text
stringlengths 23
10.7k
|
---|
/ஆக்குநர்கள்/. /அறிமுகம்/. /முதற்செய்நிரல்/. /உங்கள் பெயர் என்ன?/.பகுப்பு:நிரலாக்குநர் அல்லாதவருக்கான பைத்தன் 2.7 பயிற்சி.பொருளடக்கம் |
/எண்ணிமப் பாதுகாப்பின் தேவை/. கட்டற்ற அறிவு, கட்டற்ற மென்பொருள், திறந்த அணுக்கம். /எண்ணிமம் என்றால் என்ன?/. /எண்ணிமப் பொருள்/. உள்ளடக்க வகைகள். /எண்ணிமப் பொருட்கள் எதிர்நோக்கும் அழிவாபத்துக்கள்/ |
/எண்ணிமப் பாதுகாப்பு என்றால் என்ன?/. எண்ணிமப் பாதுகாப்பின் நிலைகள். /எண்ணிமப்படுத்தல்/. /பாதுகாப்புச் செயற்பாடுகள்/. காப்புப்படி எடுத்தல். நிலைப்பை கணித்தலும் கண்காணித்தலும் |
கோப்பு வடிவங்கள். மீதரவும் உரிமைக் கூற்றுகளும். /அணுக்கம்/. கண்டறிதல் இடைமுகம். தேடல். /எண்ணிமப் பாதுகாப்புக்குத் தேவையான கட்டமைப்பு/ |
/திறந்த ஆவணக தகவல் முறைமை/. /மீதரவுச் சீர்தரங்கள்/. /தொழில்நுட்பம்/'. மின்வருடிகள். களஞ்சிய மென்பொருட்கள். தேடல் மென்பொருட்கள் |
அணுக்கப்படுத்தல் மென்பொருட்கள்.பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்.ஒரு சமூகத்தின் அடையாளம், பண்பாடு, கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியன அதன் அறிவுத் தளங்களில் (knowledge bases) இருந்து கட்டியெழுப்படுகின்றன. நூலகங்கள், ஆவணகங்கள் (archives), அருங்காட்சியகங்கள், பண்பாட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இந்த அறிவுத்தளங்களை உருவாக்க, பேண, பரப்ப பெரும் பங்காற்றுகின்றன. எமது மொழி, இலக்கியம், கலைகள், தொழிற்கலைகள், வாழ்வியற் கலைகள் ஆகியன இந்த அறிவுத்தளங்களின் வெளிப்பாடுகள் ஆகும். இந்த அறிவுத்தளங்களை நாம் உருவாக்கி, பாதுகாத்துப் பயன்படுத்தாவிடால், அறிவுமயப்படுத்தப்பட்ட இன்றைய உலகில் நாம் வளர்ச்சிபெற முடியாது..இன்று நாம் ஓர் எண்ணிம உலகில் (digital world) வாழ்கின்றோம். அன்றாட வாழ்வின் தகவல் வளங்களும் செயற்பாடுகளும் எண்ணிமப்படுத்தப்பட்டு (digitized), மென்பொருள் மயப்படுத்தப்படும் (softwareization) காலகட்டத்தில் வாழ்கிறோம். இதனை நான்காவது தொழிற்புரட்சியாக வருணிக்கின்றனர்.[1] எமது அறிவுத்தளங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி, பாதுகாத்து அனைவருக்கும் கொண்டும் செல்வதற்கான வாய்ப்பினை இந்த எண்ணிமப் புரட்சி வழங்கியுள்ளது..எண்ணிமம், எண்ணிம வளங்கள் என்றால் என்ன? எண்ணிமப் பொருட்கள் எதிர்நோக்கும் அழிவாபத்துக்கள் எவை? எண்ணிமப் பாதுகாப்புச் (digital preservation) செயற்பாடுகள் யாவை? அணுக்கப்படுத்தல் (providing access) ஏன் முக்கியம்? எண்ணிமப் பாதுகாப்புக்கும் அணுக்கப்படுத்தலுக்கும் தேவையான தொழில்நுட்பங்களும் நிறுவனக் கட்டமைப்புக்களும் எவை? போன்ற கேள்விகளை அறிமுக நோக்கில் விளக்குவதே இந்த நூலின் நோக்கம் ஆகும்..பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும் |
எண்ணிமம் என்பது 1 மற்றும் 0 என்ற இருமக் குறிமுறையைப் பயன்படுத்தி கணினியில் தகவலை குறிக்க, சேமிக்க, செயற்படுத்த, அனுப்பப் பயன்படும் மின்னணுவியல் தொழில்நுட்பத்தைக் குறிக்கின்றது. கணினியின் அனைத்து செயற்பாடுகளும் எண்ணிம முறையில் அமைகின்றது. அதன் இயங்குதளம் முதற்கொண்டு, வலைத்தளம் வரை அனைத்தும் 1 அல்லது 0 ஆகிய எண்களால் அமைந்தவை. 0 மற்றும் 1 ஐ அடிப்படையாகக் கொண்ட இரும இயற்கணிதம் (boolean algebra) கணினியியலுக்கு அடிப்படையாக அமைகிறது..கணினியில் நீங்கள் பார்க்கும் கோப்பு, ஒளிப்படம், நிகழ்படம், வலைத்தளம், நிகழ்படவிளையாட்டு என அனைத்தும் எண்ணிம வடிவில் அமைந்தவை ஆகும். அவற்றை நீங்கள் சேமிக்க முடியும், மாற்ற முடியும், அழிக்க முடியும், பிணையம் ஊடாக வேறு கணினிக்கு அனுப்ப முடியும். இந்தத் தகவல்களை ஒப்பீட்டளவில் மிகச் சொற்பமான செலவுக்குப் படி எடுக்கலாம், பகிரலாம். இவ்வாறு நாம் தகவல்களை கையாழ உதவுவதாலேயே கணினி வாழ்வின் இன்றையமையாத கருவியாகத் திகழ்கின்றது..பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்.எண்ணிம வடிவில் தகவல் இருப்பதால் தகவல் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதுவது தவறு. எத்தனை தடவை உங்கள் வேர்ட் (word) செயலி இயங்க மறுத்து உங்கள் கோப்புகள் அழிந்து போயிருக்கும். எத்தனை தடவை உங்கள் கணினி முற்றிலும் செயலிழந்து போயிருக்கும். உங்கள் நுண்பேசிகளை எவ்வளவு வேகமாக இற்றை (update) செய்ய வேண்டி உள்ளது. இவை போன்று, போதிய பாதுகாப்புக்கு உட்படுத்தப்படாத எண்ணிம தகவல் வளங்கள் பாரிய அழிவாபத்தினை எதிர்நோக்கியுள்ளன.[2] இது தனிநபர்கள், நிறுவனங்கள், அரசுகள் முன்னிருக்கும் பாரிய சவால் ஆகும். .எண்ணிமப்பொருட்கள் என்று நிலைத்து நிற்கக்கூடியவை போன்ற ஒர் மாயையைத் தரலாம். ஆனால் எண்ணிமப் பொருட்களும் மிகவும் இலகுவாக அழிவாபத்துக்கு உட்பட்டு நிற்பவையே. அந்த அழிவாபத்துக்களில் பின்வருவன அடங்கும்:. வன்பொருட்கள் பழுதடைதல் - hardware failure |
மென்பொருள் வழக்கொழிதல் - software obsolescence. தரங்குறைவான எண்ணிமப்படுத்தல் - poor quality digitization. தரவுச் சீரழிவு - file corruption. மீதரவுக் குறைப்பாடுகள் - metadata related risk. மூடிய சீர்தரங்களும் மென்பொருட்களும்- closed source standards and software.பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும் |
எண்ணிமப் பாதுகாப்பு என்பது எண்ணிமப்படுத்தப்பட்ட அல்லது எண்ணிம வடிவில் உருவான தகவல் வளங்களை நெடுங்காலம் பயன்படக்கூடிய வகையில் பேணிப் பாதுகாத்து அணுக்கம் (access) வழங்குவது ஆகும். இது நூலகம் மற்றும் தகவல் அறிவியல் (library and information science), ஆவணகவியல் (archival science) துறைகளினதும், தற்போது வளர்ந்துவரும் எண்ணிமப் புலமை (digital scholarship) துறையினதும் துறைசார் அக்கறையும் செயற்பாடும் ஆகும். .எண்ணிமப்பாதுகாப்பு என்பது எண்ணிமப்படுத்தல், பாதுகாத்தல், அணுக்கம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. இது ஆக்கர்கள், நுகர்வோர், மேலாண்மையாளர்கள், ஆவணகம் ஆகியோருக்கிடையேயான ஊடாட்டம் ஊடாக நடைபெறுகின்றது. இந்தக் கூறுகள் பற்றி பிற பிரிவுகளில் விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன்பு எண்ணிமப் பாதுகாப்பு என்பதன் வரையறையை கூர்மையாக நோக்கலாம்..எண்ணிமப் பாதுகாப்பு என்பதை பல்வேறு சீர்தரங்கள் கணக்காய்வுகள் வரையறை செய்கின்றன. இவற்றுள் முக்கியமாவை Trusted Digital Repository (TDR) Checklist அனைத்துலகச் சீர்தரம் (ISO 16363:) ஆகும். இது உயர்ந்த, பலக்கிய சீர்தரம் (advanced and complex standard) ஆகும். சிறிய ஆவணகங்களால் பயன்படத்தக்கூடிய ஒரு வழிகாட்டியை ஐக்கிய அமெரிக்கவின் தேசிய எண்ணிம மேற்பார்வை கூட்டமைப்பு (National Digital Stewardship Alliance (NDSA)) வெளியிட்டுள்ளது. இது எண்ணிமப் பாதுகாப்பின் நிலைகள் (NDSA’s Levels of Digital Preservation (LoDP)) என்று அறியப்படுகிறது. இவை இரண்டுக்கும் இடையிலான ஒரு cross walk உம் உண்டு..எண்ணிமப் பாதுகாப்பின் நிலைகள்.நம்பிக்கையுடைய எண்ணிமக் களஞ்சியம் (Trusted Digital Repository).மேற்கோள்கள் |
பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்.எண்ணிம வடிவில் இல்லாத தகவல் வளங்களை எண்ணிம வடிவுக்கும் மாற்றும் பணி எண்ணிமப்படுத்தல் (digitalization) ஆகும். எண்ணிமப்படுத்தல் பெளதீக எழுத்து அல்லது படங்களை மின்வருடுதல் (scanning), தொடர்முறை அல்லது அனலாக் வடிவில் இருக்கும் ஒலிக்கோப்புக்கள், நிகழ்படங்களை மாற்றுதல் (conversion), நுண்சுருள்தகடுகளை (microfilms) மின்வருடல் உட்பட்ட செயற்பாடுகளைக் குறிக்கும்..நெடுங்காலமாக தகவல் வளங்களை நுண்சுருள்தகடுகளிலேயே பாதுகாக்கப்பட்டுவந்தன. ஆனால் இன்று எண்ணிமப்படுத்தல் எண்ணிமப் பாதுகாப்புக்கு தேவையான ஒரு முக்கிய செயற்பாடாக ஆவணகங்களால் நோக்கப்படுகின்றது. நுண்சுருள்தகடுகளிளோடு ஒப்பிடுகையில் குறைந்த செலவு, இலகுவான மேலாண்மை, அணுக்கம் ஆகிய காரணங்களுக்காக எண்ணிமப்படுத்தல் மேன்மையானது..எல்லா வகையான எண்ணிமப்படுத்தலும் எண்ணிமப் பாதுகாப்புக்குப் பயன்படக்கூடியது அல்ல. மிகவும் உயர்ந்த அனைத்துலக சீர்தரங்களைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும் எண்ணிமப்படுத்தலே நெடுங்கால எண்ணிமப் பாதுகாப்புக்கு ஏற்றது.[3] எ.கா எழுத்து ஆவணங்கள் குறைந்தது 400 dpi இல், 24-இரும நிறத்தில், ரிஃப் (TIFF) கோப்பு வடிவில் மின்வருடப்பட வேண்டும்..பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்.பல்வேறு அழிவாபத்துக்களில் இருந்து எண்ணிமப் பொருட்களை பேணுவதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளே பாதுகாப்பு (preservation) எனப்படுகின்றது. இது பல்வேறு முறைமைகளை (methodologies), சீர்தரங்களை (standards), நுட்பங்களைக் கொண்ட செயற்பாடுகளை உள்ளடக்கியது.[4] எனினும் அடிப்படையான செயற்பாடுகளாக பின்வருவனவற்றை நோக்கலாம்: |
