிகுதிப் பகுதியை செயல்படுத்தாமல், அடுத்த மறுசெய்கைக்கு (iteration) போகும். எடுத்துக்காட்டாக பின்வரும் நிரல் 3 அறிப்பதைத் தவிர்க்கும்..பகுப்பு:யாவாக்கிறிட்டு.கன்னட எழுத்துகள் பிராமியில் இருந்து தோன்றியவை. தெலுங்கு எழுத்துகள் கன்னட எழுத்துக்களைப் போன்றே தோற்றமளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. |
கன்னட எழுத்து வரிசை தமிழைப் போன்றே இருக்கும். கூடுதலாக சில எழுத்துக்களையும் கொண்டுள்ளது..உயிரெழுத்துகள் ஸ்வர என்று அழைக்கப்படுகின்றன..அரை உயிர், அரை மெய் ஒலிகளாகக் கருதப்படுபவை யோகவாஹக என்று அழைக்கப்படுகின்றன..ಅಂ - அம் (வட்டமாக இருப்பது அனுஸ்வர).ಅಃ - அஹ (அரைப் புள்ளியாக இருப்பது விசர்க).இவை பிற எழுத்துக்களுடனும் சேர்கின்றன. அம், அஹ என்பதைப் போலவே ஆம், இம், ஆஹ, இஹ என்று சேர்கின்றன. |
தனிநபர் நிதி என்பது ஒருவரின் நிதி நிலையை உச்சமாக மேம்படுத்தும் நோக்குடன், எதிர்பாரா நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு அவரின் நிதி தொடர்பான திட்டமிடல் மற்றும் செயற்பாடுகளைக் குறிக்கும்..பொருளடக்கம் . /நிதி அறிவின் முக்கியத்துவம்//. /தனிநபர் நிதி என்றால் என்ன?/. /தேவைகளும் ஆசைகளும்/. /நிதித் திட்டமிடல்/ |
/நிதி இலக்குகள்/. /நிதித் திட்டமிடல் கருவிகள்/. /வரவுசெலவுத் திட்டம்/. /பணப்பாய்வு மேலாண்மை/. /வங்கிச் சேவைகள்/. /சேமிப்பு/ |
/ஆபத்துதவிச் சேமிப்பு/. /ஓய்வூதியச் சேமிப்பு/. /சிக்கனம்/. /திட்டமிட்ட செலவுகள்/. /நெடுக்கடி நிலையைக் கையாழுதல்/. /முதலீடு/ |
கடன். /கடன் அட்டை/. /நிதியளிப்பு/. /காப்புறுதி/. /வரி/. /நன்கொடை/ |
ரஷ்ய மொழி தமிழில் உருசிய மொழி என்றும் ரசிய மொழி என்றும் அழைக்கப்படுகிறது..கீழே ரஷ்ய மொழியின் அரிச்சுவடியைக் காண்போம். அடிப்படை எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்களுடன் கீழே தரப்பட்டுள்ளன..ரஷ்ய மொழியில் 33 எழுத்து வடிவங்கள் உள்ளன. இவை கிரேக்க எழுத்துக்களை பின்பற்றி உருவாக்கப்பட்டவை. இவற்றில் 21 மெய்யெழுத்துக்களும், 10 உயிரெழுத்துக்களும் 2 ஒலியற்ற எழுத்துக்களும் உள்ளன..ஆங்கிலத்தைப் போலவே, ரஷ்ய மொழியிலும் பெரிய, சிறிய எழுத்து வடிவங்கள் உள்ளன..உச்சரிப்பதற்கான விதிகள். ரஷ்ய மொழியில் உச்சரிப்புகள் எழுத்தைச் சார்ந்தே இருக்கின்றன. சில விதிவிலக்குகளும் உண்டு. |
பகுப்பு:உருசிய மொழி.கட்டுநர் (constructor) என்பது ஒரு பொருள் உருவாக்கப்படும் போது கூப்பிடப்படும் ஒரு சிறப்புச் செயலி ஆகும். இது பொருளைப் பயன்படுத்ததக்கவாறு ஆய்த்தங்களைச் செய்யும். பொதுவாக இது காரணிகளை உள்ளெடுத்து, பொருளுக்கு தேவைப்படும் பண்புகளை இடும். .வகுப்புக்கும் கட்டுநர் செயலிக்கும் ஒரே பெயரே அமையும். அனேக மொழிகளில் கட்டுநர் எதையும் திருப்பி பதிலாக அனுப்பாது. பல மொழிகளில் ஒரு வகுப்பை உருவாக்கும் போது கட்டுநர் உருவாக்கப்படாவிட்டாலும் இயல்பாக (by default) ஒரு கட்டுநர் உருவாக்கப்படும்..எடுத்துக் காட்டுக்கள்.யாவா .நாம் முன்னர் பார்த்த மாணவர் வகுப்பு எடுத்துக்காட்டில் public மாணவர் என்ற சிறப்புச் செயலி கட்டுநர் ஆகும். இது இரு காராணிகளை உள்ளெடுத்து பண்புகளில் இடுகிறது. |
public class மாணவர் {. // பண்புகள்/மாறிகள். protected int மாணவர்_எண்;. protected String பெயர்;. // கட்டுநர். public மாணவர்(int மாணவர்_எண், String பெயர்){ |
this.மாணவர்_எண் = மாணவர்_எண்;. this.பெயர் = பெயர்;.பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்.ஒரு வகுப்பு பண்புகளையும் செயலிகளையும் கொண்டிருக்கிறது. ஒரு வகுப்பு வரையறை செய்யும் பொருளைப் பற்றிய தகவல்களை பண்புகள் ஊடாக வகுப்பு வைத்திருக்கும். எடுத்துக்காட்டாக மாணவர் என்ற வகுப்பின் பண்புகளாக அவரின் பெயர், வயது, பால், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி போன்ற தகவல்கள் இடம்பெறலாம். பண்புகள் பொதுவாக முழுஎண், சரம் போன்ற அடிப்படையான தரவு இனங்களால் ஆனவை. ஒரு பொருளின் நிலை (state) பற்றிய தகவல்களும் பண்புகளில் இடப்படும். .சில மொழிகள் பண்புகள் (Properties) தரவிடங்கள் (Fields) என்று வேறுபடுத்தும். பண்புகள் என்று அவை வரையை செய்பவற்றை பெறவும் இடவும் என செயலிகளை அவை தானவே உருவாக்கித் தரும். பிற மொழிகளில் பெறுநர்கள் இடுநர்கள் பயன்படுத்த வேண்டும். பண்புகள் தரவிடங்கள் என்று வேறுபடுத்தும் மொழிகளில் தரவிடங்களுக்கு பெறுநர்களும் இடுநர்களுக்கும் தாமாக உருவாக்கப்படா..எடுத்துக் காட்டுக்கள் |
யாவா .நாம் முன்னர் பார்த்த மாணவர் வகுப்பு எடுத்துக்காட்டில் மாணவர்_எண் மற்றும் பெயர் ஆகியன பண்புகள் ஆகும். மாணவர்_எண் முழுஎண் தரவுஇனம் ஆகும். பெயர் சரம் தரவுஇனம் ஆகும். .public class மாணவர் {. // பண்புகள்/மாறிகள். protected int மாணவர்_எண்;. protected String பெயர்; |
பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்.ஒரு வகுப்பு பண்புகளையும் செயலிகளையும் கொண்டிருக்கிறது. ஒரு வகுப்பு வரையறை செய்யும் பொருள் செய்யக் கூடிய செயற்பாடுகள் (actions) அல்லது அப் பொருளின் நடத்தைகள் (behavior) அவ் வகுப்பின் செயலிகள் ஊடாக நடைபெறுகின்றன. எடுத்துக்காட்டாக மாணவர் என்ற வகுப்பின் செயல்களாக அவர் வகுப்பில் இணைதல், வகுப்பில் இருந்து விலகுதல், வகுப்பு அட்டவணை பெறுதல், அறிக்கை பெறுதல், பட்டம்பெறுதல் போன்றவை அமையலாம். .ஒரு பொருளின் செயலி இயக்கப்படும் போது அதனால் வகுப்பின் பண்புகளில் இருக்கும் தகவல்களைப் பயன்படுத்த முடியும். ஆகையால் ஒரு பொருளின் நிலையை செயலியால் கட்டுப்படுத்த முடியும்..எடுத்துக் காட்டுக்கள்.யாவா .நாம் முன்னர் பார்த்த மாணவர் வகுப்பு எடுத்துக்காட்டில் வகுப்புக்குப்_பதி என்பது அந்த வகுப்பின் செயலி ஆகும். கட்டுநரையும், பெறுநர்கள் இடுநர்களையும் சிறப்புச் செயலிகளாகக் கருதுவர். |
public class மாணவர் {. // பண்புகள்/மாறிகள். protected int மாணவர்_எண்;. protected String பெயர்; . // செயலிகள். public boolean வகுப்புக்குப்_பதி(String வகுப்பு, String கல்வியாண்டு){ |
System.out.println(this.பெயர் + " " + வகுப்பு + " வகுப்பில் " + கல்வியாண்டு + " ஆண்டுக்கு சேர்ந்துள்ளார்."); .பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்.ஒரு வகுப்பின் பண்புகளைப் பெறுவதற்கு இடுவதற்கும் பயன்படும் செயலிகளே பெறுநர்கள் இடுநர்கள் (getters, setters) எனப்படுகின்றன. ஆங்கிலத்தில் பெறுநர்கள் accessors என்றும் இடுநர்கள் setters mutators என்றும் அறியப்படுகின்றன..பயன்கள் . பெறுநர்கள் இடுநர்கள் செயலிகளில் கூடிய செயற்பாடுகளைச் செய்யலாம். எ.கா validation.. பண்புகளைக் கையாழுவதற்கான வெளி இடைமுகம் ஒரே மாதிரி இருக்க அதன் நிறுவல்கள் மாற்றப்படலாம். |
அனுமதிகளை கட்டுப்படுத்தலாம்.. பெறுமதிகள் தேவைப்படும்போது மட்டும் மாற்றப்படலாம்..வெளி இணைப்புக்கள் .பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்.மரபியல்பாக்கம் (inheritance) என்பது ஒர் அடிப்படை வகுப்பில் இருந்து அதே வகை இன்னொமொரு வகுப்பை உருவாக்கப் பயன்படும் உத்தி ஆகும். ஒரு பொருளுக்கும் இன்னுமொரு பொருளுக்கும் இது ஒரு (ஆங்கிலத்தில் is a) உறவு இருக்கும் பட்சத்தில் மரபியல்பாக்கம் ஊடாக புது வகுப்பை உருவாக்குவது பொருத்தம் ஆகும். இதனை வகுப்புகளுக்கு இடையே பெற்றோர் பிள்ளை உறவு உள்ளது என்றும் விபரிக்கலாம். பொருள் நோக்கு நிரலாக்கத்தின் முக்கிய நான்கு கூறுகளில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலான மொழிகளில் extends என்ற சொல்லைப் பயன்படுத்தி மரபியல்பாக்கம் செய்வார்கள்..எடுத்துக்காட்டுக்கள் |
யாவா .நாம் முன்னர் பார்த்த மாணவர் என்ற வகுப்பில் இருந்து பட்டதாரி_மாணவர் என்ற ஒரு வகுப்பை மரபியல்பாக்கம் ஊடாக பின்வருமாறு உருவாக்கலாம். .public class பட்டதாரி_மாணவர் extends மாணவர் {. // பண்புகள்/மாறிகள். private String மேற்பார்வையாளர்;. private String ஆய்வுத்_துறை; |
// கட்டுநர். பட்டதாரி_மாணவர்(int மாணவர்_எண், String பெயர், String ஆய்வுத்_துறை){. super(மாணவர்_எண், பெயர்);. this.ஆய்வுத்_துறை = ஆய்வுத்_துறை;. public void மேற்பார்வையாளரை_இடு(String மேற்பார்வையாளர்){. this.மேற்பார்வையாளர் = மேற்பார்வையாளர்; |
public void ஆய்வேடு_சமர்ப்பி(String ஆய்வுத்_தலைப்பு){. System.out.println(this.ஆய்வுத்_துறை + " துறையில் முதுநிலைப் பட்டயம் படிக்கும் " + this.பெயர் + . " தனது பட்டம் பெறுவதற்கான ஆராச்சியை " + ஆய்வுத்_தலைப்பு + " என்ற தலைப்பில் மேற்கொள்ளவுள்ளார்."); .பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்.வேல்யூ இன்வெஸ்டிங் .பகுதி - 1 |
பங்குச் சந்தையில் வெற்றிகரமாக முதலீடு செய்வது எப்படி? முதலீட்டாளர்கள் அத்தனை பேரும் விடை தேடும் கேள்வி இதுதான்..இந்தக் கேள்விக்கு விடை தேடிய பலரும் பல்வேறு விதமான வழிகளில் விடையைக் கண்டுபிடித்துச் சந்தையை வென்றதாகச் சொல்கின்றார்கள்..'ஷேர்மார்க்கெட்டுக்கு எல்லாமே முன்னாடியே தெரியுங்க! அதனாலதான் நாளைக்கு வரப்போற நல்ல செய்தியும், கெட்ட செய்தியும் இன்னைக்கு விலையிலேயே ரிப்ளெக்ட் ஆயிட்டிருக்கு’ என்பவர் விலையே ஷேரின் மதிப்பு என்று நினைப்பவர். ஏனென்றால், விலை சந்தையில் இருக்கின்ற, தெரிந்த மற்றும் தெரியாத செய்திகளை முழுவதுமாக பிரதிபலிக்கின்ற ஒரு விஷயம் என்று தீவிரமாக இவர் நம்புபவர்..இந்த நம்பிக்கையின் காரணமாக இவருக்கு ரிஸ்க் என்பது விலை இறங்குவதுதானே தவிர வேறொன்றுமில்லை. இவரைப் பொறுத்தவரை, விலை இறக்கத்திலிருந்து இவரைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிதான் மிக மிக முக்கியம். அதைத் தேடியலைந்து ஒரு தாத்பரியத்தைக் கண்டுபிடித்தார்..இவருடைய பிரச்னைதான் என்ன? ஒரு ஷேரை வாங்கி வைத்திருக்கிறார். எதிர்பார்த்த அளவில் அதன் விலை ஏறவில்லையென்றால் லாபக்குறைவு வரும். மாறாக வாங்கிய விலையை விட இறங்கினால் நஷ்டம். எதிர்பார்த்த லாபமும் குறையாமல் அல்லது நஷ்டம் வராமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இவருடைய கவலை..அந்த கவலைக்கு மருந்து, கையிலிருக்கும் ஷேர் இறங்கும்போது எந்த ஷேர் ஏறுகின்றது என்பதைப் பார்த்து ஒன்றுக்கொன்று எதிர்மறையாகச் செயல்படும் ஷேர்களை சரியான விகிதத்தில் வாங்கிப் போடுவதுதானே! இந்த செயலை பல்வேறு கணக்குகளைப் போட்டுச் செய்யும் முதலீட்டாளரின் பெயர் போர்ட்ஃபோலியோ இன்வெஸ்டர். |
