text
stringlengths
23
10.7k
நிதித் திட்டமிடல் செய்வதற்கு உதவியாக. தொலைநோக்கு நிதித் திட்டமிடலுக்காக.. நிதி மேலாண்மை ஒழுங்கைக் கடைப்பிடிக்க உதவும் கருவியாக. . செலவைக் குறைக்க உதவும் ஒரு கருவியாக. . சேமிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க. நிறைவேற்ற. . நேரத்துக்கு உங்கள் கட்டணச்சீட்டுக்களை கட்ட. . முக்கியமான விடயங்களைக் கண்டறிந்து அவற்றுகு முன்னுருமை கொடுக்க.
ஆவணப்படுத்தலுக்காக..செய்முறை .பின்வரும் செய்முறை மாதாந்த வரவுசெலவுக்கானது. .1. முதலில் உங்கள் வரி கழியப்பெற்ற வரவுகளைக் குறித்துக் கொள்ளுங்கள். பொதுவாக வரவுகள் உங்கள் வேலை ஊதியமாகவே அமைவதால் இலகுவாக இதைச் செய்து கொள்ளலாம்..2. அடுத்து உங்கள் மாறா செலவுகளை செலவுகள் பகுதியில் குறித்துக் கொள்ளுங்கள். பொதுவாக இவற்றை உங்கள் கட்டணசீட்டுக்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். பின்வருவன பெரிதும் மாறாச் செலவுகளில் அடங்கும்:. வாடகை அல்லது அடைமானம்
வீட்டுக் காப்புறுதி. வீட்டு வரி. வீட்டுப் பராமரிப்பு. நலக் காப்புறுதி. மின்சாரம். தண்ணீர்
எரிவாயு. தொலைபேசி. இணையம். தொலைக்காட்சிச் சேவை. வாகன வாடகை. வாகனக் காப்புறுதி
3. அடுத்து உங்கள் சேமிப்பு மற்றும் ஆபத்துதவி நிதிக்கு ஒரு தொகையை ஒதுக்கிக் கொள்ளுங்கள். இவை சேமிப்பு ஆகினும் செலவுகள் என்ற பகுதிக்குள்ளேயே போகும். பொதுவாக 10% சேமிப்புச் செய்யமாறு நிதி வல்லுனர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஆபத்துதவி நிதியாக குறைந்தது 3-6 மாதகாலத்துக்கு முழுச் செலவுக்கும் தேவையான அளவு நிதியைச் சேமிக்குமாறு பரிந்துரை செய்கிறார்கள். அந்தத் தொகை சேரும் வரை ஒரு சிறு பங்களிப்பை அதற்குச் செய்துவிடுங்கள். இந்த ஆபத்துதவி நிதி எதிர்பார்க்காத செலவுகள் வரும் போது உங்களை கடன் அட்டையை நாடிச் செல்வதைத் தவிர்க்கும். .4. அடுத்து உங்கள் கடன் செலவுகளைக் குறித்துக் கொள்ளுங்கள். கூடிய வட்டி உள்ள கடனுக்கு கூடுதல் தொகை கட்ட முடிந்தால் கட்டி விடுங்கள். .5. தற்போது, வரவில் இருந்து மேற்கூறிய செலவுகளைக் கழித்துவிடுங்கள். எவ்வளவு மீதியாக இருக்கிறதோ. அந்தளவே உங்கள் மாறும் செலவுகளுக்காக இருக்கின்றது. மாறும் செலவுகளுக்குள் பின்வருவன அடங்கும்:. உணவு - பலசரக்கு. உணவு - வெளி உணவகங்கள். மருந்து
போக்குவரத்து. எரிபொருள். உடை. ஈடுபாடுகள்/பொழுதுப்போக்குகள். பரிசுப்பொருட்கள்/கொண்டாட்டங்கள். நன்கொடை
உறுப்பினர் கட்டணங்கள். பிற.6 தற்போது மொத்த வரவுகளில் இருந்து மொத்த செலவுகளைக் கழித்துப் பாருங்கள். விடை நேர்மமாக இருந்தால் அதனை சேமிப்பிற்கோ அல்லது மாறும் செலவுகளிலோ சேர்க்கலாம். எதிர்மமாக இருந்தால் சமன்படுத்த உங்களுக்கு இரண்டு வழிகள் உண்டு:. மாறா/மாறும் செலவுகளைக் குறைத்தல். எ.கா தொலைக்காட்சிச் சேவை இருந்தால் அதனை இரத்துச் செய்யுங்கள்.. வருமானத்தைக் கூட்டுதல். எ.கா ஒரு பகுதி நேர வேலையைக் கூடுதலாக எடுத்தல்..எல்லாச் செலவுகளையும் துல்லியமாகப் பதிவுசெய்தல் வரவுசெலவை நிறைவேற்றுவதில் உள்ள ஒரு சிக்கலான பகுதி ஆகும். இதனைச் சரியாகச் செய்தாலே உங்கல் வரவுசெலவு யதார்த்தமாகவும் சரியாகவும் இருக்கும்.
மாதிரி வரவுசெலவு.வெளி இணைப்புகள் .அறிமுகம்./அறிமுகம்/.வீடும் தோட்டமும்./வீட்டு மரக்கறித் தோட்டம் வைப்பது எப்படி?/
தேவையான பொருட்கள்.நிலத்தைப் பதன்படுத்தல்.விதைகளை, கண்டுகளை தேர்வு செய்தல், நடுதல்.தண்ணீர், உரம் இடுதல்.அறுவடை.வெளி இணைப்புகள்
/வீட்டுக்கு பூச்சு அடிப்பது எப்படி?/./மறுசுழற்சி செய்வது எப்படி?/ .செய்முறை.வெளி இணைப்புகள்./வீட்டில் கோழி வளர்ப்பது எப்படி?/.உணவு
/சத்துப்பொருள் விபர அட்டவணையை வாசிப்பது எப்படி?/. /நலமாக உணவருந்துவது எப்படி?/. /மரக்கறி உணவுக்கு மாறுவது எப்படி?/.விளையாட்டும் உடற்பயிற்சியும். நீந்துவது எப்படி?/. /யோகா செய்வது எப்படி?/
5 கிமீ நெடுவோட்டம் ஓடுவது எப்படி?.நலம். /முதலுதவி செய்வது எப்படி?/. /உடலை தூய்மையாக வைத்திருப்பது எப்படி?/.கல்வி. /கட்டுரை எழுதுவது எப்படி?/
/இணையத்தில் கல்வி பெறுவது எப்படி?/.வேலை. /தற்குறிப்பு எழுதுவது எப்படி?/. /அறிமுகக் கடிதம் எழுதுவது எப்படி?/. /வேலை தேடுவது எப்படி?/. /பயிற்சிப்பணி பெறுவது எப்படி?/
/தொழில் வலைப்பின்னல் உருவாக்குவது எப்படி?/. /உங்களுக்கு ஏற்ற வேலையைத் தேர்தெடுப்பது எப்படி?/.நிதி. /தனிநபர் வரவுசெலவுத் திட்டம் செய்வது எப்படி?/ . /பணம் சேமிப்பது எப்படி?/ . /பண்டமாற்றுச் செய்வது எப்படி?/
போக்குவரத்து. /வாகனம் ஓட்டுவது எப்படி?/.தனிநபர். /முகச்சவரம் செய்வது எப்படி?/. /எப்படிச் செய்வது/தலைமயிரைப் பின்னுவது எப்படி?/. /மருதாணி போடுவது எப்படி/
/கழுத்துப்பட்டை போடுவது எப்படி/.கணினி. /தட்டச்சுப் பழகுவது எப்படி?/. தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?/. /இணைய உலாவியைப் பயன்படுத்துவது எப்படி?/. /மின்னஞ்சல் பயன்படுத்துவது எப்படி?/
/இணையத்தில் கல்வி பெறுவது எப்படி?/. /ரொறன்ற் மூலம் கோப்புக்களைத் தரவிறக்குவது எப்படி?/. /வலைப்பதிவு கட்டுவது எப்படி?/. /இறுவட்டில் பாடல்களைப் பதிவேற்றுவது எப்படி?/. நச்சுநிரல் நீக்குவது எப்படி?/. பிணையம்/தளப் பராமரிப்பு
/அப்பாச்சி வலை வழங்கியைப் பயன்படுத்துவது எப்படி?/ . /பயின்ட் டி.என்.எசு வழங்கியைப் பயன்படுத்துவது எப்படி?/. நிரலாக்கம். /கிட் பயன்படுத்துவது எப்படி?/. /டி.எசுபேசு நிறுவுவது எப்படி?/ . /வலைச்செயலி செய்வது எப்படி?/
/வினவல் மொழியைப் பயன்படுத்துவது எப்படி?/. /வலைத்தளம் கட்டுவது எப்படி?/. /டூரூப்பல் பயன்படுத்துவது எப்படி?/.ஈடுபாடுகள். /பட்டம் கட்டுவது எப்படி?/. முத்திரை சேமிப்பது எப்படி?/
/மீன் தொட்டி வைத்திருப்பது எப்படி?/.கலைகள். /ஓவியம் பயில்வது எப்படி?/. /மனிதர்களை வரைவது எப்படி?/. /இசையை வாசிப்பது எப்படி?/. /இசைக்கருவி பயில்வது எப்படி?/
/டர்பூக்கா வாசிப்பது எப்படி?/. /நடனம் பயில்வது எப்படி?/. ஒளிப்படம், நிகழ்படம். /சிறந்த ஒளிப்படம் எடுப்படு எப்படி?/. நிகழ்படம் தொகுப்பது எப்படி?/. /நிகழ்படத்தை வலையில் ஏற்றுவது எப்படி?/
தொழிற்கலைகள். /கிடுகு பின்னுவது எப்படி?/. /கடகம் செய்வது எப்படி?/. தும்புத்தடி செய்வது எப்படி?/. /விளக்குமாறு செய்வது எப்படி?/. /தென்னங் கயிறு செய்வது எப்படி?/
/தேனி பெறுவது எப்படி?/. /தேனிகள் வளர்ப்பது எப்படி?/. /ஆற்றில் மீன்பிடிப்பது எப்படி?/.ஒழுங்குபடுத்தல். /நிகழ்வை ஒழுங்குபடுத்துவது எப்படி?/ . /கோடை ஊர் ஒன்றுகூடல் செய்வது எப்படி?/
குடிவரவு. /கனடாவிற்கு குடிவருவது எப்படி?/.குறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல் (Reuse), மறுசுழற்சி (recycle) என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் மறுசுழற்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மறுசுழற்சி செய்வது பல்வேறு சூழலியல், பொருளியல், அரசியல், கல்வி நலன்களைக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். இன்று பல நாடுகளில் ஒரு சட்டப் பொறுப்பாகவும் உள்ளது. .மறுசுழற்சி என்பது நாம் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்த தக்கவாறு மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால் இப்பொருட்கள் கழிவிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இது சூழல் மாசடைடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே பொருட்களை புதிதாக ஆக்கத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் பேணப்படுகின்றன. .மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக அமையும். இதனால் குடும்பப் பொருளாதாரம் தொடக்கம் நாட்டுப் பொருளாதாரம் வரை பொருளியல் நன்மைகள் உள்ளன. மறுசுழற்சி செய்வது தொடர்பான பொதுமக்கள் அறிவு, முறைமைகள், துறைசார் அறிவுகள், உள்கட்டமைப்பு ஒரு சமூகத்தின் பேண்தகு நிலையைக் கூட்டுகிறது..மறுசுழற்சி பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. யப்பான் போன்ற நாடுகள் மிகவும் உச்சகட்டமான மறுசுழற்சியைச் செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இம் மாதிரியான உள்கட்டமைப்பும் முறைமைகளும் பல நாடுகளில் விரிவுபெற்று வருகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வீடு வரை பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பின்வரும் செய்முறை வீடுகளில் மறுசுழற்சி செய்வதற்கானது ஆகும்.