காப்புப்படி எடுத்தல் - backup (அதிக படிகள் பொருட்களைப் பாதுகாக்கும். LOCKSS - "Lots of Copies Keep Stuff Safe"). கோப்பு முழுமைப்பாடு சரிபார்ப்பு - file integrity verification (சரிபார்தொகை/Checksum கணக்கிடலும் கண்காணித்தலும்). கோப்பு வடிவ செம்மையாக்கம் - file format normalization. நுட்ப நகர்வு - technology migration (எ.கா ஒரு கோப்பு வடிவத்தில் இருந்து இன்னொன்றுக்கு). சூழல் பேணல் - environment preservation. எண்ணிம தடயவியல் - digital forensics |
எண்ணிம தொல்பொருளியல் - digital archaeology.பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்.எண்ணிமப் பாதுகாப்பின் முதன்மை நோக்கம் தகவல் வளங்களை தற்போதும், நெடுங்காலத்துக்கும் பயன்படும் வண்ணம் பாதுகாப்பது ஆகும். பாதுகாக்கப்படும் வளங்கள் இலகுவாகக் கண்டுபிடிக்க, தேட, படிக்க, பகிர்வதற்கான வசதி அணுக்கம் (access) எனப்படுகின்றது. இணையம் ஊடாக, இலவசமாக, கடவுச்சொல் இல்லாமல் அணுக்கம் வழங்குவது மிகவும் பரந்துபட்ட பயனர் சமூகத்தை சென்றடைவதற்கான முக்கிய வழிமுறை ஆகும்.[5].எண்ணிமப்படுத்தல், பாதுகாப்புச் செயற்பாடுகள் ஊடாக ஆவணகத் தகவல் பொதி உருவாக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றது. இந்த ஆவணக தகவல் பொதியில் இருந்து விநியோகத்துக்காக பொதி உருவாக்கப்பட்டு எண்ணிம நூலகம் (digital library) ஒன்று ஊடாக வெளியிடப்படுகின்றது. பயனர்களின் இடைமுகமாக இந்த எண்ணிம நூலகம் அமைகின்றது..அணுக்கம் தராமல் பாதுகாப்புச் செய்வது கோயில் அறையில் திருமறைகளைப் பூட்டி கறையான்களுக்கு இரையாக்குவதற்கு ஒப்பானது..பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும் |
என்ணிமப் பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைப்பு, மனித/நிதி வளங்கள், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் இணையாகத் தேவைப்படுகின்றன. செயற்பாடுகளை திட்டமிட, நிறைவேற்ற, மேலாண்மை செய்ய அமைப்புத் தேவை. அந்த அமைப்பைக் கொண்டு நடத்த மனித நிதி வளங்கள் தேவை. பாதுகாப்புச் செயற்பாடுகளை நிறைவேற்ற பாரிய தொழில்நுட்ப துறைசார் உள்ளீடுகள் தேவை. இந்த மூன்றினால் கட்டமைக்கப்படும் முக்காலி மேலேயே எண்ணிம ஆவணகம் நிலைநிறுத்தப்படுகின்றது.[6] .ஓர் ஆவணகம் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், செயற்பட வேண்டும் என்பதை மேல்நிலையில் வரையறை செய்யும் சீர்தரம் திறந்த ஆவணக தகவல் முறைமை (Open Archival Information System - OAIS - தி.ஆ.த.மு) ஆகும். இது ஆவணகத்தின் பொறுப்புக்கள், ஆவணகத்தின் சூழல், ஆவணகத்துக்குரிய தகவல் மாதிரி (information model), ஆவணகத்தின் செயற்பாட்டு மாதிரி (functional model) ஆகியவற்றை விபரிக்கின்றது. தகவல் வளங்களை விபரிப்பு மீதரவு (descriptive metadata), நிர்வாக மீதரவு (administrative metadata), உரிமைகள் மீதரவு (rights metadata) உட்பட்ட பல்வேறு வகை மீதரவுச் சீர்தரங்களைப் பின்பற்றி பேண வேண்டும்..ஆவணகச் செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்புகள் இலவச அணுக்கம் சார்ந்த எண்ணிமப் பாதுகாப்பு, எழுத்தாளர்களுக்கு மதிப்பளித்தல், நெடுங்கால பேண்தகுநிலை, கட்டற்ற சீர்தரங்கள், கட்டற்ற மென்பொருட்கள் உட்பட்ட விழிமியங்களை பின்வற்றுவதன் ஊடாகவே தாங்கள் பாதுகாக்கும் தக.பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்.ஓர் ஆவணகம் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், செயற்பட வேண்டும் என்பதை மேல்நிலையில் வரையறை செய்யும் சீர்தரம் திறந்த ஆவணக தகவல் முறைமை ஆகும். இது ஆவணகத்தின் பொறுப்புக்கள், ஆவணகத்தின் சூழல், ஆவணகத்துக்குரிய தகவல் மாதிரி (Information Model), ஆவணகத்தின் செயற்பாட்டு மாதிரி (Functional Model) ஆகியவற்றை விபரிக்கின்றது..தி.ஆ.த.மு ஆவணகம் கொண்டிருக்க வேண்டிய செயற்பாட்டுக் கூறுகளை பின்வருமாறு விபரிக்கின்றது: |
உள்வாங்கும் செயற்பாடு (Ingest)- உற்பத்தியாளரிடம் இருந்து தகவலைப் பெற்று (சமர்பிப்பு தகவல் பொதி) சேமிப்புக்கு ஏற்ற வகையில் ஆவணக தகவல் பொதியாக மாற்றியமைக்கின்றது.. ஆவணகச் சேமிப்பு (Archival Storage) - ஆவணக தகவல் பொதிகளை சேமித்தல், மேலாண்மை செய்தல், கண்டுபிடித்தல் அல்லது மீட்டெடுத்தல்.. தரவு மேலாண்மை (Data Management) - ஆவணக தகவல் பொதியில் இருக்கும் விபரிப்புத் தகவலையும், ஆவணகத்துக்குப் பயன்படும் முறைமைத் தகவலையும் ஒருங்கிணைக்கின்றது. அறிக்கையளித்தல் மற்றும் பிற செயற்பாடுகளுக்கு உதவுதல்.. நிர்வாகம் (Administration) - சமர்பிப்பு ஒப்பந்தங்கள், கொள்கையாக்கம், சீர்தர உருவாக்கம். குறிப்பிட்ட பயனர் சமூகத்துக்கும் மேலாண்மைக்கும் இடையேயா ஒர் இடைமுகமாக செயற்படுகிறது.. அணுக்கம் (Access) - ஆவணகத்தில் இருந்து பயனர் தகவலைப் பெறுவதற்கான பயனர் இடைமுகம். ஆவணகத்தில் இருந்து பரப்பல் தகவல் பொதியைப் பெற்று அல்லது அணுகி, பயனுக்குக் கொண்டுசெல்லல்..எண்ணிமப்படுத்தல் பணியில் ஈடுபட்டு இருக்கும், ஆவணகங்கள் Pre-Ingest அல்லது உள்வாங்கும் செயற்பாட்டுக்கு முன்பான ஒரு படியையும் கொண்டிருக்கும். |
பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்.மீதரவுகள் என்பது தகவல் வளங்களைப் பற்றிய தகவல்கள் ஆகும். இவை பல்வகைப்படும்:.விபரிப்பு மீதரவு (Descriptive Metadata) .தகவல் வளத்தை கண்டுபிடிக்க, பயன்படுத்த உதவும் வண்ணம் விபரித்து அமையும் தரவுகள்; எ.கா டப்பிளின் கருவகம்..நிர்வாக மீதரவு (Administrative Metadata) .தகவல் வளத்தை நிர்வாகிக்க உதவும் தரவுகள், எ.கா PREMIS/பிரமிசு. |
நிர்வாக - பாதுகாப்பு மீதரவு (Preservation Metadata) .தகவல் வளத்தை பாதுகாக்கப் பயன்படும் தரவுகள், எ.கா PREMIS/பிரமிசு..நிர்வாக - உரிமைகள் மீதரவு (Rights Metadata) .காப்புரிமைகள், அணுக்கங்கள் தொடர்பான தரவுகள், எ.கா PREMIS/பிரமிசு..நுட்ப மீதரவு (Technical Metadata) .தகவல் வளத்தின் நுட்ப விபரங்களைக் கொண்ட தரவுகள், எ.கா MIX, textMD, MPEG-7, MPEG-2. |
கட்டமைப்பு மீதரவு (Structural Metadata) .தகவல் வளத்தின் அமைப்பை விபரிக்கும் தரவுகள், எ.கா EPub, Pdf..பொதியாக்க/பரிமாற்ற சீர்தரம் (Packaging/Interchange Standard) .மேற்குறிப்பிடப்பட்ட மீதரவுகளையும், உள்ளடக்கத்தையும் பொதியாக்க, பரிமாறப் பயன்படும் சீர்தரம், எ.கா METS/மெற்சு.பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்.உலக மத நூல்கள் யாவும் குறிப்பிடும் ஒரு அதிசம மனிதன் தான், தழ்ழால்.(Anti Christ) |
/மின்வருடல் தொழில்நுட்பம்/.சீர்தரங்கள்.எண்ணிமப் பொருள் . போர்ட்லன்ட் பொது தரவு மாதிரி - Portland Common Data Model (PCDM).களஞ்சியத் சீர்தரங்கள் ./பல்லூடகம்/ |
/அணுக இயலுந்தன்மையும் பகுப்பாய்வும்/.மென்பொருட்கள்.களஞ்சிய மென்பொருட்கள் . ஃபெடேரோ - Fedora. ஆர்க்கைவ்மெற்றிக்கா - Archivematica. அகைட்றா - Hydra |
அணுக்க மென்பொருட்கள் . அற்ரம் - Atom. டிஎசுபேசு - Dspace. ஒமேகா - Omeka. ஐசுலான்டோரா - Islandora. முக்ருற் |
தேடல் மென்பொருட்கள் . அப்பாச்சி சோலர் - Apache Solr. எலாசுரிக் சேர்ச் - Elastic Search.எழுத்து - பி.டி.எப்.கோப்பு வடிவம் . பாதுகாப்புக் கோப்பு வடிவம்: PDF/A |
அணுக்கக் கோப்பு வடிவம்:.படம் . சுவடி. ஒளிப்படம்/புகைப்படம். சுவரொட்டி. அழைப்பிதழ் |
கோப்பு வடிவம் . பாதுகாப்புக் கோப்பு வடிவம்: TIFF, JPEG2. அணுக்கக் கோப்பு வடிவம்:.காட்சிப்படுத்தல் .செயலாக்கம் .ஒலி |