மற்றொரு வகை இன்வெஸ்டரின் சிந்தனை வேறு மாதிரி. ஒன்றையன்று ஒப்பிடும் வழக்கமெல்லாம் நம்மிடம் இல்லை. ரொம்பவும் லாங் டேர்ம் எல்லாம் நமக்குச் சரிப்படாதுங்க. விலைதாங்க நமக்கு எல்லாம். ஒரு பாயின்ட்ல வாங்கி விலை ஏறினவுடன் மற்றொரு பாயின்ட்ல விக்கிறது நம்ம வேலைங்க. அதேமாதிரி ஒரு பாயின்ட்ல வித்து விலை இறங்கினவுடன் மத்த பாயின்ட்ல வாங்கவும் செய்வேங்க. எந்த பாயின்ட்ல வாங்கணும், எந்த பாயின்ட்ல விக்கணும் அப்படீங்கிறதைக் கண்டுபிடிக்கிறதுக்கு எங்கிட்ட ஒரு வித்தை இருக்குங்க..மார்க்கெட்ல எதிர்பார்ப்புகள் மாறிக்கிட்டே இருக்குங்க. இப்போதைக்கு என்ன மாதிரி எதிர்பார்ப்போட மார்க்கெட் இருக்குது, நாளைக்கு என்ன மாதிரி எதிர்பார்ப்பு வரப்போகுதுன்னெல்லாம் என்னால கண்டுபிடிக்க முடியும் என்னோட டெக்னிக்கை வச்சுகிட்டு. அதன் பேருதான் டெக்னிக்கல் அனாலிசிஸுங்க!" என்பவர் மற்றொரு ரகம். இவரை டெக்னிக்கல் இன்வெஸ்டர் எனலாம்..மூன்றாவது வகை இன்வெஸ்டரின் சிந்தனையைப் பார்ப்போம். நம்ம ஸ்டைலே வேறங்க. வேகமா லாபம் அதிகரித்து, கம்பெனியோட மதிப்பை வேகமா ஏற்றக்கூடிய ஷேர்கள் எது எதுன்னு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சு வாங்கிப் போடறதுதாங்க நம்ம ஸ்டைல். உதாரணமா, 1990-கள் ஆரம்பத்துல இன்ஃபோசிஸ், விப்ரோ, 2000 ஆரம்பத்துல ஏசியன் பெயின்ட்ஸ்,டிவிஸ் லேப்புன்னு வேகமா வளர்ற பங்குகளை கண்டுபிடிச்சு வாங்கிப் போட்டேங்க. அதெல்லாம் சூப்பரா வளர்ந்துடுச்சுல்ல என்று சொல்லும் இவர்கள் வளர்ச்சிப் பங்குளை கண்டுபிடித்து வாங்கிப் போடும் குரோத் இன்வெஸ்டர்.அட, இந்த பிரச்னையெல்லாம் நமக்கெதுக்குங்க! நிஃப்டியையோ சென்செக்ஸையோ லாங் டேர்மில பாருங்க. ஏறிக்கிட்டேதானே இருக்குது. அதனாலே அந்த இண்டெக்ஸில இருக்கிற பங்குகளை மட்டுமே வாங்கிப் போட்டுட்டு கண்ணை மூடிட்டு இருந்தா இண்டெக்ஸ் போற போக்கில நமக்கும் நாலு காசு லாபம் கிடைச்சுட்டு போகுது. இல்லீங்களா? இப்படி யோசிப்பவர்கள் நான்காவது வகை இன்வெஸ்டர்களான இண்டெக்ஸ் இன்வெஸ்டர்.1990-ல நான் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். மார்க்கெட்டுக்கு 2005-ல வந்தேன். அப்பவே, இன்ஃபோசிஸ், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், டிவிஸ் லேப்பெல்லாம் கைக்கெட்டாத உயரத்துல இருந்ததுங்க. நான் என்ன ஷேரை வாங்குறதுன்னு யோசிச்சேன். அப்பத்தான் என் நண்பர் ஒருத்தரு இந்த டெக்னிக்கை சொல்லிக் கொடுத்தாருங்க..ஒவ்வொரு ஷேருக்கும் இரண்டு விஷயம் இருக்குது. ஒன்று மதிப்பு, மற்றொன்று விலை. விலையும் மதிப்பும் ஒண்ணா இருக்கறதுங்கறது ரொம்ப கஷ்டமான காரியம். சில சமயம் விலையைவிட மதிப்பு மிக அதிகமா இருக்கும்; சில சமயம் விலையைவிட மதிப்பு மிகக் குறைவா இருக்கும். மதிப்பைவிட விலை அதிகமா இருக்கற காலத்தைப் பத்தி நாம கவலைப்பட வேண்டியதில்லீங்க. மதிப்பைவிட விலை ரொம்பவும் குறைவா இருக்கறப்ப நாம உஷாரா ஆயிடணும். எதனால மதிப்பை விட விலை குறைவா இருக்குதுன்னு ஆராய்ச்சி பண்ணனும்..ஒரு நல்ல கம்பெனி. நல்ல திறமையான மேனேஜ்மென்ட். ஏதோ ஒரு அசாதாரண சூழ்நிலையில விலை மதிப்பைவிட குறைவாயிருக்கு. இந்த அசாதாரண சூழ்நிலை மாறிடும். இன்னைக்கு இருக்கிற கஷ்டமான சூழ்நிலை தீர்ந்துடும். அதை தீர்த்துக்கிற திறமையும் கம்பெனியின் மேனேஜ்மென்டிற்கு இருக்குங்கிறதைத் தெரிஞ்சுகிட்டு அந்த ஷேரில முதலீடு பண்ணனும்..இந்த டெக்னிக்கை உபயோகிக்க பொறுமையும் நாலெட்ஜும்தாங்க வேணும். எல்லா காலகட்டத்திலேயும் ஏதாவது ஒரு ஷேர் இந்த கேட்டகிரில வந்து விழுந்துகிட்டேதான் இருக்கும். கரெக்டா ஸ்டடி பண்ணி புடிச்சுப் போட்டுடணுங்க. நல்ல லாபம் பார்த்தேணுங்க'' என்று சொல்லும் இந்த ஐந்தாவது வகை இன்வெஸ்டர் ஒரு வேல்யூ இன்வெஸ்டர். இந்த வேல்யூ இன்வெஸ்டிங் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லவே இந்த புதிய தொடர். |
எல்லா மெத்தடுலேயும் விலையும் மதிப்பும் ஏதாவது ஒரு ரூபத்துல வந்து போய்க்கிட்டேதானே இருக்குது. வேல்யூ இன்வெஸ்டிங்கில மட்டும் என்ன அப்படி ஸ்பெஷல் என்கிறீர்களா?வேல்யூ இன்வெஸ்டிங்கின் அடிப்படைத் தத்துவம் இதுதான். விலை, மதிப்பைவிட குறைந்திருக்கும்போது வாங்கணும். விலை, மதிப்பைவிட அதிகமா போகும்போது விற்கணும் அவ்வளவேதான்!.அட, என்ன சார் இது. ஒரு கம்பெனியைப் பத்தி கெட்ட செய்தி ஒண்ணு வருது. விலை, மதிப்பைவிட வேகமா இறங்கினா ஏமாந்து போய்டுவோமே என்பீர்கள்..இதுக்கெல்லாம் விடை வேல்யூ இன்வெஸ்டிங்கில் இருக்குதுங்க. விடை மட்டுமில்ல, ஃபார்முலா இருக்கு. ரூல்ஸ்கூட இருக்கு. அதை எல்லாம் எப்படி கத்துக்கறதுன்னு விளக்கமாச் சொல்றேன். தொடர்ந்து படியுங்க..!.பகுப்பு:தனிநபர் நிதி.தேவையான பொருட்கள் . வேப்பம்பூ |
வெங்காயம். ஆமனக்கெண்ணெய். கடுகு. வெந்தயம்.செய்முறை .அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்கு கிளறி உருண்டை பிடித்து வெயிலில் காயவைத்து (5 முதல் 6 நாட்கள்) எடுத்து வைக்கவும். தினமும் உருண்டைகளை பிடி தளராமல் பிடித்து வைப்பது நல்லது. |
பகுப்பு:சமையல் நூல்.தேவையான பொருட்கள் . பெரிய ஊறுகாய் மாங்காய் - 1 கிலோ. நல்லெண்ணெய் - 500 கிராம். கடுகு - 100 கிராம். வரமிளகாத்தூள் - 250 கிராம் அல்லது காரத்திற்கு ஏற்றவாறு |