செய்முறை.அறிந்து கொள்ளல் .முதலாவதாக எவை எவை மறுசுழற்சி செய்யப்படலாம், எவ்வாறு செய்யப்படலாம் என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாழும் ஊரைப் பொறுத்து எவற்றை, எவ்வாறு செய்யலாம் என்பது மாறுபடும். மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களில் பின்வருவன அடங்கலாம். . உயிரிக் கழிவுகள்: உணவுக் கழிவுகள், இலைகள், செடிகள் போன்றவை. உங்களுக்கு வசதி இருந்தால் இவற்றை நீங்களே மக்கிய உரமாக ஆக்கித் தோட்டத்தில் பயன்படுத்தலாம். . காகிதப் பொருட்கள்: பத்திரிகை, இதழ்கள், கடிதங்கள் போன்றவை. கண்ணாடிப் போத்தல்கள்
உலோகத் தகரங்கள், பேணிகள், அலுமினியத் தட்டுக்கள்.வகைப்படுத்தல் .பயன்படுத்தி முடித்த உடனேயே மறுசுழற்சிப் பொருட்களை பிறம்பாக, மறுசுழற்சி முறைக்கேற்ப வகைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மறுசுழற்சி செய்யமுடியாத கழிவுகளை பிறம்பாக வைத்துக் கொள்ளுங்கள். பல நகரங்களில் குறைந்தது மூறு வகையாகப் பிரித்துக் கையாழுகிறார்கள். உயிரிப் பொருட்கள், மறுசுழற்சிப் பொருட்கள், கழிவுகள் என்று. இவ்வாறு வகைப்படுத்திய பொருட்களை முறையாக எடுத்துச் செலுமாறு வையுங்கள், அல்லது எடுத்துச் சென்று குடுங்கள்..விற்பனை செய்தல் .பல நாடுகளில் மறுசுழற்சி செய்யப் படக் கூடிய பொருட்களை விற்க முடியும். வீடு வீடாக வந்தும் வாங்குவார்கள். இவ்வாறு வகைப்படுத்தி சேமித்து வைத்தவற்றை விற்றும் சற்று வருவாயும் பெற்றுக் கொள்ளலாம். போத்தல்கள் போன்றவற்றை சில கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்கலாம்..சிறப்பு மறுசுழற்சி
இலத்திரனியல் பொருட்கள், மின்கலங்கள், ,மருந்துகள், பூச்சுக்கள் (paints) போன்றவை சிறப்பான முறையில் மறுசுழற்சி செய்யவேண்டும். எனவே அதற்கான வழிகளை அறிந்து செய்யுங்கள். எ.கா இலத்திரனியல் கருவிகளை மறுசுழற்சி செய்வதற்கான வணிக நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் உண்டு. பல சந்தர்ப்பங்களில் குளிரூட்டி போன்ற பெரிய பொருட்களை வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்று மறுசுழற்சி செய்வர்..மறுசுழற்சிப் பொருட்களை வாங்குதல்.போத்தில், காகிதம், உடுப்பு, தளபாடங்கள், கட்டிடப்பொருட்கள் என்று பல வகையான மறுசுழற்சிப் பொருட்கள் விற்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் விலை குறைவானவை, ஆனால் பயன்பாட்டில் ஈடானவை. அவற்றை கண்டறிந்து வாங்குங்கள்..இணைந்து செயற்படுதல் .மறுசுழற்சி என்பது நாம் எல்லோரும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு செயற்பாடு ஆகும். எவற்றை, எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்பதை பற்றிய அறிவைப் பெருக்கி பகிர்ந்து கொள்ளுங்கள். வணிகங்கள், அரசுகள் மேலும் மேலும் மறுசுழற்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதை உக்குவியுங்கள்..குறைத்தல், மீள்பயன்படுத்தல்
மறுசுழற்சியை விட சிறந்த முறை பொருட் பயன்பாட்டைக் குறைத்தல், அல்லது பயன்படுத்திய பொருட்களை மீள் பயன்படுத்தல் ஆகும்..எப்படிச் செய்வது/மறுசுழற்சி செய்வது எப்படி?.< எப்படிச் செய்வது.தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக.குறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல் (Reuse), மறுசுழற்சி (recycle) என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் மறுசுழற்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மறுசுழற்சி செய்வது பல்வேறு சூழலியல், பொருளியல், அரசியல், கல்வி நலன்களைக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். இன்று பல நாடுகளில் ஒரு சட்டப் பொறுப்பாகவும் உள்ளது..மறுசுழற்சி என்பது நாம் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்த தக்கவாறு மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால் இப்பொருட்கள் கழிவிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இது சூழல் மாசடைடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே பொருட்களை புதிதாக ஆக்கத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் பேணப்படுகின்றன.
மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக அமையும். இதனால் குடும்பப் பொருளாதாரம் தொடக்கம் நாட்டுப் பொருளாதாரம் வரை பொருளியல் நன்மைகள் உள்ளன. மறுசுழற்சி செய்வது தொடர்பான பொதுமக்கள் அறிவு, முறைமைகள், துறைசார் அறிவுகள், உள்கட்டமைப்பு ஒரு சமூகத்தின் பேண்தகு நிலையைக் கூட்டுகிறது..மறுசுழற்சி பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. யப்பான் போன்ற நாடுகள் மிகவும் உச்சகட்டமான மறுசுழற்சியைச் செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இம் மாதிரியான உள்கட்டமைப்பும் முறைமைகளும் பல நாடுகளில் விரிவுபெற்று வருகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வீடு வரை பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பின்வரும் செய்முறை வீடுகளில் மறுசுழற்சி செய்வதற்கானது ஆகும்..பொருளடக்கம். 1 செய்முறை. 1.1 அறிந்து கொள்ளல். 1.2 வகைப்படுத்தல்
1.3 விற்பனை செய்தல். 1.4 சிறப்பு மறுசுழற்சி. 1.5 மறுசுழற்சிப் பொருட்களை வாங்குதல். 1.6 இணைந்து செயற்படுதல். 1.7 குறைத்தல், மீள்பயன்படுத்தல். 2 வெளி இணைப்புகள்
செய்முறை.அறிந்து கொள்ளல்.முதலாவதாக எவை எவை மறுசுழற்சி செய்யப்படலாம், எவ்வாறு செய்யப்படலாம் என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாழும் ஊரைப் பொறுத்து எவற்றை, எவ்வாறு செய்யலாம் என்பது மாறுபடும். மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களில் பின்வருவன அடங்கலாம்.. உயிரிக் கழிவுகள்: உணவுக் கழிவுகள், இலைகள், செடிகள் போன்றவை. உங்களுக்கு வசதி இருந்தால் இவற்றை நீங்களே மக்கிய உரமாக ஆக்கித் தோட்டத்தில் பயன்படுத்தலாம்.. காகிதப் பொருட்கள்: பத்திரிகை, இதழ்கள், கடிதங்கள் போன்றவை. கண்ணாடிப் போத்தல்கள்
உலோகத் தகரங்கள், பேணிகள், அலுமினியத் தட்டுக்கள்.வகைப்படுத்தல்.பயன்படுத்தி முடித்த உடனேயே மறுசுழற்சிப் பொருட்களை பிறம்பாக, மறுசுழற்சி முறைக்கேற்ப வகைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மறுசுழற்சி செய்யமுடியாத கழிவுகளை பிறம்பாக வைத்துக் கொள்ளுங்கள். பல நகரங்களில் குறைந்தது மூறு வகையாகப் பிரித்துக் கையாழுகிறார்கள். உயிரிப் பொருட்கள், மறுசுழற்சிப் பொருட்கள், கழிவுகள் என்று. இவ்வாறு வகைப்படுத்திய பொருட்களை முறையாக எடுத்துச் செலுமாறு வையுங்கள், அல்லது எடுத்துச் சென்று குடுங்கள்..விற்பனை செய்தல்.பல நாடுகளில் மறுசுழற்சி செய்யப் படக் கூடிய பொருட்களை விற்க முடியும். வீடு வீடாக வந்தும் வாங்குவார்கள். இவ்வாறு வகைப்படுத்தி சேமித்து வைத்தவற்றை விற்றும் சற்று வருவாயும் பெற்றுக் கொள்ளலாம். போத்தல்கள் போன்றவற்றை சில கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்கலாம்..சிறப்பு மறுசுழற்சி
இலத்திரனியல் பொருட்கள், மின்கலங்கள், ,மருந்துகள், பூச்சுக்கள் (paints) போன்றவை சிறப்பான முறையில் மறுசுழற்சி செய்யவேண்டும். எனவே அதற்கான வழிகளை அறிந்து செய்யுங்கள். எ.கா இலத்திரனியல் கருவிகளை மறுசுழற்சி செய்வதற்கான வணிக நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் உண்டு. பல சந்தர்ப்பங்களில் குளிரூட்டி போன்ற பெரிய பொருட்களை வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்று மறுசுழற்சி செய்வர்..மறுசுழற்சிப் பொருட்களை வாங்குதல்.போத்தில், காகிதம், உடுப்பு, தளபாடங்கள், கட்டிடப்பொருட்கள் என்று பல வகையான மறுசுழற்சிப் பொருட்கள் விற்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் விலை குறைவானவை, ஆனால் பயன்பாட்டில் ஈடானவை. அவற்றை கண்டறிந்து வாங்குங்கள்..இணைந்து செயற்படுதல்.மறுசுழற்சி என்பது நாம் எல்லோரும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு செயற்பாடு ஆகும். எவற்றை, எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்பதை பற்றிய அறிவைப் பெருக்கி பகிர்ந்து கொள்ளுங்கள். வணிகங்கள், அரசுகள் மேலும் மேலும் மறுசுழற்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதை உக்குவியுங்கள்..குறைத்தல், மீள்பயன்படுத்தல்
மறுசுழற்சியை விட சிறந்த முறை பொருட் பயன்பாட்டைக் குறைத்தல், அல்லது பயன்படுத்திய பொருட்களை மீள் பயன்படுத்தல் ஆகும்.== வெளி இணைப்புகள் ==. மறுசுழற்சி - . மறுசுழற்சி -.இப்பக்கத்தில் அனைத்தும் அறிவியல் பற்றி சில தகவல்கள் மட்டும் விதிகள் காணப்படும்..முன்னுரை.அறிவியல் குறட்கள் என்ற இந்நூலானது இதுவரையிலும் எழுதப்பட்ட, இனி எழுதப்பட இருக்கிற அனைத்து அறிவியல் தத்துவங்களையும், குறள் வெண்பாக்களாக உருவாக்க எண்ணம் கொண்டதாகும். இதில் இடம்பெறும் குறட்களை யார் வேண்டுமானாலும் திருத்தம் செய்யலாம். அனைவரும் இணைந்து அருமையான மாபெரும் அறிவியல் குறட்கள் என்னும் இந்த நூலை உருவாக்கி வளர்த்து வருவோம். கவிதை எழுதும் ஆர்வமுள்ளவர் அவ்வப்போது ஒர் அறிவியல் கருத்தை குறள் வெண்பாவாக எழுதி, இந்நூலுக்கு சிறப்பு சேருங்கள்.
இவ்வகையான குறள் வெண்பா எழுதுவது கடினம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் வெண்பா எழுதுவதில் கடினமில்லை. அதில் இலக்கணப் பிழை இல்லையென்று உறுதியாகச் சொல்லுவதே கடினம். இங்கு அனைவரும் அவ்வாறே. ஆகையால், நீங்கள் துணிந்து தவறு இருந்தபோதிலும் அதனை பேச்சுப்பக்கத்தில் பதிவு செய்யுங்கள். இதோ அறிவியல் குறள் வெண்பாக்கள் தொடர்கிறது..எழுதப்பட்ட குறட்களின் எண்ணிக்கை = 10.உரை: மின்னூட்டம் (மின்னூட்டு) என்பது இரு பொருட்கள் உராய்வதால், துடிப்படைகிறது; பிறப்பும் இறப்பும் அதற்கு இல்லை..உரை: மின்னூட்டுக்கள் நேர், எதிர் என்று இருவகையில் காணப்படுகிறது; அதல்லாது நிலை என்ற ஒருவகையும் இருக்கிறது..உரை : இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையேயான மின்னிலை விசையின் எண்ணளவானது, ஒவ்வொரு மின்னூட்டங்களின் எண்ணளவு பெருக்கத் தொகைக்கு நேர்த்தகவிலும், அவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த் தகவிலும் அமையும்..உரை: ஒரு பொருள் நீரில் (திரவத்தில்) விழும்பொழுது உயரும் திரவத்தின் எடை, அப்பொருளை மிதக்கும்படு மேலுந்தும் விசைக்குச் சமம்.
நியூட்டன் 1ம் விதி.உரை : ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது..நியூட்டன் 2ம் விதி.உரை : ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்..நியூட்டன் 3ம் விதி.உரை : ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.
நியூட்டன் ஈர்ப்புவிசை விதி.அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் விசையானது அந்தப் பொருட்களின் நிறைகளின் பெருக்கல் பலனுக்கு நேர் தகவிலும், அவற்றிற்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்தகவிலும் இருக்கும்..உரை : வேகம் என்பது கடக்கும் தொலைவை, எடுத்துக் கொண்ட நேரத்தினால் வகுத்து வரும் ஈவாகும்..சூல் முதல் விதி.உரை : சூல் முதல் விதியை சூல் விளைவு என்றும் கூறுவர். இது ஒரு மின் கடத்தியில் பாயும் மின்னோட்டம் உருவாக்கும் வெப்பத்தை விளக்கும் இயற்பியல் விதி ஆகும். சூல் விதியின் படி , ஒரு கடத்தியில் உண்டாகும் வெப்ப ஆற்றலை பின்வருமாறு விளக்கலாம் ,.இதில் , Q என்பது t காலத்தில் R மின்தடை கொண்ட ஒரு கடத்தியில் பாயும் I மின்னோட்டத்தினால் ஏற்படும் வெப்பம் ஆகும் . இதன் அலகு சூல் ஆகும் . இதை சில நேரங்களில் சூல்-லென்சு விதி என்றும் அழைப்பார்கள் என்னென்றால் இதை பின்னாளில் கேயின்ரிச்சு லென்சு என்பவர் தனியாக கண்டறிந்தார் .
சூல் இரண்டாம் விதி.பகுதிப் பொருண்மைச் சமநிலை.அறிமுகம்./அறிமுகம்/. நூலின் நோக்கம்./நிலை மின்னியல்/
உராய்வு மின்னியல்./மின்னோட்டம்/./வெப்பவியல்/./அணுவியல்/./ஒளியியல்/./ஒலியியல்/
இயற்பியல் - ஒரு முழு பாடநூல் என்பது இயற்பியல் துணைத்துறைகள் அனைத்துக்குமான ஒரு உலகளாவிய பொது பாடநூல் ஆகும்..1.நூலின் நோக்கம்.இந்நூலின் நோக்கமானது மாணவர்கள் பள்ளி பயிலும் பருவத்தில் தேவைப்படும் அனைத்து இயற்பியல் பாடங்களையும் உருவாக்குவதாகும்..நிலை மின்னியல் (Electrostatics) என்பது நிலையான மின்னூட்டம் அல்லது ஓய்வு நிலையில் மின்னூட்டங்களினால் ஏற்படும் அடிப்படை நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி விளக்கும் ஒரு இயற்பியல் துறையாகும். பொருட்களில் ஏற்படும் எதிர்மின்னிகள் இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. அம்பர் (ஆம்பர்) போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். electron என்ற சொல் அம்பரின் கிரேக்க மூலச்சொல்லான elektron என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். ஈர்ப்புப் புலத்தில் உள்ள நிறைகளைப் போன்றதே மின்புலத்திலுள்ள மின்னூட்டங்களும் ஆகும். மின்னூட்டங்கள் தங்களுக்கிடையே செயல்படும் விசைகளை பெற்றிருப்பதால் நிலையான ஆற்றலைப் பெற்றுள்ளன. இக்கருத்துக்கள் மின்னோட்டங்களின் பல பிரிவுகளிலும், அணு பற்றிய பல கொள்கையிலும் பெரிதும் பயன்படுத்துகின்றன..உராய்வு மின்னியல்.கி.பி 600 இல், கிரேக்க அறிஞரான தாலஸ் என்பவர் அம்பர் போன்ற பொருளை கம்பளியில் தேய்த்தப் பொழுது, அது காகிதம் போன்ற பொருளினை கவரும் பண்பைப் பெறுவதாகக் கண்டுபிடித்தார். பிறகு கி.பி 17ஆம் நூற்றாண்டில் வில்லியம் கில் பெர்ட் என்பவர், கண்ணாடி, எபோனைட் போன்றவைகளை தகுந்த பொருட்களோடு தேய்க்கும் பொழுது, அதே பண்பினை பெறுகிறது என்பதை கண்டறிந்தார். இவ்வாறு கவரக்கூடியப் பண்புகளை பெறுவதறிந்த அதனை மேலும் ஆராய்ந்த போது அதற்குக் காரணம், அதிலுள்ள எதிர்மின்னிகள் தான் மின்சார ஊட்டப்படுகிறது எனபதை உணர்ந்தனர். அவ்வாறு தேய்க்கப்படும் பொழுது, மின்சார ஊட்டமடைகிற எதிர்மின்னிகள் கொண்டப் பொருட்களை electrified (மின்னூட்டம்) அடைந்தவை என்று கூறலாம். கிரேக்க மொழியில் அம்பர் என்று பொருள்படும் electron (எதிர்மின்னி) என்றச் சொல்லிருந்தே electrified (மின்னூட்டம்) என்றச் சொல் பெறப்பட்டவையாகும். இதுவே பிற்காலத்தில் electricity (மின்சாரம்) என்ற சொல்லாக திரிந்ததாகும். உராய்வினால் உருவாகும் மின்னோட்டம் உராய்வு மின்னோட்டம் என அழைக்கப்படும். ஒரு பொருளில் உள்ள மின்னூட்டங்கள் நகரவில்லை எனில், அவ்வுராய்வு மின்னோட்டத்தை நிலை மின்னோட்டம் என்றும் கூறலாம்.