ஒலித்தட்டு.கோப்பு வடிவம் . பாதுகாப்புக் கோப்பு வடிவம்: . அணுக்கக் கோப்பு வடிவம்:.காட்சிப்படுத்தல் .செயலாக்கம் |
நிகழ்படம்.கோப்பு வடிவம் . பாதுகாப்புக் கோப்பு வடிவம்: . அணுக்கக் கோப்பு வடிவம்: . பிற சீர்தரங்கள்: WEBVTT.காட்சிப்படுத்தல் |
செயலாக்கம் .பரிசோதனைக் கோப்புக்கள் .வலைத்தளம்.கோப்பு வடிவம் . பாதுகாப்புக் கோப்பு வடிவம்: . அணுக்கக் கோப்பு வடிவம்: |
காட்சிப்படுத்தல் .செயலாக்கம் .தரவுக் கணங்கள் (Research Data).முப்பரிணாம மாதிரிகள் .பண் இசைப் பேரறிஞர் பட்டம் பெற்றோர் பட்டியல் .சென்னையில் 1943-44 ஆம் ஆண்டில் தமிழ் இசைச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. டி.கே.சிதம்பரநாதமுதலியார் தலைமை ஏற்றார். டாக்டர் ராஜா |
சர் அண்ணாமலை செட்டியார் தொடக்கி வைக்க, பம்மல் சம்பந்த முதலியார் வரவேற்புரையும், டி.எஸ்.கச்சாபகேச முதலியார் நன்றியுரையும் .கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளாக பண் இசைப் பேரறிஞர் பட்டம் தக்கோருக்கு வழங்கப்பட்டு வருகின்றது.. 2009 திருப்பனந்தாள் சோ.முத்துக்கந்தசாமி தேசிகர்.. 2010 தருமபுரம் எஸ்.ஞானப்பிரகாச தேசிகர். 2011 திருத்தணி என்.சுவாமிநாதன். 2012 சாமிதண்டபாணி |
2013 சீர்காழி சா.திருஞானசம்பந்தன். 2014 திருவிடைமருதூர் சு.சம்பந்த தேசிகர்.உசாத்துணை :-தமிழ் இசைச் சங்கம் 73-ஆம் மலர் 2015-2016.தமிழ் இசைச் சங்கம், சென்னை. இசைப் பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள். 1957 எம்.எம்.தண்டபாணி தேசிகர். 1957 பி.சாம்பமூர்த்தி ஐயர் |
1957 கும்பகோணம் இராசமாணிக்கம் பிள்ளை. 1959 பி.எஸ்.வீருசாமி பிள்ளை. 1960 அரியக்குடி டி..இராமானுஜ ஐயங்கார். 1961 வழுவூர் பி.இராமையாப் பிள்ளை. 1962 மதுரை மணி ஐயர். 1963 முசிறி சுப்பிரமணிய ஐயர் |
1964 சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை. 1965 பாபநாசம் சிவன். 1966 கே.பி.சுந்தராம்பாள். 1967 திருமுருக கிருபானந்தவாரியார். 1968 பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். 1969 செம்மங்குடி சீனிவாச ஐயர் |
1970 எம்.எஸ்.சுப்புலட்சுமி. 1971 மதுரை எஸ்.சோமசுந்தரம். 1972 ம.ப.பெரியசாமித்தூரன். 1973 டி.கே.பட்டம்மாள். 1974 திருவீழிமிழலை எஸ்.சுப்பிரமணியன். 1975 த. பாலசரசுவதி |
1976 மாயூரம் வி.ஆர்.கோவிந்தராசப் பிள்ளை. 1977 திருவீழிமிழலை எஸ்.நடராஜ சுந்தரம் பிள்ளை. 1978 எம்.எல்.வசந்தகுமாரி. 1979 இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி. 1980 மீ.ப.சோமசுந்தரம் (சோமு). 1981 டாக்டர் எஸ்.இராமநாதன் |
1982 இசைமணி சீர்காழி கோவிந்தராஜன். 1983 நாமகிரிப்பேட்டை கே.கிருஷ்ணன். 1984 லால்குடி ஜி.ஜெயராமன். 1985 தஞ்சை க.பொ.கிட்டப்பா பிள்ளை. 1986 தருமபுரம் ப.சாமிநாதன். 1987 ஆர்.எஸ்.மனோகர் |
1988 ஏ.கே.சி. நடராஜன். 1989 குன்னக்குடி வைத்தியநாதன். 1990 வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியன். 1991 மகாரசபுரம் வி.சந்தானம். 1992 டாக்டர் கே. ஜே. ஏசுதாஸ். 1993 டாக்டர் ஷேக் சின்னமெளலானா |
1994 டாக்டர் பத்மா சுப்பிரமணியம். 1995 திருப்பாம்புரம் டாக்டர் சோ.சண்முகசுந்தரம். 1996 டி.ஆர்.பாப்பா. 1997 திருவிழா ஆர்.ஜெய்சங்கர். 1998 டாக்டர் என் இரமணி. 1999 காஞ்சிபுரம் ஆ.விநாயக முதலியார் |
2000 மதுரை டி.என்.ஷேஷகோபாலன். 2001 காஞ்சிபுரம் எம்.என்.வேங்கடவரதன். 2002 டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா. 2003 எம்.எஸ்.விஸ்வநாதன். 2004 கே.ஜே.சரசா. 2005 திருவிடைமருதூர் பி.எஸ்.வி.ராஜா |
2006 பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா & சி.லலிதா. 2007 சைதை த.நடராஜன். 2008 செம்பொன்னார்கோவில் எஸ்.ஆர்.டி.வைத்தியநாதன். 2009 அருணா சாய்ராம். 2010 பேராசிரியர் டி.கிருஷ்ணன். 2011 சுதா ரகுநாதன் |
2012 நாகசுரக்கலைஞர் மதுரை எம்.பி.என்.பொன்னுசாமி. 2013 கிருஷ்ணகுமாரி நரேந்திரன். 2014 சீர்காழி ஜி.சிவசிதம்பரம்.உதவி.தமிழிசைச் சங்கம் 73-ஆம் மலர் 2015-2016.படியெழுதல் (Transcription).உரையெழுதல் (Annotation) |
மொழிபெயர்த்தல் (Translation) .பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்.ஒரு படைப்பினை ஆவணகப்படுத்தும் போது அந்தப் படைப்புத் தொடர்பான கோப்புக்கள் மாறாமல் இருப்பதை நிலைப்பு அல்லது அசைவின்மை (Fixity) எனபடுகிறது. ஒரு படைப்புத் தொடர்பான கோப்புக்கள் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்ட பின்னர் எதிர்பார்க்காத நிகழ்வுகளால் பழுதடையக் கூடும். எ.கா ஒருவர் தவறுதலாக பாகங்களை நீக்கிவிடலாம். கணினியில் நச்சுநிரல் பரவி கோப்புக்களை பாதித்து இருக்கலாம். எனவே கோப்புக்களின் முழுமையைப்பாட்டை, நிலைப்பை உறுதிசெய்வது எண்ணிமப் பாதுகாப்பின் ஒரு முக்கிய செயற்பாடு ஆகும். .ஒரு கோப்பின் நிலைப்பினை அதன் சரிபார்தொகையைக் (checksum) கணித்துக் கண்காணிப்பதன் மூலம் உறுதிசெய்யலாம். .பகுப்பு:எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்.நிறுவனம் ஒன்றின் நொக்கங்களை உருவாக்குவதற்கும் அதனை அடைந்து கொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கையை தயாரித்துக் கொள்வது திட்டமிடல் எனப்படும். |
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்.கண்ணென்ப வாழும் உயிர்க்கு. முத்துகுறள் இணையப்பக்கம் உரைகள் .என்கிறது வள்ளுவம். இவ்விரண்டினையும், விரைவாக கற்பதற்கு உதவுவது, தொழில் நுட்பம் ஆகும். அதில் தலையானது, கணினி மொழியாகும். கணிய மொழிகளில், பைத்தான் (Python) நிரலாக்கம் கற்பதற்கு எளிமையானது. உலகின் பல நாடுகளில், பைத்தான் மொழியானது, இலட்சக்கணக்கானவர்களால் கற்கவும், கற்பிக்கவும் பயன்படுகிறது. இம்மொழியை, கூகுள், யாகூ,.. போன்ற பல வெற்றி அடைந்த வணிக நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. https://statanalytica.com/blog/uses-of-python/ , [https://www.quora.com/Which-Internet-companies-use-Python விக்கிமீடியத்திட்டங்களின் இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், தூய்மை படுத்துவதற்கும், பல கணிய மொழிகள் பயன்பட்டாலும், இம்மொழியே பெருமளவில் பயன்படுகிறது. .இது ஒரு பொதுகள / திறநிலை உரிமத்தில் (open source)இருக்கும் மென்பொருள் ஆகும். இதனால் இது எப்படி செயற்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். நமக்குத் தேவையான உதவிக் குறிப்புகளை, இணையத்திலேயே காணலாம். இணையத்தில் இல்லாதவற்றையும், ஐயங்களையும் கேட்டுப் பெற முடியும். இம்மொழி, மனித மொழியை எளிதாகக் கையாளக்கூடியது. குறிப்பாக, உரைகளை (பனுவல் = text) எளிதாகக் கையாளக்கூடிய திறன் மிக்கது ஆகும். மேலும், இம்மொழியைக் கொண்டு, ஒரு இணையதளத்தை, இணையத்தளச் செயலிகளை (app-s), தேடுபொறியை (search engine like google,yahoo...), கணிய விளையாட்டுக்களை வடிவமைக்க இயலும்..வகைகள் .பைத்தானில் இருவகைகள் உள்ளன எனலாம். விக்கிமீடியத்திட்டங்களில் பைத்தானின் பயன்பாடுகைளயும் குறிப்பாக தமிழ் திட்டங்களில், இம்மொழியை எப்படி கையாளலாம் என்றும் நாம் ஒன்றிணைந்து கற்போம். |
பைத்தான்2 . கணியம் அறக்கட்டளை சீனிவாசன் எழுதிய நிரற்தொகுப்பு. https://github.com/tshrinivasan/tools-for-wiki மேலும், இந்த இணையப்பக்கத்தில் காணலாம்..பைத்தான்3 . கற்க வேண்டியன : இணையப்பக்கம் 1 , இணையப்பக்கம் 2.s: விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள் |
மேற்கோள்கள்.இவற்றையும் பார்க்கவும் . பைத்தான் குறித்த விக்கிப்பீடியக் கட்டுரையையும் காணவும். கற்றல் வளங்கள் நிறைந்த ஆங்கில இணையதளம் . நிரலாக்கம் அறிமுகம்/உலகே வணக்கம்#பைத்தான் - :en:A Beginner's Python Tutorial. எழில் - பைத்தான் மொழி போன்ற செயற்படவல்ல, தமிழில் எழுதவல்ல கணிய மொழி. |