கடுகு பொடி - 50 கிராம். உப்பு - தேவையான அளவு (சற்று கூடுதலாக இருந்தால் நல்லது).செய்முறை . பெரிய ஊறுகாய் மாங்காய்களை துருவி, பெரிய பாத்திரத்தில் உப்புடன்(தேவையான அளவுக்கு கொஞ்சம் கூடுதலாக சேர்க்கவும்) கலந்து வெய்யிலில் காயவைக்கவும்.. 5 முதல் 6 நாட்கள் வரை காயவிடவும், பொதுவாக நீர் வற்றிஇருக்கும்வரை காய விடவேண்டும் . பிறகு, ஒரு கடாய் அல்லது அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும் |
கடாயில் நல்லண்ணை விட்டு காய்ச்சவும் . எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு சேர்க்கவும் . பிறகு உப்பு-மாங்காய் கலவையை அதில் சேர்த்து தேவையான அளவு வரமிளகாத்தூள், அரைத்த வெந்தய பொடி(சிறிதளவு) சேர்த்து நன்கு கிளறவும்.. பச்சை வாடை போகும் வரி கிளறி அடுப்பை அனைத்து, ஊறுகாயை நன்கு ஆறவைக்கவும். ஆறியதும் அதை ஒரு ஊறுகாய் ஜாடியில் அடைத்து உபயோகிக்கவும்.பகுப்பு:சமையல் நூல் |
பொருளடக்கம் . /உணவும் ஊட்டச்சத்தும் அறிமுகம்/. /ஊட்டச்சத்தின் ஆறு முக்கிய பிரிவுகள்/. /காபோவைதரேட்டு/. /புரதம்/. /கொழுப்பு/ |
/உயிர்ச்சத்துக்கள்/. /தாதுக்கள்/. அடிப்படை உணவு வகைகள். /மரக்கறிகள்/. /பழங்கள்/. /தானியங்கள்/ |
/இறைச்சி/மீன், அவரை/. /எண்ணைகள்/. /பால் பொருட்கள்/. /நீர்/. சத்துப்பொருள் விபர அட்டவணை. சிக்கல்கள் |
/உணவும் நோயும்/. /ஊட்டக்குறை/. /உடற்பருமன்/.தேன் தேன் .என்ன தேன் .கொம்பு தேன் |
என்ன கொம்பு .மான் கொம்பு .என்ன மான் .புள்ளி மான் .என்ன புள்ளி .இலை புள்ளி |
என்ன இலை .வாழை இலை .என்ன வாழை .ரச வாழை .என்ன ரசம் .மிளகு ரசம் |
என்ன மிளகு .வால் மிளகு .என்ன வால் .நாய் வால் .என்ன நாய் .மரநாய் |
என்ன மரம் .வேர் மரம் .என்ன வேர் .வெட்டிவேர் .என்ன வெட்டி .பாக்கு வெட்டி |
என்ன பாக்கு .கொட்டப் பாக்கு .என்ன கொட்ட .மாங்கொட்ட .என்ன மா .அம்மா |
பகுப்பு:குழந்தைப் பாடல்கள்.ஒரு மென்பொருளில் உள்ள வழுக்களைக் கண்டறிந்து தீர்ப்பது வழுநீக்கல் ஆகும். நிரலாக்கத்தின், பராமரிப்பின் ஒரு முக்கிய பகுதி வழுநீக்கல் ஆகும். இந்த நூல் ஒரு நிரலாக்கரின் வழுநீக்கல் திறனை மேம்படுத்தும் நோக்குடன் எழுதப்படுகிறது..பொருளடக்கம் . /வழு என்றால் என்ன?/. /வழு வகைகள்/. /நுட்பக் கடன்/ |
/வழுநீக்கியின் கூறுகள்/. /வழுநீக்கல் வழிமுறை/ (DECSAR Method: வரையறை செய்தல், கண்டுபிடித்தல், காரணம் கண்டறிதல், தீர்வுகளை பரிசீலித்தல், நிறைவேற்றல், மீளாய்வு). வழு கண்டுபிடித்தல் நுட்பங்கள். வழுவை மீள் உருவாக்கல் (Repeat the bug). இயக்க ஓட்டப் பகுப்பாய்வு (Execution flow analysis). நிற்கும் புள்ளி (Breakpoint) |
சூழல் காரணிகளை ஆராய்தல் (Analyzing the environment). வழுவை தனிமைப்படுத்தல் (Isolating the bug). வழு தீர்த்தல் நுட்பங்கள். எளிய சிக்கலைத் தீர் (Solve the simple case). மாற்றுத் தீர்வு.மென்பொருள் பிழையான அல்லது எதிர்பாராத விளைவைக் கொடுக்கும் போது அதனை வழு என்கிறோம். பெரும்பாலான வழுக்கள் மென்பொருள் வடிவமைக்கப்படும் பொழுது அல்லது உருவாக்கப்படும் (மூல நிரலில்) பொழுதுதே ஏற்பட்டுவிடுகின்றன. வழுக்களைக் கண்டுபிடித்து தீர்ப்பது வழுநீக்கல் (debugging) எனப்படுகிறது. வழுக்கள் மென்பொருட்களில் பயன்பாட்டை, பயனர் அனுபவத்தை, தரத்தைப் பாதிக்கும். இதய முடுக்கி, அணு நிலையக் கட்டுப்பாடு, விண்ணோடம் போன்ற உயிர் உய்ய மென்பொருட்களில் அவை உயிருக்கு ஆபத்தானாதாகவும் அமையக் கூடும். |
வழு என்பது ஆங்கிலத்தில் பக் (bug) என அழைக்கப்படுகிறது. கணினி மற்றும் கணினி மென்பொருள் உருவாவதற்கு முன்பிருந்தே பொறியியல் சமூகம் தவறுகளைக் குறிக்க பக் என்ற சொல்லைப் பயன்படுத்தியது. ஆங்கிலத்தில் பக் (bug) என்ற சொல்லுடன் டிபக்ற் (defect), இசு (issue) என்ற சொற்களும் சிறிய வேறுபாடுகளுடன் பயன்படுத்தப்படுவதுண்டு. இவை தொடர்பான அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறைகள் இல்லை. எனினும் பொதுவாக வழு என்பது நிரலில் உள்ள தவறு. டிபக்ற் என்பது வடிவமைப்பு தேவைகளில் இருந்து வேறாக இருப்பது. இசு என்பது வாடிக்கையாளர் முறையிடும் பிரச்சினைகள் ஆகும். .ஒரு மென்பொருளை உறுதியாக வழு இல்லாமல் உருவாக்க முடியாது என்றே கருதப்படுகிறது. ஆனால் வழுக்கைகளைக் மிகக் குறைவாதாக அல்லது சாத்தியக் குறைவானாதாக ஆக்கவும், அப்படி அவை ஏற்படும் பட்சத்தில் முறையாக கையாளவும் முடியும். மென்பொருள் வடிவமைக்கும் போது அல்லது உருவாக்கும் போதே வழுக்களைக் கண்டுபிடித்து தீர்ப்பது குறைவான வழுக்களைக் கொண்ட ஒரு மென்பொருளை உருவாக்க உதவும் ஒரு முக்கிய செயற்பாடு ஆகும். குறிப்பாக மென்பொருள் சோதனை, மென்பொருள் தரக் கட்டுப்பாடு ஊடாக வழுக்கள் கண்டறியப்பட்டு நீக்கப்படுகின்றன..வழு என்றால் என்ன என்று பார்த்தோம், வழுக்களின் வகைகள் பற்றி அடுத்து பார்ப்போம்..வெளி இணைப்புகள் .பகுப்பு:மென்பொருள் வழுநீக்கல்.தொடரமைப்பு வழு |
வள வழு. இயங்குதிறன் வழு. இயங்குசூழல் வழு. கணித வழு. ஏரண வழு. பல் இழையாக்க வழு |
நேரப்படுத்தல் வழு.பகுப்பு:மென்பொருள் வழுநீக்கல்.உடலின் அன்றாட தொழிற்பாடுகளுக்கு ஆற்றல் தேவை. அந்த ஆற்றலை உடலில் உள்ள உயிரணுக்கள் குளுக்கோசு அல்லது சர்க்கரை எனப்படும் மூலப்பொருளின் ஊடாகப் பெறுகின்றன. குளுக்கோசு நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்படுகிறது. காபோவைதரேட்டு ஊட்டக்கூறு கொண்ட உணவுகளே குளுக்கோசாக மாற்றப்பட்டு உடலுக்கு ஆற்றல் வழங்குகின்றன. காபோவைதரேட்டு நமக்குத் தேவையான ஆறு முக்கிய ஊட்டக்கூறுகளில் ஒன்று..பெறப்படும் உணவுகள் .பின்வரும் உணவுகள் காபோவைதரேட்டு நிறைந்த பொருட்கள் ஆகும்.. தானியங்கள் (நெல், கோதுமை, சோளம், வரகு, திணை, சாமை, கம்பு) |