அப்பாச்சி வலை வழங்கி அல்லது இணைய வழங்கி என்பது ஒரு கட்டற்ற வலை வழங்கி மென்பொருள் ஆகும். இன்று இணையத்தில் பெரும்பான்மையான வலைத்தளங்கள் இதனைப் பயன்படுத்தியே வழங்கப்படுகின்றன. இது யுனிக்சு, லினக்சு, விண்டோசு, அப்பிள், நாவல் நெற்வெயர் என்று பல்வேறு இயங்குதளங்களில் இயங்கக் கூடியது..இணையக் கட்டமைப்பு .இணையம் என்பது பல்வேறு கணினி வலைப்பின்னல்களால் ஆன ஒரு பிணையம் ஆகும். இந்த வலைப்பின்னல்கள் அல்லது வலைப்பின்னல்களில் உள்ள கணினி முனைகள் இணைய நெறிமுறைகளால் (Internet protocol suite) தம்மோடு பல்வேறு நிலைகளில் தொடர்பாடுகின்றன. இவற்றுள் ஒரு முக்கியமான செயலிநிலை (application layer) நெறிமுறை மீயுரை பரிமாற்ற நெறிமுறை (Hypertext Transfer Protocol (http - எச்.ரி.ரி.பி) ஆகும். இதனைப் பயன்படுத்தியே இணையத்தில் நாம் வலைத்தளங்கள் உட்பட்ட மீஊடகங்களைப் (hypermedia) பரிமாறுகிறோம். .எச்.ரி.ரி.பி வாடிக்கையாளர் வழங்கி மாதிரியைப் (Client-Server model) பயன்படுத்திச் செயற்படுகிறது. ஒரு வழங்கியில் உள்ள ஒரு வலைதளத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வலை உலாவிகள் ஊடாகப் பலர் பார்ப்பது (வாடிக்கையாளர்கள்) என்பது இந்த வாடிக்கையாளர்-வழங்கி மாதிரிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். http://ta.wikibooks.org என்ற வலைமுகவரியில் வரும் முதல் http என்ற பகுதி இந்த நெறிமுறையைப் பயன்படுத்துவதை சுட்டி நிற்கிறது. நீங்கள் உலாவியில் இந்த முகவரியை இடும்போது இணையம் ஊடாக இந்த வலைத்தளம் வழங்கப்படும் வழங்கிக்கு தொடர்பாடல் போகிறது. அங்கு எதாவது ஒரு வலைச் செயலி உங்களுக்கு அந்த வலைத்தளத்தை வழங்கும். அப்பாச்சி அத்தகைய ஒரு வலைச்செயலி ஆகும். .அப்பாச்சி என்பது என்ன, அப்பாச்சி எப்படி இயங்குகிறது, அப்பாச்சியை நிறுவுவது எப்படி, அப்பாச்சியின் பல்வேறு நிரல்கூறுகள் எவை என்பது பற்றி அறிந்திருப்பது பிணைய நிர்வாகிகளுக்கு, நிரலாளர்களுக்கு உதவும். அந்த வகையில் நடைமுறையில் பயன்படும் நோக்கில் பின்வரும் தகவல்கள் அமைகின்றன. அப்பாச்சி பொதுவாக லினக்சு/யுனிக்சு இயங்குதளத்திலேயே நிறுவப்படும். அதுதற்கான விபரங்களே கீழே தரப்படுகின்றன. .குறிப்பு: இந்த எப்படிச் செய்வது 2012 நடுப்பகுதியில் முதலில் எழுதப்படுகிறது. அப்பாச்சி புதிய பதிப்புக்களை வெளியிட்டால் செய்முறைகள் மாறலாம். அதற்குத் தகுந்த மாதிரி நீங்கள் இந்தக் கையேட்டை இற்றை செய்து உதவுங்கள்.
நிறுவுதல் .அப்பாச்சியை லினக்சு (எ.கா டேபியன், உபுண்டு) வழங்கிகள் அல்லது கணினிகளில் நிறுவுவது மிக இலகுவானது. .அப்பாச்சி பொதுவாக /etc/apache2/ என்ற அடைவிலேயே இடப்பட்டு இருக்கும். அப்பாச்சி இயல்பிருப்பாக port 80 யைக் கேக்கத் தொடங்கும். port 80 பொதுவாக எச்.ரி.ரி.பி அல்லது உலகளாவிய வலையின் port ஆகும். அங்கு எதாவது வேண்டுகோள்கள் வந்தால் அதைக் கையாள முயலும்..பரிசோதித்தல் .எதாவது ஒரு உலாவியைத் திறந்து பின்வரும் முகவரியை இடுங்கள். "It works!" என்ற தகவலை அதில் காணிபிக்கும்..தளங்களை அமைப்பைவடிவாக்குதல் (configuring websites)
பொதுவாக நாம் ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளங்களையே ஒரு வழங்கியைப் பயன்படுத்தி வழங்குவோம். அதனை ஏதுவாக்க /etc/apache2/conf.d/virtual.conf என்ற கோப்பை உருவாக்கி பின்வரும் வரியை இடவும். .# பல மெய்நிகர் புரவல்கள்.இதன் பின்பு நாம் /etc/apache2/sites-available/ என்ற அடைவில் நாம் புரவல் செய்யப் போகும் வலைத்தளத்துக்கான மெய்நிகர் புரவல் அமைவைகளை (virtual host configurations) செய்யலாம். அங்கு இருக்கும் default அமைவை ஒத்து நாம் செய்யலாம். பின்வருவது ஒர் எடுத்துக்காட்டு..இங்கு நாம் பின்வரும் அம்சங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்: ServerName, ServerAlias, DocumentRoot . ServerName என்பதுவே உங்கள் வலைத்தளத்தின் முகவரி. ServerAlias என்பது ஒரு மாற்று முகவரி. DocumentRoot என்பது உங்கள் வலைத்தின் கோப்புக்கள் இருக்கும் அடைவின் முகவரி. / உட்பட என்பதைக் கவனிக்க. தற்போது நீங்கள் sites-available அடைவின் கீழ் தகுந்த மாற்றங்களைச் செய்துவிட்டீர்கள் என்று உறுதிசெய்த பின் a2ensite என்ற கட்டளையைப் பயன்படுத்தி இந்த வலைத்தளத்தை ஏவுங்கள். a2dissite என்ற கட்டளை உங்கள் வலைத்தளத்தை வழங்குவதை செயலிழக்கச் செய்யும். .இறுதியாக நீங்கள் அப்பாச்சி வழங்கியை மீண்டும் தொடங்க வேண்டும். அப்பாச்சி வழங்கி தொடர்ச்சியாக தொழிற்பட்டுக் கொண்டு இருக்கும். எப்படி தொடங்குவது எப்படி நிப்பாட்டுவது, எப்படி மீண்டும் தொடங்குவது போன்றவற்றுக்கான அடிப்படைக் கட்டளைகளை பின்னர் பாக்கலாம். .மேலே கூறப்பட்டவை அடிப்படையான அமைவுகள் தான். மேலதிக அமைவுகள் பாதுகாப்பு, தேவைகள் முன்னிறுத்திச் சேர்க்கப்படலாம். தற்போது நீங்கள் உங்கள் கணினியில் அல்லது வழங்கியில் உள்ள உலாவியில் www.example.com என்று போனால் /home/www/www.example.com/ என்ற அடைவில் இருக்கும் வலைப்பக்கம் கான்பிக்கப்படும்.
மேற்கூறியதில் வெற்றி என்றால் உங்கள் வலைத்தளம் இணையம் ஊடாக உலகெல்லாம் பார்க்கப்படலாம் என்று அர்த்தமில்லை. உங்கள் கணினி/வழங்கியில் மட்டுமே உள்ளன என்பதே உறுதி. எப்படி எல்லோரும் இணையம் ஊடாகப் பார்க்கச் செய்வது? அடுத்த கட்டத்துக்க்ப் போகலாம்..களப் பெயர் முறைமை வழங்கி (DNS - டி.என்.எசு) மூலம் களப்பெயரை வலை வழங்கிக்கு திசைவித்தல் .right|230px|களப்பெயர் தீர்மானம்.அப்பாச்சி வழங்கிக்கு ஒரு static ip வழங்குவது நிலையான சேவையை உறுதிப்படுத்தும். உங்களிடம் static ip வசதி இல்லாவிடின் no-ip.com அல்லது dyn.com/dns போன்ற ஒரு சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்..முதலில் நீங்கள் ஒரு களப்பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். களப்பெயர் பதிவு செய்த நிறுவனமே உங்களுக்கு டி.என்.எசு சேவை வழங்கலாம். அப்படி இல்லாவிடின் நீங்கள் டி.என்.எசு சேவை வேறு ஒரு நிறுவனத்திடம் பெற வேண்டும். களப்பெயர் செய்த நிறுவனத்திடம் டி.என்.எசு வழங்கிக்கான name server record சுட்ட வேண்டும். உங்களிடம் போதிய நுட்பம் அறிவு இருக்குமாயின் நீங்களே ஒரு டி.என்.எசு வழங்கியை நிறுவிக் கொள்ளலாம். .static ip இருக்கும் பட்சத்தில் உங்கள் டி.என்.எசு வழங்கியில் ஒரு முகவரிப் பதிவு (A record) ஒன்றைச் சேர்ப்பது போதுமானதாக இருக்கும். ஒரு மாதிரி A record பின்வருமாறு அமையும். முறையே களப்பெயர், time to live, பதிவு வகை, static ip என அமையும்.
மேலதிக modules .உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மேலதிக modules நீங்கள் நிறுவிக் கொள்ளலாம். எ.கா mod_rewrite, mod_userdir ஆகியவை..வெளி இணைப்புகள் .கரும்பெட்டி அணுகுமுறை.முன்னுரை .இந்த நூல் சட்டப்படி கனடாவிற்கு குடிவருவது பற்றி சிந்திப்பவர்களுக்கும், அத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டு இருப்பவர்களுக்குமான ஒரு கையேடு ஆகும். கனடாவிற்கு குடிவருவதற்கான வாய்ப்புக்களை, வழிமுறைகளை, தடைகளை இந்தக் கையேடு விளக்கும். இது ஒரு துணைக் கையேடே, கனடிய அரசின் அதிகாரபூர்வ வலைத்தளங்களே முதன்மை வழிகாட்டிகள் ஆகும்.
2012 இல் அகதிகள் மற்றும் குடிவரவு தொடர்பாக கனடாவில் சட்டங்கள் இறுக்கப்பட்டு வருகின்றன. எனினும் உள்ள வழிகளைத் திறனாகப் பயன்படுத்தி, விண்ணப் படிவங்களை தெளிவாக விரிவாக பூர்த்தி செய்து, உங்களை ஏற்ற மாதிரித் தயார் செய்து கொண்டால் நீங்கள் கனடாவிற்கு குடிவருவதற்கான வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்ளலாம். அதற்கு இந்தக் கையேடு உதவும். இந்தக் கையேடு ஆங்கில விக்கியில் உள்ள Immigrating to Canada என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது. .சூலை 2012 காலப் பகுதியில் பல்வேரு குடிவரவுத் திட்டங்கள் இடைநிறுத்தல் செய்யப்பட்டுள்ளன. இக் காலப் பகுதியில் கூடிய இறுக்கமான குடிவரவுச் சட்டங்கள் அமுலுக்கு வருகின்றன..பொருளடக்கம் . /அறிமுகம்/.தற்காலிக குடிவரவு . /விருந்துனர் நுழைமதி/
/மாணவர் நுழைமதி/. /பணியாளர் அனுமதி/.நிரந்தரக் குடிவரவு . திறனாளர்கள். அகதியாக. குடும்ப இணைவில்
மாகாண நியமிப்பால். முதலீட்டாளர், தொழில்முனைபவர், சொந்த தொழிலுடையவர். ஐந்து கனடியர்கள் அணுசரணையால்.குடியுருமை பெறுதல் . /குடியுரிமைக்கு விண்ணப்பித்தல்/.பிற்சேர்ப்புகள்
விண்ணப்பங்கள்.வெளி இணைப்புகள் . கனடாவிற்கு குடிவரவு - அதிகாரபூர்வத் தளம் - . கனடாவில் குடியமர்தல் - .கனடா உலகின் சிறந்த வாழ்தரம் கொண்ட, அமைதியான, நவீன, பல்லினப் பண்பாட்டு நாடுகளில் ஒன்று. குடிவரவாளர்களால் கட்டப்பட்ட நாடுகள் சிலவற்றில் கனடாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் அதன் மக்கள் தொகையில் கணிசமான விழுக்காட்டை குடிவரவில் இருந்து கனடா பெற்றுக் கொள்கிறது. .கனடாவிற்கு குடிபெயர்வது சாதக பாதகங்களைக் கொண்ட ஒரு நகர்வு ஆகும். குடிவரவு முறைமை சிரமானது, போட்டிகள் நிறைந்தது, நீண்ட காலத்தை எடுக்கக் கூடியது. நீங்கள் இங்கு குடிபெயர்ந்த பின்பும் உங்களை பொருளாதார சமூக நிலையில் நிலை நிறுத்திக் கொள்ள பெரும் சவால்களை எதிர்கொள்வீர்கள். நீங்கள் தனியாக குடிபெயர்வதென்றால் உங்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்களை விட்டு தூர தேசத்தில் வாழ்வது உங்களை உள உடல் நோக்கில் பாதிக்கலாம். கால நிலை மாற்றம், பண்பாட்டு அதிர்ச்சியும் கூட உங்களைப் பாதிக்கலாம்.