எ. கா . நிரலாக்கம் அறிமுகம்/உலகே வணக்கம்#எழில்.கவுதாரி அல்லது கௌதாரி (Grey Francolin) எனப்படும் பறவைகள் தெற்காசியாவில் வயல்வெளிகளிலும் புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் பறவையினமாகும். தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவையான இது. இத்தகைய இடங்களில் காலையிலும் மாலையிலும் க-டீ-டர் ... டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும் இப்பறவைகளை காடர்கள் போன்றோர்கள் இறைச்சிக்காக வேட்டையாடுகின்றனர்..பகுப்பு:பறவைகள்.தூக்கணாங்குருவி (Ploceus philippinus) தங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் முக்கியமான ஒன்றான இது, பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் வியப்பை அளிப்பதாக இருக்கும். இது ஊர்க்குருவி குடும்பத்தைச் சேர்ந்த இப்பறவைகள் அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க்குருவியை ஒத்திருக்கும். .பகுப்பு:பறவைகள்.ஈழத்து இசைக் கலைஞர்கள் |
பியூட்டிபுல் சூப் (Beautiful Soup - அழகுவடிச் சாறு).அறிமுகம்.பைத்தானின் ('Monty Python=Surreal humor=அடிமன வெளிப்பாட்டிய நகைச்சுவை') நூலகக்கூறகங்களில்(Library modules) ஒன்றான 'பியூட்டிபுல் சூப்' (Beautiful Soup - அழகுவடிச் சாறு!), இணையப்பக்கக் கோப்புகளில் (HTML, XML) இருந்து, தரவுகளைத் தேவைக்கேற்றவாறு பிரித்தெடுக்கப் பயன்படுகிறது..செயலாக்கம்.உங்களின் சொற்பிரிப்பியுடன் (parser), இக்கூறகநிரல் இணைந்து, இணையப்பக்கத் தரவுகளினுள், தேவைக்கேற்றபடி உட்செல்லவோ(navigating), தேடவோ, மாற்றவோ இயலும். இந்த அழகுவடிச் சாறின் திறனால், நிரலர்களின் நாட்கணக்கான அல்லது மணிகணக்கான, நிரல் எழுதும் நேரம் வெகுவாகக் குறைகிறது..கீழேகூறப்படுகின்ற விளக்கவுரைகள், அழகுவடிச்சாறின் (Beautiful Soup4) நான்காம் பதிப்புக்குரியதாகும். அதிலும் முக்கியமான உட்கூறுகள் மட்டுமே விளக்கப்படுகின்றன. பொதுவாக இந்த உட்கூறுகளை, செயற்கூறுகள் (functions) என்கிறோம். ஒவ்வொரு செயற்கூறும், வெவ்வேறு விதமாக செயற்படும் இயல்புடையவை ஆகும். அவ்வேறுபாடுகளை அறிந்தால், நமது தரவுப் பிரித்தெடுக்கும் நோக்கம் எளிதாகும். இந்நோக்கத்தில் ஏதேனும் இடர்வரின், அதற்குரிய தீர்வுகளும் விளக்கப்படுகின்றன. |
பைத்தானின் இருவகைப் பதிப்புகளிலும் (பைத்தான் 2.7, பைத்தான் 3.2), இச்செயற்கூறுகள், எந்த வேறுபாடும் இல்லாமல், ஒரே விதமாகவே செயற்படும் சிறப்பியல்பைப் பெற்றிருக்கின்றன..இதன் முந்தையப் பதிப்பான 'அழகுவடிச் சாறு 3', இனி இற்றையாகாது(updation). எனவே, இனி bs4 பதிப்பைப் பயன்படுத்தவும். bs3 எதிர் bs4 வேறுபாடுகளை, இப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்..மொழியாக்கம்.பின்வரும் மொழிகளில், இந்த ஆவணத்தின் மொழிபெயர்ப்புகளைக் காணலாம்..ஆங்கில மொழியாக்கம்.சீன மொழியாக்கம் |
கொரிய மொழியாக்கம்.யப்பானிய மொழியாக்கம்.உதவி பெறல் .இதன் பயன்பாட்டில் ஏதேனும் ஐயங்கள் தோன்றினாலோ, இடர்கள் இருந்தாலோ, இந்த கூகுள் குழுமத்தில் தெரிவித்து உதவிகளைப் பெறலாம். உங்களது இடர் சொற்பிரிப்பியுடன் இருந்தால், இடர் ஏற்படும் செயற்கூற்றின், கண்டறிதலின் விளைவைத் தவறாமல் குறிப்பிடவும்..தொடக்கப் பயிற்சி .பகுப்பு:பைத்தானின் நூற்கட்டகங்கள் |
யாவா என்பது ஒரு மொழி. 1995ஆம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரை எட்டு தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. சன் மைக்கிரோ அமைப்பு என்ற அமைப்பு தயாரித்தது. தற்போது ஆரக்கிள் என்ற அமைப்பு மேம்படுத்தி வெளியிட்டு வருகிறது. இது பொது பயன்பாடிற்கான மொழி. இதை வடிவமைத்தவர் ஜேம்ஸ் கோஸ்லிங்..App Inventor2 இன் உதவியால் ஆண்ட்ராய்டு சூழலில் கூகுளின் வரைபடவசதியை கொண்டுவரலாம்.புதிய நகரங்களுக்கு நம்முடைய மகிழ்வுந்தில் சென்று அதனை நிறுத்தம் செய்திடும் இடத்தில் நிறுத்திவிட்டு, அந்நகரின் வேறு ஒரு இடத்தில் உள்ள நம்முடைய அலுவலக பணி/சொந்த பணியை முடித்தபின்னர் நம்முடைய மகிழ்வுந்து எங்கு நிறுத்தினோம் என தேடிக்கண்டுபிடித்திட இந்த பயன்பாட்டின் உதவியால் நம்முடைய சாதனத்தின் ஆண்ட்ராய்டு சூழலில் கூகுளின் வரைபடவசதியை கொண்டுவரலாம் இதற்காக Activity starter, Label, Button, Horizontal arrangement, TinyDB, Location sensor ஆகிய உறுப்புகள் தேவையாகும். இவையனைத்தும் நம்முடைய சாதனத்தின் ஆண்ட்ராய்டு பகுதியில் உள்ளன. இவைகளை பிடித்து இழுத்துவந்து ஒரு இடத்தில் விட்டிடுக. இவைகளில் ஒருசில நம்முடைய கண்ணிற்கு புலப்படும் ஒருசில புலப்படாதவை (nonvisible என்பதன் கீழ் இருக்கும்). பின்னர் பொத்தான்களை(Button) கிடைமட்டமாக Horizontal arrangement என்பதன்கீழ் சரிசெய்து அமைத்து கொள்க அதன்பின்னர் Label, Button ஆகியவற்றிற்கான பண்பியல்புகளை சரிசெய்து அமைத்து கொள்க. இதில் Activity starter ஆனது ஏற்கனவே நம்முடைய சாதனத்தில் நிறுவுகை செய்யபட்டு தயார்நிலையில் இருக்கும். இது மற்ற பயன்பாடுகளை தூண்டிவிட்டு அதனை செயல்பட செய்வதற்கு பயன்படுகின்றது..மேலும், இந்த Activity starter இல் Action எனும் பண்பியல்பின் மதிப்பாக android,intent.action.VIEW என்பதையும்,.ActivityClass எனும் பண்பியல்பின் மதிப்பாக com.google.android.maps.MapsActivity என்பதையும்,.ActivityPAckageஎனும் பண்பியல்பின் மதிப்பாக com.google.android.apps.mapsஎன்பதையும் அமைத்துகொள்க. இதன்பின்னர் Block Editorஎன்பதில் நம்முடைய பயன்பாடானது தற்போதைய இடஅமைவை பெறவேண்டும் , அதற்காக Location_Save_Button எனும் தற்போதைய இட அமைவை சேமித்திடவேண்டும். மேலும் Location_Save_Button ஏற்கனவே சேமித்துள்ள இடஅமைவை மேலெழுத செய்யதிவேண்டும் Show_Directions_Buttonஎனும் பொத்தான் நாம் நிறுத்திய இடத்திற்கும் தற்போதைய இடத்திற்குமான பாதையை கூகுள் வரைபடத்தின் துனையுடன் வழிகாட்டிவேண்டும் ஆகிய செயலிற்கான அமைவை கட்டமைவு செய்திடவேண்டும் அதன்பின்னர் beginner இலிருந்து Block Editor மாறிடுக அங்கு முதல் Block ஆனது இடஅமைவை குறிப்பிடுவதாகும் இதில் மாறுதலானால் உடன் மாறிய இடஅமைவை குறிப்பிட பயன்படுகின்றது இந்த இடஅமைவை Label இன் வாயிலாக திரையில் காண்பிக்கின்றது பின்னர் நாம் Save எனும் பொத்தானை அழுத்தி இந்த இடஅமைவையும் முகவரியையும் சேமித்திடபயனபடுகின்றது மீண்டும் இந்த Save எனும் பொத்தானை அழுத்தினால் தற்போதைய இடஅமைவையும் முகவரியையும் நிகழ்நிலை படுத்தி சேமித்திடபயன்படுகின்றது அதற்கடுத்ததாக Show_Direction எனும் பொத்தானை அழுத்தினால் முந்தைய இடத்திற்கும் தற்போதைய இடத்திற்கும் இடையே சென்றுசேருவதற்கான வழியைகூகுள் வரைபடத்தின்துனையுடன் காண்பிக்கின்றது இதன்பின்னர் இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து buildஎனும் பொத்தானை அழுத்தி நம்முடைய சாதனத்தில் நிறுவுகை செய்து பிழைஏதும் இருந்தால் சரிசெய்து பரிசோதித்து பயன்படுத்தி பார்த்திடுக |
இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் நாள் , இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 அமலுக்கு வந்தது.. 2019 முதல் இந்தியா முழுவதும் இது பொருந்தும். அனைத்துவிதமான ஒப்பந்தங்கள் பற்றியும் இந்த சட்டம் கூறவில்லை. சில வகை ஒப்பந்தங்கள் வேறு சட்டங்களில் விவாதிக்கப்படுகின்றன.உதாரணமாக கூட்டு வியாபரம்(PARTNERSHIP ACT), சரக்கு விற்பனை (SALE OF GOODS ACT) ,மாற்று முறை ஆவணசட்டம்(NEGOTIABLE INSTUMENTS ACT), அசையா சொத்து மாற்றங்கள் (TRANSFER OF PROPERTY ACT) போன்றவை ஒவ்வொரு விதமான ஒப்பந்தங்கள் பற்றி கூறுகின்றன..இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872, ஒப்பந்தங்களின் பொதுவான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் பற்றி விளக்குகிறது.இந்த சட்டத்தை இரண்டு பகுதியாகப் பிரித்துக்கொள்ளலாம். பிரிவு 1 முதல் பிரிவு 75 வரை , ஒப்பந்தங்களின் பொதுவான அடிப்படை விதிகள் பற்றி பேசப்படுகிறது.பிரிவு 124 முதல் பிரிவு 238 வரை சிலவகை சிறப்பு ஒப்பந்தங்கள் (எ-டு: அடகு, முகவாண்மை (agency) ) பற்றி பேசப்படுகிறது..இந்திய சட்ட வடிவங்களில் , எல்லா சட்டங்களிலும் பிரிவு -2 (SECTION-2) என்பது வரையறைகள் பிரிவாக இருக்கும்..அதாவது அந்த சட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து சொற்களுக்கும் இந்த பிரிவில் வரையறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்..ஏன் இப்படி செய்யவேண்டும்? முக்கிய சொற்களை முன்பே வரையறுத்து விடுவதால் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு பொருள் சொல்லி யாரும் குழப்ப முடியாது.இதனால் சில சிக்கல்களை தவிர்க்க முடியும், |