பரப்புகள். மரக்கறிகள், கிழங்குகள் (கத்தரி, வெண்டி, மரவள்ளி, பூசணி, உருளைக்கிழங்கு). பழங்கள் (மா, பலா, வாழை, பப்பாளி). கொட்டைகள் (கச்சான், முந்திரி, பிரேசில் கொட்டை). பாலுணவுகள். இனிப்புகள் |
காபோவைதரேட்டு எளிய காபோவைதரேட்டு சிக்கலான காபோவைதரேட்டுக்கள் என இரு வகையாக வகைப்படுத்துவதுண்டு. வேகமாக உடலால் குளுக்கோசாக மாற்றப்படக் கூடிய உணவுகள் எளிய காபோவைதரேட்டு எனவும் அவ்வாறு செய்யப்பட முடியாவதை சிக்கலான காபோவைதரேட்டாகவும் கொள்ளப்படுகிறது. இனிப்புகள், பழங்கள், பாலுணவுகள் எளிய காபோவைதரேட்டுக்கள். முழுத் தானியங்கள், மாப்பொருள் கொண்ட மரக்கறிகள், பரப்புக்கள் போன்றவை சிக்கலான காபோவைதரேட்டு..தேவைப்படும் அளவு .உட்கொள்ளப்படும் உணவுகளில் 45 இருந்து 65% வரைக்கும் முதன்மையாக காபோவைதரேட்டைக் கொண்டிருக்க வேண்டும் என அமெரிக்க அரச உணவுக் கையேடு பரிந்துரைக்கிறது. ஆனால் அண்மைக் காலத்தில் வெளிவந்த ஆய்வுகள் சில காபோவைதரேட்டைக் அதை விடக் குறைவாக உண்ணுவது கூடிய பலனைத் தரலாம் என்று கூறி உள்ளன..செயற்பாடு .நாம் காபோவைதரேட்டு கொண்ட உணவுகளை உண்டு, செமிபாட்டின் பின்பு இரத்திதில் குளுக்கோசின் அளவு உயரும். அவ்வாறு உயரும் போது அதைக் கட்டுப்படுத்தும் வண்ணம் கணையம் இன்சுலீனைச் சுரக்கும். உயிரணுக்கள் குளுக்கோசை உள்வாங் இன்சுலீன் உதவி, இரத்தில் உள்ள குளுக்கோசு நிலையை சீர்படுத்தும். குளுக்கோசை உயிரணுக்கள் தமது செயற்பாடுகளுக்கு ஆற்றலாகப் பயன்படுத்தும்..மேற்கோள்கள் |
பகுப்பு:உணவும் ஊட்டச்சத்தும் அடிப்படைகள்.எண்முறை மின்னணுவியல் அறிமுகம்.எண்முறை மின்னணுவியல் என்பது தகவலைக் குறிப்பிட 0 மற்றும் 1 ஆகிய இரண்டு எண்களை மட்டுமே பயன்படுத்தும் ஒரு மின்னணுவியல் துறை ஆகும்..1. /எண்தளமுறை/.ஒப்புமையும் எண்முறையும்.எண்முறைகள் |
பதின்ம எண்முறை.இரும எண்முறை.2. /ஏரண செயல்பாடுகள்/.3. /கணித செயல்பாடுகள்/.இலக்கமுறை ஏரண வாயில்கள். /ஏரண வாயில்கள்/ |
/ஏரண வாயில்கள் சுருக்கம்/.இலக்கமுறை கருவிகள். /கணித மற்றும் ஏரண செயல்பாடுகள்/. /ஒத்தியங்கு கருவி/. /ஒத்தியங்காக் கருவி/.இலக்கமுறை குறிகை செயலாக்கம் |
/இலக்கமுறைத் தரவு/. /தரவுக் குறியீடாக்கி/. /தரவுத் தெரிவி/.இலக்கமுறை எந்திரங்கள். /கணினி/. /அச்சுப்பொறி/ |
/தொலைநகலி/. /வட்டு இயக்கி/.தெரிவிப்பு செந்தரங்கள். /திறப்பு செந்தரங்கள்/. /ஆன்சி/. /ஐஎஸ்ஓ/ |
நூலாசிரியர்கள்./நூலாசிரியர்கள்/.நிதி அல்லது பணம் என்பது வளங்களுக்கு மதிப்பீடாக அமைவது. உணவு, உடை, உறையுள், நலம், போக்குவரத்து போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இருந்து ஆடம்பரங்கள் வரைக்கும் ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் நிதி அல்லது வளங்கள் அவசியமாக அமைகிறன. நிதி அறிவு என்பது நிதி தொடர்பாக பொறுப்பான முடிவுகளை எடுக்கத் தேவையான தகவலறிவு, திறன்கள், தன்நம்பிக்கை ஆகியவற்றை ஒருவர் பெற்றிருப்பது ஆகும். நிதியை எப்படி உருவாகுவது அல்லது பெறுவது, பயன்படுத்துவது, முதலீடு செய்வது. மேலாண்மை செய்வது என்பவை நிதி அறிவில் அடங்கும். .எழுத்தறிவு, கணினி அறிவு போன்று நிதி அறிவும் இன்று எல்லொருக்கும் தேவையான ஒன்று. நிதி அறிவு ஒருவரின் வளங்களை திறனாகப் பயன்படுத்தி உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள உதவும்..வங்கி, கடன் அட்டை, பல்வேறு வகையான முதலீடுகள் என்று இன்றைய நிதிக் கருவிகளும் நிறுவனங்களும் சிக்கலானவை. மீனுக்குத் தூண்டில் போடுவது போன்று கடன்களைத் தந்து ஒருவரின் நிதியை சூறையாடும் முதலை நிறுவனங்கள் பல உண்டு. தெளிவான புரிதல் இல்லாமல் ஒருவரால் இவை தொடர்பாக உச்சபயன் தரும் முடிவுகளை எடுக்க முடியாது..இன்றைய நுகர்வுப் பண்பாட்டில் அடிப்படைத் தேவைகளுக்கும் மிதமான ஆசைகளுக்கும் இடையே தெளிவான வாழ்க்கை மற்றும் நிதி இலக்குகளை முன்வைத்து செயற்பட வேண்டும். அதற்கும் நிதி அறிவும், நிதித் திட்டமிடலும் தேவை. |
நிதி அறிவு ஒரு சமூகத்தில் உயரும் போது அச் சமூகம் நிதி தொடர்பான கூடிய பொறுப்புள்ள முடிவுகளை எடுக்க உதவும். நாட்டின் நிதி, நிதி தொடர்பான சட்டங்கள், நிதி நிறுவனங்கள், அவற்றின் செயற்பாடுகளைப் புரிந்து கொள்ளவும் நிதி அறிவு ஒருவருக்கு உதவுகிறது..பகுப்பு:தனிநபர் நிதி.தனிநபர் நிதி என்பது ஒருவரின் நிதி நிலையை உச்சமாக மேம்படுத்தும் நோக்குடன், எதிர்பாரா நிகழ்வுகளையும் இடர்களையும் கருத்தில் கொண்டு அவரின் நிதி தொடர்பான திட்டமிடல் மற்றும் செயற்பாடுகளைக் குறிக்கும். நிதி இலக்குகளை வரையறை செய்தல், நிதியைப் பெறுதல் அல்லது உருவாக்கல், வரவு செலவுத் திட்டம், சேமிப்பு, முதலீடு, நிதியளிப்பு, கடன், காப்பீடு என்ற பல கூறுகள் இதில் அடங்கும். நிதித் திட்டமிடல் தனிநபர் நிதியில் ஒரு முதன்மைக் கூறு ஆகும். .பகுப்பு:தனிநபர் நிதி.செயலி மோலோங்கல் (Method overriding) என்பது, தாய் வகுப்பு செயலியை ஒரு உப வகுப்பு செயலி கொண்டு மாற்றி அமைப்பது ஆகும். இவ்வாறு மாற்றி எழுதும் போது செயலி மிகைப்பாரமேற்றல் போல் அல்லாமல் செயலிக் கையெழுத்து தாய்ப் பகுப்பின் செயலியினது போன்றே அமைய வேண்டும். .எந்தச் செயலி அழைக்கப்படும் என்பது எந்தப் பொருள் செயலியை அழைக்கிறது என்பதைப் பொறுத்து அமையும். தாய்ப் பகுப்பு செயலியை அழைத்தால் தாய்ப் பகுப்பின் செயலி இயக்கப்படும். உப பகுப்பு அழைத்தால் உப பகுப்பின் செயலி இயக்கப்படும். |
பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்.இணைவு (Association) என்பது இரு வகுப்புகளுக்கு இடையேயான ஒரு வகை உறவு ஆகும். ஒரு வகுப்பு இன்னுமொரு தனித்தியங்கும், தனியே வாழ்க்கை வட்டம் கொண்ட இன்னுமொரு வகுப்புடனான தொடர்பு இணைவு ஆகும். இந்த வகை உறவில் ஒன்றை ஒன்று உடைமை கொள்வதில்லை. ஆகையால் இந்த வகை உறவு ஒரு வகுப்பு இன்னுமொரு வகுப்பை பயன்படுத்தல் ("uses a") உறவு என்பர்..எடுத்துக் காட்டாக பல மாணவர்கள் ஒரு வகுப்பை எடுக்கலாம். ஒரு மாணவர் பல வகுப்புக்களை எடுக்கலாம். ஆனால் இரண்டு பொருட்களுக்கும் உடைமை உறவு இல்லை. மாணவரோ, வகுப்போ தனித்தனியே உருவாக்கப்படலாம், மாற்றப்படலாம், நீக்கப்படலாம்..வெளி இணைப்புகள் .பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்.பொதிவு என்பது பல எளிய பொருட்களைக் கொண்டு கூடிய சிக்கலான பொருளை உருவாக்குதல் ஆகும். அதாவது கூடிய சிக்கலான பொருள் எளிய பொருட்களின் பொதிவாக அமையும். சிக்கலான பொருள் எளிய பொருட்களை உடைமையாகக் கொண்டிருக்கும். அப் பொருள் அழிந்தால் எளிய பொருட்கள் தனித்தியங்க முடியாது. இந்த வகை உறவை முழு-உப ("whole-part") அல்லது உடைமை ("owns a") உறவு என்பர். |
எடுத்துக்காட்டுக்கு ஒரு பல்கலைக்கழகம் அதன் துறைகளினால் (Departments) ஆல் ஆனது. ஒரு பல்கலைக்கழகம் இல்லாமல் போகும் போது துறைகள் இருக்க முடியாது. ஒரு துறை பலகலைக்கழகத்தின் ஒரு பகுதி (is a part of) ஆகும்..பொதிவு ஒரு சிறப்பு வகை திரட்டு உறவு ஆகும். பிள்ளை அல்லது உறுப்புப் பொருட்கள் தனித்து வாழ்க்கை வட்டத்தைக் கொண்டு இராது. பெற்றோர் பொருள் அழிந்தால் பிள்ளை அல்லது உறுப்புப் பொருட்கள் அழியும்..வெளி இணைப்புக்கள் .பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்.திரட்டு (Aggregation) என்பது ஒரு பொருள் பிற பொருட்களை வைத்திருத்தல் (ஆங்கிலத்தில் "has a") வகை உறவு ஆகும். இந்த வகை உறவில் உறுப்புப் பொருட்கள் தனியான வாழ்கை வட்டத்தைக் கொண்டிக்கும். ஆனால் திரட்டு உடைமை (ownership) கொண்டுள்ளது. பிள்ளை வேறு ஒரு பெற்றோர் பொருளோடு சேர முடியாது. .திரட்டு ஒரு சிறப்பு வகை இணைவு உறவு ஆகும். தனித்து வாழ்க்கை வட்டம் கொண்ட, ஆனால் உடைமை உள்ள உறவு ஆகும். |
பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்.நிலை வகுப்புக்களும் வகுப்பு உறுப்புக்களும் வகுப்பில் இருந்து ஒரு பொருளை உருவாக்காமலே (without instantiating an object) பயன்படுத்தக் கூடிய தரவுகளையும் செயலிகளையும் உருவாக்கப் பயன்படுவன. இத் தரவுகளினதும் செயலிகளிளும் ஒரு பிரதியை மட்டும் கொண்டு இருக்கும். வகுப்பு, வகுப்பின் பொருட்கள், உப வகுப்புக்கள் ஆகியன இந்த நிலையான பிரதியை பயன்படுத்த முடியும்..ஒரு பொருளின் அடையாளித்தில் தங்கி இராத தரவுகளையும் செயலிகளை இவ்வாறு வடிவமைக்க முடியும். பல மொழிகளில் static என்ற மூலச்சொல்லைப் பயன்படுத்தி நிலை வகுப்புக்களும் உறுப்புக்களும் வேறுபடுத்தப்படுகின்றன.. நிலை வகுப்பு - static class. நிலை உறுப்புகள். நிலைப் பண்பு - static attribute/property/data |
நிலைச் செயலி - static method/function. நிலை நிகழ்வு - static event.பயன்பாடு . நிலை வகுப்புக்களும் செயலிகளும் பல வகுப்புக்கள் பயன்படுத்தும் Utility Methods ஐ நிறைவேற்றப் பயன்படுகின்றன.. ஒரு வகுப்பு states ஐ கொண்டு இராவிட்டால்..வெளி இணைப்புக்கள் |
பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்.சுழல் என்பது ஒரு செயலியின் வரையறையில் அதே செயலி பயன்படுமானால் அது சூழல் அல்லது சுழல் செயலி (recusive function). கணிதத்தில் இடம்பெறும் சுழல் (recursion) என்ற கருத்து நிரலாக்கத்திலும் பல இடங்களில் பயன்படுகிறது..எடுத்துக்காட்டுக்கள்.கூட்டுதல் .// கூட்டு: 1 + 2 + 3 + 4 + 5 + ... + n.$பதில் = கூட்டு(5); |
echo "விடை: " . $பதில்;.function கூட்டு($x) {. return $x + கூட்டு($x-1); // <--calling itself..விடை: 15.பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.இடைமுகம் என்பது ஒரு வகுப்பின் அனைத்து செயலிகளின் கையெழுத்துப் பட்டியல் ஆகும். மாறிலிகளை இது கொண்டிருக்கலாம். ஒரு வகுப்பு இடைமுகத்தை நிறைவேற்ற அல்லது நீட்டும் (extend) போது இடைமுகத்தில் வரையறை செய்யப்பட்ட அனைத்து செயலிகளையும் நிறைவேற்ற வேண்டும். |