அதே வேளை கனடாவிற்கு குடிபெயர்வது உங்களை, எதிர்காலத்தில் உங்கள் குடும்பத்தை ஒரு உயர்ந்த வாழ்தரத்தில் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கும். சுதந்திரங்கள் மிக்க, கல்வி, பொருளாதர வாய்ப்புக்கள் மிக்க ஒரு நாட்டில் வாழ முடியும். சாதக பாதகங்களை அலசி நீங்கள் கனடாவிற்கு குடிவரவதை பரிசீலிப்பீர்கள் எனில், அதற்கான வழிமுறைகள் பற்றி இந்த நூலில் பார்க்கலாம். .பகுப்பு:கனடாவிற்கு குடிவரவு.இடைநிறுத்தம் .நடுவன் திறமிகு பணியாளர் திட்டம் (Federal Skilled Worker Program) சூலை 1, 2012 இல் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கனடாவில் வேலை உள்ளவர்களுக்கோ அல்லது முனைவர் (Phd) ஊற்றில் இருப்பவர்களுக்கோ இது பொருந்தாது. 2013 தொடக்கத்தில் புதிய திட்ட அளவைகளுடன் இத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்..அறிமுகம் .கனடாவிற்கு திறமிகு பணியாளர்களை குடிவரச் செய்வது கனடிய அரசின் குடிவரவு இலக்குகளில் ஒன்றாகும். இதற்காக நடுவன் திறமிகு பணியாளர் குடிவரவுத் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. உங்கள் வயது, கல்வியறிவு, மொழியறிவு (ஆங்கிலம் உடன்/அல்லது பிரெஞ்சு), தொழில் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தும், நீங்கள் குடிவரத் திட்டமிடும் காலத்தில் கனடாவிற்குத் தேவைப்படுவதாகக் கருதப்படும் பணித் தேவைகளைப் பொறுத்தும் உங்கள் வாய்ப்புக்கள் அமையும். உங்கள் குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலைகளும் வாய்ப்பைப் பாதிக்கும்.
வேண்டப்படுவன .மேற்குறிப்பிட்டது போல வயது, கல்வியறிவு, மொழியறிவு (ஆங்கிலம் உடன்/அல்லது பிரெஞ்சு), தொழில் அனுபவம் ஆகியவை வேண்டப்படுகின்றன. இளையவர்களுக்கு, தொழில் வல்லுனர்களுக்கு இது சிறந்த வழி. உங்களுக்கு கனடாவில் வேலை உள்ளது என்று காட்ட வேண்டியதில்லை. வேலை பெறலாம், உங்கள் திறங்கள் கனடாவில் பயன்படும் என்பதையே காட்ட வேண்டும்..மேற்கோள்கள் .பகுப்பு:கனடாவிற்கு குடிவரவு.சூலை 1, 2012 தொடக்கம் பின் அறிவித்தல் வரை இத் திட்டத்தின் சொந்த தொழில் கொண்டபவர்களுக்கான வாய்ப்புக்கள் தவிரித்து பிற இடைநிறுத்தப்பட்டுள்ளன..அறிமுகம்
வணிக குடிவரவுத் திட்டம் என்பது கனடாவிற்கு அனுபவம் மிக்க வணிகர்களை ஈர்ப்பதற்கான திட்டம் ஆகும். இது மிகவும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒரு வழி ஆகும். பிற நாடுகளில் தம்மை பொருளாதார நோக்கில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுக்கே சாத்தியம் ஆகும். இத் திட்டத்தின் கீழ் மூன்று வகையான உப திட்டங்கள் உண்டு:. முதலீட்டாளர்களுக்கான . தொழில்முனைவபவர்களுக்கான. சொந்த தொழில் கொண்டபவர்களுக்கான.மேற்கோள்கள் .பகுப்பு:கனடாவிற்கு குடிவரவு
அறிமுகம் .குடும்ப இணைவு கனடிய குடிவரவின் ஒரு இலக்கு ஆகும். ஆகையால் கனடாவில் உள்ள ஒரு நெருங்கிய உறுவினர் பொருளாதார நோக்கில் பொறுப்பேற்றால் அவரின் அணுசரணையில் அவரின் குடும்ப உறவினர்கள் கனடாவிற்கு வர முடியும்..வேண்டப்படுவன .நீங்கள் ஒரு கனடிய குடியுருமை கொண்டவராக அல்லது நிரந்தர குடியிருப்பாளாராக இருத்தல் வேண்டும். உங்கள் வயது 18 வயதுக்கு மேற்பட்டு இருக்க வேண்டும். வருபவர்களுக்கு நீங்கள் வரையறை செய்யப்பட்ட ஆண்டுகளுக்கு நீங்கள் இடம், உணவு, உடை மற்றும் அடிப்படைத் தேவைகளை கவனிப்பதாக பொறுப்பேற்க வேண்டும்..எவரை நீங்கள் பொறுப்பேற்ற முடியும் ? . திருமணம் செய்த துணைவரை
திருமணம் போன்ற உறவு உள்ளவரை (conjugal partner). பிள்ளைகள். பெற்றோர் (நவம்பர் 2011 இல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.). பொற்றோரின் பொற்றோ (நவம்பர் 2011 இல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.). பிற ஏற்றுக் கொள்ளப்பட்ட உறவினர்கள்.விண்ணப்பங்கள்
செயற்படுத்தல் காலங்கள்.வெளி இணைப்புகள் . உங்களுடைய குடும்பம் உங்களுடன் கனடாவில் சேருவதற்கு நீங்கள் பொறுப்பேற்க விரும்புகிறீர்களா - .பகுப்பு:கனடாவிற்கு குடிவரவு.பிரான்சிய அரசியல் மெய்யியலாளர், எழுத்தாளர் இழான் இழாக்கு உரூசோ இயற்றிய நூல்களின் மொழிபெயர்ப்புகளும் அவருடைய கருத்துகளைப்பற்றிய பிற கட்டற்ற ஆக்கங்களுக்குமான முகப்புப் பக்கம் இது..எமிலி அல்லது கல்வி பற்றிய (Émile ou De l'éducation என்னும் நூலின் மொழிபெயர்ப்பு)
குமுக ஒப்பந்தம் (Du contrat social ou Principes du droit politique என்னும் நூலின் மொழிபெயர்ப்பு).குற்ற ஏற்புரைகள் (Les Confessions என்னும் நூலில் மொழிபெயர்ப்பு).பகுப்பு:பிரான்சிய நூல்கள்.பொருளடக்கம் ./முன்னுரை/./அறிமுகம்/
/நூல்-1/./நூல்-2/./நூல்-3/./நூல்-4/./நூல்-5/./மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்புகள்/
இழான் இழாக்கு உரூசோ 1762 இல் பிரான்சிய மொழியில் எழுதிய இந்நூல் பிரான்சியமொழி விக்கிமூலத்தில்] கிடைக்கின்றது. இந்நூலை 1911 ஆம் ஆண்டு பார்பரா ஃவாக்ஃசிலி (Barbara Foxley) என்பார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார். அது கூட்டன்பர்கு திட்டத்தில் கிடைக்கின்றது. முதல்நூலையும் ஃவாக்ஃசிலி அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் பிற மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு, தமிழ் மொழியில் இந்நூல் மொழிபெயர்க்கப்படுகின்றது. கீழ்க்காணும் மொழிபெயர்ப்பாளர்கள் இத்திட்டத்தில் பங்குகொண்டு மொழிபெயர்க்கின்றார்கள்..செ.இரா. செல்வக்குமார், வாட்டர்லூ கனடா.பழ.இராச்குமார், தமாம், சவுதி அரேபியா.பகுப்பு:எமிலி, அல்லது கல்வி பற்றி.[10] படைத்தவர் கைகளில் இருந்து புறப்படும் பொழுது அனைத்தும் நன்றாகவே உள்ளன; அனைத்தும் மாந்தன் கைகளில் சீரழிகின்றன. அவன் (மாந்தன்) ஒரு நிலம் பிறிதொரு பொருளை ஆக்க வற்புறுத்துகின்றான், ஒரு மரத்தில் மற்றொரு பழத்தை உருவாக்குகின்றான். வானிலையையும், இயற்கையின் கூறுகளையும், பருவங்களையும் கலந்து குழப்புகின்றான். அவன் நாயையும், குதிரையையும், அடிமையையும் சிதைக்கின்றான். அவன் அனைத்தையும் தலைகீழாக மாற்றுகின்றான் அனைத்தையும் மூளியாக்குகின்றான், அவன் சிதைப்புகளையும் அரக்கரையும் விரும்புகின்றான். அவன் இயற்கை உருவாக்கியவாறு எதையும் விரும்புவதில்லை, மாந்தனாகிய அவனுட்பட. அவனுக்கு மாந்தன் ஒரு சேணம் ஏற்றிய குதிரையைப் போல பயிற்றப்படவேண்டும்; அவன் தோட்டத்தில் உள்ள மரங்களைப் போல் அவனை புதுப்போக்குக்கு ஏற்ப வடிவமைக்கப்படவேண்டும்.[11] இவையின்றி அனைத்தும் இன்னும் மோசமாக இருக்கும்; நம் இனம் அரைகுறையாக இருத்தல் கூடாது. இப்பொழுதுள்ள நிலைமையின் படி மாந்தன் பிறந்த்தில் இருந்தே அவன் போக்கில் விட்டால் மற்ற அனைத்தையும் விட சிதைந்த நிலையில் இருப்பான். முற்சாய்வு, அதிகாரம், தேவை, எடுத்துக்காட்டு, ஆகிய நாம் மூழ்கி இருக்கும் எல்லா குமுக சூழல்களும்- அவனுடைய இயல்பை திணறச்செய்து அவற்றுக்கு ஈடாக எதையும் வைக்காது இருக்கும். மாந்தன் இயல்பு ஒரு நெடுஞ்சாலையின் நடுவே தற்செயலாக இடப்பட்ட நாற்று போல் இருக்கும்; இப்படியும் அப்படியுமாகச் சாய்ந்து விரைவில் வழிப்போக்கர்களால் நசுக்கப்படும்.
[12] இது உங்களுக்காகத்தான் மென்மையான, முன்னோக்கான தாயே குறிப்பு-1 - உங்களுக்குத் தெரியும் எப்படி போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலையில் இருந்து விலகி மாந்தக் கருத்துகளில் இருந்து வளரும் இந்த இளம் நாற்றைக் காப்பாற்றுவது என்பது! நாற்று மடியும் முன்பு நீர் விட்டு பண்படுத்து, அதன் பழங்கள் ஒருநாள் உன் மகிழ்ச்சியாக விளங்கும். தொடக்கத்திலேயே உன் குழந்தையின் உள்ளத்தைச் சுற்றி வேலி அமை. வேறு ஒருவர் சுற்றுப்பஉற வட்டத்தைக் குறிக்கலாம், ஆனால் நீ மட்டுமே வேலி கட்ட வேண்டும் குறிப்பு-2 .[13] செடிகள் பயிர்வளர்ப்பால் அவற்றின் அமைப்பைப்பெறும், மாந்தன் கல்வியால். ஒரு மாந்தன் உயரமாகவும் வலுவாகவும் பிறந்தால், அவனுடைய உருவவளவும் வலிமையும், அவற்றை அவன் பயன்படுத்தக் கற்கும் வரை அவனுக்குப் பயனற்றவை; அவை, பிறர் அவனுக்கு விரும்பி உதவ வருவதைக் கூட தடுத்துத் தீமை தரக்கூடும் குறிப்பு-3. அவன் பாட்டுக்கு அவனை விட்டால், தன் தேவைகளை அவன் உணரும் முன் அவன் துன்பத்தால் இறக்கவும் கூடும். குழந்தைநிலையில் (தனக்குத் தான்) உதவமுடியாதநிலையில் இருப்பதைக் கண்டு வருந்துகிறோம்; மாந்த இனமே அற்றுவிட்டிருக்கும், அவன் குழந்தைநிலையில் தொடங்காமல் இருந்திருந்தால் என்பதை நாம் உணரத் தவறுகின்றோம்..[14] நாம் வலுவின்றிப் பிறக்கின்றோம், நமக்கு வலு தேவை; ஒன்றுமே இல்லாமல் பிறக்கின்றோம், நமக்கு உதவி தேவை; அறிவின்றிப் பிறக்கின்றோம், தீர்வறிவு தேவை. பிறக்கும்பொழுது நம்மிடம் இல்லாத, வளர்ந்தபின் நமக்குத் தேவையான அனைத்தும் கல்வியால் கிடைக்கின்றது. .[15] நமக்கு இக்கல்வி இயற்கையில் இருந்தும், மாந்தர்களிடம் இருந்தும், பொருள்களில் இருந்தும் கிட்டுகின்றது. உடல் உறுப்புகளின் வளர்ச்சியும், சிந்தனைக் கூறுகளின் வளர்ச்சியும் இயற்கையின் கல்வி, இவ்வளர்ச்சியை நாம் பயன் படுத்திக்கொள்வது மாந்தர்களின் கல்வி, சுற்றுச்சூழல்களில் இருந்து நாம் பட்டறிவாகப் பெறுவது பொருள்களில் இருந்து நாம் பெறும் கல்வி..[16] ஆக நாம் மூன்று ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றோம். எந்த மாணவருக்கு அவர்களின் வேறுபட்ட பாடங்கள் முரண்படுகின்றனவே அந்த மாணவர் தனக்குள் தான் இயல்பான சீரிசைவுடம் இருக்கமாட்டார்; எந்த மாணவருக்கு அப்பாடங்கள் இணங்கி ஒரே பொருளைத்தந்து ஒரே முடிவை நோக்கி செல்கின்றனவோ, அவர் நேரடியாக அவருடைய குறிக்கோளை எட்டுவார், தன்னுள் இசைவுடன் வாழ்வார். பின்னவர் செம்மையான வளர்ச்சி எய்தியவர். .[17] கல்விக்கான இந்த மூன்று கூறுகளில், இயற்கையில் இருந்து பெறும் கல்வி நம் கையில் இல்லை; பொருள்களில் இருந்து பெறும் கல்வியும் ஒரு பகுதிதான் நம் கையில் உள்ளது; மாந்தர்களிடம் இருந்து பெறும் கல்வி ஒன்றுக்கு மட்டுமே நாம் முழு ஆசிரியர். இங்கும்கூட நம் வல்லமை பெரும்பாலும் மாயத்தோற்றம்தான், ஏனெனில் ஒரு குழந்தையைச் சூழ்ந்திருக்கும் எல்லோருடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் யார் கட்டுப்படுத்தி இயக்க முடியும்?