உடன்படிக்கை (Agreement) மற்றும் ஒப்பந்தம் (Contract) : .பிரிவு 2(h) : இந்த பிரிவு ஒப்பந்தம் என்ற சொல்லை வரையறுக்கிறது. ஒப்பந்தம் என்றால் என்ன?.பிரிவு 2(h) இன்படி " ஒப்பந்தம் என்பது, சட்டத்தினால் செயல்படுத்தக்கூடிய ஓர் உடன்படிக்கை ஆகும். ( Contract is an agreement enforceable by law).அப்படியென்றால் "உடன்படிக்கை - Agreement - என்பது என்ன?.பிரிவு 2(e) "உடன்படிக்கை " என்ற சொல்லை வரையறுக்கிறது..எனவே அனைத்து உடன்படிக்கைகளும் "ஒப்பந்தம் " அல்ல. ஆனால் அனைத்து ஒப்பந்தங்களும் உடன்படிக்கைதான். |
ஒப்பந்தம் என்று சொல்ல முடியாத உடன்படிக்கைகள் யாவை?.சமூக உடன்படிக்கைகளை இவ்வாறு கூறலாம்.உதாரணமாக நீங்கள் உங்கள் நண்பரை சாப்பிடுவதற்கு வீட்டுக்கு அழைக்கிறீர்கள். ஆனால் அன்றைய தினம் வேறு அவசர வேலையாக நீங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியூர் போய்விட்டீர்கள்.உங்கள் நண்பர் வீட்டுக்கு வந்து ஏமாற்றம் அடைகிறார். இதற்காக அவர் உங்கள் மேல் வழக்கு தொடர முடியுமா? நிச்சயமாக முடியாது.ஏன் என்றால் நீங்கள் செய்துகொண்டது சமூக உடன்பாடே தவிர சட்டப்படி செயல்படுத்த்க்கூடிய ஒப்பந்தம் அல்ல..கணவருக்கும் மனைவிக்கும் இடையிலான உடன்பாடும் இத்தகையதே..ஸ்ரீலங்காவில் வேலை பார்த்துவந்த ஒருவர், இங்கிலாந்தில் வாழும் தம் மனைவிக்கு மாதா மாதம் ஒரு தொகையைக் (வீட்டுச் செலவுக்காக) கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.ஆனால் தம் மனைவி தமக்கு விசுவாசமாக இல்லை என்று அறிந்தபின் அவர் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.அவர் செய்தது சரி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது..சட்டப்படி செல்லத்தக்க ஓர் ஒப்பந்தத்தில் இருக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் :.இந்திய ஒப்பந்தங்கள் சட்டத்தின் பிரிவு 10 பின்வருமாறு கூறுகிறது: |
All agreements are contracts if they are made by the free consent (பரிபூரண -முழுமையான சம்மதம்) of the parties competent to contract , for a lawful Consideration and with a lawful Object and are not hereby expressly declared to be void".2.Free Consent : ஒப்பந்தம் செய்துகொள்ளும் நபர்கள் , முழுமையான சம்மதத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும்.இந்த சம்மதமும் FREE ஆக இருக்க வேண்டும்.- அதாவது-வேறு யாராலும் வற்புறுத்திப் பெறப்பட்டதாகவோ பிறரால் அச்சுறுத்தப்பட்டு பெறப்பட்டதாகவோ இருக்கக்கூடாது..3.Competency - ஒப்பந்தம் செய்துகொள்ள சில தகுதிகள் அவசியம்.உதாரணமாக 18 வயது நிறையாத மைனருடன் செய்துகொள்ளும் ஒப்பந்தம் செல்லாது.முட்டாள்கள், மனனிலை சரியற்றவர்கள் போன்றவர்களுடன் செய்துகொள்ளும் ஒபந்தங்களும் செல்லாது..4.Lawful consideration : consideration என்பதை பிரதிபலன் என்று கூறலாம்.ஒப்பந்தத்தின்படி நாம் ஒருவருக்கு ஒரு வேலையை செய்துகொடுக்கிறோம் அல்லது செய்யாமல் இருக்கிறோம் என்றால் அதற்குக் கைம்மாறாக அவர் நமக்கு கொடுப்பதை consideration என்கிறோம்.இந்த கைம்மாறு சட்டப்படி செல்லக்கூடியதாக இருக்கவேண்டும்.உதாரணமாக நான் உங்களுக்கு பத்து மூட்டை அரிசி தருகிறேன் என்றால் நீங்கள் எனக்கு ஆயிரம் ரூபாய் தரமுன்வந்தால் அது நியாயம்.ஆனால் அதற்காக வேறு ஒரு நபரை அடித்து கை.== # தலைப்பு. தலைப்பு எழுத்துக்கள் == |
வீரராக்கியம் ஏரி.அமைவிடம் .கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பாலராஜபுரம் கிராமத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரூர் திருச்சி புறவழிச்சாலை இந்த ஏரியின் கரையை ஒட்டிச் செல்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது..நான்கு எல்லைகள் .ஏரியின் வடக்கு மற்றும் மேற்கு கரையில் தேசிய நெடுஞ்சாலையும், கிழக்கு கரையில் வீரராக்கியம் ஊரும், தென்கரையில் குளத்துப்பாளையம் கிராம விவசாய நிலங்களும் உள்ளன. ,இந்த எல்லைகளுக்கு இடையே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது இந்த ஏரி..நீர்பிடிப்பு பகுதிகள் |
உப்பிடமங்கலம் மற்றும் அதற்கு மேற்கில் உள்ள காட்டுப்பகுதிகளிலும், குளத்துப்பாளையம், காளிபாளையம் போன்ற பகுதிகளில் பெய்யும் மழைநீர் சிறு சிறு காட்டு வாய்க்கால்கள் மூலமாக இந்த ஏரியை வந்தடைகிறது. உப்பிடமங்கலம் குளம் நிரம்பும் போது வெளியேறக் கூடிய உபரிநீர் இந்த ஏரிக்கு வருவதற்கும் நீர் வழிகள் உள்ளன,.பாசன வசதி பெறும் பகுதிகள் ==.வீராராக்கியம், வளையல்காரன் புதூர் பகுதியைச் சார்ந்த நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும் வகையில் வாய்க்கால் வசதிகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள பாசன கிணறுகளின் நீர் மட்டம் உயர இந்த ஏரியும் ஒரு காரணமாக அமைகிறது. இந்த ஏரியின் உபரி நீர் அருகிலுள்ள வளையல்காரன் புதூர் குளத்திற்கு செல்லும் வகையில் நீர்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன..வடிகால் வசதி .இந்த ஏரியின் உபரி நீர் கட்டளை வழியாக நேரடியாக காவிரி ஆற்றில் சென்று கலக்கும் வண்ணம் வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்களைப் பயன்படுத்தி காவிரி ஆற்றின் நீரைக் கொண்டு வந்து இந்த ஏரியை நிரப்பும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..தற்போதையை நிலை |
தமிழகம் முழுவதும் நிலவும் வறட்சி ,இப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. ஏரியின் உட்பகுதிகளில் மட்டும் சிறிதளவு நீர் சேறும் சகதியுமாக உள்ளது. தற்போது அரசு உத்தரவின் அடிப்படையில் தூர் வாரப்பட்டுவருகிறது. வாரப்படும் மண் அருகிலுள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவருகிறது..தொடர்புடையவை.வீரராக்கியம் ஏரி மராமத்துப் பணி தொடர்பான ஆவணம்.மேலும் பார்க்க.கன்னிமார் மாரியம்மன் கோயில்.அரசு உயர்நிலைப்பள்ளி,வீரராக்கியம் |
ஊராட்சி ஒன்றிய பள்ளி.உப்பிடமங்கலம் வார சந்தை.வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப்பூச்சி.பறக்குது பார் பறக்குது பார்.அழகான செட்டை அழகான செட்டை .அடிக்குது பார் அடிக்குது பார் |
சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை.பொட்டுக்கள் பார் பொட்டுக்கள் பார் .தொட்டது முடனே தொட்டது முடனே .பட்டது பார் பட்டது பார்.பூக்களின் மேலே பூக்களின் மேலே.பறந்து போய் பறந்து போய் |
தேனதை உண்டு தேனதை உண்டு .களிக்குது பார் களிக்குது பார்.எழுதியவர்: -வித்துவான் க. வேந்தனார்.சின்னத் தம்பி சின்னத் தம்பி.நித்திரையோ நித்திரையோ.மணி அடிக்கிறது மணி அடிக்கிறது |
எழும்புங்கோ எழும்புங்கோ!.பொருளடக்கம் .1. அறிமுகம் (Introduction).2. தொகுப்பும் மாதிரியும் (Population and Sample). தொகுப்பு (Population). மாதிரியும் மாதிரி எடுத்தலும் (Sample and Sampling) |
3. மாறிகள் (Variables). உயிரியியலில் மாறிகள் (Variables in Biology). மாறி வகைகள் (Types of variables) . மாறி எண் (Variate) .4. தகவல் சேகரிப்பு (Collection of Data). முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை தகவல்கள் (Primary and Secondary Data) |
5. தகவல்கள் வகைப்படுத்தலும் பட்டியலிடுதலும் (Classification and Tabulation of Data). வகைப்படுத்தல் (Classification). பட்டியலிடுதல் (Tabulation).6. புள்ளி விவர படங்களும் வரைபடங்களும் (Statistical Diagrams and Graphs). தேவை (Need). பயன்கள் (Uses) |
வரைவதற்கான பொது வழிமுறைகள் (General Guidelines to draw Diagrams and Graphs). புள்ளிவிவர படங்களின் வகைகள் (Types of Diagrams) .7. நிகழ்வெண் பரவல் (Frequency Distribution). வரையறை (Definition). ஒப்புமை மற்றும் விழுக்காடு ஒப்புமை நிகழ்வெண்கள் (Relative and Percent Frequencies). உதிரி நிகழ்வெண் பரவல் (Discrete Frequency Distribution) |
தொடர் நிகழ்வெண் பரவல் (Continuous Frequency Distribution) . நிகழ்வெண் பரவலின் பிரிவுகளின் எண்ணிக்கையை நிர்ணயித்தல் (Determining the number of Classes of Frequency distribution) . ஒப்புமை மற்றும் விழுக்காடு ஒப்புமை நிகழ்வெண்கள் (Relative and Percent Frequencies). திரள் நிகழ்வெண் பரவல்கள் (Cumulative Frequency Distributions) . நிகழ்வெண் வரைபடங்கள் (Frequency Graphs) .8. தகவல்களை விவரிக்கும் புள்ளியியல் முறைகள் (Descriptive Statistics) |