இடைமுகத்தின் பயன்கள் . இடைமுகத்தை வரையறை செய்வதன் ஒரு வகுப்பின் செயலிகள் அல்லது சேவைகள் தொடர்பான ஒரு தெளிவான உறுதியான ஒப்பந்தம் முன்வைக்கப்படுகிறது.. இடைமுகம் எப்படி ஒரு செயலி நிறைவேற்றப்படுகிறது என்ற விபரங்களையும் சுதந்திரத்தையும் நிறைவேற்றுபவருக்கு வழங்கும் அதே வேளை, அந்த வகுப்புக்களைப் பயன்படுத்துவோருக்கு நிலையான தொடர்பாடல் முறையைத் தருகிறது. இதனால் நிறைவேற்றம் தொடர்பான மாற்றங்களையும் எளிதாக மேற்கொள்ளலாம்.. நிரலாக்கத்தின் வடிவமைப்பில், பணிப் பிரிப்பில், ஆவணப்படுத்தலில் இடைமுகம் உதவுகிறது. .பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்.இணையம் பயரந்த பயன்பாட்டுக்கு வந்த பின்பு, குறிப்பாக வலை 2.0 தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த பின்னர் (1990 களின் இறுதி) பெருந்தொகை மென்பொருட்கள் வலைச்செயலிகளாக உருவாக்கப்படலாயின. இன்று அன்றாடம் பயன்படுத்தும் பல மென்பொருட்கள் வலைச்செயல்களாகும். உள்ளடக்க மேலாண்மை (Content Management Systems - CMS), இணைய வணிகம் (e-Commerce), நிறுவன வளம் திட்டமிடல் (Enterprise Resource Planning), வகுப்பு மேலாண்மை (class management) உட்பட்ட பல்வகை மென்பொருட்கள் பெரும்பாலும் வலைச்செயலிகள் ஆகும். வேகமாக வளர்ச்சிபெற்று வந்த இந்தத் துறை நடமாடும் செயலிகளின் வருகைக்கு பின்பு கணிசமான தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளது. |
கட்டமைப்பு .வலைச்செயலிகள் பெரும்பாலும் பயனர் சேவையர் (Client-Servent) மாதிரியில் அமைந்தவை..பயன்படுத்தப்படும் நிரல் மொழிகள் .வலைச்செயலி வடிவமைப்பில் பரந்து பயன்படுத்தப்படும் குறிமொழிகளும், நிரல்மொழிகளும்..பயனர் பக்கம் . எச்.ரி.எம்.எல் |
யாவாக்கிறிட்டும் யாவாக்கிறிட்டு நிரலகங்களும். சி.எசு.எசு.வழங்கி பக்கம் . பி.எச்.பி. ரூபி. பைத்தான் |
பெர்ள். யாவா. எ.எசு.பி.தரவுப் பரிமாற்றாம் . எக்சு.எம்.எல். யேசன் |
தரவுத்தளங்கள் . மைசீக்குவல். போசுகிரசு.பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.நுண்ணறி பேசிகளினதும் கைக் கணினிகளினது பரந்த அறிமுகத்துக்குப் பின்பு (2008) நடமாடும் செயலிகள் பெருமளவும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தொடுதிரை, படம்பிடிகருவி, புவியிடங்காட்டி, சுழல் காட்டி போன்ற கணினியில் இலகுவாக இல்லாத வசதிகளுடன் புதிய வாய்ப்புக்களை நடமாடும் தளம் வழங்கியது. இன்று ஆப்பிள், அண்ரொயிட், பிளக்பேரி, மைக்ரோசோப்ட் ஆகிய பாரிய நடமாடும் தளங்கள் உள்ளன. .நடமாடும் செயலிகளை உருவாக்க இன்று இரண்டு முக்கிய அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு தளத்துக்கும் அவற்றின் சொந்த மொழியில் (Native code) இல் செயலிகளை உருவாக்கல். ஒவ்வொரு தளத்திலும் உள்ள சிறப்புக் கூறுகளைப் பயன்படுத்தி உச்ச பயனர் அனுபவத்தை வழங்க இதுவே சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு பதிப்பு உருவாக்க வேண்டும். |
மாற்றாக எச்.ரி.எம்.எல் 5 மற்றும் வலைச்செயலி நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து தளங்களிலும் இயங்கக் கூடிய செயலியை உருவாக்குதல் ஆகும். இந்த முறையில் சில தள வளங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இரண்டையும் கலந்த அணுகுமுறையும் சில நிரலகங்கள் தருகின்றன..பயன்படுதப்படும் நிரல் மொழிகள்.அனைத்து தளங்களும் . எச்.ரி.எம்.எல் 5. சி.எசு.எசு. யாவாக்கிறிட்டும் யாவாக்கிறிட்டு நிரலகங்களும் |
ஆப்பிள்/ஐ.ஓசு தளம் . ஒப்யக்டிவ் சி. எக்சு,கோட்.அண்ரொயிட் தளம் . யாவா.பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம் |
விண்டோசு நிரலாக்கம் என்பது இன்று உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்டின் விண்டோசு இயங்கு சூழலுக்கு அல்லது விண்டோசு மென்பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிரலாக்கம் ஆகும். விண்டோசு இயங்குதளம் (Windows Operation System), விண்டோசு அலுவலக மென்பொருட்கள் (Windows Office Suite), விண்டோசு வழங்கிகள் (IIS, Widows Servers), விண்டோசு தரவுத்தளம் (Microsoft SQL) என்று பல மென்பொருட்கள் பொதுப் பயனர்களிடமும், வணிகங்களுக்கிடையேயும் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இத் தளத்தில் பெருந்தொகை நிரலாளர்களால் நிரலாக்கம் செய்யப்படுகிறது..பயன்படுத்தப்படும் மொழிகள், நிரலகங்கள், கருவிகள்.மைக்ரோசாப்ட் மொழிகளும் நிரலகங்களும் . விண்டோசு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் - Windows API. விசுவல் பேசிக் - Visual Basic (தற்போது பயன்பாடு குறைந்துள்ளது). .நெற் சட்டகம் - .Net Framework |
விசுவல்.நெற் - Visua.Net. எசுபி.நெற் - ASP.Net. சி# - C#. எச்.ரி.எம்.எல் 5, யாவாக்கிறிட்டு, சி.எசு.எசு - HTML/Javascript/CSS (விண்டோசு 8 இல் இருந்து). மைக்ரோசாப்ட் எசுசீக்குவல் - Microsoft SQL (தரவுத்தளத்துக்கு).அதிகம் பயன்படுத்தப்படும் பிற மொழிகள் |
சி++. யாவா(அ) ஜாவா.நிரலாக்கக் கருவிகள் . விசுவல் சூடியோ - Visual Studio. ஐ.ஈ டெவலப்பர் ரூல்சு - IE Developer Tools.வாய்ப்புக்களும் சிக்கல்களும் |