[18] ஆகவே கல்வி என்பது அந்த அளவுக்குக் ஒரு கலையே, இது வெற்றியடைதல் என்பது ஏறத்தாழ இயலாதது, ஏனெனில் வெற்றியடைவதற்கான நிகழ்நிலை எந்த ஒரு தனி மாந்தனை மட்டும் பொருத்தும் இல்லை. ஒருவர் தன் முயற்சிகளால் செய்யக்கூடியதெல்லாம் ஏறத்தாழ குறிக்கோளை நோக்கி நகர்வதே. அதனை எட்டுவதற்கு நல்லூழ் (நல்வாய்ப்பு) தேவை.[19] குறிக்கோள் என்ன? இயற்கையில் குறிக்கோள் என்பதுதான் நிறுவப்பட்டது. செம்மைநிலையை எட்ட மூன்று கூறுகளின் ஒத்தியக்கம் தேவை என்பதால், நாம் கட்டுப்படுத்தக்கூடிய இரண்டு கூறுகளும், நம் கட்டுப்பாட்டில் அடங்காத ஒன்றின் வழியைப் பின்பற்ற வேண்டும். ஒருகால் இந்த இயற்கை என்னும் சொல் மிகவும் தெளிவில்லாத பொருளைத் தருகின்றது. இதனை நாம் வரையறை செய்வோம். .[20] இயற்கை என்பது வெறும் பழக்கம்தான் என்கிறார்கள் குறிப்பு-4. இது எதைக் குறிக்கின்றது? இயற்கையுடன் முரண்படாதவாறு, வலுக்கட்டாயமாக பழக்கங்கள் உருவாக்கப்படுவதில்லையா? எடுத்துக்காட்டாக செடிகள் நிமிர்ந்து வளர்வதற்கு மாறாக வேறு கோணத்தில் வளரும்படி மாற்றப்படுவது. விடுவிக்கப்பட்ட நிலையிலும், அச்செடி அது வளைத்துவிடப்பட்ட வடிவிலேயே நிற்கின்றது. ஆனாலும் மரத்தில் ஊறும் பால் தன் முதல் திசையை மாற்றிக்கொள்ளவில்லை, அதில் தோன்றும் புதிய கிளைப்புகள் யாவும் நிமிர்ந்து நேராகவே இருக்கும். மாந்தர்களின் போக்குகளும் இப்படியே. அதே சூழல்களில் நாம் இருக்கும் வரை, பழக்கத்தால் ஏற்படும் அப்போக்குகளை, நமக்குச் சிறிதும் இயல்பல்லாத அப்போக்குகளை, கொண்டிருப்போம். ஆனால் சூழல் மாறியவுடன், பழக்கம் நின்றுவிடுகின்றது, இயற்கை தன் மீளாட்சி செய்கின்றது. கல்வி கட்டாயம் ஒரு பழக்கம்தான், ஏனெனில் சிலர் அதைச் சிலர் மறக்கின்றார்கள், வேறுசிலர் தக்கவைத்துக்கொள்கின்றனர். எப்படி இந்த வேறுபாடு எழுகின்றது? பழக்கங்களில் இயற்கையோடு ஒத்துப்போகும் அப்பழக்கங்களுக்கு மட்டும் இயற்கை என்னும் பெயரை வரையறுத்தால், குழப்பத்தில் இருந்து நாம் நம்மைக் காக்கமுடியும். .[21]பிறக்கும்பொழுதே நாம் உணர்ச்சியுடையவர்களாகப் பிறந்தோம், அதன் பின் நம்மைச் சுற்றியுள்ள பொருள்களால் நாம் பல்வேறுவிதமாக மாற்றம் உறுகின்றோம். நம் உணர்வுகளை நாம் தன்னுணர்வுடன் உணரத்தொடங்கியவுடன், முதலில் நம் போக்கு ஒன்று இன்பமாக இருப்பதால் விரும்பிச் செல்வதும், இன்பமாக இல்லாதவற்றில் இருந்து விலகிச் செல்வதுமாக இருக்கும், பிறகு அது நமக்கு வசதியாக இருக்கின்றது அல்லது அப்படி இல்லை என்பதாகவும், கடைசியாக மகிழ்ச்சி தருவது, நன்மையுடையது என்னும் நம்முடைய அறிவு மதிப்பீடுகளின் அடிப்படையில் அணுகுகின்றோம். நாம் மேலும் உணர்வுக் கூர்மையுடையவர்களாகவும், உயர் அறிவுடையவர்களாகவும் ஆகும்பொழுது இப்போக்குகள் இன்னும் வலிமை உடையதாகவும் நிலைபெற்றதாகவும் ஆகின்றன. ஆனால் இவை நம் பழக்கவழக்கங்களால் நாம் அடிமையுற்றபின்பு, அவை ஏறத்தாழ நம் தனிக்கருத்துகளால் ஒழுக்கமற்றுவிடுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படும் முன்னர் நம்முள் இருப்பனவற்றை நான் இயற்கை என்று உரைப்பேன். .[22] எனவே இந்த அடிப்படை போக்குகளுடனேயே நாம் அனைத்தையும் தொடர்புபடுத்தவேண்டும்; அதாவது நம்முடைய கல்வியின் மூன்று நிலைகளும் ஒன்றோடு ஒன்று மாறுபடுவதாக மட்டுமாக இருப்பின் இப்படி இயலும். ஆனால் அவை ஒன்றோடு ஒன்று எதிரானதாக அமைந்துவிட்டால், அதாவது ஒருவர் தனக்காக உயர்வதுக்கு மாறாக பிறருக்காக எழுவதாக இருந்தால் என்ன செய்ய முடியும்? அப்பொழுது சீரிணக்கம் என்பது இயலாததாகிவிடும். இயற்கையையோ, குமுக நிறுவனங்களையோ எதிர்த்தாட வேண்டிய பொழுது நீங்கள் ஒரு மாந்தனை உருவாக்கவேண்டுமா அல்லது ஒரு குடிமகனை உருவாக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டும், ஏனெனில் இரன்டையும் ஒரே நேரத்தில் செய்தல் இயலாது..[23]எல்லாச் சிறுகுழுமங்களும், அவை தங்களுக்குள் ஒற்றுமையுடனும், இறுக்கமாகவும் உறவு கொண்டதாக இருப்பின், அவை பெரிதான பொதுக் குமுகத்தில் இருந்து வேறானதாக இருக்கும். ஒவ்வொரு நாட்டுப்பற்றாளனும், வேற்றுமக்களிடம் இரக்கமின்றி நடந்துகொள்கின்றான்; அவனுக்கு அவர்கள் வெறும் மாந்தர்கள் மட்டுமே, வேறொன்றும் இல்லை . இந்தக் குறைபாடு தவிர்க்கமுடியாதது, ஆனால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததன்று. முக்கியமானது என்னவென்றால் தாம் வாழும் மக்களோடு நாம் நல்லபடியாக நடந்துகொள்ள வேண்டும். வெளிநாட்டில், எசுப்பார்த்தியன் (Spartiate, Spartan) தன்னலத்துடனும், பேராசையுடனும், அறமில்லாமலும் நடந்துகொள்கின்றான், ஆனால் அவனே தன்னுடன் வாழ்பவர்களிடம் தன்னலமில்லாமலும், அறமுடனும், சீரிணக்கத்துடனும் நடந்துகொள்கின்றான். பலவினப்பழக்க உலகநோக்கர் எனக் கூறிக்கொள்வோரை நம்பமுடியாது, அவர்கள் பல நூல்களில் உள்ள கடமைகளைப் பற்றிப் பேசுவர் ஆனால் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் அவற்றை நிறைவேற்றமாட்டார்கள். அப்படிப்பட்ட மெய்யியலாளர்கள் தங்கள் அண்டை இனத்தார்களிடம் அன்புடன் நடக்காத தார்த்தாரை. விரும்புவார்கள்.
[24] இயற்கை மாந்தன் தனக்காத் தான் வாழ்கின்றான்; அவன் ஓர் எண்ணிக்கை அலகு, அவனே அவனுக்கு எல்லாம் பொறுப்பு, அவனைப் போன்றதும் அப்படியே. ஒரு குடிமகன் (அப்படியல்ல) முழுமையான கூட்டத்தின் (குமுகத்தின்) ஒரு பகுதி மட்டுமே (குடிமகன் பின்னத்தின் மேல் எண் போல், அடியெண் முழுக் குமுகம்), அவன் மதிப்பானது அவன் சார்ந்திருக்கும் குமுகத்தைப் பொறுத்தது. நல்ல குமுக அமைப்புகள், அவனை தன் இயற்கையில் இருந்து விலகிப் போகச் செய்து, தான் தனித்து இருந்த விடுபாட்டு நிலையை குமுகத்தோடு இணைத்துக் கட்டுப்பட்டு மொத்த குமுகத்தின் வரலாற்றின் ஒரு பகுதியாகவே மாறி மொத்தக் குமுகத்தையே பொருட்படுத்துகின்றான். உரோமையின் ஒரு குடிமகன் கேயசோ, அல்லது இலூசியசோ அன்று, அவன் உரோமானியன்; அவன் தன்னைவிடத் தன் நாட்டை அதிகம் நேசித்தான். பிடிபட்டிருந்த இரெகுலசு தான் ஒரு கார்த்தாச்சினியன் என்றே கூறிக்கொன்டான், தான் தன்னுடைய முதலாளிகளின் உடைமைப்பொருளாகிவிட்டபடியால். தன் வெளிநாட்டான் நிலையால் அவன் உரோமானிய மேலவையில் உட்கார மறுத்தான்; ஒரு கார்த்தாச்சினியன் வந்து ஆணையிட்டால் மட்டுமே அங்கு உட்காருவான். அவன் தன்னுடைய உயிரைக் காக்க மற்றவர்கள் முயன்றபொழுது வெறுப்புற்றான்; அவனுக்கு உள்ளுறுதி இருந்தது, வென்று திரும்பி வந்து வீரத்துடன் தன்னுடைய கொடுமையான இறப்பை ஏற்றான். இரெகுலசுக்கும் தற்கால மாந்தனுக்கும் இடையே ஒற்றுமை ஏதும் இல்லை..மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்.பகுப்பு:எமிலி, அல்லது கல்வி பற்றி.[203] இது வாழ்வின் இரண்டாம் நிலை குறிப்பு-1, சரியாகச் சொன்னால் அந்த மழலைப்பருவம் முடிவடைந்தது. மழலை (infans), குழந்தை (puer) ஆகிய சொற்கள் ஒரே பொருளுடையவை அல்ல. பின்னுள்ள சொல் முன்னுள்ளதை உள்ளடக்கியது; முன்னுள்ளதன் பொருள் "பேசயியலாதது"; வலேரியசு (என்பார்) "puerum infantem" என்கிறார் (நம்பிக்கையற்றதாய் மழலையுடையதாய் பேசுகிறான்). ஆனால் நம் மொழியின் வழக்கபடி வேறு சொல் கிடைக்கும் வரை நான் குழந்தை [பிரான்சிய மொழிச்சொல் enfant] என்ற சொல்லையே தொடர்கிறேன்..[204] குழந்தைகள் பேசத் தொடங்கியவுடன் அழுகைக் குறைகிறது. இந்த வளர்ச்சி இயற்கையானது; ஒரு மொழி மற்றொரு மொழிக்கு மாற்றாக அமைகின்றது. அவர்களால் தங்களுக்கு ஏதாவது ஒன்று வலி ஏற்படுத்தினால், அதனைச் சொற்களால் சொல்ல முடியும்பொழுது, ஏன் அவர்கள் அழ வேண்டும், சொற்களால் சொல்ல முடியாத அளவுக்கு வலி இருந்தாலொழிய? அவர்கள் இனியும் அழுதால், அவர்களைச் சுற்றியுள்ளவர்களைத்தாம் குற்றம் சொல்ல வேண்டும். ஒருமுறை "இது வலிக்கின்றது" என எமிலி கூறியபின், மிகக்கூரிய வலி மட்டுமே அவனை அழ வைக்கும்..[205] குழந்தை இக்கட்டாகவும், உணர்ச்சி மிகுந்ததாகவும் இருந்தால், அவனுடைய அழுகைகளை பயனற்றதாகவும், தாக்கமற்றதாகவும் செய்து, இயற்கையால் ஒன்றுமில்லாததுக்கெல்லாம் அவன் அழத் தொடங்கினால், நான் விரைவில் அவன் கண்ணீர்களை அதன் ஆதாரத்திலிருந்து அடக்குவேன். அவன் அழுகும் வரையில் நான் அவன் அருகில் செல்லமாட்டேன்; அவன் அமைதியான பொழுது நான் செல்வேன். விரைவில் அவன் என்னை அழைக்கும் முறையை அமைதியாக்கிவிடுவான், அல்லது ஒரு சின்ன அழுகையையாவது விட்டுவிடுவான். அறிகுறிகளின் உணர்ச்சி மிகுந்த விளைவினால், குழந்தைகள் தங்களின் பொருளை கற்றுக்கொள்கிறார்கள்; அவர்களுக்கு வேறு ஒரு மரபு இங்கு இல்லை. ஆயினும் குழந்தைகள் தங்களை மிகுதியாக காயப்படுத்திக்கொள்கிறது, கேட்கப்படுவதாய் அவன் நம்பும் வரையில், தனியாக அவன் இருக்கும் பொழுது, அவன் அரிதாகவே அழுகிறான்.