9. மையப்போக்கு அளவைகள் - சராசரிகள் (Measures of Central Tendency - Averages). வரையறை (Definition). சராசரியின் நோக்கம் (Objectives of an Average ). சராசரி வகைகள் (Types of Averages).10. சிதறல் போக்கின் அளவைகள் (Measures of Dispersion). வரையறை (Definition) |
சிதறல் அளவைகள் (Dispersion Measures) .11. பரவலின் கோணல் தன்மையும் தட்டை தன்மையும் (Skewness and Kurtosis) . கோணல் தன்மை (Skewness). தட்டை தன்மை (Kurtosis). சிதறல், கோணல் தன்மை, தட்டை தன்மை - ஒப்பீடு (Dispersion, Skewness, Kurtosis). தண்டு-இலை படம் (Stem-and-Leaf Diagram) |
கட்டம் வரைபடம் (Box Plot).12. அனுமான புள்ளியியல் (Inferential Statistics).13. நிகழ்தகவு (நிகழ்வாய்ப்பு) (Probability). நிகழ்தகவு அளவுகோல் (Probability Scale). சில முக்கிய சொற்களின் வரையறையும் விளக்கமும் (Definition and Explanation of Some Terms). எளிய தேர்வு, வரிசை மாற்றம், கலவை (சேர்க்கை) (Simple Choice, Permutation and Combination) |
நிகழ்தகவு வகைகள் (Types of Probability). நிகழ்தகவு விதிகள் (Rules of Probability). உயிரியிலில் நிகழ்தகவு கோட்பாடுகளின் பயன்பாடு (Application of Probability Principles to Biological Problems) . வெண் வரைபடம் (Venn Diagram) .14. தத்துவார்த்த நிகழ்தகவு பரவல்கள் (Theoretical Probability Distributions).15. χ2 - சோதனை (χ2 - test) |
அறிமுகம் (Introduction). வரையறை (Definition). χ2 - சோதனையை பிரயோகிக்க தேவையான ஊகங்களும் நிபந்தனைகளும் (Assumptions and Conditions for the use of χ2-test). χ2 -சோதனை செய்முறை (χ2 - test Procedure) . χ2- சோதனை பயன்பாடுகள் (χ2 -test Applications).16. ஈருறுப்பு பரவல் (Binomial Distribution) |
அறிமுகம் (Introduction). வரையறை (Definition) . ஈருறுப்பு பரவலுக்கான ஊகங்கள் (Assumptions for Binomial Distribution). ஈருறுப்பு பரவலின் பண்புகள் (Properties of Binomial Distribution). ஈருறுப்பு சமன்பாட்டின் விரிவாக்கம் (Expansion of Binomial Expression). ஈருறுப்பு நிகழ்தகவு கண்டறியும் தொடர்பெருக்க முறை (Factorial Method of Binomial Probability) |
ஈருறுப்பு பரவல் பொருத்துதலும் பொருத்தச் சீர்மை சோதனையும் (Fitting a Binomial Distribution and Testing its Goodness-of-fit) .17. பாய்சான் பரவல் (Poisson Distribution). அறிமுகமும் வரையறையும் (Introduction and Definition). பாய்சான் நிகழ்வுகளுக்கு உதாரணங்கள் (Examples of Poisson events). பாய்சான் நிகழ்தகவு பரவல் வருவித்தல் (Derivation of Poisson Distribution). பாய்சான் பரவலின் பண்புகள் (Properties of Poisson Distribution) |
பாய்சான் பரவலின் பயன்பாடுகள் (Applications of Poisson Distribution).18. இயல் பரவல் (Normal Distribution). அறிமுகம் (Introduction). இயல் வளைகோட்டின் பண்புகள் (Properties of Normal Curve). இயல் நிகழ்தகவு கணக்கீடு (Computation of Normal Probability). தகவலுக்கு இயல் வளைகோடு பொருத்துதல் (Fitting Normal Curve for the Data) |
19. தொகுப்பு பற்றிய அனுமான கணிப்பு (Inference about Population). அறிமுகம் (Introduction). மாதிரி எடுத்தல் (Sampling). மாதிரியின் அளவு (Sample Size). மாதிரிகளின் பரவல் (Sampling Distribution). அனுமான கணிப்பில் திட்டப்பிழையின் பயன்கள் (Uses of Standard Error in Inference) |
20. மாதிரி எடுக்கும் முறைகள் (Sampling Methods). தொகுப்பு (Population). வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத தொகுப்புகள் (Finite and Infinite Populations). மாதிரி (Sample). மாதிரி எடுத்தல் (Sampling). மாதிரி எடுத்தலின் அவசியம் (Necessity of Sampling) |
மாதிரி எடுத்தல் முறைகள் (Methods of Sampling).21. கருதுகோள் சோதித்தல் (Hypothesis Testing) . அறிமுகம் (Introduction) . கருதுகோளும் இன்மை கருதுகோளும் (Hypothesis and Null-hypothesis). மாதிரிகளின் பரவல் (Sampling Distribution). கணிச மட்டம் (Level of Significance) |
இன்மை கருதுகோள் பற்றிய முடிவு (Decision about Null-hypothesis).22. ஸ்டுடென்ட் t-சோதனை (Student's Test). அறிமுகம் (Introduction). ஸ்டுடென்ட் t-பரவல் (t-distribution) . t-பரவலின் பயன்பாடுகள் (Applications of t-distribution).23. வேற்றுமைப் பகுப்பாய்வு (Analysis of Variance - ANOVA) |
அறிமுகம் (Introduction). அடிப்படைத் தத்துவம் (Principle of ANOVA). வேறுபாட்டினை பிரித்தல் (Partitioning of the Variance). இரு சராசரிகளை ஒப்பிடுதல் (Comparison of Pairs of Means). வேற்றுமைப் பகுப்பாய்வின் அடிப்படை ஊகக் கருத்துக்கள் (Assumptions underlying ANOVA) . வேற்றுமைப் பகுப்பாய்வின் பயன்பாடுகள் (Applications of ANOVA) |
24. ஒட்டுறவு (Correlation). அறிமுகம் (Introduction). ஒட்டுறவு வகைகள் (Types of Correlation). ஒட்டுறவை அறியும் முறைகள் (Methods of Study of Correlation). ஒட்டுரவுக் கெழுவின் கணிசத்தை சோதித்தல் (Testing the Significance of the Correlation Coefficient) .25. தொடர்புப்போக்கு (Regression) |
அறிமுகம் (Introduction). தொடர்புப்போக்கின் சமன்பாடுகள் (Regression Equations) . தொடர்புப்போக்கு கோடுகள் (Regression Lines). தொடர்புப்போக்கு கோடுகளின் பண்புகள் (Properties of Regression Lines). ஒட்டுரவுக்கும் தொடர்புப்போக்கிற்குமான வேறுபாடுகள் (Differences between Correlation and Regression).26. மக்கள் தொகையியல் (Demography) |
வரையறை (Definition). மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) . உயிர்நிலைப் புள்ளிவிவரம் (Vital Statistics). மக்கள் தொகை வளர்ச்சியும் மதிப்பீடும் (Population Growth and Estimation). மக்கள் தொகை முன்கணிப்பு (Population Forecast). உயிர்நிலை புள்ளிவிவர வீதங்கள் (பிறப்பு இறப்பு வீதங்கள்) (Vital Statistics Rates - Natality and Mortality Rates) |
1. அறிமுகம் . உயிர்ப்புள்ளியியல் என்றால் புள்ளியியல் முறைகளை உயிரியல் தேவைகளுக்கு உபயோகிப்பதாகும். புள்ளியியல் என்பது இயற்கை நிகழ்வுகளிலிருந்து பெறப்பட்ட எண்சார் தகவல்களை விஞ்ஞான முறைப்படி ஆழ்ந்து அறிவதாகும். விஞ்ஞான முறைப்படி அறிவது என்பது தகவல்களை விருப்பு வெறுப்பின்றி பதிவிட்டு மதிப்பிடுவதாகும். தகவல் அல்லது தகவல்கள் (Data) எண்ணிக்கையிலான (numerical) விவரங்கள் மட்டுமே. புள்ளியியல், தொகுப்பு அல்லது தொகை (Population) சம்பத்தப்பட்டது; தனியொரு விவரத்தை அது கருத்தில் கொள்ளாது. உதரணமாக, ஒரேயொரு தவளையின் எடையையோ, அல்லது ஒரேயொரு உருளைக்கிழங்கின் எடையையோ அது கருத்தில் கொள்ளாது. தவளிகளின், அதாவது, ஒரு தவளைத் தொகையின் எடைகள் (a population of frogs weights) அல்லது ஓர் உருளைக்கிழங்கு தொகையின் எடைகளை (a population of potato weights) மட்டுமே அது கணிக்கும். . ஒரு தகவல், புள்ளியியல் அடிப்படையில் ஆயப்பட வேண்டுமென்றால், அத்தகவல் எண்ணிக்கையிலான தகவலாக (numerical data) இருக்க வேண்டும். அப்படியான எண்ணிக்கைகள், அளவைகள் (measurements) மூலமாகவோ (உ-ம்., மீனின் எடை g-ல், செடியின் உயரம் cm-ல், திரவத்தின் கொள்ளளவு ml-ல்) அல்லது எண்ணுதல் (counting) மூலமாகவோ (உ-ம்., ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, ஒரு பப்பாளியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை) பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.. புள்ளியியலுக்கான எண்ணிக்கை தகவல்கள் இயற்கையாக நிகழும் நிகழ்வுகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கவேண்டும். இயற்கையில் உள்ள உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள்களில் (இயற்பியல், வேதியியல் உயிரியல்) நிகழும் அத்தனை நிகழ்வுகளுமே இயற்கை நிகழ்வுகள்தாம் (natural phenomena). பரிசோதனைக் கூடங்களில் பெறப்படும் எண்ணிக்கையிலான முடிவுகளும் இயற்கை நிகழ்விலிருந்து பெறப்பட்ட எண்ணிக்கையாகவே கருதப்படும். மனிதனின் கற்பனையில் உதிக்கும் எண்களோ அல்லது அவன் நிர்ணயிக்கும் எண்களோ இயற்கையிலிருந்து .கிடைத்தவையாக கருதப்படாது.. புள்ளிவிவரம் (statistics) என்ற சொல் இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்த படுகிறது. பொதுவாக, வகைப்படுத்தப்பட்ட தகவல்களை புள்ளிவிவரம் என்று சொல்வதுண்டு. இரண்டாவதாக, தகவல்களை விவரிப்பதற்காக கணக்கிடப்படும் எண்களை (உ.ம்., சராசரி, திட்டவிலக்கம்) |