விண்டோசு பரந்த பயன்பாட்டில் இருக்கும் மென்பொருட்கள் ஆகும். இதனால் இதில் தேர்ச்சி பெறுவது கூடிய தொழில்வாய்ப்புக்களைப் பொற்றுத் தரக் கூடியது. விண்டோசு விசுவல் சூடியோ போன்று வளர்ச்சியடைந்த விருத்திச் சூழல்களையும் கருவிகளையும் கொண்டது. பொருந் தொகை நிரலாளர்கள் இத் தளத்தில் இயங்குவதால் இவை தொடர்பான வளங்களும் நிறைய உண்டு. .அதே வேளை, விண்டோசு நுட்பங்கள் உயர்ந்த உரிமச் செலவுகளைக் (license fees) கொண்டவை. இதன் வளர்ச்சியும் பேணலும் மைக்ரோசாப்டின் விருப்பத்துக்கு உட்பட்டது. இவற்றில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் விண்டோசு காப்புரிமை உடன்படிக்கைகளுக்கு உட்பட்டவை. பெரும்பாலும் முற்றிலும் விண்டோசு சூழலில் நிரலாக்கம் செய்ய வேண்டிய இருப்பதால் வேறு மென்பொருட்களை அல்லது நுட்பங்களை பயன்படுத்துவதும் கற்றுக் கொள்வதும் சிரமமானதாகும். .பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.ஆப்பிள் நிறுவனம் இன்று பரந்த பயன்பாட்டில் உள்ள நுண்பேசி ஐபோன், கைக்கணினி ஐபோட் ஆகிய கருவிகளையும் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டில் உள்ள மக் எயர் என்ற மடிக் கணினி, ஐமாக் என்ற மேசைக் கணினி ஆகியவற்றின் உற்பத்தியாளர் ஆகும். ஐபோன், ஐபாடி ஆகியவை ஐ.ஓஎசு எனப்படும் இயக்குதளத்தைப் பயன்படுத்துகின்றன. மக் எயர், ஐமாக் ஆகியவை ஐ.ஓஎசு X இயக்குதளத்தைப் பயன்படுத்துகின்றன. இரண்டுக்கும் நெருங்கிய உறவு உண்டு..பயன்படுத்தப்படும் மொழிகள், நிரலகங்கள், கருவிகள் . ஒப்யக்டிவ் சி - Objective C |
கோக்கோ பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் - Cocoa API. ஐ.ஓஎசு மென்பொருள் விருத்திப் பெட்டி - iOS Software Development Kit.கருவிகள் . எக்சு.கோட் - XCode.வாய்ப்புக்கள்யும் சிக்கல்களும் .ஐ.ஓஎசு, மாக்.ஓஎசு அகியவற்றில் நேரடியாக விருத்தி செய்ய நீங்கள் ஆப்பிள் தரும் எக்சு.கோ பணிச் சூழலையும் ஐ.ஓஎசு மென்பொருள் விருத்திப் பெட்டி, கோக்கோ சட்டகம், ஒப்யக்டிவ் சி ஆகியவற்றை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். |
பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.மிளகு போண்டா.தேவையான பொருட்கள் (4 பேருக்கு) :.உளுந்து - 1 ஆழாக்கு.மிளகு - 1 மேசை கரண்டி .தேங்காய் - பொடியாக நறுக்கியது சிறிதளவு |
சமையல் எண்ணெய் - பொரிக்க.உப்பு - தேவையான அளவு .செய்முறை :.உளுந்தை ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து, தண்ணீர் விடாமல் நன்றாக அரைத்து கொள்ளவும். மாவு நன்றாக உப்பி மிருதுவாக இருக்க வேண்டும்..பிறகு, அரைத்த மாவில் உப்பு, மிளகு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். .ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து, காயும் எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாக மாவை இட்டு பொறித்து எடுக்கவும். |
பின் குறிப்பு :.உளுந்தை தண்ணீர் விடாமல் அரைப்பது அவசியம். அப்பொழுதுதான் மாவு கெட்டியாக இருக்கும்..சிறு உருண்டைகளாக இடவும் ஏனெனில் பொரிந்தவும் உருண்டைகள் இருமடங்காக கூடும் .கடாயில் எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் மாவை இடவும்.தேவையான பொருட்கள் :.காய்ந்த வேர்கடலை - 250 கிராம் |
வர மிளகாய் (காய்ந்த மிளகாய்) - 3 (சுவைக்கேற்ப).புளி - சிறிய நெல்லிக்காய் அளவு .உப்பு - சுவைக்கேற்ப .செய்முறை :.காய்ந்த வேர்கடலையை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும். தீய்த்துவிட வேண்டாம்.பிறகு வேர்கடலையின் தோல்நீக்கி, ஆறவைக்கவும். |
ஆறிய வேர்கடலை, மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும், தண்ணீர் விடவேண்டாம்..பிறகு புளி கரைசலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். கெட்டியான வேர்கடலை சட்னி தயார்..தேவையான அளவு தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கரைத்து பரிமாறவும்..தொழிற்சாலைச் செயலி வடிவமைப்புத் தோரணம் (Factory Method Design Pattern) என்பது ஒர் உருவாக்க வகைத் தோரணம் ஆகும். இயங்குநேரத்தில் பொருத்தமான ஒரு வகுப்பைப் உருவாக்க தொழிற்சாலைத் தோரணம் பயன்படுகிறது. பல வகை வகுப்புப் பொருட்களை ஒரு பொது இடைமுகத்தின் ஊடாக உருவாக்க இது உதவுகின்றது..பயன்பாடுகள் . குறிப்பாக எந்த வகுப்புத் தேவைப்படும் என்று முதலில் தெரியாமல் இருக்கும் போது. |
தேவைப்படும் எல்லா வகுப்புக்களும் ஒரே வகை உப வகுப்புக்களாக அமையும் போது. . எந்த வகுப்பை உருவாக்குவது என்பதை ஒரு மையம் ஊடாகச் செய்வதற்கு. . உப வகுப்புக்களைப் பற்றி பயனருக்கு தெரியாமல் இருக்க. . பொருள் உருவாக்கத்தை உறைபொதியாக்கம் செய்ய..நோக்கம் .ஒரு பொருளை உருவாக்கப் பயன்படும் இடைமுகம் ஒன்றை வரையறை செய். குறிப்பாக எந்த வகுப்பை உருவாக்க வேண்டும் என்பதற்கான பொறுப்பை உப வகுப்புகளிடம் விடு. அதாவது தொழிற்சாலை வகுப்பு பொருத்தமான உப வகுப்பு ஒன்றை உருவாக்கித் தரும். தொழிற்சாலை ஒரு வகை மெய்நிகர் வகுப்புக் கட்டுநர் ஆகும். |
சிக்கல்.கட்டமைப்பு . இடைமுகம். இடைமுகத்தை நிறைவேற்றும் உப வகுப்புக்கள். தொழிற்சாலை வகுப்பு. வாடிக்கையாளர் |
எடுத்துக்காட்டு.வெளி இணைப்புக்கள் . Factory Design Pattern - நிகழ்படம் - .பகுப்பு:வடிவமைப்புத் தோரணங்கள்.பொருளடக்கம் . /அறிமுகம்/ |
விதிகள். /கள அளவுகள்/. /கருவிகள்/. /புள்ளி முறை/. அடிப்படைகள். /தொடக்க உடற்பயிற்சிகள்/ - warm-up exercises |
/மட்டையைப் பிடித்தல்/. /ஆய்த்த நிலை/. /பரிமாறுதல்/ - serving. /நகர்தல்/ . அடிகள். வலைக்கு அருகே |
/வலை அடி/ - net shot. /வலை தூக்கடி/ - net lift shot. /வலைச் சாவடி/ - net kill shot. நடுக் களம். /நொறுக்கு/ - smash. /செலுத்து/ - drive |
/தள்ளு/ - push. /தூக்கு/ - lift. பின் களம். /தெளிவடி/ - clear shot. /வீழ் அடி/ - drop shot. /நொறுக்கு/ - smash |
வியூகங்கள். /ஏமாற்றுதல்/. /திறன் பயிற்சிகள்/. /உடற் பயிற்சிகள்/. /கலைச்சொற்கள்/.பகுப்பு:இறகுப்பந்தாட்டம் |