[206] அவன் விழுந்து அல்லது மோதி அவன் தலைப் புடைத்தாலோ, அல்லது அவன் மூக்கில் கசிந்தாலோ அல்லது அவன் விரல்களை அறுத்துக் கொண்டாலோ, அடிமணிபோல் அவனை அவசரப்படுத்துவதற்கு பதிலாக, நான் குறைந்தது முதலிலாவது, அமைதியாக இருந்து கொள்வேன். ஆபத்து நிகழ்ந்துவிட்டது;.பகுப்பு:எமிலி, அல்லது கல்வி பற்றி.[1]நான் வரிசையற்றதாக தொடங்குகிறேன்; ஒரு நல்லத் தாய் குறிப்பி-1 எவ்வாறு சிந்திக்கிறாள் என்பதை உணர்த்தும் விதமாக அநேகமாய் முடிவற்ற எண்ணங்களையும், கண்காணிப்புகளையும் இங்கு தருகிறேன். முதலில் இந்த நினைவுக் குறிப்பை சில பக்கங்களுக்கே எழுத திட்டமிட்டிருந்தேன், ஆனால் என்னையும் மீறி என்னுடைய இத்தலைப்பு என்னை இட்டுசென்றது மற்றும் என்னையும் அறியாமல் இந்த நினைவுக்குறிப்பு ஒரு ஆய்வுக் கட்டுரையைப் போல், எது உள்ளடக்க வேண்டுமோ அது அது உண்மையில் மிக அதிகமாக, எதைச் சொல்ல எண்ணினேனோ அது குறைவாகவும் செய்திருக்கிறேன். நீண்ட நாட்களாக நான் இதை வெளியிடவா, வேண்டாமா என தயங்கினேன், மேலும் இது சில வெளியீடுகளை எழுதுவது ஒன்றும் ஒருவருக்கு ஒரு நூலை எவ்வாறு இயற்றுவது என்று கற்றுதராது என அவ்வப்போது நான் நினைத்துக் கொண்டேன். இதை மேம்படுத்தும் வீண் முயற்சிக்கு பிறகு, இந்த தலைப்பு நேரடி மக்கள் கவனிப்புக்கு மிக முக்கியம் என்பதால், நான் இதை எப்படி முதலில் எழுதினினேனோ அவ்வாறே கொடுக்க வேண்டும் என நம்பினேன். எப்பொழுதெல்லம் எனது எண்ணம் சிறப்பில்லாமல் ஆகிறதோ, அப்பொழுது வேறு யாரையேனும் நல்லவற்றை கொண்டு வரவைத்தால், நான் என்னுடை நேரத்தை முழுமையாக வீணடிக்கமாமல் இருந்திருப்பேன். என்ன எண்ணங்கள் எழுதப்பட்டிருக்கிறது என்பதை கூட அறியாமல், யாரும் விளம்பரம் செய்யாமல், யாரும் அதனை பாதுகாக்காமல், பொதுமக்களின் முன்பு ஒருவன் தனிமைப் பின்னடைவை குறிப்பு-2 எழுத்துக்களால் வார்த்து எடுக்கும் பொழுது, தவறானவர்கள் அதனை நன்கு அறியாமல் அவனது பிழைகளை ஏற்றுக்கொள்வார்கள் என கவலையுறத் தேவையில்லை..பகுப்பு:எமிலி, அல்லது கல்வி பற்றி.எப்படிச் செய்வது என்ற நூலில் அன்றாட வாழ்வில் இருந்து தொழிற்துறைகள் வரை நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பல்வேறு விடயங்களைப் பற்றி படிப்படியாக, செய்முறையாக, சுருக்கமாக விளக்கி எழுதப்படுகிறது. இதில் உள்ள பாகங்கள் பள்ளி மாணவர்கள் தொடக்கம் துறைசார் வல்லுனர்கள் வரைக்கும் பயன்படக் கூடியவையாக அமையும். ஆங்கிலத்தில் உள்ள how-to அல்லது Do-It-Yourself இணையாக தமிழில் இவை உருவாக்கப்படுகின்றன. இதில் உள்ள பல பாகங்கள் தனி நூற்களாக வளர்ச்சி அடையக் கூடியவை. அவ்வாறு வளர்சி அடையும் போது அந்த நூலுக்கான இணைப்பை இங்கு தரலாம். இதில் உங்களுக்குத் தெரிந்த விடயங்களையும் நீங்கள் சேர்க்கலாம். .கீழே ஆச்சு என்று குறிப்பிடப்பட்ட கட்டுரைகள் ஓரு குறிப்பிட்ட பூர்த்தி நிலையை அடைந்திருக்கின்றது என்பதைக் குறிப்பதற்கே. அவற்றை நீங்கள் மேலும் பல்வேறு வழிகளில் விரிவாக்கலாம். மேலே சுட்டியது போல ஒரு தனி நூலாகக் கூட ஆக்கலாம்.
இது நிரலாக்கம் பற்றிய ஒரு பொது அறிமுக நூல். உங்களுக்கு குறிப்பிட்ட மொழிகளில் தேர்ச்சி இருக்குமாயின் அந்த மொழியில் இருந்து எடுத்துக்காட்டுக்களை அல்லது செய்முறைகளை சேர்த்து உதவுங்கள். எ.கா மாறிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட மொழியின் நோக்கில் விளக்கலாம். தமிழிலும் தற்போது எழில் என்ற மொழியில் நிரல்கள் எழுதலாம்..பொருளடக்கம் . /நிரல் என்றால் என்ன?/. /நிரலாக்கம் என்றால் என்ன?/. /நிரலாக்க மொழிகள்/. /நிரலாக்கப் பணிச் சூழல்/
/மென்பொருள் விருத்திச் சுழல் வட்டம்/. /நிரல் கூறுகள்/. /உலகே வணக்கம்/. /கருத்துக்கள்/. /உருக் கணம், சிறப்புச் சொற்கள், இனங்காட்டிகள்/. /மாறிகளும் தரவு இனங்களும்/
/தரவுக் கட்டமைப்புகள்/. /சரம்/. /அணி/. /மாறிலிகள்/. /செயற்குறிகள்/. /உள்ளீடு வெளியீடு/
கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு. /முடிவுகள்/. /சுற்று/. /செயலி/. /கோப்பு/. /சுழல்/
/விதிவிலக்கை கையாளுதல்/. /சுருங்குறித்தொடர்/. பொருள் நோக்கு நிரலாக்கம். /தரவுத்தளப் பயன்பாடு/. வகை வாரியாக நிரலாக்கம். /வலைச்செயலி நிரலாக்கம்/
/நடமாடும் செயலி நிரலாக்கம்/. /நிகழ்பட ஆட்ட நிரலாக்கம்/. /ஒருங்கிய நிரலாக்கம்/. /பதிகணினி நிரலாக்கம்/. /தானியங்கி நிரலாக்கம்/. /அறிவியல் நிரலாக்கம்/
இயங்கு தளம் வாரியாக நிரலாக்கம். லினக்சு நிரலாக்கம். /விண்டோசு நிரலாக்கம்/. /ஆப்பிள் நிரலாக்கம்/. /சிக்கல்கள்/ (பயிற்சிக்கு).தொடர்புடைய நூல்கள்
பொருள் நோக்கு நிரலாக்கம். இடைமுக வடிவமைப்பு. /தரவுத்தளம்/. மென்பொருள் பரிசோதனை. மென்பொருள் வழுநீக்கல். வடிவமைப்புத் தோரணங்கள்
தரவுக் கட்டமைப்புக்களும் படிமுறைகளும்.பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.பின்வரும் சிக்கல்கள் நிரலாக்கரின் திறங்களை சோதிக்க, உயர்த்த உதவுகின்றன..அகம்புறம் .பின்வரும் கேள்வி தொடக்க நிலை நிரலாளர்களுக்கானது. ஒன்றில் இருந்து நூறு வரை அச்சிடும் நிரல் ஒன்றை எழுதவும். ஆனால், மூன்றால் பிரிக்கப்படக் கூடிய எண்களுக்கு எண்ணுக்குப் பதிலாக "அகம்" என்று அச்சிடவும். ஐந்தால் பிரிக்கப்படக் கூடிய எண்களுக்கு "புறம்" என்று அச்சிடவும். மூன்றாலும் ஐந்தாலும் பிரிக்கப்படக் கூடிய எண்களுக்கு "அகம்புறம்" என்று அச்சிடவும்..ஒரு தீர்வு (பி.எச்.பி)
echo $i . "அகம்புறம் " . "<br />";. echo $i . "அகம் " . "<br />";. echo $i . "புறம் " . "<br />";.வரிசைப்படுத்தல் .ஒரு எண் அணியை (எ.கா $அணி = array(22, 5, 3434, 6, 43, 343)) சிறிதில் இருந்து பெரிதாக வரிசைப்படுத்தவும். நிரலாக்க மொழியில் உள்ள வரிசைப்படுத்தும் செயலிகளை பயன்படுத்த வேண்டாம். .ஒரு தீர்வு (பி.எச்.பி) - Bubble Sort
பகா எண் .ஒரு தரப்பட்ட எண் பகா எண்ணா என்று அறிந்து செல்லக் கூடிய ஒரு படிமுறையை நிறைவேற்றவும்..தொடர் பெருக்கம் விடையின் கூட்டுத் தொகை .ஒரு தொடர் பொருக்க விடையில் இருக்கும் எண்களின் கூட்டுத் தொகையை கணக்கிடவும். சரங்களைப் பயன்படுத்தாமல் செயவும். எ.கா.ஒரு சரத்தின் வரிசைமாற்றங்களை அச்சிடுக .ஒரு சரத்தின் எல்லா வரிசைமாற்ற வடிவங்களையும் அச்சிடுக.
சொற் தேடல் .மொழியில் builtin செயலிகளைப் பயன்படுத்தாமல், பின்வரும் சொற்தொடர்களில் இருந்து தரப்படும் சொல் எந்த எந்த இடங்களில் (positions) இல் வருகிறது என்று அச்சிடவும்.. சொற்தொடர்: "This sentence contains the needle in the haystack. Can you find the needles position.". சொல்: needle.அணி2 இல் உள்ள மதிப்புகள் அணி 1 இல் உள்ளதா .இரண்டு அணிகள் உள்ளன. அணி1 = 5, 23, 4, 77, 3. அணி2 = 3, 66, 23, 66, 4. அணி2 உள்ள மதிப்புகள் அணி1 இல் இருந்தால், அச்சிடவும்.
பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.கணினி என்பது கணித்தல் செய்யக் கூடிய நுண்செயலியைக் (microprocessor) கொண்ட ஒர் மின்னணுக் கருவி. நுண்செயலி தருக்கப் படலைகளைக் (logic gates) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தருக்கப்படலைகள் திரிதடையத்தால் (transistor) ஆனவை. திரிதடையங்கள் 1 அல்லது 0 என்ற இரு நிலைகளைக் கொண்டவை. ஆகவே கணினிகள் செய்யும் அனைத்தும் அடிப்படையில் 1 அல்லது 0 என்ற நிலைகளைக் கொண்ட திரிதடையத்தால் நிறைவேற்றப்படுவை. 0 மற்றும் 1 ஐ அடிப்படையாகக் கொண்ட இரும இயற்கணிதம் (Boolean algebra) கணினியலுக்கு அடிப்படையாக அமைகிறது. .ஆகக் கீழ் நிலையில் கணினி 1 அல்லது 0 ஆல் ஆன இயந்திர மொழியை (machine language) இயக்குகிறது அல்லது கணிக்கிறது. இயந்திர மொழி என்பது பிரிக்கவியலா கட்டளைகளால் (instructions) ஆனது. எ.கா 000000 00001 00010 00110 00000 100000 என்பது ஒரு கட்டளை. இக் கட்டளை இரு எண்களைக் கூட்டி ஒரு இடத்தில் இடும் படி கூறுகிறது. இந்தக் கட்டளைகள் ஒரு குறிப்பிட்ட கணித்தலை நுண்செயலி செய்யப் பணிக்கும். 1 அல்லது 0 யினால் ஆன கட்டளைகளை மனிதர்கள் இலகுவில் புரிந்து கொள்ள முடியாது. அதனால் இந்த இயந்திர மொழிக் கட்டளைகளுக்களுக்கு இணையான சொற் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இந்த மனித மொழியால் ஆனால் சொற் அல்லது கட்டளைத் தொகுதிகள் சில்லு (assembly) மொழி எனப்படுகிறது. எ.கா மேற் கூறப்பட்ட கட்டளை op rs rt rd shamt funct என்று சில்லு மொழியில் எழுதப்படலாம். சில்லு மொழியில் எழுதப்பட்ட ஒரு கட்டளைத் தொகுதியை இயந்திர மொழிக்கு சில்லுமொழிமாற்றி (assembler) மொழிமாற்றித் தருகிறது. இவ்வாறு கணினி இயக்கக் கூடிய ஒரு கட்டளைத் தொகுதியையே நாம் நிரல் (program) என்கிறோம். நிரலை அல்லது நிரல் தொகுதிகளை மென்பொருள் என்றும் கூறலாம். .கணினியியலின் தொடக்க கால கட்டத்தில் நிரல்கள் சில்லு மொழியிலேயே எழுதப்பட்டன. எனினும் சில்லு மொழியும் பரந்த பயன்பாட்டிற்கு இலவாக அமையவில்லை. ஆகவே மனித மொழிக்கு இணையான மேல் நிலை கணினி அல்லது நிரல் மொழிகள் உருவாக்கப்பட்டன. இந்த மேல் நிலை மொழிகளில் எழுதப்படும் நிரல்கள் சில்லு மொழிக்கு மொழிமாற்றப்பட்டு, பின்னர் இயந்திர மொழிக்கு மொழிமாற்றப்பட்டு நுண்செயலியில் கணிக்கப்படுகின்றன. இன்று பதிகணினியியல் போன்று சில குறிப்பிட்ட தேவைகள் தவிர்த்து பெரும்பாலான நிரல்கள் மேல் நிலை மொழிகளிலேயே எழுதப்படுகின்றன. இந்த நூலும் மேல் நிலை மொழிகளில் நிரலாக்கம் செய்வது பற்றியது ஆகும். .மேலே கணினி என்றால் என்ன, அது நிரல்களை எப்படி இயகுகிறது என்பதைச் சுருக்கமாகப் பாத்தோம். அடுத்த அதிகாரத்தில் நிரலாக்கம் என்றால் என்பதை பார்ப்போம். .பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்
நிரல்களை அல்லது கணினிக்கான கட்டளைகளை எழுதுவது நிரலாக்கம் ஆகும். வலைத்தளத்தில் இருந்து வானோடம் வரை பல்வேறு தேவைகளுக்கு நிரல்கள் அல்லது மென்பொருட்கள் பயன்படுகின்றன. பெரும்பாலான சூழ்நிலைகளில் தேவைக்குத் தகுந்த மேல் நிலை நிரல் மொழிகளைப் பயன்படுத்தியே நிரலாக்கம் செய்கிறேம்..நிரல்மொழிகள் தரும் மொழிக் கூற்றுகளைப் அல்லது கட்டகங்களைப்(programming language constructs) பயன்படுத்தி,ஒவ்வொரு வரியாக நிரல்களை எழுதி, நிரலகங்களை (libraries) பயன்படுத்தி பெரும் மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இன்று நிரலாக்கம் ஒரு பெரும் தொழிற்துறை ஆகும். தன்னார்வ அனுபவக் கல்வியாலும், பல்கலைக்கழக அல்லது தொழிற்கல்வியாலும், தொடர் பயற்சியாலும் நிரலாக்கத்தைக் கற்றுக் கொள்ளலாம். .நீங்கள் செயற்படும் அல்லது செயற்பட விரும்பும் பணிக்களம் சார்ந்து நிரல்மொழிகள் வேறுபடலாம். நிரல் மொழிகளின் வகைகள், இன்று பரந்த பயன்பாட்டில் இருக்கும் நிரல் மொழிகள் பற்றி அடுத்து பாக்கலாம். .பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.பொருள் நோக்கு நிரலாக்கம் என்பது இன்று நடைமுறையில் உள்ள ஒரு முக்கிய நிரலாக்க கருத்தியல் ஆகும். இந்த நூல் பொருள் நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படைக் கருத்துருக்களை தொகுத்துத் தருகிறது..பொருளடக்கம்
/அறிமுகம்/ - Introduction. /வகுப்பும் பொருளும்/ - Class and Object. /பண்புகள்/ - Attributes/Properties & Data Fields. /செயலிகள்/ - Methods / Functions. /கட்டுநர்/ - Constructor. /பெறுநர்களும் இடுநர்களும்/ - Accessors and Mutators
அனுமதிக் கட்டுப்பாட்டு திரிபாக்கிகள் (Access Control Modifiers). /உறைபொதியாக்கம்/ - Encapsulation (Access Modifiers). அனுமதி தொடர்பில்லாத திரிபாக்கிகள் . /நிலை வகுப்புக்களும் வகுப்பு உறுப்புக்களும்/ - Static Class and Class Members. /நுண்புல வகுப்பு/ - Abstract Class. புதிய வகுப்புக்களை பிற வகுப்புக்களில் இருந்து உருவாக்கல்
/மரபியல்பாக்கம்/ - Inheritance. பலநிலை மரபியல்பாக்கம் - Multilevel inheritance. /இணைவு/ - Association. /திரட்டு/ - Aggregation . /பொதிவு/ - Composition . /பல்லுருத்தோற்றம்/ - Polymorphism
/செயலி மிகைப்பாரமேற்றல்/ - Method Overloading. /செயலி மேலோங்கல்/ - Method Overriding. /இடைமுகம்/ - Interface.தொடர்புடைய பிற நூல்கள் . நிரலாக்கம் அறிமுகம். வடிவமைப்புத் தோரணங்கள்
நிரல் மொழிகள்.நிரல் மொழிகள் பயன்பாடு, வடிவமைப்பு, தலைமுறை போன்ற வகைப்பாடுகளால் வேறுபடுகின்றன. வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு மொழிகள் பயன்படுகின்றன. எ.கா Shell script வழங்கி நிர்வாக வேலைகளுக்கும், பி.எச்.பி/ரூபி போன்ற மொழிகள் வலைச்செயலிகளுக்கும், வினவல் மொழி தரவுத்தள ஊடாட்டங்களுக்கும், சி++ போன்ற மொழிகள் நிரலாக்க விளையட்டுக்களுக்கும் பயன்படுகின்றன. வடிவமைப்பு நோக்கில் நிரலாக்க மொழிகள் பணிமுறை நிரல் மொழிகள் (Functiona), ஏவல் மொழிகள் (Imperative), ஏரண மொழிகள் (Logical), பொருள்நோக்கு நிரலாக்க மொழிகள் (Object Orientered) என்று வகைப்படுத்தப்படுகின்றன. .இயந்திர மொழிகள் முதலாம் தலைமுறை மொழிகள் ஆகும். மனித மொழிபோன்ற கூறுகளைக் கொண்ட போர்ட்ரான், அல்கோல் போன்ற மொழிகள் இரண்டாம் தலைமுறை மொழிகள். மூன்றாம் தலைமுறை மொழிகளில் எழுதப்பட்ட நிரல்கள் எந்த வன்பொருட்களிலும் இயங்க கூடியவையாக அமைந்தன. சரம், அணி, மற்றும் பிற பொதிவுத் தரவு இனங்களும் மொழிக் கூறுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. சி, சி++, ஜாவா ஆகியவை இந்த தலைமுறையைச் சார்ந்த இன்னும் பரந்த பயன்பாட்டில் இருக்கும் மொழிகள் ஆகும்..எழில் (நிரலாக்க மொழி).எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும்.[15]. இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும். எழில் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியா கட்டுரை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் வாசிக்க..ஏவல் (Imperative) மொழிகள்
இன்று பரந்த பயன்பாட்டில் இருக்கும் சி, சி++, யாவா, பி.எச்.பி, பெர்ள், ரூபி, பைத்தான் ஆகிய மொழிகள் மூன்றாம் தலைமுறை ஏவல் (Imperative) மொழிகள் ஆகும். ஏவல் மொழிகள் ஒரு நிரல் என்னதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் படிப்படையாக கூற்றுக்களாக விபரிக்கும். இந்த மொழிகளின் கூற்றுக்கள் நிரலின் நிலையை (state) மாற்றும், பக்க விளைவுகளை (side effects) ஏற்படுத்தும். .ஏவல் மொழிகளை தொகுப்பு (compiled) மொழிகள் Interpreted மொழிகள் என இரு வகைப்படுத்தலாம். தொகுக்கப்பட்ட மொழிகளில் நிரல்கள் முழுமையாக இயந்திர மொழிக்கு மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. எ.கா "+" என்ற செயற்பாடு "கூட்டு" என்று நேரடியாக மொழிபெயர்க்கப்படும். Interpreted மொழிகளில் ஒரு Interpreter இடைத்தரகராகச் செயற்படும். எ.கா "+" என்பது நிரல் இயக்கப்படும் போது Interpreter தனது "கூட்டு(a,b)" செயலியை செயற்படுத்தும். அந்தச் செயலில் "கூட்டு" என்ற இயந்திர மொழிக் கட்டளையை இயக்கும். தொகுப்பு மொழிகள் மிக வேகமாக இயங்கக் கூடியன. Interpreted மொழிகள் நிரலாக்கதுக்கு வசதியானவை..பணிமுறை மொழிகள் .ஏரண மொழிகள்.பொருள்நோக்கு நிரலாக்க மொழிகள் .பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்
ஒரு நிரலை நாம் எழுதி இயக்குவதற்கு நாம் பயன்படுத்த விரும்பும் மொழிகளுக்கான பணிச் சூழலை அமைத்துக் கொள்வது அவசியமாகும். எ.கா நாம் சி மொழியில் நிரல் எழுதப் போகிறோம் என்றால் அதை இயக்க எமக்கு சி compiler தேவை. அதே போல நாம் பி.எச்.பி மொழியில் எழுதப் போகிறோம் என்றால் பி.எச்.பி மொழி அல்லது அதற்கான interpreter எமது கணினியில் அல்லது வழங்கியில் நிறுவிக் கொள்ள வேண்டும். .நிரல்களை எழுதுவதற்கு உங்கள் மொழிக்கு ஆதரவு தரும் ஒர் ஒருங்கிணை விருத்திச் சூழல் (integrated development environment) கொண்ட ஒரு தொகுப்பியை (editor) தேர்தெடுத்துக் கொள்வது நன்று. இந்தத் தொகுப்பிகள் உங்கள் நிரலாக்கப் பணிக்கு பல்வேறு வழிகளில் மிகவும் உதவும்..பி.எச்.பி .லினக்சில் பி.எச்.பியை apt-get கொண்டு நிறுவிக் கொள்லாம். விண்டொசில் பி.எச்.பியை நிறுவ XAMPP பயன்படுத்திக் கொள்ளலாம். பி.எசி.பி நிரல்களை எழுத நெற்பீன்சு (netbeans), புளூஃபிசு, பிடிரி ஆகியவை சில நல்ல தொகுப்பிகள்..யாவா .அடிப்படை யாவா நிரல்களை எழுத உங்களுக்கு யே.டி.கே (JDK) எனப்படும் யாவா நிரலாளர் பொதியை நிறுவிக் கொள்ள வேண்டும். யாவாவுக்கு எக்கிளிப்சு, நெற்பீன்சு ஆகிய தொகுப்பிகள் பரந்த பயன்பாட்டில் இருப்பவை.
சி++.ரூபி .பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.எல்லா நிரல் மொழிகளும் மூன்று அடிப்படைக் கூறுகளால் ஆனவை:. கூற்றுக்கள் (statements): எதாவது ஒரு செயலை நிறைவேற்றுவது. விடை ஒன்றைக் கட்டாயம் தராமல், ஒரு விளைவை (side effect) ஏற்படுத்துவதுன. எ.கா: $அ = 100; என்பது ஒரு கூற்று ஆகும். . கோவைகள் (expressions): கோவை என்பது மாறிகள், மாறிலிகள், செயற்குறிகள், செயலிகள் போன்றவை சேர்ந்து விதிகளுக்கு அமைய மதிப்பீடு செய்து விடையைத் தருவது. இது விளைவுகளை ஏற்படுத்தாது.
மாறிகள் (variables): மாறிகள் என்பது தரவுகளுக்கான சுட்டி அல்லது சேமிப்பகங்கள்..கட்டுப்பாடு, சுழற்சி, அணி, வகுப்பு, செயலி போன்ற ஒரு நிரலாக்க மொழியின் பல்வேறு கூறுகள் மேற்கூறிய அடிப்படை வகைக்குள் அடங்கும். மொழியின் வடிவமைப்பைப் பொறுத்து கூற்றுக்கள் அல்லது கோவைகள் முதன்மைப்படுத்தப் பட்டு இருக்கும். Imperative மொழிகள் கூற்றுக்களை முதன்மையாகப் பயன்படுத்தி கணித்தலைச் செய்கின்றன. பணிநோக்கு (functional) மொழிகள் கோவைகளை முதன்மையாகப் பயன்படுத்துகின்றன..பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.கூற்றுக்கள், கோவைகள், மாறிகள் ஆகியவை மூன்று அடிப்படை நிரல் கூறுகள். மாறி என்பது தரவுகளை சேமிப்பதற்காக கணினியின் நினைவகத்தில் ஒதுக்கப்படும் இடம். இது இதன் குறியீட்டுப் பெயரிருடன் தொடர்புடையது. பின்வரும் சி நிரல் கூற்றைப் பார்க்க:.int பெறுமதி = 100;.மேலே பெறுமதி என்பது மாறியின் குறியீட்டுப் பெயர். int என்பது மாறியின் தரவு இனம். 100 என்பது மாறிக்கு தரப்பட்டு இருக்கும் பெறுமானம்.