புள்ளிவிவரம் என்பர் குறிப்பிடுவதுண்டு.. உயிரியல் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து அறிவியல் மாணவர்களுக்கும் புள்ளியியல் ஓர் அடிப்படை தேவையாகும். ஓர் உயிரியலாளர் தான் பார்த்ததை அல்லது கண்டுபிடித்ததை எண்ணிக்கை அடிப்படையில் சொல்லி விளக்க முடியாவிட்டால், அவரது கண்டறிவும், கண்டுபிடிப்பும், கணிப்பும் திருப்திகரமானதாக இருக்க வாய்ப்பில்லை. மேலும், குறைந்தபட்ச புள்ளியியல் அறிவு இல்லாமல் உயிரில் மாணவர்களால் ஆராய்சிகளில் பங்கேற்கவோ, விஞ்ஞான சஞ்சிகைகளின் கட்டுரைகளை சரியாகப் புரிந்துகொள்வதோ மிகக்கடினம். . இக்கட்டுரையின் நோக்கம் அனைத்து உயிரியல் (தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், உயிர்வேதியியல், உயிர்த்தொழில்நுட்பவியல், வேளாண்மையியல், கால்நடைவளவியல், மருத்துவவியல், இன்ன பிற) மாணவர்களும் (இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி) பயன்பெற புள்ளியியல் அடிப்படை கோட்பாடுகளை எளிய தமிழில் விளக்குவதாகும்..2. தொகையும் மாதிரியும் (Population and Sample).2.1 தகவல் (data, தரவு, தரவுகள், விவரம், தகவல் கூறுகள்) என்பது நிகழ்வு செய்திகளின் (events) தொகுப்பு. அது ஒரு தொகையிலிருந்து (population) சேகரிக்கப்படுகிறது. இங்கு, தொகை என்பது மக்கள் அல்லது விலங்குகள் தொகையை குறிப்பிடாது. அது, புள்ளிவிவரத் தொகையாகும் (statistical population). . தொகை வரையறை: எந்த நிகழ்வைப்பற்றி ஆராய்ந்து அறிந்துகொள்ளப் போகிறோமோ அந்நிகழ்வின் ஒவ்வொரு கண்டறிவின் (individual observation) மொத்த தொகுப்பே தொகையாகும். அந்நிகழ்வு, உலகத்தின் எப்பகுதியிலும் எந்நேரத்திலும் நிகழ்ந்திருக்கலாம். அல்லது, குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளும் நேரத்திற்குள்ளும் நிகழ்ந்திருக்கலாம். |
எடுத்துக்காட்டாக, நாம் ஒருவகை மீனின் (கட்லா) எடையைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியிருந்தால், இந்த ஆய்வின் புள்ளிவிவரத் தொகை .இப்புவியில் உள்ள கட்லா மீன்களின் தனித் தனி எடைகள் அனைத்தையும் உள்ளடக்கும். புரிந்து கொள்ளவேண்டியது, இந்த புள்ளிவிவரத் தொகை, அனைத்து கட்லா மீன்களின் எடைகளே தவிர அனைத்து கட்லா மீன்கள் அல்ல. இவ்வுலகில் எத்தனை கட்லா மீன்கள் உள்ளனவோ அத்தனை எடைகள் இருக்கும். நம் நோக்கம் பூமியிலுள்ள அத்தனை கட்லாக்களின் எடை பற்றியதல்ல; இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட ஏரியில் வாழும் கட்லா மீன்களின் எடையைப் பற்றி மட்டும் அறிந்துகொள்வதுதான். ஆகவே, நாம் தொகை என்று குறிப்பிடும்போது, அதை மிகத்தெளிவாக வரையறுக்கவேண்டும். அதாவது, மாதிரி எடுக்கும் இடம், எல்லைகள், நேரம் போன்ற விவரகளை தெளிவாக, விரிவாக விவரிக்க வேண்டும். கட்லா மீன் எடையை பாதிக்கக்கூடிய காரணிகள் நிறைய உள்ளன. மீனின் வயது, பால் (ஆண், பெண்), முதிர்ச்சி நிலை, என்ன வகையான உணவு அம்மீன்களுக்கு கிடைக்கின்றன, போன்றவை சில காரணிகளாகும். ஆகவே, தொகையை வரையறுக்கும்போது, மாதிருக்கு எடுக்கப்பட்ட மீன்கள் எவ்வாறு பிடிக்கப்பட்டன (உ.ம்., வலையா, தூண்டிலா?), எந்நேரத்தில் பிடிக்கப்பட்டன (உ.ம். வருடம், மாதம், தேதி, பொழுது), முதிர்ச்சியடைந் மீன்களா, ஆண் மீன்களா, பெண் மீன்களா, முதிர்ச்சி அடையாத மீன்களா, போன்ற அனைத்து எடையை பாதிக்கும் காரணிகளையும் தெளிவாக குறிப்பிடவேண்டும். இவ்வாறான வரையறுத்தல் ஆய்வை தொடங்குவதற்கு முன்பே செய்யப்படவேண்டிய ஒன்றாகும். .புள்ளியியல் தொகை இருவகைப் படும்: முடிவுடைய தொகைகள் மற்றும் முடிவில்லாத தொகைகள் .2.1.1 முடிவுடைய தொகை (Finite Population): ஒரு தொகையில் உள்ள அனைத்து தனித்தனி கண்டறியும் அளவுகளின் (individual observations) எண்ணிக்கை தெரியுமானால், அத்தொகை முடிவுடைய தொகையாகும். .உதரணமாக, ஓர் மீன் வளர்ப்புக் குட்டையில் 5000 கட்லா மீன்கள் இருக்குமேயானால், இந்த மீன்களின் எடைகளின் தொகை முடிவுடைய தொகை ஆகும். .2.1.2. முடிவில்லாத தொகை (Infinite Population): ஒரு தொகையில் உள்ள அனைத்து தனித்தனி கண்டறியும் அளவுகளின் எண்ணிக்கை தெரியாவிட்டலோ அல்லது எண்ணிக்கையிலடங்காத அளவு பெரிதாக இருந்தாலோ அத்தொகை முடிவில்லாத தொகை எனப்படும். |
உதரணமாக, வங்காள விரிகுடாவின் நீர் வெப்பநிலையை (temperature) அறிய விரும்புகிறோம். எத்தனை வெப்பநிலைகள் இக்கடலின் இருக்க முடியும்? அது எண்ணிலடங்காது. ஆகவே, வங்காள விரிகுடாவின் நீர் வெப்பநிலையின் தொகை ஓர் முடிவில்லாத தொகை ஆகும். . முடிவானதோ அல்லது முடிவில்லாததோ, தொகை எப்பொழுதும் மிகப் பெரியது. அத்தொகையில் உள்ள ஒவ்வொரு அலகிலிருந்தும் (unit) தகவல் சேகரிப்பதென்பது இயலாத ஒன்று. ஆகவே, ஒரு தொகையை ஆய வேண்டுமென்றால், அத்தொகையிலிருந்து மாதிரி (sample) எடுத்து, அம்மாதிரியை ஆராய்ந்து, அதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படியில், அத்தொகையைப் பற்றிய கணிப்பை செய்யவேண்டும். .2.2 மாதிரியும் (பதக்கூறு, பதம்) மாதிரி எடுக்கும் முறையும் . மாதிரி என்பது எந்தத் தொகையைப் பற்றி கணிப்புகள் செய்யப்பட வேண்டுமோ அந்தத் தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட முறையில் எடுக்கப்பட்ட தனித்தனி கண்டறிவுகளின் திரட்டல் (collection) ஆகும். ஆகவே, மாதிரி தொகையின் உட்கணம் (subset, subgroup) ஆகும்..மாதிரி எடுத்தல் என்றால் தொகையிலிருந்து மாதிரி எடுக்கும் செயல்முறை ஆகும். .மாதிரி எடுத்தலின் முக்கிய நோக்கம் ஓர் தொகையின் குணாதிசயங்களையும் அதன் செயல்பாடுகளையும் மிகக் குறைந்த பண, நேர, சக்தி விரையங்களுடன் முடிந்த அளவு தெரிந்து கொள்வதாகும். அதாவது, ஓர் தொகையின் வரைகூறுகள் (parameters) பற்றி மாதிரி புள்ளிவிவரங்களின் உதவியோடு கணிப்பதாகும். |
மாதிரி எடுத்தல் கோட்பாடு இரு முக்கிய தத்துவங்களின் அடிப்படையை சார்ந்துள்ளது. அக்கோட்பாடுகள்: (1) புள்ளியியல் ஒழுங்குமுறை நியதி (law of statistical regularity); (2) மிகப்பெரும் எண்களின் நிலைமம் (மாறாமை, inertia) நியதி (law of inertia of large numbers)..2.2.1 புள்ளியியல் ஒழுங்குமுறை நியதி (law of statistical regularity): இயற்கையில் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு வியக்கதகு ஒழுங்குமுறையில் நடைபெறுகின்றது. உதரணமாக, 4000 மாணவர்கள் கல்லூரியிலிருந்து, 50 மாணவர்களை ஒரு சமவாய்ப்பு மாதிரியாக (random sample) எடுப்போமேயானால், இம்மாதிரியின் சராசரி உயரம் (மாதிரி புள்ளிவிவரம், sample statistic) அக்கல்லூரி மாணவத் தொகையின் சராசரியிலிருந்து (தொகை பண்பளவு, population parameter) குறிப்பிடத்தக்க அளவு வேறுபடாது. இது, புள்ளியியல் ஒழுங்குமுறை நியதியின் வெளிப்பாடு. ஒரு சார்பற்ற மாதிரி, அதன் தொகையின் அனைத்து குணாதிசயங்களையும் பிரதிபலிக்கும். .2.2.2. மிகப்பெரும் எண்களின் நிலைமம் நியதி (Law of Inertia of Large Numbers): புள்ளியியல் ஒழுங்குமுறை நியதியின் தொடர்ச்சியே மிகப்பெரும் எண்களின் நிலைம நியதி. ஒரு தொகையில் உள்ள தனித்தனி உருப்படிகளில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், அத்தொகை முழுமையாகப் பார்க்கப்படும்பொழுது அம்மாற்றங்கள் குறிப்பிடப்படும்படியாக இருக்காது. ஏனென்றால், ஒரு தொகையில், மாற்றங்கள் படிப்படியாக வளர்வதில்லை; மாறாக, அவை ஒன்றுக்கொன்று ஈடு செய்துகொள்ளும். இதுதான், மிகப்பெரும் எண்களின் நிலைமம் எனப்படுகிறது. இதன் பொருள், மிகப்பெரும் எண்கள் மிகமிக மெதுவாகவே மாறுகின்றன..சரக்கு விற்பனைச் சட்டம்.12ம் வகுப்பு இயற்பியல் காலாண்டு வினாத்தாள்2015.தரம் 5 |
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை.ஆனந்த மானந்தம் தோழர்களே!.கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்.கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!.பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்.பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, |
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல.மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,.வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே.வேலூரில் சக்கரையுங்கலந்து,.தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி.சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. |
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி.வெல்லக் கலவையை உள்ளே இட்டு.பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே.பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!.பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி.போட்டு மாவுண்டை பயறுமிட்டு |
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்.மணக்க மணக்க வாயூறிடுமே.குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே.குத்து விளக்குக் கொளுத்தி வைத்து.அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை.ஆடிப் படைப்பும் படைப்போமே |
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே.வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு.அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க.ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே.வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல.மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் |
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்.கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே.ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை.ஆனந்த மானந்தந் தோழர்களே.கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்.கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! |
எழுதியவர்: நவாலியூர் சோமசுந்தரப்புலவர்.தரம் 12 தமிழ் சங்ககாலத்திற்கான வினாக்கள்.அதோ, அதோ பறவைக் கப்பல்.ஆகாயத்தில் செல்லுது.அதிசயமாய் எல்லோ ரையும் .அங்கே பார்க்கச் சொல்லுது. |
வெள்ளைப் பறவை போலே அதுவும் .மேலே நமக்குத் தோன்றுது. .மேகத் திற்குள் புகுந்து புகுந்து .வேடிக் கையும் காட்டுது.. மனிதர் தம்மைத் துக்கிக் கொண்டு .வானத் திலே பறக்குது. |
வயிற்றுக் குள்ளே பத்திரமாய் .வைத்துக் கொண்டே செல்லுது. .காடு மேடு கடல்க ளெல்லாம் .கடந்து கடந்து செல்லுது. .கண்ணை மூடித் திறப்பதற்குள் .காத துாரம் தாண்டுது ! |
பகுப்பு:குழந்தைப் பாடல்கள்.திருப்பல்லாண்டு .பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு .பலகோடி நூறாயிரம்.மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்.சேவடி செவ்வி திருக்காப்பு |
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு .வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு .வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு .படைப்போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் .கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுத்தலொட்டோம் |
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை .பாழாளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே.ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து .கூடு மனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லை கூடுமினோ .நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய என்று .பாடு மனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே |
அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை .இண்டைக் குளத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு .தொண்டக் குலத்தில் உள்ளீர்! வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி .பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே.ஆய்வுத்தலைப்புகள்- எம்.ஃபில் பட்டம்.ஆய்வுத்தலைப்புகள்- பி.எச்டி பட்டம் |
ஆய்வுக்கோவை- கட்டுரைத் தலைப்புகள்.அகில இந்தியப் பல்கலைக்கழத் தமிழாசிரியர் மாநாடு.1967 முதல் 1986 முடிய.திருப்பதி, திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் சார்பாக நடந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கோவைப் பொருட்களஞ்சியம் - தொகுதி 1 அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொகுப்பாளர், திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் டாக்டர்.திரு தானியேல் தேவ சங்கீதம் ஆவார்கள். அவருக்குத் தமிழ் ஆய்வுலகம் சார்பாக எம் நன்றி!.இத்தொகுப்பினைப் பற்றித் திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்பேராசிரியர் டாக்டர். பொன்.சௌரிராசன் அவர்கள் கூறுவது:.“இன்றைய தமிழ், உலகளாவிய படைப்பிலக்கியங்களையும் உண்மை காணும் ஆராய்ச்சி நூல்களையும் இரு கண்களாக்ககொண்டு வளரவேண்டிய ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளது. இவ்விரு நெறிகளிலும் தமிழ் வாழவும் வளரவும் கருவி நூல்கள் பல இன்றியமையாது வேண்டப் பெறுகின்றன. அத்தகு கருவிநூல்களுள் பொருளடைவு நூல்களும், களஞ்சியங்களும் தலைசிறந்த இடத்தைப் பெறுகின்றன. இந்தத் தேவையை உணர்ந்து பொருளடைவு, களஞ்சியம், அகராதி ஆகிய பணிகளுக்கெனத் தன்னை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டு, இத்தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணி செய்துவரும் முனைவர். தானியேல் தேவ சங்கீதம் உழைத்து வருகிறார். |
இத்தகு உழைப்பை இந்த ஆண்டு நிகழ இருக்கும் அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற மாநாட்டுக்குப் பயன்படுத்த வேண்டுமென நான் விழைந்தேன். அவர் விருப்பமும் அதுவாகவே இருந்தது. எனவே இந்நாள் வரை வெளிவந்துள்ள ஆய்வுத் தொகுதிகளையெல்லாம் ஒன்று திரட்டிப் பொருட்களஞ்சியம் ஒன்று உருவாக்கும் திட்டம் உள்ளத்தில் தோன்றியது. அத்திட்டத்தைச் செயலாக்கும் பொறுப்பு முனைவர் தானியேல் தேவசங்கீதம் அவர்களிடம் விடப்பட்டது. அவரும் அவர் திட்டத்தின் வழி சில ஆய்வு மாணவர்களும் சேர்ந்து அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வுக்கோவை பொருட்களஞ்சியத்தை உருவாக்கினார்கள்..இவை அனைத்தையும் அச்சிட்டு வழங்க எண்ணினோம். பொருளாளர் முனைவர் செ.வை.சண்முகம் அவர்களை அணுகினோம். அவர்கள் இருபது தொகுதிகள் நிறைந்தபின் நூலாக வெளியிடலாம் என்று குறிப்பித்தார்கள். அதற்குள் ஆய்வுக்கோவைப் பொருட்களஞ்சியப் பணி பெரிதும் நிறைவேறி விட்டது. மேலும் வாராது வாய்த்த இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு எங்கள் துறை சார்பாகப் பொருட்களஞ்சியத்தைப் பேராளர் பெருமக்களுக்குப் பரிசாக வழங்கும் ஆர்வம் ஆற்றலுடையதாயிற்று. இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கியபோது தட்டச்சு செய்து மையொற்றி அளிப்பதற்கே நூறாயிரம் வெண் பொற்காசுகள் ஆகும்போல் தோன்றிற்று. எனவே, இவை சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பியமும் புராணமும், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், உரைகள், சமயமும் தத்துவமும், நாடகம், நாவல், சிறுகதை, தற்காலக்கவிதை/ இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, ஒப்பாய்வும் பிறமொழி இலக்கியமும், நாட்டுப்புறவியல் ஆகிய தலைப்புகள் அடங்கிய பகுதியை மட்டும் மையொற்றித் தருவதெனத் திட்டமிட்டோம். அத்திட்டத்தின்படி முதல்தொகுதியை மட்டும் உங்களுக்குத் தருகிறோம்..இவற்றை இரவு பகல் பாராது சிறப்பாக நுண்மாண் நுழைபுலத்தோடு உருவாக்கி உதவிய முனைவர் தானியேல் தேவசங்கீதம் அவர்களையும், அவர்தம் குழுவையும் தமிழ்த்துறை சார்பாகவும் இம்மாநாட்டுக் கருத்தரங்கு சார்பாகவும் பாராட்டி வாழ்த்துகிறேன்”..பார்க்க.ஆய்வுக்கோவை 1. சங்க இலக்கியம்.ஆய்வுக்கோவை 2. நீதி இலக்கியம் |
ஆய்வுக்கோவை 3. காப்பியமும் புராணமும்.ஆய்வுக்கோவை 4. பக்தி இலக்கியம்.ஆய்வுக்கோவை 5. சிற்றிலக்கியம்.ஆய்வுக்கோவை 6. உரைகள்.ஆய்வுக்கோவை 7. சமயமும் தத்துவமும்.ஆய்வுக்கோவை 8. நாடகம் |