தரவு இனம் என்பது தரவுகளை வகைப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் ஒரு முறை ஆகும். முழு எண், தசம எண், இரும எண், எழுத்து, சரம், அணி ஆகியவை சில அடிப்படைத் தரவு இனங்கள் ஆகும். ஒவ்வொரு நிரல் மொழியும் சில அடிப்படைத் தரவு இனங்களைக் கொண்டிருக்கும். தரவு இனத்தைப் பொறுத்து அவை எடுக்கக் கூடிய பெறுமானங்களும், அவற்றுக்குத் தேவையான சேமிப்பகங்களும் அமையும். எ.கா சி மொழியில் int எனப்படும் முழு எண் 4பைட் அளவானது. அதனைப் பயன்படுத்தி 0 இருந்து 4294967295 வரையான ஒரு நேர்ம எண்ணை, அல்லது -2147483648 இருந்து 2147483647 வரையான ஒரு எதிர்ம/நேர்ம எண்ணை சேமிக்கலாம்..நிலையான வகைப்பாடும் (static typing) இயங்குநிலை வகைப்பாடும் (dynamic typing) .சி, சி++, யாவா, ஒப்செக்டிவ் சி போன்ற மொழிகளில் மாறிகளைப் பயன்படுத்த முன்பு அவை முதலே அறிவிப்புச் (declare) செய்யப்பட வேண்டும். இம் மாதிரி மொழிகளை நிலையான வகைப்பாடு (static typing) மொழிகள் என்பர். பைத்தோன், பி.எச்.பி, ரூபி, போன்ற மொழிகளில் அவ்வாறு செய்யத் தேவை இல்லை. இவை மாறிகளின் பெறுமானங்களைக் கொண்டு தமது வகையைப் பெறும். இவற்றை இயங்குநிலை வகைப்படு (dynamic typing) மொழிகள் என்பர். .பிழையாக புதிய மாறிகள் அறிமுகப்படுத்தாமல் இருப்பதற்கு நிலையான வகைப்பாடு உதவுகிறது. வேகமாக நிரலாக்கம் செய்ய இயங்குநிலை வகைப்பாடு உதவுகிறது. பெர்ள் போன்ற சில மொழிகளில் இரண்டு மாதிரியும் செய்து கொள்ள முடியும்..உறுதியான வகைப்பாடும் (strong typed) இளகுவான வகைப்பாடும் (weekly typed) .ஒரு மாறி ஒரு வகையாக வரையறை செய்யப்பட்ட பின்பு பிற வகையோடு, அல்லது வகையாகப் பயன்படுத்த அனுமதிக்காததை உறுதியான வகைப்பாடு என்பர். பைத்தோன், யாவா, சி++ போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. இவ்வாறு பிற வகையோடு செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிப்பதை இளகுவான வகைப்பாடு என்பர். பி.எச்.பி, யாவாசிகிரிப்ட், பெர்ள் போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. சில மொழிகளில் இந்தக் கட்டுப்பாடுகளை கடப்பதற்கான வழிமுறைகள் உண்டு. எ.கா சி++ மொழியில் cast செய்வதன் மூலம் ஒரு வகையில் இருந்து இன்னுமொரு வகைக்கு மாற்ற முடியும்.
மொழிகள் வாரியாக.சி++.பி.எச்.பி .பி.எச்.பி இளகுவான, இயங்குநிலை வகைப்பாட்டைக் கொண்டது. எனவே ஒரு மாறிலியை பின்வருமாறு நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாறிகளைக் குறிக்க $ என்ற முன்னுட்டைஇணைத்துக் கொள்ள வேண்டும்..$எகா = 100;.யாவா
பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற செயற்பாடுகளைச் செய்யலாம். இவற்றை +, -, x, \ போன்ற குறியீடுகளால் குறிப்பிடுவோம். அதே போல், நிரலாக்கத்தில் செயற்குறிகள் ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகள் மீது செயற்பாடுகள் செய்யப் பயன்படும் குறியீடுகள் ஆகும். நிரலாக்கத்தில் இவ் வகையான நான்கு வகைச் செயற்பாடுகள் உண்டு. பெரும்பாலான மொழிகளில் இவை உண்டு. இவற்றின் குறியீடுகள் வேறுபடலாம்..கணிதச் செயற்பாடுகள் . + கூட்டல். - கழித்தல். * பெருக்கல்
/ வகுத்தல். % மீதம். ^ அடுக்கு.ஒப்பீட்டுச் செயற்பாடுகள் .இருமச் செயற்பாடுகள் .பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்
ஒவ்வொரு நிரலாக்க மொழியிலும் நிரல் தொடர்பான கருத்துக்களை இடுவதற்கான வழிமுறை உண்டு. இந்தக் கருத்துக்கள் நிரலின் கூறு இல்லை. இவை நிரலின் தொழிற்பாட்டில் எந்தவிதப் பங்களிப்பையும் செய்யாமாட்டின. ஆனால் நிரலை எழுதுபவர்களுக்கு, வாசிப்பவர்களுக்கு, பராமரிப்பவர்களுக்கு இந்தக் கருத்துக்கள் உதவுகின்றன. //, /* */, ## போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தி கருத்துக்கள் நிரல் வரிகளில் இருந்து வேறுபடுத்தப்படுகின்றன..மொழிகள் வாரியாகக் கருத்துக்கள்.சி.சி++.ஜாவா.ஜாவாவில் மேற்கூறிய இரண்டு வகை கருத்துகளையும் பயன்படுத்த இயலும். மேலும் கூடுதலாக, ஆவணப்படுத்தல் கருத்தும் (Documentation comments) உள்ளது. இது /** எனத் தொடங்கி */ என முடியும். பார்ப்பதற்கு சி++ பல்வரிக் கருத்துப் போன்று தோற்றமளித்தாலும், இதற்கென்று சிறப்பு செயல்பாடு உண்டு. ஆங்காங்கே @சொல் என எழுதப் பட்டிருக்கும் வரிகளைப் பட்டியலிட்டு மீயுரை மொழியில் ஆவணப்படுத்தும்.
மேற்கூறிய வரிகளில் @ குறியீட்டுக்குப் பின்னர் வரும் சொற்களுக்கான மதிப்புகளாக, ’:’ க்கு பின்னர் வரும் சொற்கள் சேமிக்கப்படும்..பைத்தான்.பைத்தானில், கருத்துகள் # என்று தொடங்கும்..பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.நிரல்கள் பொதுவாக வரிசையாக இயக்கப்படும். அவ்வாறு இயங்குபோது சில நிலைகளில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டி வரும். சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் ஒரு வழியாலும், வேறு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் வேறு ஒரு வழியாலும் நிரல் தொடர வேண்டி வரும். இதனையே முடிவுக் கூற்றுக்கள் அல்லது நிபந்தனைக் கூற்றுக்கள் (conditional statements) என்கிறோம். .இந்தக் முடிவுக் கூற்றுக்கள் பெரும்பாலும் எல்லா மொழிகளிலும் உண்டு. இதன் முதன்மை வடிவம் if then else (இப்படி என்றால் அல்லது) ஆகும்.
if (நிபந்தனை 1) {. -- நிரல் கூற்றுக்கள் 1.} elseif (நிபந்தனை 2) {. -- நிரல் கூற்றுக்கள் 2. -- நிரல் கூற்றுக்கள் 3.இப்படி (நிபந்தனை1) என்றால் {
-- நிரல் கூற்றுக்கள் 1.} அல்லதுஇப்படி (நிபந்தனை2) என்றால் {. -- நிரல் கூற்றுக்கள் 2.} அல்லது {. -- நிரல் கூற்றுக்கள் 3.பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்
நிரல்களில் ஒரே மாதிரி விடயத்தை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய தேவை அடிக்கடி எழும். எ.கா ஒரு அட்டவணையை உருவாக்கும் போது, கணக்கிடும் போது, தேடும் போது, ஒப்பிடும் போது எனப் பல நேரங்களிலும் ஒரே நிரல் கூற்றுக்களைத் சிறிய வேறுபாடுகளுடன் திரும்ப திரும்ப இயக்க வேண்டி வரும். அப்பொழுது சுற்று எனப்படும் நிரல் கூறு மிகவும் பயன்படுகிறது. பெரும்பாலான நிரல் மொழிகளில் மூன்று அல்லது நான்கு வகையான சுற்றுக்கள் உண்டு..வகைகள் . For சுற்று. For each சுற்று. While சுற்று. do while சுற்று
பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.கணிதத்தில் சார்புகள் போன்று செயலிகள் உள்ளீடுகள் பெற்று ஒரு விடையைத் தரும் அல்லது தொழிற்பாட்டைக் கொண்டிருக்கும். செயலிகளை ஒருமுறை எழுதி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். செயலிக்கு ஒரு பெயரிட்டு அதனை மீண்டும் மீண்டு அழைத்துப் பயன்படுத்துவதால் நிரலாக்கப் பணி எளிதாகிறது நிரல் ஒழுங்கமைக்கப்படுகிறது, பராமரிப்பு இலகுவாகிறது. .பல மொழிகளில் செயலிகள் function என்ற சொல்லை முதலில் இட்டு, பின்னர் பெயரை இட்டு, பின்னர் அடைப்புக் குறிக்குள் அந்தச் செயலிக்கான கூற்றுக்களை விபரிப்பர்..மதிப்பு மூலம் விளித்தல் (Call by Value), சுட்டு மூலம் விளித்தல் (Call by Reference) .ஒரு செயலிக்கு தரப்படும் தருமதிப்புகள் (arguments) இருவகைப்படலாம்: மதிப்புகள் (Values), முகவரிகள் (Addresses). முதலாவது வகை மதிப்பு மூலம் விளித்தல் என்றும் இரண்டாவது வகை சுட்டு மூலம் விளித்தல் என்று அறியப்படுகிறது. மதிப்பு மூலம் விளித்தலில் மூல மாறியின் மதிப்பை (it won't change the value of the original variable) மாற்றாது. சுட்டு மூலம் விளித்தல் மூல மாறியின் மதிப்பை மாற்றும். .வெவ்வேறு மொழிகள் வெவ்வேறு வழிகளில் விளித்தல் செய்ய அனுமதிக்கின்றன. பல மொழிகளில் அடிப்படைத் தரவுகளை (primitive types) செயலிக்கு அனுப்பும் போது மதிப்பு மூலம் விளித்தல் ஆகவும், பொருட்களை (objects) அனுப்பும் போது சுட்டு மூலம் விளித்தல் ஆகவும் கையாழுகின்றன.
முதல் வகுப்புச் செயலி (first class function) .ஒரு செயலியை ஒர் அடிப்படைத் தரவு மாதிரி பயன்படுத்த முடியுமானால், அந்தச் செயலியை முதல் வகுப்புச் செயலி (first class function) என்பர். எ.கா ஒரு செயலியைப் பின்வரும் செயற்பாடுகளுக்கு உட்படுத்த முடியுமானால் அதனை முதல் வகுப்புச் செயலி எனலாம்.. செயலி வேறு ஒரு செயலியின் தருமதிப்புப்பாக விளித்தல் (passed as an argument). ஒரு செயலியின் திரும்பும் மதிப்பாக (returned value) இருத்தல். ஒரு மாறியில் இருத்தல் (assign to a variable.பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்
கணினியில் தகவல்களை சேமிக்கவும் ஒழுங்கமைக்கவும் கோப்புக்கள் பயன்படுகின்றன. எழுத்துக் கோப்புக்கள், படிமக் கோப்புக்கள், executable கோப்புக்கள் எனப் பல வகை கோப்புக்கள் உண்டு. நிரலாக்கத்தில் தரவுகளை சேமிக்கவும் வாசிக்கவும் எழுத்துக் கோப்புக்கள் பயன்படுகின்றன. அதனால் எழுத்துக் கோப்புக்களையும் கையாளுவதற்கான வசதிகள் அனைத்து நிரல் மொழிகளிலும் உண்டு. கோப்புக்களை வாசித்தல், கோப்புகளில் தகவல்களைச் சேர்த்தல் அல்லது மாற்றல், கோப்புகளை உருவாக்குதல், நீக்குதல் ஆகியவை கோப்புக் கையாளுதல் செயற்பாடுகள். .பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.பாரிய மென்பொருட்களை விருத்தி செய்வது என்பது ஒரு சிக்கலான செயற்பாடாகும். சில மென்பொருட்கள் சரியாகத் தொழிற்படுவது என்பது மிக முக்கியமானது. ஆகையால் மென்பொருட்களை விருத்திசெய்வதற்கென சீர்தரங்களும் வழிமுறைகளும் உண்டும். அவற்றில் ஒன்றே மென்பொருள் விருத்திச் சுழல் வட்டம் ஆகும். இது மென்பொருளை விருத்தி செய்வதில் இருக்கும் செயற்பாடுகளை மேல்நிலையில் விளக்குகிறது..செயற்பாடுகள் . தேவைகள் அறிந்தல், தேவைகள் பகுப்பாய்வு (requirements gathering and analysis). வடிவமைப்பு (design)
நிறைவேற்றுதல் (implementation). சோதனை (testing). நிறுவுதல் (deployment). பராமரிப்பு (maintenance). ஆவணப்படுத்தல் (தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவது).மேற்க்கண்ட செயற்பாடுகள் பெரும்பாலும் எல்லா நிரலாக்க செயற்றிட்டங்களிலும் இருக்கும் என்றாலும், செயற்திட்ட மேலாண்மை, மென்பொருள் விருத்தி முறைமை ஆகியவை பெரிதும் வேறுபடும். எ.கா இசுக்கிரம் (scrum).
முக்கிய ஆவணங்கள் . மென்பொருட் தேவைகள் குறிப்பீடு - (software requirements specification) (சீர்தரங்கள்: ஐஇஇஇ - IEEE 830). மென்பொருள் வடிவமைப்பு விபரிப்பு - (software design description) . மென்பொருள் பரிசோதனைத் திட்டம் - (software test plan). மென்பொருள் செய்ற்திட்ட மேலாண்மைத் திட்டம் - (software project management plan). பயனர் கையேடுகள், ஆவணங்கள் - (user manual and documents)
நிறுவல்/விருப்பமைவுவாக்கம்/பராமரிப்பு ஆவணங்கள் - (installation/configuration/maintenance documents) .பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.தரவு இனம் என்பது தரவுகளை வகைப்படுத்துவதற்கான வரையறையும், அவை மீது செய்யப்படக்கூடிய செயற்பாடுகளையும் குறிக்கிறது. எ.கா முழு எண், தசம எண், இரும எண், எழுத்து போன்றவை பல மொழிகளில் பயன்படுத்தப்படும் சில அடிப்படைத் தரவு இனங்கள் ஆகும். தரவுக் கட்டமைப்புகள் என்பவை அடிப்படைத் தரவு இனங்களால் ஒழுங்கமைப்பட்ட பலக்கிய வரையறைகொண்ட தரவு இனம் ஆகும். .பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்.மாறிலி என்பது ஒரு நிரலின் இயக்கம் முடியும் வரை மாறாத பெறுமாம் கொண்ட இனங்காட்டி ஆகும். சில மொழிகளில் மாறிலிகளை சிறப்பாக அறிவிக்க வேண்டும்..பயன்பாடு